திங்கள், டிசம்பர் 19, 2011

சனிப்பெயர்ச்சி பலன்கள்21-12-2011 புதன் கிழமை காலை 7 .24  மணிக்கு, சனி பகவான்

கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

சனி பகவானை கொண்டு பயம் தேவை இல்லை.


அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் 


நீதி தவறாதவர் சனீஸ்வரன்.


சனீஸ்வரனைப்போல் கெடுப்பாரும் இல்லை, 


கொடுப்பாரும் இல்லை என சோதிடம் கூறுகின்றது. 


இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது 


பல கஸ்டங்களையும் நஸ்டங்களையும்  


தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் 


இவ் இராசிகளைக் கடந்து 


அடுத்த ராசிக்கு செல்லும் போது 


நஸ்டங்களை ஈடுசெய்யும் வகையில் 


கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.


சனி பகவான் காயத்ரீ:

காக த்வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்தோ மத்த: ப்ரசோதயாத்பலனடையும் ராசிகள்-

ரிஷபம், சிம்மம், தனுசு.

சுமாரான பலன் பெரும் ராசிகள்-

மேஷம், மிதுனம், மகரம், கும்பம்.

பரிகார ராசிகள்-

கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம்.

ஏழரை சனி -

கன்னி- கடைசி இரண்டரை   ஆண்டுகள்

பாதச் சனி, வாக்குச் சனி

துலாம்- இரண்டாம் கட்டம்  ஜென்மச் சனி

விருச்சிகம்-  ஏழரை சனி ஆரம்பம், விரயச் சனி

அஷ்டமச் சனி -

மீனம்- இது ஏழரை சனிக்கு நிகராகவோ,

அதற்கு அதிகமாகவோ கஷ்டம் தரும் என்பர்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்---

மேஷம்- 

கண்ட சனி வருகிறது.

பலன்- 55 /100


பரிகாரம்- சிவபெருமான் வழிபாடு 
பாட வேண்டிய பாடல்-

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசுவண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே!

ரிஷபம்- 

ஜமாயுங்கள்

பலன்- 90 /100

பரிகாரம்-  ராமபிரான் வழிபாடு பாட வேண்டிய பாடல்-

நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்

வீடியல் வழியதாக்கும்; வேரியம் கமலை நோக்கும்

நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை

சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவோர்க்கே!

மிதுனம்-

புண்ணியம் செய்திருந்தால் தப்பிக்கலாம்.

பலன்- 60 /100

பரிகாரம்-லட்சுமி வழிபாடு 
 பாட வேண்டிய பாடல்-

திருமகளே!திருப்பாற் கடலூடு அன்று தேவர் தொழ

வருமகளே! உலகெலாம் என்றென்றும் வாழ வைக்கும்

ஒருமகளே! நெடுமால் உரத்தே உற்று, வரம் பெரிது

தருமகளே! தமியேன் தலைமீது நின்தாள் வையே!

கடகம்-

அர்த்தாஷ்டம சனி வருகிறது

பலன்- 50 /100

பரிகாரம்- முருகபெருமான் வழிபாடு பாட வேண்டிய பாடல்-

உல்லாச நிராகுல யோக விதச்

சல்லாப விநோதனும் நீ அலையோ

எல்லாம் அற என்னை இழந்த நலம்

சொல்லாய் முருகா! சுர பூபதியே.

சிம்மம்- 

ஏழரை சனி முடிகிறது.

பலன்- 80 /100

பரிகாரம்- வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி
                                               
                                         அல்லது 
                       
                         நவக்கிரக சந்நிதியில் குரு வழிபாடு 
                      குரு

பாட வேண்டிய பாடல்-

மறைமிகு கலைநூல் வல்லோன்

வானவர்க்கு அரசன் மந்த்ரி

நறைசொரி கற்பகப் பொன்நாட்டினுக்கு

அதிபனாகி நிறைதனம் சிவிகை மன்றல்

நீடு போகத்தை நல்கும்

இறைவன் குரு வியாழன்

இணையடி போற்றி போற்றி!

கன்னி-

ஏழரை சனியின் கடுமை குறையும்.

பலன்- 55 /100

பரிகாரம்- சாஸ்தா வழிபாடு 
பாட வேண்டிய பாடல்-

புவிகாக்கும் இருவர் வயிற்றில்

பூலோகம் காக்கப் பிறந்தவரே!

மலைக்கு வரும் பக்தர்

மனதில் சரணமாய் ஒலிப்பவரே!

சங்கடம் நீக்கி அருள் புரியும்

சம்சாரக் கடல் கடந்தவரே!

பிரம்மச்சர்ய குலவிளக்கே!

பிரம்மனின் கெடுவிதியை மாற்றுவீரே!

துலாம்- 

ஏழரை சனியின் உச்சம்.

பலன்- 50 /100

பரிகாரம்- சக்கரத்தாழ்வார் வழிபாடுபாட வேண்டிய பாடல்-

ஆயிரம் பெயர் கொண்டவனின்

அழகுக் கையில் சுழல்பவரே!

அன்புவழி நடப்போர் சங்கடம்

அழிக்க துள்ளியோடி விரைபவரே!

கஜேந்திரனின் காலைப் பிடித்த

கடுமுதலை முதுகை அறுத்தவரே!

பாவத்தை வேரறுக்கும்

பரம்பொருளே!காத்தருள்வாய்.

விருச்சிகம்-

ஏழரை சனி வருகிறது

பலன்- 55 /100

பரிகாரம்- லட்சுமி நரசிம்மர் வழிபாடு பாட வேண்டிய பாடல்-

ஆடிப்பாடி அகம் கரைந்து இசை

பாடிப்பாடி கண்ணீர் மல்கி, எங்கும்

நாடிநாடி நரசிங்கா என்று

வாடி வாடும் இவ்வாள் நுதலே!


தனுசு-

வசந்தம் வருகிறது

பலன்- 85 /100

பரிகாரம்- செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை வழிபாடு 

  

பாட வேண்டிய பாடல்-

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச

சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு

வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்று

ஆகி கியாதியுடையாள் சரணம் அரண் நமக்கே!

மகரம்-

வேலையில் கவனம்


பலன்- 60 /100


பரிகாரம்- பெருமாள் வழிபாடு
பாட வேண்டிய பாடல்-

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!

நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!

கும்பம்-

கஷ்ட காலம் போகுது.

பலன்- 65 /100


பரிகாரம்- ஆஞ்சநேயர் வழிபாடு

பாட வேண்டிய பாடல்-

அஞ்சிலே ஒன்று பெற்றான்

அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக

ஆருயிர் காக்க ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற

அணங்கு கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான்

அவன் நம்மை அளித்துக் காப்பான்.

மீனம்-

அஷ்டமத்து சனி வருகிறது.

பலன்- 50 /100

பரிகாரம்- பைரவர் வழிபாடு பாட வேண்டிய பாடல்-

கயிரவ நாணமலர்க் கவின் கணார் மயற்

செயிரவ நாடொறும் இயற்றியே திரி

யுயிரவ நானென வொறாது காத்தருள்

வயிரவ நாதனை வணங்கி வாழ்த்துவாம். 

வெள்ளி, டிசம்பர் 09, 2011

மாவிளக்கு செய்முறை


மாவிளக்கு 


தேவையான பொருட்கள்- 
பச்சரிசி கால் கிலோ,
பாகு வெல்லம் கால்கிலோ[ தூள் செய்யவும்.]
ஏலக்காய் நாலு, ஐந்து,
50கிராம், நல்ல பருத்திப் பஞ்சினால் ஆகிய திரி
(நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்,)

பச்சரியை நன்கு களைந்து
குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும்,
ஊறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு நன்கு மாவாக்கவும்.
சில வீடுகளில் சலிக்கும் வழக்கம் கிடையாது.
மாரியம்மனுக்குப் போடும் மாவிளக்குப் 
பொதுவாய்ச் சலிப்பதில்லை
என்றாலும் அவங்க அவங்க வீட்டு 
வழக்கத்திற்கு ஏற்ப மாறும்.  
ன்கு அரைத்து. மாவாகிவிடும்.
வெல்லத்தைப் போட்டுக் கலந்தால்
நன்கு கெட்டியாக உருட்டும் பதத்தில் வரவேண்டும்.
பந்து போல் உருட்டவேண்டும்,
அவரவர் வீட்டு வழக்கப் படி ஒரு உருண்டை அல்லது
இரண்டு உருண்டை பிடிக்கவேண்டும்.
உருண்டையில் நடுவில் குழி செய்து கொள்ள வேண்டும்
அம்மன் சந்நிதியில் அம்மனுக்கு நேரே 
அம்மன் சாப்பிட்டால்
இலையை எப்படிப் போடுவோமோ அப்படி
நுனி அம்மனின் இடப்பக்கம் வருமாறு போட்டு
மாவு உருண்டைகளை வைக்கவேண்டும்.
குழி செய்த இடத்தில் ததும்ப நெய்யை ஊற்ற வேண்டும்.
திரியை அந்தக் குழியில் விட்ட நெய்யில் 
வைத்துத் திரியை ஏற்றவும்.
இப்போது பூவை மாலை போல்
இரண்டு மாவிளக்குகளையும் சேர்த்துப்போடவும்.
நாலுபக்கமும் மஞ்சள், சந்தனம், 
குங்குமத்தால் அலங்கரிக்கவும்.
பூவைத்திருக்கும் இடத்திலேயே 
வெற்றிலை, பாக்கு,வாழைப்பழம் வைத்துத்
தேங்காயையும் உடைத்து வைக்கவேண்டும்.
திரி நன்கு எரியும்.
நீளமான திரி எரிந்து முடியும் நேரத்தில்,
(இதை அம்மன் மலை ஏறிவிட்டாள
என்று கூறுவார்கள்)
அந்தத் திரியை ஒரு கரண்டியில்
அல்லது ஸ்பூனால்எடுத்துக் 
கோயிலில் இருக்கும் விளக்குகள்
ஏதாவதொன்றில் அணையாமல் வைக்கவேண்டும்.
பின்னர் தண்ணீர் சுற்றி நிவேதனம் செய்துவிட்டுக்
கற்பூர ஆராத்தி எடுக்க வேண்டும்.
[பஞ்சுத்திரியைக் கொஞ்சம் நெய்யில் 
முன்னாலேயே ஊற வைக்கவும்}.
பாகு செய்தல்-
தூள் செய்த வெல்லத்தை 
ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு
 மூழ்கும் வரை நீர் ஊற்றி 
அடுப்பில் வைக்கவும்.
நன்கு கொதிக்க விடவும்.
நுரைத்து வரும் போது,  
மிதமான தீயில் வைத்து கிளறவும்.
ஒரு கம்பி பதம் போதும்.
துள்ளு மாவு:
முன் மாவிளக்குக்குச் சொன்ன 
அதே அளவு பச்சரிசி வெல்லம்
மற்றப் பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டும்.
மாவை மிக்சியில் அரைத்துக்கொண்டு
நன்கு காய வைத்து 
வெல்லத் தூளைச் சேர்த்துத்
தேங்காய்துருவல், ஏலக்காய் சேர்க்கவேண்டும்.
இது உதிராகப் பொடியாகவே இருக்கும்.


காப்பரிசி:
வெறும் பச்சரியை ஊற வைத்து
நீரை வடிகட்டிவிட்டுத்,
தேங்காயைப் பல்லுப் பல்லாகக் கீறிப்போட்டு,
வெல்லம், ஏலக்காய் சேர்க்கவேண்டும்.
இது பிரார்த்தனைகளில் மட்டுமே செய்யப் படும்.


பானகம்:
வெல்லத்தைப் பொடித்துக்கொண்டு
வேண்டிய அளவு நீர் விட்டு
சுக்கும் ஏலக்காயிப் பொடி 
கலந்து கொள்ளவேண்டும்.
எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். 
ஆடியில் ஐந்து வெள்ளி கிழமைகள் 
வருவது சிறப்பு. 
ஆடி வெள்ளியில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதும், 
ஆடியில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்வதும், 
வீட்டில் சுமங்கலி பூஜை செய்வதும் சிறப்பு. 
ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு 
மாவிளக்கு போடுவதும் 
விசேச பலன்களை தரும்.

அம்மனுக்கு கூழ் 

ராகி தானியம் வாங்கி வெயிலில் காய வைத்து 
மிஷினில் கொடுத்து அரைத்து பயன்படுத்தலாம் 
அல்லது சுத்தமான ராகி மாவு பாக்கெட்டாக 
கடைகளில் கிடைக்கிறது 
அதனையும் பயன்படுத்தலாம். 
ஒரு பங்கு மாவிற்கு 
மூன்று பங்கு நீர் விட்டு 
கரைத்துக் கொள்ளவும். 
இதனை அடுப்பில் வைத்து கிண்டவும். 
மாவின் நிறம் மாறி இறுகி வரும். 
தண்ணீரில் கை வைத்து 
மாவில் தொட்டால் ஒட்டக் கூடாது. 
இறக்கி வைத்து விடவும்.
ஆறிய பின்
பொடியாக நறுக்கிய வெங்காயம், 
மோர் சேர்த்து கரைக்கவும்.
கூழ் தயாரானதும் 
அம்மனுக்கு படைக்கும்முன் 
ஐந்தாறு வேப்பிலை சேர்த்து படைக்கவும். 
உப்பு சேர்ப்பது இல்லை.
பக்தர்களுக்கு தரும் போது வேண்டுமானால்
உப்பு சேர்த்து தரலாம்.

குல தெய்வத்திற்கு மாவிளக்கு

பச்சரிசியை ஈரமாவு திரிக்கும் மெஷினில் 
தந்து அரைத்துக் கொள்ளவும்.
கால் கிலோ அரிசி எனில் 
கால் கிலோ நாட்டுச்சர்க்கரை 
ஒரு அகண்ட பாத்திரத்தில் மாவையும் 
சர்க்கரையையும் கொட்டி
ஏலக்காய், பச்சை கற்பூரம்  பொடி 
சேர்த்துக் கொள்ளவும். 
லேசாக தண்ணீர் தெளித்து 
இறுக்கமாக பிசைந்து 
குவித்து பிடித்து வைக்கவும். 
நடுவில் குழி செய்து திரி போட்டு, 
நெய் ஊற்றி விளக்கை தயார் செய்யவும். 
விளக்கில் குங்குமப்பொட்டு வைத்து , 
பூ வைத்து சாமி முன் 
குல தெய்வத்தை நினைத்து விளக்கேற்றவும். 
இதனை ஆடி வெள்ளியில் 
வீட்டிலேயே செய்யலாம்.
குலதெயவம் குலம் காக்கும்.

திருவிளக்கு பூஜை

ஆடி வெள்ளியில் சுமங்கலிகள் 
திருவிளக்கு பூஜை செய்வதும் 
குடும்பத்திற்கு நல்லது. 
இதனையும் வீட்டிலேயே செய்லாம். 
குத்துவிளக்கு குறைந்த பட்சம்
 இரண்டு முகமாவது தீபமேற்றி ,
குங்கும அர்ச்சனை செய்து 
தேவியின் அருளைப்பெறலாம்.

மாவிளக்கு- சுலப முறை 


2௦௦கி  பச்சரிசியை 
1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
தண்ணீரை வடித்து விட்டு 
ஒரு துணியில்போட்டு 
வீட்டுக்குள்ளேயே 2 மணி நேரம் காயவிடவும்.
பிறகுமிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக 
போட்டு மாவாக்கி 
சல்லடையில் சலித்து 
அதையும் சலித்து கொள்ளவும்
200 கி வெல்லத்தை பொடியாக தட்டி 
மாவில் போட்டு பிசையவும். 
உருட்டும் அளவிற்கு பிசைய தண்ணீர் 
சிறிது தேவையென்றால் தெளித்து பிசைந்து உருட்டவும்.

சனி, டிசம்பர் 03, 2011

கார்த்திகைதிருவண்ணாமலைத் தீபம்
ந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வருகிறது.


இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில்


 மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், 


இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். 


சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை


 நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று 


திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.


 இந்த தீபம், ஐந்தரை அடி உயரமும், ஐந்தடி நீளமும் உள்ள 


ஒரு இரும்பு கொப்பரையில், 2000 கிலோ நெய்யை விட்டு, 


முப்பது மீட்டர் காடாத் துணியைச் சுருட்டி 


அதைத் திரியாகப் போட்டு 


அதன் மேல் இரண்டு கிலோ கற்பூரத்தை வைத்து ஏற்றப்படும். 


இந்த மகாதீபம் மலையைச்சுற்றி


 35 கிலோமீட்டர் தூரம்வரை தெரியும். 


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 


கார்த்திகை தீபதிருவிழா 29-12-2011கொடியேற்றத்துடன் தொடங்கியது.


 அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு


 அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு 


சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், 


உண்ணாமலையம்மன், சண்டிகேஸ்வரரை அலங்கரித்து 


மேளதாளம் முழங்க தங்கக் கொடிமரம் அருகே கொண்டு வந்தனர். 


இங்கு மகாதீபாராதனைக்கு பிறகு 


அதிகாலை 6.25 மணிக்கு வேதமந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க, 


கோயில் பெரிய பட்டம் வெங்கட்ராஜன் குருக்கள் தலைமையில் 


ஹாலாசியநாதன், தியாகராஜன், கிருஷ்ணகுமார், கீர்த்திவாசன், 


சங்கர், சுவாமிநாதன் சிவாச்சாரியார்கள் 


61 அடி உயரமுள்ள தங்கக்கொடிமரத்தில் கொடியேற்றினர். 


முதல் நாளான பகல் பஞ்சமூர்த்திகள் 


கண்ணாடி விமானங்களிலும், 


இரவில் பஞ்ச மூர்த்திகள் மூஷீகம், மயில், வெள்ளி அதிகாரநந்தி,


 ஹம்சம், சிம்ம வாகனத்தில் மாடவீதியில்


 பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


 வரும் 4ம் தேதி பகலில் 63 நாயன்மார்கள் ஊர்வலமும்,


 இரவில் வெள்ளிரத ஊர்வலமும் நடக்கிறது. 


5ம் தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது. 


அன்று காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடக்கிறது.


 விநாயகர், முருகர், அண்ணாமலையார், 


அம்மன், சண்டிகேஸ்வரர் தேர்கள் மாடவீதியில் 


பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். 


இதில் அம்மன் தேரை பெண்களே விரதமிருந்து இழுத்து வருவார்கள். 


உச்சக்கட்ட விழாவான கார்த்திகை தீபதிருவிழா 


வரும் 8ம் தேதி நடக்கிறது.


 அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணிதீபமும்,


 மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள


 2668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்படும்.

பெரும்பாலோனோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், 


அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி 


வீடு முழுவதும் வைப்பார்கள். 


நகர்புறங்களில் இட நெருக்கடி இருந்தாலும்,


எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ 


அங்கெல்லாம் விளக்கேற்றி வைப்பார்கள். 
கார்த்திகை தீபம் 24ம் நாள் (10.12.2011) சனிக்கிழமை 


திருக்கார்த்திகைத்தீபமாகும்அன்றைய தினம் சந்திர கிரகணமாகும்


கிரகண நேரம்: -மாலை06.14முதல் 09.45வரையாகும் 


எனவே இந்நேரத்துக்கு முன்பாக 


தங்களின் இல்லங்களில் தீபம் ஏற்றி வழிபாடு  செய்யவும்


கிரகண காலங்களில் வழி பாடு செய்வதை தவித்துக்கொள்ளவும்