செவ்வாய், நவம்பர் 30, 2010

சிறு குறிப்புகள்

சூட்டினால் வயிறு வலி வந்தால்1ts சீரகம் அல்லது சோம்பை வெறும் [without oil] வாணலியில் வறுத்து அதனுடன் அரை டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கால் டம்பளராக சுண்டியதும் வடிகட்டி ,அதனுடன் ஒரு ஸ்பூன் வெண்ணை, கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் குடித்தால் வலி நிற்கும். சூடு தணியும்.உளுந்து வடைக்கு அரைக்கும் போது முதலில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டுப் பின் உளுந்து போட்டு அரைத்தால் மிக்சி ஜாரில் இருந்து மாவை எடுக்கவும், கழுவவும் சுலபமாக இருக்கும்.
முட்டி வலி நீங்க- தினமும் காலை, மாலை இரு வேலையும் முடிந்த அளவு தோப்புக் கரணம் போடவும். அல்லது ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு மெதுவாக உட்கார்ந்து எழுந்திருக்கவும். முதலில் செய்ய கஷ்டமாகத்தான் இருக்கும்; போகப் போகப் பழகி விடும். அதிகம் இஞ்சி, பூண்டு சேர்த்துக் கொண்டால் வாய்வுத் தொந்தரவு இல்லாமல் இருக்கலாம்.
தலையணை இன்றி கைகளை மடித்து கொண்டு தலைக்கு வைத்து சம தரையில் ஒரு துணியை விரித்துப் படுத்து ஓய்வு எடுத்தால் இடுப்பு வலி, முதுகு வலி குறையும்.
வாழ்த்து மடலில் செண்டைத் தடவி அனுப்பினால் , பெறுபவர் பிரிக்கும் போது
நல்ல மணம் வீசும்.
செல்லோ டேப் எடுக்க முடியாமல் ஒட்டி கொள்ளும். பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் சுலபமாக பிரிக்க வரும்.

ஞாயிறு, நவம்பர் 28, 2010

ஒரு நாள்

அந்த ஒரு நாள்; ஒரு விடுமுறை நாள்; வாரத்தின் கடைசி நாள்; அட! அதுதாங்க ஞாயித்துக் கிழமைங்கோ சரி விசயத்திற்கு வரேன். நான் சலிப்புடன் , என் கணவர் மகா சலிப்புடன் எழுந்து இருப்போம் போல் தெரிகிறது. இரண்டு நாளாக மப்பும் மந்தாரமாய் இருந்தது போல் கூட இன்று இல்லை. பின் எப்படி இந்த mood வந்தது என்று தெரிய வில்லை. பேப்பர் படித்து , கொஞ்சம் போல் பேசி, அங்கு நின்று, இங்கு நின்று எப்படியோ காலை டிபன் நேரம் வந்தது. நான் computer முன். என் கணவர் "என்ன செய்யப் போறே? என்று கேட்டார். நான் ரொம்ப diplomatica "என்ன வேண்டும்"? என்றேன். "மாவு இருந்தால் தோசை + முட்டை தோசை போதும்" என்றார். ; done என்றேன். என்ன நினைத்தாரோ தானே சட்னி அரைப்பதாக சொன்னார். நான் தோசை ஊற்ற, அவர் சட்னி அரைக்க காலை உணவு முடிந்தது.
அடுத்தது lunch; அப்போதுதான் எனக்கு உதித்தது .ஞாயிறு என்றாலே காலை
8-9o'clock nonveg வாங்கி வந்து விடுவார். அந்த routin இன்று மாறிவிட்டதே? என்ன
என்றால் "ரொம்ப bore; hotle போலாம்" என்றார்; அதுவும் done!வெளியில் எட்டிப் பார்த்தேன். climatum ஒ.கே. next எல்லோர் வீட்டிலும் இருக்கும் பிரச்சனை; வேலைக்காரி ? பக்கத்துப் பிளாட்டில் இருப்பவளைக் கூப்பிட்டு என் வேலையை முடிக்க சொல்லி ..............முடிந்தது. I am simply great.
As usual வெளியே முடிக்க வேண்டிய மூன்று வேலைகளையும் club பண்ணிட்டேன். அடுத்தது எந்த hotle? பேப்பரில் தேடல்; நெட்டில் தேடல்; [நாங்களும் மாடர்ன்தாங்க] discussion abt distance, taste, area, crowd. அதுவும் done.
முதல் வேலைக்கு almost close பண்ணும் நேரத்திற்கு correct ஆக போய்விட்டோம்.
அதுவும் முடிந்தது. Thanks to that gentle man.இதுவரை everything goes smooth.
இரெண்டாவது நாங்கள் போனது நீண்ட நாளாக போகணும் என்று நினைத்துக் கொண்டு இருந்த ஒரு famouse department store. கடையைத் தேடி, கார் பார்க்கிங் தேடி போனோம். நாங்கள் நினைத்த மாதரி காய்கறிகள் "fresh" ஆக இல்லை. ஞாயிறு என்பதால் சரில்லையா? என்றால் லாஜிக் உதைக்குது. அன்றுதானே நிறையாப் பேர் ஷாப்பிங் வருவார்கள்? இதுக்குப் போய் இவ்வளவு தூரம் ,பெட்ரோல் செலவு பண்ணிட்டு ,டிராபிக்யில் வந்தோம் என்று ஆகிவிட்டது.
வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் சிறிய கடையிலேயே நல்லா கிடைக்குமே!
மூன்றாவது main target- ஹோட்டல் -அதுவும் தேடிட்டுத் தான் போனோம். அங்கேயும் கார் பார்க்கிங் பிரச்சனை. ஹோட்டலும் ஒரு cut rdயில் தான் இருக்குது. அதிலேயும் கார் பார்க்கிங் full. அடுத்த கட்டில்தான் நிறுத்த முடிந்தது.
உள்ளே போனால் நிறையாபேர் waiting. enterance, steps, sofa -எங்கு பார்த்தாலும் மக்கள் ; மக்கள்;மக்கள்; அட!கைக்குழந்தை கூட இருக்குங்க. என்னத்தைச் சொல்ல? உலகம் எங்கேயோ போயிட்டு இருக்கு.
பெரிய உணவு விடுதி என்று சொல்ல முடியாது. at a time 30-35 members சாப்பிடலாம். low roof with embedded ceiling lights. அதனால் மெல்லிய வெளிச்சம்; ஒ.கே.ஒ.கே.atmosphere creat பண்ணராங்களாம். வழக்கம் போல் சீருடை [uniform]
கழுத்துப்பட்டி [tie] அணிந்து நமக்கு சேவை புரிய காத்திருக்கும் பணியாளர்கள் .
இந்த விடுதிக்கு நீண்ட பாரம்பரியம் இருக்குதாம். மூன்றாவதோ, நான்காவதோ தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தற்போது நடத்துகிறார்களாம். பல ஊர்களில் இதன் கிளைகள் இருக்குதாம். nonveg-briyani இதன் speciality. அதற்கு காரணம் அவர்கள் போடும் மசால் சாமான்களாம்; அதன் கலவை ரகசியம் தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு, பாதுகாக்கப் படுகிறதாம். மற்ற உணவகங்கள் போல் இல்லாமல் இங்கு பிரயாணிக்கு சீரக சம்பா அரிசி உபயோகிக்கிறார்களாம். இந்த கடை துவங்கி 50++வருடங்கள் ஆகி விட்டதாம். என்னடா கடை கதை சொல்லுகிறேன் என்று நினைக்கிறீர்களா? என்ன செய்ய? இடம் கிடைக்காமல் நின்று கொண்டு இருக்கும் போது அங்கு எழுதப்பட்டு இருந்ததை படித்தே ஆக வேண்டும். நான் படித்துக் கொண்டும், வருபவரையும், போகிறவறையும் பார்த்துக் கொண்டும் ,என்னவரையும் பார்த்துக் கொண்டு இருந்தேன். அவர் மூடு கெட்டுச்சு கதை கந்தல்; திடீர் என்று எங்கேயோ கேட்டது ஒரு குரல்; பார்த்தால் ஒருவர் கையில் ஒரு நோட் வைத்துக் கொண்டு பெயர் சொல்லி கூப்பிடுகிறார்.
அது என்னவென்றால் நாம் வந்தவுடன் [காத்திருப்பவர்கள்] பெயரையும், எத்தனை பேர்யென்பதையும் சொல்லி வைத்தால், இடம் இருக்கும் போது அவர் கூப்பிடுவாராம். என் கணவர் " என்ன செய்யலாம் "? என்றார். பசி ; நேரமும் ஆகி விட்டது. நானும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது மறுபடியும் எங்கேயோ கேட்ட குரல்; இம்முறை ஒலிபெருக்கியில்[mike] பார்த்தால் பார்சல் எண் ; அது வங்கிகளில் இருப்பதைப் போல் திரையிலும் காட்டப் படுகிறது. ஓடு; இந்த கவுண்டருக்குப் போனால் அங்கேயும் waiting; ஒரு வழியாக பார்சல் எண் பெற்றுக் கொண்டோம். எண் 87 திரையில் 75 எண்தான் இருக்குது; மறுபடியும் waiting; எல்லாம் படித்து முடித்து விட்டேன். so lookingaround கைக்குழந்தையுடன் ஒரு தம்பதி; உட்காரக் கூட இடம் இல்லை; baby அழுகுது; mummy சமாதானம் செய்யுது.daady முழிக்குது;
எங்கள் பக்கத்தில் ஒரு குடும்பம் எங்களுக்கு முதலிலே வந்து waiting; அதில் குர்தாவில் இருக்கும் வயதானவர் "earlyஆக வரலாம் என்றேனே; இப்பப் பாரு ?காத்துக் கொண்டு நிற்கிறோம்; அடுத்த முறை முதலிலேயே வரணும்" என்கிறார்.
ஒரு ஐந்து வயது பெண் குழந்தை " அம்மாஇங்கு நாமே சமைத்துச் சாப்பிடவேணுமா" என்று அம்மாவிடம் கேட்கிறது. அம்மாவிடம் no answer.
ரொம்ப நேரமாக பார்சல் அழைப்பு இல்லை. அந்த கவுண்டரைச் சுற்றி இன்னும் கூட்டம். போனால் அங்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்.
"எவ்வளவு நேரம் நிற்பது? பார்சல் வருமா; வராதா?" என்று கேட்கிறார். பணியாளர் "நான் என்ன சார் செய்வது? ஞாயிற்றுக் கிழமைகளில் இப்படித்தான்" என்று சொல்ல , "தெரியுதுதானே; அந்த நாளில் மட்டும் அதிகம் prepare பண்ண வேண்டியதுதானே" என்று கஷ்டமர் கேட்கிறார்; but no reply.
ஒரு மேஜை அருகில் சாப்பிடுபவர்கள் எப்போ எழுந்திருப்பார்கள் என்று அவர்கள் பின்னாலே ஒரு குடும்பம் காத்து நிற்கிறது; அவர்கள் எழுந்த அடுத்த வினாடி இவர்கள் பூந்து உட்கார்ந்து விட்டார்கள். இம்முறை சபாரி போட்ட வயதானவர் ஒருவர் "20 நிமிடமாக அந்த சின்ன பையன் சாப்பிடுகிறான்; நாம காத்துக் கொண்டு இருக்கிறோம் என்ற courtsy கூட இல்லாமல் பெற்றவர்கள் ஜாலியாக பேசிட்டு இருக்காங்கள்; useless fellows" என்று கடுப்படிக்கிறார்.
ஒரு வழியாக பார்சல் பைகள் வந்தது. குரலும் கூப்பிட துவங்கி விட்டது. 97 வது எண் கூப்பிட்டார்கள். எங்களது 87 எண். என் கணவர் விடுவாரா? போனார்; கேட்டார். அதற்குள் எங்கள் பார்சலும் வந்து விட்டது. ஒரு வழியாக ஒரு மணி நேரம் கழித்து வெளியில் வந்தோம். பின் வீடு வந்து சாப்பிட்டு களைத்து தூங்கி விட்டோம். எப்படியோ ஒரு நாள் போய் விட்டது . ஆனாலும் ஒன்று சொல்ல வேண்டும் - பிரியாணி நன்றாக இருந்தது. இல்லை என்றால் நொந்து இருப்போம்.
இதிலிருந்து ஒன்று தெரிகிறது- ஞாயிறுகளில் பெரும்பான்மையான மக்கள் வீட்டில் அதிகம் சமைப்பது இல்லை? இதுகூட நல்ல system? ?????????

சனி, நவம்பர் 27, 2010

அதிசயம்

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடி நின்றேன் என செடி கொடிகள் இடத்தும் கருணை கொண்ட மகான் வள்ளலார் இராமலிங்க அடிகளார். பார்வைக்கு எளியவர்; வெள்ளாடை அணிந்தவர்; அற்புதமான பாடல்களைப் பாடியவர். திருவருட்பா எனும் அருமையான நூலை ஆக்கியவர்.

ஒரு முறை வள்ளலார் ஒரு சாலை வழியே நடந்து சென்று கொண்டு இருந்தார். ஆடு ஒன்று அப்போது தான் குட்டி ஒன்றை ஈன்றிருந்தது. குட்டியோ முழுமையாக எழுந்திரிக்க முடியாமல் தள்ளாடித் தள்ளாடி கிழே விழுந்தது. தாய் ஆடு தனது குட்டியை சுற்றிச் சுற்றி வந்தது. இந்த காட்சியை வள்ளலார் பார்த்தார்.கூர்ந்து கவனித்த போது குட்டியின் ஒரு கால் ஊனம் என்று அறிந்தார். வாடிய பயிரை கண்ட போது கண்ணீர் சிந்தியவர் அல்லவா?தாய் ஆட்டின் துக்கத்தைப் பார்த்து வருந்தினார். ஊனத்தை எப்படி போக்குவது என்று சிந்தித்து அதற்கான முயற்சியில் இறங்கினார்.

அருகில் இருந்த வீட்டுத் திண்ணையில் காவி ஆடையில் ,கையில் ஒரு தடியுடன் "முரட்டுச் சாமியார் "என அழைக்கப்படும் துறவி ஒருவர் அமர்ந்து இருந்தார். குட்டியின் ஊனத்தைப் போக்க அதை எடுத்து தன் மடியில் வைத்து இருக்கும் வள்ளலாரைப் பார்த்தார்.பின் அவரிடம் சாமியார் "தடவி கொடுத்தால் குட்டியின் ஊனம் சரியாகி விடுமா?எனக் கேட்டார்.
அவரது கேள்வி வள்ளலார் காதிலும் விழுந்தது. ஆனால் அவர், அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. குட்டியின் துயரத்தைப் போக்குவதிலேயே கவனமாக இருந்தார்.
"எல்லாம் வல்ல இறைவன் நினைத்தால் நடக்காதது எதுவும் இல்லை; உலகில் உள்ள எல்லா உயிர்களையும் காப்பாற்றும் ஈசன் இந்த ஆட்டுக் குட்டியின் துயரத்தையும் போக்குவான்" என்று கூறியபடியே இறைவனிடம் மனம் உருக வேண்டினார். உருக்கமாக ஒரு பாடலையும் பாடினார்; ஊனம் உற்ற காலையும் பரிவுடன் தடவிக் கொடுத்தார். சிறிது நேரத்திலேயே அந்த அதிசயம் நடந்தது.
அதுவரை எழுந்து நிற்க முடியாமல் தடுமாறிய குட்டி சட்டென நிமிர்ந்து எழுந்தது. அதை தனது மடியில்இருந்து வள்ளலார் இறக்கி விட்டார்.
அடுத்த நொடியே தாய் ஆட்டின் மடியில் பால் குடித்து மகிழ்ந்தது குட்டி. அங்கும், இங்கும் துள்ளிக் குதித்து ஓடியது. இதை கண்ட வள்ளலாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. இறைவனின் எல்லையில்லா கருணையை எண்ணி வணங்கினார். சாமியாருக்கோ இன்ப அதிர்ச்சி!!!!!

கஞ்சி போடும் கலை


ஆடைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்;; அதிலும் புடவை தனி ரகம்; அதில் பல variety உள்ளது ;சிந்தடிக் , பட்டு, காட்டன் -இந்த மூன்று பிரிவுகளில் எல்ல விதங்களும் அடங்கி விடும்.. இதில் சிந்தடிக் பொதுவாக எல்லோராலும் பயன்படுத்தப் படுகிறது. விலை குறைவு. முக்கியமாக maintanence ஈஸி. ஆனால் ஒரு டிசைன் வந்தால் எங்கெங்கு நோக்கினும் அதே புடைவை தான் இருக்கும்; feelings of india!!!!!!!!!!!!!!!!!!!!.
பட்டு வசதி உள்ளவர்கள் மட்டுமே கட்டுவார்கள் என்பது எல்லா கால கட்டத்திலும் ஒரு அபிப்பிராயம். ஓரளவிற்கு அது உண்மையும் கூட. நம்ம ஊர் சீதோஷண நிலைமைக்கு கொஞ்சம் கூட சரிப்படாது. வயதானவர்கள் கட்டுவது என்றும் பெரும்பாலும் ஒதுக்கப் படுகிறது. designs மற்றும் கலர் combination பாரம்பரியமாகத்தான் இருக்கும். இப்போது நிலைமை மாறி வருகிறது. இது கொஞ்சம் costly item. maintanance கொஞ்சம் சிரமம்.
கம்பீரத்துடன் கூடிய கண்ணியமான தோற்றம் தரும் எனும் அளவுகோல் வைத்துப் பார்த்தால் காட்டன் புடைவைகள்தான் என்றும் முதலில் வருவது.இதற்கு சிறந்த உதாரணம் நமது மதிப்புக்குரிய திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள். what a graceful look she had in cotten sarees!
அருமையான, unique designes என்றாலே காட்டன் புடைவைகள்தான். vvvvvvvvow!நான் சொல்ல வருவது புடவை வகைகளைப் பற்றி அல்ல. ஒரு build up கொடுத்தால்த் தானே attractive ஆக இருக்கும் !சரி மேட்டருக்கு வருகிறேன். மிகப் பலபேர் ,காட்டன் maintain பண்ணுவது especially கஞ்சி போடுவது மகா கஷ்டமான விஷயம் என்றே காட்டனை ,ஆசையாக இருந்தாலும் வாங்குவதே இல்லை என்பார்கள். முக்காலும் உண்மை. நிறையா மெனக்கெட வேண்டும் தான்; ஆனா look வருமே ?? என்ன செய்ய? பேஷன் மக்கா பேஷன் ; இந்த கஞ்சி போடும் வித்தையைத் தான் நான் சொல்லப் போறேன். நான் செய்யும் முறை இது.
இப்ப கஞ்சி மாவு, reviva, spray starch - எல்லாமே கிடைக்குது. ஆனா நாமே தயாரித்து போடும் கஞ்சியே நன்றாக இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒ.கே.
மைதாமாவு அல்லது ஜவ்வரிசி மாவு தேவை.
ஜவ்வரிசியை மிக்ஸ்யில் அரைத்துக் கொள்ளுங்கள்.
ஏதோ ஒரு மாவை நீர்க்க தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு புடைவைக்கு ஒரு மேஜைக் கரண்டி[one table spoon] என்பது அளவு.
அடுப்பில் வைத்து ,கட்டி தட்டாமல் கிளறி நன்கு கொதிக்க விடவும்.
கஞ்சி பதம் வந்ததும் இறக்கவும். ஆறியதும் வடிகட்டவும்.
எப்போதும் காய்ந்த புடைவைகளைதான் கஞ்சி போடவேண்டும்.
1/4 பக்கட் நீரில் 2 கரண்டி கஞ்சியை ஊற்றி கலந்து விட்டு புடைவையை விரித்து நன்கு மூழ்கும் படி அமிழ்த்தி,அமிழ்த்தி இரண்டு மூன்று முறை எடுத்து தொங்க விடவும். பிழிய வேண்டாம். பிழிந்தாலும் அழுத்தி பிழியக்கூடாது.
நல்ல டார்க் கலர் புடைவைகளுக்குப் போடும்போது கஞ்சியில் 1-2 சொட்டு நீலம் கலந்து பிறகு நனைத்து எடுக்கவும்.
சாயம் போகும் புடைவைகளை கடைசியில் நனைக்கவும்.
கஞ்சியில் ஒரு துளி perfume கலந்துவிட்டால் வாசனைப் புடைவை கிடைக்கும்.
முடிந்தவரை புடைவைகளை வெயிலில் சுருக்கம் இல்லாமல் நன்கு விரித்து உலர்த்துவது நல்லது.
ஒரு பாயை தரையில் விரித்து அதன் மேல் காயப்போடலாம்.
கொடியில்நீர் வடியும் வரை தொங்கவிட்டு பின் விரித்து காயப் போடுவது சுலபம்.
பத்து நிமி கழித்து ஒவ்வொரு மடிப்பையும் உதறி விடலாம்.
அயர்ன் பண்ணக் கொடுக்கும் போது நீங்களே புடைவையை நன்கு விரித்து மடித்துக் கொடுங்கள். இதனால் புடைவை நன்குஇஸ்திரி செய்யப்படும்.
நான் சொன்ன அளவு பொதுவானது. மொடமொடப்பு வேண்டும் என்றால் 1/2 ts
கஞ்சி அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு முறை கட்டி விட்டு மடிக்காமல் தொங்க விட்டால் மூன்று, நான்கு முறை கூட கட்டலாம்.
எதற்கு இவ்வளவு சிரமம் என்று நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது.
கஞ்சி போடத் தேவை இல்லாத half காட்டன் புடைவைகளும் இப்ப மார்க்கட்டில் கிடைக்குது. ஆனால் pure காட்டன் feel வராது.
லைட்யாக சிந்தடிக் புடைவைகளுக்கு கூட கஞ்சி போட்டு கட்டலாம். அனுபவம்.
புடைவைகளுக்கு கஞ்சி போடும் போது ஜாக்கட்டுகளை மறந்து விடாதீர்கள்.
அதற்கும் கஞ்சி பாத் கொடுத்தால் சரி matchஆகும். [மொடமொடப்பில்]
ஊதற சங்கை ஊதி விட்டேன். பிறகு உங்கள் சாய்ஸ்.

வியாழன், நவம்பர் 25, 2010

சுலபமானவை

அவல் புலாவ்-
தேவையான பொருட்கள்-
அவல் ----------------------1 கப் [200 கிராம் ]
பெரிய வெங்காயம் ------1[பொடியாக நறுக்கியது]
பச்சை மிளகாய் -----------1 OR 2
பட்டை ---------------------1 சிறிய துண்டு
கிராம்பு---------------------1
ஏலக்காய்------------------1
இஞ்சி ----------------------1 சிறிய துண்டு
பூண்டு----------------------4 பல்
உப்பு ------------------------தேவையான அளவு
கேரட் ----------------------1/4 கப் [பொடியாக நறுக்கியது]
பீன்ஸ் ---------------------1/4 கப் [பொடியாக நறுக்கியது]
கருவேப்பிலை-----------கொஞ்சம்
கொத்துமல்லி------------கொஞ்சம்

செய்முறை-
கேரட், பீன்சை அளவானநீரில் கொஞ்சம் உப்பு போட்டு வேக விடவும்.
அவலை நன்கு களைந்து அளவான நீரில் சரியாக 5 நி ஊற விட்டு வடி கட்டவும்.
இரண்டு ஸ்பூன் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கொரகொரப்பாய் அரைக்கவும்.
இரண்டு ஸ்பூன் எண்ணையில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, கருவேப்பிலை தாளித்து அடுத்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் அரைத்ததைப் போட்டு பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த காய்கறிகளை போட்டு வதக்கி அதனுடன் அவலைப்
போட்டு நன்கு கலந்து உப்பிடவும். அடுப்பை சிம்மில் வைத்து செய்யவும்.
இறக்கி கொத்துமல்லி தூவவும்.
option- தக்காளி சேர்க்கலாம்.

அவல் உப்புமா-
தேவையான பொருட்கள்-
அவல்----------------------1 கப்
வெங்காயம்---------------1/4 கப் [பொடியாக நறுக்கியது]
பச்சை மிளகாய்------------4
இஞ்சி-----------------------கொஞ்சம் [பொடியாக நறுக்கியது ]
கடலைப் பருப்பு-----------1 ts
உளுந்துப் பருப்பு-----------1 ts
வறுத்த வேர்க்கடலை-----2 ts
கருவேப்பிலை-------------கொஞ்சம்
எண்ணை-------------------2tbs
உப்பு-----------------------தேவையான அளவு
செய்முறை-
அவலை நன்கு களைந்து ஐந்து நி நீரில் ஊற வைக்கவும். பின் வடிகட்டவும்.
ஒரு கடாயில் எண்ணை ஊற்றி அதில் கடுகு, பருப்புகள் தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி அதனுடன் கருவேப்பிலை, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
உப்பிட்டு வதக்கி அதனுடன் வேர்க்கடலை சேர்க்கவும்.
அவுலைப் போட்டு 2-3 நி சிம்மில் வதக்கவும்.
இறக்கி கொத்து மல்லி போடவும்.

option- இறக்கும் போது துருவிய தேங்காய் சேர்க்கலாம்.
அரை மூடி எலுமிச்சை சாறு சேர்க்கலாம். அதுவும் அடுப்பிலிருந்து இறக்கி சிறிது ஆறியதும் சேர்க்க வேண்டும்.

கந்தரலங்காரம்

நாளென்செயும் வினைதானென்செயும்
எனை நாடிவந்த
கோளென்செயும் கொடுங்கூற் றென்செயுங்
குமரேசரிரு
தாளுஞ்சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுந்
சண்முகமுங்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து
தோன்றிடினே.  

கோளறு பதிகம்

பதினொன்றாவது பாடல்

தேனமர் பொழில்கொள் ஆலை
விளைச்செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதி யாய
பிரமா புரத்து
மறைஞான ஞானி முனிவன்
தானுறகோளும் நாளும்
அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை ஓதும்
அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.

பொருள்-
தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகளும், கரும்பின் ஆலைகளும், செந்நெற் பயிர்களும் நிறைந்து இந்த வளங்களால் மிகுந்த பொன்வளம் எங்கும் சிறக்கும். நான்முகன் முதற்கண் பூசித்து வழிப்பட்ட பிரமாபுரம் என்னும், சீர்காழியில் அவதரித்த வைதீக ஞானத்தை உடைய திருஞான சம்பந்தன், கோள்களும், நாள்களும் தொண்டர்களை வருத்தாதவாறு உரைத்த சொல் மாலையாகிய திருப்பதிகத்தை ஓதுகின்ற அடியவர்கள் மேலுலகத்தில் அரசராக ஆளக்கடவர்கள். இது நமது ஆணை ஆகும்.

கோளறு பதிகம்

பத்தாவது பாடல்

கொத்தலர் குதலியோடு
விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம்
முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்து அதனால்
புத்தரொ டமனை வாதில்
அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்-
பூங்கொத்துக்கள் பரந்த கூந்தலை உடைய உமாதேவியாரோடு, அருச்சுனனுக்கு அருள் செய்த இறைவர், ஊமத்தை மலரையும் சந்திரனையும் பாம்பையும் திருமுடியில் தரித்து அடியேன் உள்ளத்தில் எழந்தருளிய காரணத்தால் இறைவனது திருவெண்ணீறு, புத்தர்களையும், சமணர்களையும் வாதத்தில் தோல்வி அடைந்து கெடும்படி செய்யும். இது உண்மையும், உறுதியும் ஆகும். இதனால் தொண்டர்களுக்கு அவர்களால் வரும் தீயன யாவும் நல்லனவே செய்யும்.

கோளறு பதிகம்

ஒன்பதாவது பாடல்

பலபல வேட மாகும்
பரன் நாரி பாகன்
பசுஎறும் எங்கள் பரமன்
சலமக ளோடே ருக்கு
முடிமேல் அணிந்த என்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும்
மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்-
மிகப்புலவான திருவுருவங்களோடு கூடிய பரமரும் பெண்ணொரு பாகரும் விடையை ஊர்கின்றவரும் அடியோங்களதுமேலோனுமாகிய இறைவர், கங்கையோடு எருக்கமலரையும் திருமுடியில் தரித்து அடியேனது உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால் நான்முகனும், திருமாலும், வேதங்களும் தேவர்களும் அடிக்கடிவரும் காலமும், கடலும், மழையும் ஆகிய இவை எல்லாமும் தொண்டர்களுக்கு நல்லனவே செய்யும்.

புதன், நவம்பர் 24, 2010

நினைவுகள்

அடுப்பில் , கவனிக்கவும் gas stove அல்ல; விறகடுப்பு; அதில் ஒரு பெரிய பாத்திரம்-அதில் 3/4 பங்கு தண்ணீர்; கீழே ஒரு உருலிப் பாத்திரத்தில் நீரில் ஊறும் புழுங்கல் அரிசி; இந்த இடத்தில் ஒரு சிறிய flashback-
சமையல் அறை, சமையல் ரூம் ,அடுக்களை என பலவிதமாக சொல்லப்படும் சோறாக்கும் ஒரு இடம். 90% பெண்களின் வாழ்விடம்!!!!!! முந்திய நுற்றாண்டுகளில் கொஞ்சம் இருட்டாக இருப்பது இவ்வறையின் முக்கிய விதி. இதற்கு அருகில் ஒரு சிறிய உக்கிராண அறை. அதாவது இன்றைய STORE ROOM. அதுவும் இருட்டறைதான்;அங்கு வருடத்திற்கு தேவையான அளவு கவனமாக செய்யப்பட்ட ஊறுகாய் வகைகள் இருக்கும் பெரிய, பெரிய ஊறுகாய் ஜாடி என்று கூறப்படும் பீங்கான் ஜாடிகள்[ always dull brown colour body with white lid?????????????]மாக்கல் சட்டிகள் எனப்படும் கனமான shapes[என்னவென்று சொல்வதம்மா ]பிசுக்குப் பிசுக்கு எண்ணை சாடிகள் with செக்கில் ? ஆட்டி வந்த எண்ணைகள், எடுப்பதற்கு அகப்பைகள் என்று சொல்லப்படும் குழிவான கரண்டிகள் with நீளமான கைபிடிகள்[பித்தளை அல்லது மரத்தால் செய்யப்பட்டவை] அந்தகால STORAGE CONTAINERS ஆக பயன்பட்ட சதுர வடிவான மூடியுடன்இருக்கும் மீடியம் சைஸ் தகர டின்கள், பெரும்பாலும் பித்ததளைச் சாமான்கள், இரும்பு வடச் சட்டிகள், கெட்டி அலுமினியப் பாத்திரங்கள், அரிசி சாக்குகள்[கோணி] என்பது பொதுவான பொருட்கள். கொஞ்சம் எவர்சில்வர் பாத்திரங்கள் இருக்கும். மற்றொரு சுவாரசியமான செய்தி சாதாரண எவர்சில்வர் பாத்திரங்களை விட இன்றைய விலைமிகுந்த வெள்ளி சாமான்கள் அன்றைய காலகட்டத்தில் almost எல்லோர் வீட்டிலும் சாதாரணமாகப் பயன் படுத்தப்பட்டது. VOOOOOOOOOW
தொடரும்

