திங்கள், நவம்பர் 15, 2010

கூந்தல் பராமரிப்பு

கூந்தல் உடையவள் கொண்டை முடிவாள் என்பது பழைய மொழி.
இப்பத்தான் கூந்தலே பிடரி வரைதானே இருக்கிறது!!! இதில் எங்கே கொண்டை
முடிவது? ஜடையே பின்ன முடியாது; It is o.k இருப்பதை காப்போம்;

வாரத்தில் மூன்று நாட்களாவது எண்ணை தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். [is It possible?]
அதாவது எண்ணையை தலையில் தடவி நன்றாக வேரில் இறங்குமாறு
அழுத்தித் தேய்க்க வேண்டும். பத்து நிமிடம் செய்தால் போதும்.
இதற்கு தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய், ஆலிவ்ஆயில், ஹோமியோபதி
ஆயில் பயன் படுத்தலாம்.
பொதுவாக ஏதாவது ஒரு எண்ணையை நீண்ட நாட்களாக உபயோகப் படித்தி
வந்தால் அதையே உபயோகிப்பது நல்லது.
நல்ல தரமான ஹெர்பல் ஷாம்பூ அல்லது சீகைக்காய் பொடி கொண்டு
கூந்தலை அலசலாம்.
தேங்காய்ப் பாலை தடவி கொஞ்ச நேரம் ஊறவிட்டு அலசலாம்.
இதனால் கூந்தலின் எண்ணைப் பசை அதிகரித்து, கருமையாகவும் நீளமாகவும்
வளரும். உலர்ந்த கூந்தல் உடையவர்கள் இதனால் பயன் பெறலாம்.
வாரம் இரண்டு முறை இதை செய்தால் இரண்டு மாதத்தில் பலன் தெரியும்???

இரண்டு முட்டைகளின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு
அதனுடன் வெதுவெதுப்பான நீர் கலந்து கூந்தலில் தடவி கொஞ்ச நேரம்
[அதன் அருமையான மணத்தை பொறுத்துக் கொள்ளும் நேரம்] கழித்து
ஷாம்பூ அல்லது சீகைக்காயிப் பொடி போட்டு அலசவும்.

இரவு பூந்தி கொட்டையை பொடித்து வெந்நீரில் கொதிக்க வைத்து வைக்கவும்.
காலையில் இதை பயன்படுத்தி அலசவும். பொடுகு பிரச்னைக்கு நல்லது.

பாசிப் பயறுடன் வெந்தயம் ஊற வைத்து அரைத்துக் குளிக்கலாம்.
அல்லது மாவாக அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

தினமும் ஆலிவ் ஆயில் அல்லது விளக்கெண்ணை உச்சந்தலையில் தடவிக்
கொண்டு குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.

தினந்தோறும் காலையிலோ, மாலையிலோ ஒரு ஸ்பூன் எண்ணையை
ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு,அதை விரல் நுனியில் எடுத்து மயிர்க்
கால்களில் படும்படியாக தேய்த்து மசாஜ் செய்யவும். 2 நிமிடம் போதும்.
பிறகு முடி முன்புறம் விழும்படி தலையைக் கவிழ்த்து குழாயின் கீழ் தலையை
நன்கு காண்பிக்கவும். குளிர்ந்த நீர் தலையில் விழும்போது விரல்களால்
நன்கு தேய்த்து விடவும்.
இது மயிர்க் கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தலை ஆரோக்கியமாக்கும்.
பின் ஒரு மெல்லிய துண்டை தலையில் சுற்றிக் கொண்டு ஐந்து நிமிடம்
கழித்து தலையை நன்றாக துவட்டவும்.
நன்கு காய வைக்கவும்.
விரல்களால் கோதி சிடுக்கு எடுக்கவும்.
இதனால் தலை வலியோ, ஜலதோசமோ பிடிக்காது.
இப்படி தினமும் எண்ணை தடவி குளிர்ந்த நீரில் குளிப்பதால் மயிர்க் கால்களில்
எண்ணைப் பசை இருப்பது நம் நாட்டு சீதோஷண நிலைக்கு ஏற்றது.
நம்முடைய உடல் சீதோஷண நிலைக்கு ஏற்றதா என்பதை அனுபவத்தில்
அறிய வேண்டும். சரியா?????????????

செய்யக் கூடாதவை-
கண்ட கண்ட hair spray உபயோகிக்க கூடாது.
விளம்பரங்களையும், T.V. பார்த்து உணர்ச்சி வசப்பட்டு புதுப் புது ஷாம்பூ பயன்
படித்திப் பார்க்கும் சோதனை எலிகள் ஆகக் கூடாது.
தலைக்கு சுடு நீர் விட்டு குளிக்கக் கூடாது.
சீப்பால் யார்மீதோ இருக்கும் கோபத்தைக் காட்டி வெடுக் வெடுக் என்று
சிடுக்கு எடுக்கக் கூடாது.
மிகுந்த வாசனைத் தைலங்களை பயன் படுத்தக் கூடாது.
பிறருடைய சீப்பு, பிரஷ், துண்டு பயன் படுத்தக் கூடாது.
கூந்தலை அடிக்கடி வெட்டக் கூடாது.
கூந்தலை மிகவும் இறுக்கமாக கட்டக் கூடாது.
அதிகம் வெயிலில் சுற்றுவது,
அடிக்கடி ஷாம்பூ பயன்படுத்துவது,
சத்தில்லாத உணவு சாப்பிடுவது
கூந்தல் வளர்ச்சியை பாதிக்கும்.

கூந்தல் வளர்ச்சி பரம்பரையைப் பொருத்தும் இருக்கு.
அதற்காக நம்ம முயற்சியைக் கைவிடக் கூடாது.
ஊதுற சங்கை ஊதுவோம்;
பின் அவரவர் விதி;
சொல்வதையும் சொல்லிட்டு இது என்ன என்கிறீகளா?
சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்!
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

கருத்துகள் இல்லை: