ஞாயிறு, நவம்பர் 21, 2010

கோளறு பதிகம்

ஆறாவது பாடல்

வாள்வரி அதள தாடை
வரிகோ வணத்தர்
மடவாள்த னோடும் உடனாய்
நாள் மலர் வன்னி கொன்றை
நதிசூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு
கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளறி நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்-
ஒளியையும், கோடுகளையும் உடைய புலித்தோலாடையையும், கட்டின கோவணத்தையும் உடைய இறைவர், அன்றலர்ந்த மலர்களையும், வன்னியையும் ,கொன்றைமாலையையும், கங்கையையும் திருமுடியில் சூடி உமாதேவியாருடன் எழுந்தருளி வந்து அடியேனது உள்ளத்தில் புகுந்த காரணத்தால் கொலைத் தொழிலையுடைய சிங்கம், புலி, கொல்லுதல் உடைய யானை, பன்றி, கரடி, மனித குரங்கு ஆகிய இவைகள் தொண்டர்களுக்கு நல்லனவே செய்யும்.

கருத்துகள் இல்லை: