வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

உணவே மருந்து

நாம் உயிர் வாழ உணவு உண்ண  வேண்டும்.

ஆனால் உணவில் இருக்கும் , நம் உடலுக்குத் தேவையான 

சத்துக்கள் சரியாக போய்ச் சேருகிறதா? 

இதற்கு,சாப்பிட வேண்டிய முறையில் சாப்பிட்டால் 

மட்டுமே உணவின் பலன்கள் நம் உடம்பில் 

போய்ச் சேரும் என்கிறார் உமா வெங்கடேஷ்.

இவர்  ஒரு மருத்துவர் .

பஞ்சபூதங்கள் என்னும் பிரபஞ்ச சக்தியை 

அடிப்படையாக வைத்து மருத்துவம் அளிக்கும் 

'நாடி சமன்படுத்துதல்' [PULSE BALANCING ]

முறையில் வைத்தியம் பார்ப்பவர்.

இவர் கூறுவன-

"நீர், நிலம், காற்று,நெருப்பு,ஆகாயம் 

எனும் பஞ்சபூதங்களின் கூறுகளால் 

ஆனது நமது உடல்.

நீர்- உப்பின் கூறு.

நிலம்-இனிப்பின் கூறு 

காற்று-காரத்தின் கூறு 

ஆகாயம்- புளிப்பின் கூறு 

நெருப்பு- கசப்பின் கூறு 

திடீர்னு காரமா சாப்பிட் டா 

நல்லாயிருக்கும்னு தோணினா

உடம்பில் காற்றின் எனர்ஜி

குறைவாய் இருக்குது என்று அர்த்தம்.


பஞ்சபூதங்களின் எந்த தன்மை 

நம் உடம்பில் குறைகிறதோ 

அது தேவை என்பதை நாக்கு சொல்லும்.

ஒரு பொருளை சாப்பிடனும் 

தோணினா அதை சாப்பிடனும்.

இதுதான் சப்பிடறதோட முதல் சூட்சமம்.

உணவை வாயின் இருபுறமும் 

நல்லா பரப்பி, மெதுவாக 

மென்று சாப்பிட வேண்டும்.

அப்போதுதான் உமிழ்நீர் நன்றாக ஊறி,

உணவுடன் நன்றாகக் கலந்து 

செரிமானத்தை எளிதாக்கும்.

தண்ணீர் குடித்து 15நி கழித்து சாப்பிடனும்.

சாப்பிட்ட பின் 1/2 மணி நேரம் கழித்து

தண்ணீர் குடிக்க வேண்டும்.

தண்ணீரையும் வாய் முழுக்க எடுத்துக்கொண்டு 

ருசித்துக் குடிக்க வேண்டும். 

சாப்பிடும்போது உதடுகள் சேர்ந்து இருக்க வேண்டும்.

உள்ளுக்குள்ளேயே உணவு நொருங்கணும்.

வாய் ரொம்ப திறந்து காற்று போகக்கூடாது.

சாப்பிடும் போ து பேசினால் காற்று

உள்ளே போய்  கேஸ் உண்டாகும்.

எந்த காய் சாப்பிட்டாலும், 

குறைந்தபட்சம் 11நாட்களுக்கு 

அந்த காய் சாப்பிடக் கூடாது.

ஒரேவிதமான சத்துதான் கிடைக்கும்.

இன்று துவரம் பருப்பு பயன்படுத்தினால்,

அடுத்த நாள் பாசிப்பருப்பு 

என்று திட்டமிட்டுக் கொண்டால் 

சம அளவில் எல்லா சத்துக்களையும் பெறலாம்.

காலையில் நடைப்பயிற்சி, 

யோகா, மூச்சுப் பயிற்சி செய்துவிட்டு 

அரை எலுமிச்சை சாறில் 

ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிப்பதால் 

உடம்புக்குத் தேவையான 

இனிப்பு, புளிப்பு,துவர்ப்பு, 

லேசான கசப்பு கிடைக்கும்.

இது பஞ்சபூத சக்தியை பேலன்ஸ் 

பண்ணற எனர்ஜி பானமாகும்.

காலை 7---7.30 மணிக்குள் 

BREAKFAST சாப்பிடனும்.

[Is it  possible?] 

பாதிப்பேர் எளுந்திரிப்பதே 8மணிக்கு.

முடிந்தவரை குளித்துவிட்டு 

சாப்பிடுவது மிகவும் நல்லது.

காலை உணவாக 

4-பாதாம் ,4-பிஸ்தா,

1-வால்நட் ,1-அத்திப் பழம் 

2-முந்திரிப்பருப்பு, 4-காய்ந்த திராட்சை 

1-பேரீச்சை,1-முழு நெல்லிக்காய் 

நெல்லியைத் தவிர மீதியை 

முதல் நாள் இரவே  மண்பாத்திரத்தில் 

ஊறவைக்க வேண்டும்.

11-மணிக்கு பழங்கள் அல்லது 

மிகச் சிறிய அளவில் டிபன் 

1-மணிக்கு மதிய உணவு 

சாதம், பருப்பு, கீரை,

நார்சத்து உள்ள காய்கறிகள் 

இதனுடன் சிறிது பனைவெல்லம் 

இதனால் உடலுக்குத் தேவையான 

இயற்கையான  இனிப்புத் தன்மை கிடைக்கும்.

மாலையில் சுண்டல், பிஸ்கட், டீ ,

வெள்ளரி சாலட் போன்று சாப்பிடலாம் 

இரவு 7-7.30க்குள் டின்னர் 

எளிதில் செரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

சில வயதானவர்கள் இரவில் ராகி கூழ் 

சாப்பிடுகிறார்கள்.

ராகி  எளிதில் செரிமானம் ஆகாது.  

கோதுமை அல்லது கம்பு ரொட்டிகள்,

இட்லி சாப்பிடலாம்.

காலையில் சத்தான உணவு,

மதியம் மிதமான உணவு,

இரவு லேசான உணவு 

இதுதான் உடலை எப்பவும் 

புத்துணர்ச்சியாக வைத்து இருக்கும்.








நன்றி-சிநேகிதி