ஞாயிறு, அக்டோபர் 31, 2010

சுலப சமையல்

வெளி நாட்டில் படிக்கும் நம்ம நாட்டு பிள்ளைகளுக்கு நான் கண்டு பிடித்த
சுலப சமையலின் தொடர்ச்சி -
இன்றைய ஸ்பெஷல் தக்காளி recipes
as usual oil base ஆரம்பத்திலேயே இஞ்சியை துருவிப் போடவும்.
அதாவது கேரட் துருவியில் தோல் எடுத்த இஞ்சியை துருவிப் போடவும். இதற்கு கடுகு, நிறைய வெங்காயம், நறுக்கிய மிளகாய், துருவிய இஞ்சி,நறுக்கிய பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.
நிறைய தக்காளி பேஸ்டை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
கொத்துமல்லித் தூள் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
உப்பு போடவும்.
தேங்காயைக் கரைத்தும் ஊற்றலாம். _______________________________________________________________________________________________alternative - இதில் முட்டையை ஊற்றலாம்.
குழம்பு நன்கு கொதித்து இறக்குவதற்கு முன் நிதானமாக முட்டையை உடைத்து ஊற்றவும்.
அதாவது பாத்திரத்திற்கு மேல் முட்டையை பிடித்துக் கொண்டு ஸ்பூனால் நடுவில் உடைத்து கையில் குழம்பு தெறிக்காமல் ஊற்றவும்.
கரண்டி போடாமல் 2 நிமி விடவும்.
முழுமுட்டை வெந்து மிதக்கும். _____________________________________________________________________________________________________alternative முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி உப்பு கொஞ்சம் போட்டு நன்கு கலக்கி குழம்பில் ஊற்றி கரண்டியால் மெதுவாக கிளறி விட்டால் குழம்பு முழுவதும் சின்னச்சின்ன துண்டுகளாக மிதக்கும்.
வெந்தமுட்டையைகட்பண்ணியும்போடலாம்
alternative - இந்த குழம்பில் நேற்று சொன்ன vegetable balls எண்ணையில் பொறித்து [போண்டா] போடலாம்.
முழு போண்டாவாகப் போடலாம். or உதிர்த்துப் போடலாம்.
முழு போண்டா போடுவதானால் சின்ன போண்டாவாக இருக்க வேண்டும். __________________________________________________________________________________________________-alternative - சிக்கன் துண்டுகளை உப்பு, மிளக்காயத்துள் போட்டு 10 நிமி ஊறவிட்டு இந்த குழம்பில் போடலாம்.
ஆனால் குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் போதே போட்டால்தான் சிக்கன் வேகும்.
அல்லதுசிக்கனைப்பொறித்துப்போடலாம்.
___________________________________________________________________________________________________வெங்காயத்தை கேரட் துருவியில் {கையை சீவாமல் }துருவவும்.
வெங்காயத்தை அரைத்த effect வரும்.
மூன்று பெரிய வெங்காயமாகத் துருவவும். [வெங்காயத்திற்கு தோலுரிக்க வேண்டும். தெரியும் தானே!!!!!!! ]
நான்கு தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கவும். அல்லது துருவவும்.
6 ts எண்ணையில் கடுகு, சீரகம், துருவிய இஞ்சி, துருவிய வெங்காயம், துருவிய தக்காளி போட்டு வதக்கி 3 ts மிளகாய்த் தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
அதிலுள்ள தண்ணீர் சுண்டி கெட்டியாக வரும் போது இறக்கவும்.
தக்காளிச் சட்னி. ________________________________________________________________________________________________________இதை இதை baseyaaka வைத்து சில recipes செய்யலாம்.
எண்ணையில் கடுகு, நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி இந்த சட்னியில் தண்ணீர் ஊற்றிக் கரைத்து ஊற்றி கொத்துமல்லித் தூள் போட்டால் முதலில் சொன்ன தக்காளிகுழம்பு, முட்டைக் குழம்பு செய்யலாம். _________________________________________________________________________________________________இந்த சட்னியை தொட்டு சாப்பிடலாம்.
சப்பாத்தி, பிரட் மேலே லேசாக பட்டர் தடவி அதன் மேல் இதைத் தடவவும். இன்னொரு பட்டர் தடவிய சப்பாத்தியை வைத்து சுருட்டினால் சப்பாத்தி ரோல்.
சப்பாத்தியில் இந்த சட்னி மேல் துருவிய cheese போடலாம். ______________________________________________________________________________________________________எண்ணையில்நறுக்கியவெங்காயம்,கடுகு,சீரகம்,மிளகாய்தாளித்து இரண்டு தக்காளிவெட்டிப் போட்டு இந்த சட்னி கொஞ்சம் போட்டு மஞ்சள் தூள், உப்பு போட்டு வேண்டிய அளவு தண்ணீர்ஊற்றி அரிசி போட்டால் தக்காளி சாதம். ___________________________________________________________________________________________________எண்ணையில் கடுகு, கடலைப் பருப்பு, நறுக்கிய வெங்காயம், அதைவிட கொஞ்சம் அதிகமாக நறுக்கிய தக்காளி போட்டு வதக்கி மிளகாத் தூள், உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக விட்டு கெட்டி ஆனதும் இறக்கவும். சப்பாத்தி side dish . ________________________________________________________________________________________________________
வெங்காயத்தை தக்காளியை நீளமாக நறுக்கவும்.
எண்ணையில் கடுகு, மிளகாய் போட்டு வதக்கி வெங்காயம், தக்காளி வதக்கி மிளகாய்த் தூள் போட்டு வதக்கி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேக விட்டு இதில் முட்டையை ஊற்றி முழு முட்டையை மிதக்க விடவும்.
வெந்த முட்டையை துண்டுகளாக்கியும் போடலாம்.
முட்டைக்கு பதில் பட்டாணி போடலாம். ____________________________________________________________________
யாரவது இதைப் படித்து செய்து பார்த்தால் எனக்கு தெரியப் படுத்துங்கள்.
நான் சந்தோசப் படுவேன்.

சனி, அக்டோபர் 30, 2010

ரசம்

ரசப்பொடி1 -தனியா, மிளகாய் 200 g
துவரம் பருப்பு, மிளகு 100g
கடலைப்பருப்பு,மிளகு 50 g
காய்ந்த கருவேப்பிலை 2 கப்
வறுக்கலாம். or வெயிலில் காயவைக்கலாம்.
____________________________________________________________________________________ ரசப்பொடி2 -தனியா ஒரு பங்கு,
துவரம் பருப்பு முக்கால் பங்கு,
மிளகு, சீரகம் இரண்டு பங்கு,
மிளகாய் கொஞ்சம்
___________________________________________________________________________________
மைசூர் ரசம்- வெந்த துவரம் பருப்பு 1/ 4 கப் குழைய வெந்திருக்கணும். கொஞ்சம் எண்ணெயில்கருகாமல்
மிளகு ஒரு ts
தனியா 3 ts
துவரம் பருப்பு 3 ts
மிளகாய் 6
தனித்தனியாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
புளி கரைக்கவும்.
அரைத்த விழுது, புளிக்கரைச்சல், நறுக்கிய 2 தக்காளி, உப்பு போட்டுநல்லா கொதிக்க விடவும்.
பருப்பில் தண்ணீர் கலந்து அதில் ஊற்றவும்.
பொங்கி நுரைத்து வரும் போதுஇறக்கவும்.
நெய்யில் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து ஊற்றவும்.
______________________________________________________________________________ மற்றொரு வகை- கடலைப் பருப்பு 1 ts
தனியா 2ts
மிளகு கால் ts
மிளகாய்2 எண்ணெயில் வறுத்து
சீரகம் 1/4 ts சேர்த்து பொடிக்கவும்.
குழைய வெந்த பருப்பு 1/4 கப்.
இரண்டு தக்காளியை பொடியாக நறுக்கி கால் கப் நீரில் நன்றாக கொதிக்க விடவும்.
ஒன்றரைக் கப் நீரில் நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்து வடிகட்டி தக்காளியுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு போடவும்.
கொதித்ததும் பெருங்காயம் போட்டு,ரசப் பொடியும் சேர்த்து கொதிக்கும் போது தண்ணீர் சேர்த்த பருப்பை சேர்க்கவும்.
கொதிக்கும் போது கொஞ்சம் வெல்லம்,. இரண்டு ts தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
நுரைத்து பொங்கி வரும் போது இறக்கவும்.
நெய்யில் கடுகு, கருவேப்பிலை தாளித்து போடவும்.
______________________________________________________________________________________ தக்காளி ரசம்-3 தக்காளிக்கு 100 துவரம் பருப்பு போதும்.
குழைய வேக விடவும்.
கொதிக்கும் நீரில் பழங்களைப் போட்டு கொஞ்ச நேரம் மூடிவைத்து தோலுரிக்கவும். நல்லா மசிக்கவும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முதல் ரசப்பொடி 1ts போட்டு, உப்பு, பெருங்காயம் போட்டு கொதிக்க விடவும்.
பருப்பை சேர்க்கவும்.
கொதித்துப் பொங்கி வரும் போது இறக்கி,நெய்யில் கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளித்து விடவும்.
______________________________________________________________________________________
மற்றொரு முறை- புளிக்கரைசல், உப்பு, 4 ts ரசப்பொடி, பெருங்காயம், 2 நறுக்கிய தக்காளி போட்டு நன்கு கொதிக்க விடவும். வெந்த பருப்பை நீரில் கரைத்து ஊற்றவும். மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை மூடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி நெய்யில் கடுகு, சீரகம், கீறிய பச்சை மிளகாய் 2
கருவேப்பிலை தாளிக்கவும்.
______________________________________________________________________________________
மிளகு ரசம்-கரகரப்பாய்ப் பொடித்த மிளகு 3 ts,
4 மிளகாய்,
சீரகம் 1ts
கருவேப்பிலை, கடுகு
நெய்யில் கடுகு, சீரகம், கருவேப்பிலை, மிளகாய், பொடித்த மிளகு தீயாமல் ஒன்றுஒன்றகப் போட்டு வதக்கி, புளிக்கரைச்சல் ஊற்றி, உப்புப் போட்டு கொதிக்க விடவும். ரசம் வற்றி வரும் போது தண்ணீர்
ஊற்றவும். பொங்கி வரும் போது இறக்கவும். option தக்காளி.
______________________________________________________________________________________
மிளகு ரசம்- 2 மிளகாய்,
மிளகு, துவரம் பருப்பு 2 2 ts ,
தனியா 1ts
சீரகம் 1/2 ts பச்சையாக அரைக்கவும்.
எலும்பிச்சை அளவு புளியை 2 டம்ளர் நீரில் கரைத்து, அதில் 6 பல் பூண்டைத் தட்டிப் போட்டு உப்பு ,பெருங்காயம் போட்டு கொதிக்க விடவும். அதில் அரைத்த விழுதை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளிக்கவும்.

சுலப சமையல்

வெளிநாட்டில் படிக்கப் போகும் நம்ம பசங்களுக்காக நான் கண்டு பிடித்த சுலபமான samaiyal இதில் அங்கு கிடைக்கும் காய்கறிகளை சேர்த்து பல மாற்றங்களை செய்யலாம். சமையலே அவரவர் சுவையான கற்பனைகள் தான். இங்கு நான் வெளி நாடுகளில் பொதுவாக கிடைக்கும் காய்களை வைத்து செய்யும் முறைகளை தருகிறேன். முயற்சி செய்து பாருங்கள்.
உருளைக் கிழங்கு recipes -

.உருளைக் கிழங்கு மூழ்கும் அளவு நீர் ஊற்றி கொஞ்சம் மஞ்சள் தூள்,உப்புப் போட்டு இரண்டு விசில் விடவும்.
சுடுதண்ணியை கிழே ஊற்றி விட்டு அதில் பச்சைத் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் விட்டு தோலுரிக்கவும். நல்லா ஆறியதும் fridge எடுத்து வைக்கவும்.
எண்ணையில் கடுகு, சீரகம், போட்டுப் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், வதக்கி உப்புப் போடுவது எல்ல சமையலுக்கும் அடிப்படை.
தக்காளி, தனியாப் பொடி, மிளகாய்த் தூள், பச்சைமிளகாய், வரமிளகாய் என்று
செய்யும் recipe தகுந்த மாதிரி சேர்க்க வேண்டும்.
ஆனால் கிழங்கு என்றால் கட்டாயம் இஞ்சி, பூண்டு போட வேண்டும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் போடலாம்.
தக்காளிக்குப் பதில் தக்காளி பேஸ்ட் போடலாம். ருசி கொஞ்சம் மாறுபடும்.
கிழங்கை நன்கு கையால் பிசைந்து கொள்ளவும். தண்ணீயே சேர்க்க கூடாது.
oil basil frozen mixed vegetables போட்டு ரொம்ப, ரொம்ப கொஞ்சமாக தண்ணீ ஊற்றி fry பண்ணி பிசைந்து வைத்திருக்கும் கிழங்கைப் போட்டு வதக்கவும்.
அடுப்பை simil வைக்கவும்.
கொஞ்சம் கோதுமை மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்து [மாவு கரைத்தது நீர்க்க இருக்கணும்] ஊற்றி கட்டி சேராமல் கலந்து விடவும்.
மஞ்சத் தூள், மிளகாய்த்தூள், உப்பு போடவும்.
3 நிமி கொதித்ததும் இறக்கவும்.
இது சப்பாத்தி, தோசை side dish
-------------------------------------------------------------------------------------------------alternative -கோதுமை மாவிற்கு பதிலாக கிழங்கில் தண்ணீர் ஊற்றிக் கரைத்து ஊற்றிக் கொதிக்க விடவும். இந்த இரெண்டுக்கும் தக்காளி பேஸ்ட் போடலாம்.
-------------------------------------------------------------------------------------------------
alternative - உருளையை கையால் உதிர்க்கவும். நோ பிசையல். அதைப் போட்டு வதக்கி தக்காளிப் பேஸ்டில் தண்ணீர் ஊற்றிக் கரைத்து ஊற்றி அதில் தனியாத் தூள் [coriyaander powder தான் ]போட்டு கொதிக்க விடவும். வேண்டும் என்றால் தேங்காய் கரைத்து ஊற்றி 3 நிமி கொதிக்க விடவும்.
fresh தக்காளி என்றால் சிறியதாக நறுக்கிப் போடவும்.
-------------------------------------------------------------------------------------------------
oil basil பிசைந்த கிழங்கு, மிளகாய்த்தூள், போட்டு 3 நிமி வதக்கஆறவிடவும்.
உருண்டை பிடிக்கவும்.
சப்பாத்தி மாவை சிறிய வட்டமாகதேய்த்து அதன் நடுவில் இந்தஉருண்டையை வைத்து மூடி மறுபடியும் தேய்க்கவும். தோசைக்கல்லில் லேசாக எண்ணை தடவி சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் எண்ணை ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
சிறியதாக நறுக்கிய பச்சை மிளகாயும் போடலாம். நறுக்கிய பின் தண்ணீரில் அலசி எடுத்தால் விதைகள் போய் விடும்.

-------------------------------------------------------------------------------------------------------------
இந்த உருண்டைகளை நீர்க்கக் கரைத்த கோதுமை மாவில் நனைத்து எண்ணையில் பொரித்தால் vegetable போண்டா.
மாவில் நனைத்து எடுக்கும் போது சொட்டற மாவை பாத்திர விழும்பில் வழித்து விட்டுத் தான் எண்ணையில் போட வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------
அப்பளத்தை ஒரு முறை தண்ணீரில் நனைத்து எடுத்து விடவும். அதன் ஒரு பாதியில் இந்த உருண்டையை [கொஞ்சம் சிறிய உருண்டை] வைத்து அப்பளத்தை மடித்து ஓரத்தை அழுத்தி மடிக்கவும். பின் கவனமாக எண்ணையில் பொரிக்கவும்.
எண்ணைக்குள் போடும் போது மெதுவாகப் போடவும்.
------------------------------------------------------------------------------------------------மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகப் பிசையவும். [உருண்டை பிடிக்க வரணும்]
எண்ணையில் பொரிக்கவும். போண்டா
___________________________________________________________________________________________________
வெங்காயத்தை சன்னமாக நீளமாக நறுக்கவும். கோதுமை மாவில் இதைப் போடவும்.உப்பு, மிளகாய்த் தூள் போட்டு கொஞ்சம் பிரெட் தூள் சேர்த்து ரொம்ப, ரொம்ப கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துப் பிரட்டவும். உதிரி உதிரியாக வரணும். எண்ணையில் உதிர்த்த மாதிரி போட்டு சிவந்ததும் எடுக்கவும். பக்கோடா.
-----------------------------------------------------------------------------------------------
பிரெட்டை தோசைக்கல்லில் மிதமான சூட்டில் இரண்டு பக்கங்களையும் லேசாக வாட்டி கையால் பொடித்தால் பிரெட் தூள்.
__________________________________________________________________________________________________ வேகவைத்த உருளைக் கிழங்கை நன்கு கையால்ப் பிசைந்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய்,கொஞ்சம் பிரெட் தூள் சேர்த்துப் பிசைந்து சதுரமாகத் தட்டி எண்ணையில் பொரிக்கலாம்.
[இதில் frozen vegetables சேர்த்தும் செய்யலாம்].
அல்லது தோசைக்கல்லில் ஒரே சமயத்தில் நாலைந்து சதுரங்களை வைத்து சுற்றிலும் எண்ணை விட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டுஎண்ணை ஊற்றி சிவந்ததும் எடுக்கவும்.

வெள்ளி, அக்டோபர் 29, 2010

முள்ளு முறுக்கு

தேவையான பொருட்கள்-


கடலை மாவு-----------------------------1 கப்
அரிசி மாவு -------------------------------1 கப்
பொட்டுக் கடலை மாவு -----------------1 கப்
நெய் or வனஸ்பதி -----------------------2 tbls
மிளகாய்த் தூள்---------------------------1 or 2 ts
உப்பு ---------------------------------------தேவையான அளவு
எண்ணை --------------------------------- தேவையான அளவு

செய்முறை -
ஒரு பாத்திரத்தில் மூன்று மாவுகளையும் போட்டு தேவையான அளவு உப்பிட்டு கலக்கவும்.
நெய் or வனஸ்பதி போட்டு நான்கு கலக்கவும்.
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
சூடான எண்ணை 2 tbls மாவில் ஊற்றி கலக்கவும்.
மிளகாய்த் தூள் போட்டு கலந்து கொஞ்சம், கொஞ்சமாய் நீர் ஊற்றிப் பிசையவும்.
உருண்டை பிடிக்க வரவேண்டும். இதுவே பதம்.
முறுக்குக் குழாயில் முள்ளு முறுக்கு அச்சைப் போடவும்
சூடான எண்ணையில் முறுக்குகளாக்ப் பிழியவும்.
மிகவும் சிவக்கக் கூடாது.
முறுக்கு பிரிந்து வந்தால் மாவில் கொஞ்சம் கடலை மாவு, அரிசி மாவு கலந்து பிசையவும். பொட்டுக் கடலை மாவு சேர்க்க வேண்டாம்.
சூடான எண்ணையில் முறுக்கைப் பிழியவும்.வேகும் போது தீயை கொஞ்சம் குறைக்கவும். முறுக்கு உள்ளேயும் நன்கு வெந்திருக்கும்.

ரிப்பன் பகோடா

தேவையான பொருட்கள்-
கடலை மாவு -------------------1 கப்
அரிசி மாவு ----------------------1 கப்
நெய் அல்லது வனஸ்பதி ------1 tbls
மிளகாய்த் தூள் ------------------1 அல்லது 2 tbls
உப்பு-------------------------------தேவையான அளவு
எண்ணை -------------------------பொரிப்பதற்குத் தேவையான அளவு
செய்முறை-
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசிமாவு ,உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
அதில் நெய் or வனஸ்பதி போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
ஒரு கடாயில் தேவையான எண்ணையை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
சூடான எண்ணை 2 tbls அளவு கலந்து வைத்துள்ள மாவில் ஊற்றி கலக்கவும்.
மாவில் மிளகாய்ப் பொடி போட்டு கலந்து கொஞ்சம், கொஞ்சமாய் நீர் ஊற்றிப்
பிசையவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து உருண்டை பிடிக்க வந்தால் அதுதான் பதம்.
ரிப்பன் பகோடா அச்சை முறுக்கு குழாயில் போடவும்.
மாவை அது கொள்ளும் அளவு போட்டு சூடான எண்ணையில் பிழியவும்.
முதலில் சூடான எண்ணையில் பிழிந்து விட்டு அடுப்பை சிறிது குறைக்கவும்.
எண்ணை மிகவும் சூடாக இருந்தால் மாவு உள்ளே வேகாது.

செவ்வாய், அக்டோபர் 26, 2010

கோளறு பதிகம்

மூன்றாவது பாடல்
உருவளர் பவள மேனி
ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள்
முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்து அதனால்
திருமலர் கலைய தூர்தி
சமயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்-
அழகு மிகுந்த பவளம் போன்ற சிவந்த திருமேனியில் திருவெண்ணீற்றை
அணிந்து மணங் கமழும் கொன்றை மாலையையும் பிறையினையும்
முடியில் சூடி, வெள்விடை மேல் உமையம்மையாருடன் அடியேனது
உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால் பொன்மகளும், நாமகளும்,
கொற்றவையும், பூமிதேவியும், திசைகாப்பாளருமாகிய பல தெய்வங்களும்
அடியவருக்கு நல்லனவே செய்யும்.

திங்கள், அக்டோபர் 25, 2010

கோளறு பதிகம்

இரண்டாவது பாடல்

என்பொடு கொம்போ டாமை
இவைமார் பிலங்க
எருதேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்தமாலை
புனல்சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றோ டேழு
பதினெட்டொ டாறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.


பொருள்-
எலும்பும் பன்றிக்கோடும் ஆமைஓடும் ஆகிய இவைகள் திருமார்பில்
விளங்கவும், ஊமத்தமலர் மாலையையும், கங்கையையும் முடியில் சூடியும் உமாதேவியோடு ஏருதேறி எழுந்தருளி வந்து அடியேனது
உள்ளத்தில் புகுந்த காரணத்தால் ஒன்பதாவது நாளாகிய ஆயில்யம்,
பத்தாம் நாளாகிய மகம், பதினாறாம் நாளாகிய விசாகம், பதினெட்டாம்
நாளாகிய கேட்டையம், ஆறாம் நாளாகிய திருவாதிரை ஆகிய இவைகளோடு வைத்து எண்ணப்படும் பரணி, கார்த்திகை, பூரம், சித்திரை,
சுவாதி, பூராடம், பூரட்டாதி எனப்படும் இந்நாட்கள் அனைத்தும் அடியவர்க்கு மிகவும் அன்புடன் நல்லவனவே செய்யும்.

கோளறு பதிகம்

கோள்களால் வரும் துன்பங்களை போக்க ஏதுவான திருப்பதிகம் ஆதலால்
"கோளறு பதிகம் " எனப்பட்டது. ஆகவே இப்பதிகத்தைப் பாராயணம் செய்தால் எல்லா இடர்களும் நீங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
முதல் பாடல்
வேயுறு தோளி பங்கன்
விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை
முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய்
புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

அர்த்தம்-
மூங்கில் போன்ற தோள்களையுடைய உமாதேவியை இடது பக்கத்தில்
வைத்தவனும் ,விசத்தை உண்டு, அதனால் இருண்ட நீலகண்டனும் ஆகிய
சிவபிரான் மிகச் சிறந்த வீணையைத் தடவி களங்கமில்லாத பிறையையும்
கங்கையையும் முடியின் மீது தரித்து அடியேனது உள்ளத்தில் எழுந்து
அருளிய காரணத்தால் சூரியனும், சந்திரனும், அங்காரகனும், புதனும்,
குருவும், சுக்கிரனும் , சனியும், இராகுவும், கேதுவுமாகிய இரு பாம்புகளும்
தொண்டர்கட்கு மிகுதியாகவே நல்லனவே செய்யும்.


புதன், அக்டோபர் 20, 2010

அறிய வேண்டியது


Please communicate this information to your family and friends.
Have U ever heard about LPG gas cylinder's expiry date....!!
Do you know that there is an expiry date (physical life) for LPG cylinders? Expired Cylinders are not safe for use and may cause accidents. In this regard, please be cautious at the time of accepting any LPG cylinder from the vendor.
Here is how we can check the expiry of LPG cylinders: On one of three side stems of the cylinder, the expiry date is coded alpha numerically as follows A or B or C or D and some two digit number following this e.g. D06.
The alphabets stand for quarters - 1. A for March (First Qtr), 2. B for June (Second Qtr), 3. C for Sept (Third Qtr), 4. D for December (Fourth Qtr).
The digits stand for the year till it is valid. Hence D06 would mean December qtr of 2006. Please Return Back the Cylinder that you get with a Expiry Date, they are prone to Leak and other Hazardous accidents ...
The second example with D13 allows the cylinder to be in use until Dec 2013 . Kindly pass this to every one, and create awareness among the public.

செவ்வாய், அக்டோபர் 19, 2010

எழில் மிகு சென்னை

அண்ணா நகர் கோபுரம்:
சென்னையில் உள்ள உயரமான மற்றும் பெரிய பூங்கா கோபுரம். அண்ணாநகர் பூங்காவில் அமைந்துள்ள இந்த கோபுரம் வட்ட வடிவில் சுற்றி சுற்றிச் செல்லும் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளது. இதன் உச்சியில் இருந்து சென்னையை முழுமையாக கண்டு ரசிக்க முடியும். அண்ணாநகர் ரவுன்டானா அருகே அமைந்துள்ள இதற்கு நுழைவு கட்டணம் ரூ.1; காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாரத்தில் 7 நாட்களும் இது திறந்திருக்கும்.
பிர்லா கோளரங்கம்:
இந்த நவீன கோளரங்கம் அரை வட்ட வடிவிலான உருண்டையான கட்டிடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கம்ப்யூட்டர் மய கருவிகள் மூலம் வானில் உள்ள கோள்களையும் நட்சத்திரங்களையும் காண முடியும். கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அருகே பெரியார் அறிவியல் மற்றும் தொழிநுட்ப மையத்தில் அமைந்துள்ள இந் கோளரங்கத்தில் ஆங்கிலம் ( காலை 10-45; பகல் 01-15; 03-45) தமிழ் ( பகல் 12; 02-30) மொழிகளில் விளக்கம் தரப்படுகிறது. இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.20; சிறியவர்களுக்கு ரூ.10.
கன்னிமாரா பொது நூலகம்:
தேசிய நூலகங்களில் ஒன்று. இங்கு ஏராளமான நூல்களும் இதழ்களும் உள்ளன. கம்பூயட்டரில் இயங்கும் தொடுதிரை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள இது காலை 9 மணி முதல் இரவு 07- 30 வரை திறந்திருக்கும். தேசிய விடுமுறை நாட்களில் இது செயல்படாது. அனுமதி இலவசம்.
அரசு அருங்காட்சியகம்:
பாந்தியன் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் தற்கால கலைப் பொருட்கள் முதல் வரலாற்று காலத்துக்கு முற்பட்ட கலைப் பொருட்கள் வரை இடம் பெற்றுள்ளன. இங்கு பிரதான தென் இந்திய ராஜ பரம்பரைகளின் நினைவுச் சின்னங்கள் பெருவாரியாக உள்ளன. இங்குள்ள பல்வேறு கால வெண்கல மற்றும் இதர உலோக சிற்பங்கள், விலங்கியல் மற்றும் புவியியல் பகுதிகள் பார்வையாளர்களின் கருத்தைக் கவர்வதாக உள்ளன. அமராவதி பகதியில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள், அவரது வாழ்க்கையைச் சித்தரிப்பதாக உள்ளன. இங்குள்ள தேசிய கலைப் பொருள் பகுதியில் 10 முதல் 13ம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்த வெண்கலப் பொருட்கள், 16, 18ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த முகலாய ஓவியங்கள், ராஜஸ்தானி மற்றும் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த தட்சிண கலைப் பொருட்கள், பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்கள் ஆகியவை கண்ணைக் கவர்வதாக அமைந்துள்ளன தேசிய கலைப்பொருள் பகுதி அமைந்துள்ள கட்டிடம் சிவப்பு கற்களால் கட்டப்பட்டது. இங்குள் பொருட்கள் மட்டுமல்லாமல் இந்த கட்டிடமே ஒரு கலைப்பொருளாக திகழ்கிறது.
எலியட்ஸ் கடற்கரை:
தென்சென்னையில் அமைந்துள்ள அழகான சிற்றுலா தலம். இந்த அழகான கடற்கரைக்கு இங்கு அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயில் மேலும் பெருமை சேர்க்கிறது. 8 முகங்களுடன் கூடிய லட்சுமி விக்ரகங்கள் தனித்தன் கருவறையில் அமைந்துள்ளன. இந்த கடற்கரைப் பகுதியில் ஆரோக்கிய மாதா மடோனாவின் தேவாலயமும் உள்ளது.
மெரினா கடற்கரை:
அழகான மெரினா கடற்கரையில் நடந்து கொண்டே வங்க கடலையும் அதில் மோதும் அலைகளையும் ரசிக்கலாம். இனிமையான கடற்காற்றை சுவாசிக்கலாம். உலகிலேயே 2வது நீண்ட கடற்கரையாக மெரினா கடற்கரை திகழ்கிறது. இந்த கடற்கரைப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவிடங்கள் அமைந்துள்ளன. மேலும் தமிழ் அறிஞர்கள், தியாகிகள் சிலைகள் இங்கு அமைந்துள்ளன. இந்த பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை கலை நுணுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்த கடற்கரைச் சாலையில் சென்னை பல்கலைக்கழகம், செனட் ஹவுஸ், சேப்பாக்கம் மாளிகை, அரசு கலைக் கல்லூரி, ஐஸ் ஹவுஸ் ஆகியவை அமைந்துள்ளன.
நேப்பியர் பாலம்:
தலைமை செயலகத்திலிருந்து மெரினா கடற்கரை செல்லும் சாலையில் கூவம் நதி மீது அமைந்துள்ள நேப்பியர் பாலம் 1869ல் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் பொறியியல் தொழில் நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை:
சென்னையின் பிரதான வரலாற்றுச் சின்னமாக கருதப்படும் இந்த கோட்டை இங்கிலாந்தின் மத குருவான செயின்ட் ஜார்ஜ் பெயரில் அமைந்துள்ளது. இந்த கோட்டை பகுதியில் தற்போது தமிழக சட்டசபை, தலைமைச் செயலகம், தொல்பொருள் துறை அலுவலகங்கள், ராணுவ முகாம்கள் உள்ளன.
கோட்டை அருங்காட்சியகம்:
தலைமை செயலகத்திற்கு அருகே அமைந்துள்ள கோட்டை அருங்காட்சியகம் முதலில் கோட்டை ராணுவ அதிகாரிகளின் உணவருந்தும் இடமாக இருந்தது. பின்னர் அது பாங்காக உருவெடுத்தது. தற்போதைய ஸ்டேட் பாங்கின் முன்னோடி இதுதான். 1796ல் இது கலங்கரை விளக்கமாவும் செயல்பட்டது. 1948 முதல் கோட்டை அருங்காட்சியகமாக இயங்கி வரும் இதில் சென்னை நகரை உருவாக்கியவர்களின் மூல கையெழுத்து பிரதிகள், பழங்கால காசுகள், வெள்ளிப் பொருட்கள், சீருடைகள் ஆகியவை உள்ளன.
ஐகோர்ட்:
சென்னை நகரின் மற்றொரு பிரதான கட்டிடமாக கருதப்படும் சென்னை ஐகோர்ட் கட்டிடம் 1892ல் கட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள கோர்ட் கட்டிடங்களில் இது இரண்டாவது பெரிய கட்டிடமாகும். சென்னை சட்டக் கல்லூரியும் இதன் வளாகத்தில் அமைந்துள்ளது
எம்.ஜி.ஆர்., நினைவு இல்லம்:
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., வாழ்ந்த ஆற்காடு சாலையில் உள்ள இல்லம் எம்.ஜி.ஆர்., நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது..
டைடல் பார்க்:
வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத் துறையின் தாயகமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்கள் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உறைவிடமான இங்கு பல்வேறு நவீன வசதிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்களாக பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகளும் இங்கு உள்ளன.
சாந்தோம் பாசிலிகா:
இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான் செயின்ட் தாமஸ் கல்லறை அமைந்துள்ள இடத்தில் சாந்தோம் பாசிலிகா உள்ளது. மெரினா கடற்கரையின் தெற்கு மூலையில் அமைந்துள்ள இதில் இந்த பகுதிக்கான கத்தோலிக்கர்களின் தலைமை மதகுருவான சென்னை ஆர்ச் பிஷப்பின் தேவாலயம் அமைந்துள்ளது.
விவேகானந்தர் இல்லம்:
ஐஸ் ஹவுஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட இடம் 1963 முதல் சுவாமி விவேகானந்தர் நினைவாக விவேகானந்தர் இல்லம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. 1842 முதல் 1874 வரை ஐஸ் கட்டிகளைச் சேமித்து வøக்கும் இடமாக இது விளங்கியது. தற்போது இதில் விவேகானந்தர் தொடர்பான அரிய படங்கள் இடம் பெற்றுள்ளன.
கிண்டி தேசிய பூங்கா:
உலகிலேயே நகர்ப் பகுதிக்குள் அமைந்திருக்கும் ஒரே தேசிய பூங்கா கிண்டி தேசிய பூங்காதான். சென்னை நகரின் நுரையீரலாக கருதப்படும் மரங்கள் அடர்ந்த நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்காவில் பல்வேறு மரங்களும் புள்ளி மான் போன்ற அரிய ரக விலங்குகளும், பறவைகளும் உள்ளன.
அஷ்டலட்சுமி கோயில்:
எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோயிலில் மகாலட்சுமியின் 8 வடிவங்கள் விக்ரகங்களாக உள்ளன. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கபாலீஸ்வரர் கோயில்:
மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில். சிவபெருமாøன் மயில் வடிவில் பார்வதி தேவி வழிபட்டதால் இந்த பகுதி மயிலாப்பூர் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருஞான சம்பந்தர் பதிகம் பாடி ஒரு சிறுவனை உயிர்ப்பித்ததாகவும் புராணம் கூறுகிறது. மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் அறுபத்து மூவர் திருவிழா குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, அக்டோபர் 17, 2010

இதுவே வாழ்க்கை

4வயதில்--"எங்கப்பா போல ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது.
6-அவருக்கு எல்லா விஷயமும் அத்துபடி.
10-தங்கமானவர்.ஆனால் பொசுக் பொசுக்கு கோபம் வந்திடும்.மிட்டாய் தின்னதுக்காக என்னைஅடிச்சுட்டார்
12-நான் சின்னப்பிள்ளையா இருந்தபோது,என்னை நல்லா கவனிச்சிக்கிட்டாரு
14-அவருக்கு சீக்கிரம் திருப்தியே வராது,நாப்பது மார்க் எடுத்தால் அய்ம்பதுஎடுக்கணும்பாரு.99மார்க் எடுத்தாகூட--ஒரு மார்க்கை ஏன் கோட்டை விட்டே'ம்பாரு
16-என்னைச் சுத்தி என்ன நடக்கிதுங்கிரதை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறாரு.பழங்காலத்து மனுஷனாவே இருக்காரு.
18-எடுத்தேன் கவிழ்த்தேன்னுதான் எல்லா நடவடிக்கையும்.
20-அப்பப்பா,அந்த மனுஷனை புரிஞ்சுக்கவே முடியல.அம்மா எப்படிதான் காலம் தள்ளறாங்களோ?
25-எது கேட்டாலிம் 'கிடையாது','இல்லை','கூடாது'ங்கிற பேச்சுதான்.இவரெல்லாம் ஒரு மனுஷனா?
30-என் பையனை சமாளிக்கிறது கஷ்டமா இருக்கு.என்னை எங்கப்பா எப்படித்தான் சமாளிச்சாரோ?
40-என்னை எங்கப்பா எவ்வளவு ஒழுக்கத்தோட,கட்டுப்பாட்டோட வளர்த்தார் தெரியுமா? அதனால்தான்,இந்தளவு நல்லா இருக்கேன்.
45-எங்கப்பாவை நினைக்கும்போது ரெம்ப பெருமையா இருக்கு.
50-ஒருத்தனை மேய்க்கிறதுக்கு எவ்வளவு சிரமப்படறேன்?நாங்க மூன்று பேரு.ஒரு அண்ணன் மற்ற தம்பி அத்தனை பேரையும் கட்டுக்கோப்பா வளர்த்தார் எங்கப்பா.அவர் கிரேட்.
55-ஒவ்வொரு விஷயத்தையும் திட்டம் போட்டு முடிக்கிறதுல அவரை மிஞ்சஆளே இல்லை.
60-எங்கப்பா போல ஒரு ஆளை பார்க்கவே முடியாது.
(நான்கு வயதில் நாம் சொன்னது சரிதான் என்பதை உணர்வதற்குள்56ஆண்டுகள் ஓடி விடுகின்றன).

புதன், அக்டோபர் 13, 2010

பால் போளி

தேவையான பொருட்கள்-
மைதா --------------------------------1 கப்
சர்க்கரை -----------------------------1 கப்
பால் -----------------------------------3 கப்
முந்திரி --------------------------------15
ஏலக்காய் -----------------------------6
குங்குமப்பூ----------------------------கொஞ்சம்
உப்பு ------------------------------------ஒரு சிட்டிகை
எண்ணை-------------------------------தேவையான அளவு
செய்முறை-
மைதாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ,தண்ணீர் ஊற்றி பிசையவும்.
அரை மணி நேரம் ஊற விடவும்.
முந்திரி, ஏலக்காயை பொடிக்கவும்.
பால் பாதி அளவு சுண்டும் வரை ,குறைந்த தணலில் வைத்துக் கொதிக்க விடவும். அதில் சர்க்கரை, சிறிது பாலில் கலந்த குங்குமப்பூ, முந்திரி,
ஏலப்பொடி போட்டு கலக்கி, 5 நிமி அடுப்பில் வைக்கவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
மெல்லிய பூரிகளாக தேய்க்கவும்.
எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
பூரிகளை பாலில் 2 நிமிடம் ஊறவிட்டு தனியே எடுத்து வைக்கவும்.
பரிமாறும் போது பூரிகளின் மீது பால் ஊற்றி பரிமாறவும்.

வெள்ளி, அக்டோபர் 08, 2010

ரவை இனிப்பு

சுலபமாக செய்யும் இனிப்பு.
தேவையான பொருட்கள்-
ரவை .................................................200 கி
சர்க்கரை ..........................................200கி
தேங்காய்த் துருவல் ................ 50 கி
நெய் ...................................................50 கி
முந்திரி...............................................கொஞ்சம்
செய்முறை
கொஞ்சம் நெய்யில் துண்டாக்கிய முந்திரியை வறுத்து வைக்கவும்.
ரவையை சிவக்க வறுத்து வைக்கவும்.
தேங்காய்த் துருவலையும் சிவக்க வறுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி , கொதித்து ,பொங்கி வரும் போது துருவலை போட்டு கிளறவும்.
பிறகு கொஞ்சம், கொஞ்சமாக ரவையைப் போட்டு கிளறவும்.
அடுப்பை சிம்மில் வைக்கவும்.
கை விடாமல் கிளறவும்.
மீதி நெய்யையும் ஊற்றவும்.
பக்கங்களில் ஒட்டாமல் வரும் போது முந்திரியைப் போட்டுக் கிளறி ,ஒரு நெய் தடவிய தட்டில் ஊற்றி 5 நிமி ஆற விட்டு,வில்லைகளாகப் போடவும் .