மறுபடியும் எந்திரன்

எந்திரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயா பிக்சர்ஸ் நிறுவனமான கிரீன் லிட்டில் மூவீஸ் எந்திரன் - 2 என்ற படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
எந்திரன் படத்தின் கடைசிக் காட்சி நினைவு இருக்கும்... மியூசியத்தில் எந்திரன் அக்கு வேறு ஆணி வேறாக இருக்கும்.. இரண்டாம் பாகம் அதிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.
அந்த மியூசியத்துக்கு தாடி வைத்துக்கொண்டு ஒரு பெரியவர் வருகிறார், அவருக்கு உதவியாளராக இன்னொருவர். பார்க்க அறிஞர் மாதிரி இருக்கிறார். இவர்கள் இருவரும் சும்மா இல்லாமல் கூட்டம் இல்லாத மியூசியத்தில் எந்திரனை திரும்பவும் சேர்க்கிறார்கள். எந்திரன் உயிர்பெற்று விடுகிறது.
ஆண்டு - கிபி 2023
உயிர் பெற்ற எந்திரன் பேசத் தொடங்குகிறது "13 ஆண்டுகள் என்னை ஒதுக்கிவிட்டீர்கள். இந்த தண்டனை எனக்கு போதாதா? நான் என்ன செய்தேன்? பாயசம் சாப்பிடும் போது புறங்கையைத்தானே நக்கினேன்...."
பெரியவருக்கும் அறிஞருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிறார்கள். இந்த எந்திரனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது, ஒரு ஐந்து எழுத்து பெயர் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் ஐந்து எழுத்தில் பெயர் வைத்தால் தமிழக மக்கள் குழம்புவார்கள் அதனால் நான்கு எழுத்தில் பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள். எந்திரனிடம் பேச்சுக் கொடுக்கிறார்கள்.
"உனக்கு என்ன எல்லாம் தெரியும்?"
"எனக்குக் கவிதை எழுதத் தெரியும்"
"அட அப்படியா? ஒரு கவிதை சொல்லு பார்க்கலாம்"
"தமிழர்களேதமிழர்களேநிங்கள் என்னைநட்டு போல்டாக கழட்டி போட்டாலும்பேரிச்சம் பழமாக தான் ஆவேன்அதை என் குடும்பத்தினர் எல்லோரும் சாப்பிடலாம்."
பெரியவரும், அறிஞரும் இது எப்படிக் கவிதையாகும் என்று குழம்பி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்.
"வேற என்ன தெரியும்?"
"கடிதம் எழுதுவேன்"
அப்பறம்?
"சினிமா படத்துக்கு வசனம் எழுதுவேன்"
"ம்"
"ஏதாவது மானும் மயிலும் ஆடும் நிகழ்ச்சிக்கு அழைத்துக்கொண்டு போனால் நான்குமணி நேரம் ஆனாலும்கூட சோர்ந்துபோகாமல் நடனத்தை மட்டுமே பார்ப்பேன்.
"ஓ! இன்னொரு கேள்வி..."
"நீங்கள் கேள்வியே கேட்க வேண்டாம், நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லுவேன்!"
இதற்குமேல் பெரியவரும் அறிஞரும் வாயடைத்து, "உனக்கு பல கலைகள் தெரிந்திருக்கிறது. அதனால் உன்னை "கலைஞர்" என்று அழைக்க போகிறோம்," என்று சொல்ல எந்திரன் குஷியாகிறது.
"உங்களை நான் எப்படி அழைக்க வேண்டும்?" என்று எந்திரன் கேட்டது.
"நீயே முடிவு செய்" என்றார் பெரியவர்.
"எனக்கு நீங்கள்தான் திரும்பவும் உயிர் கொடுத்தீர்கள். அதனால் நீங்கள்தான் என் கடவுள்!"
பெரியவர் கோபமாக, "ஏய் காட்டுமிராண்டி! நானே கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நீ என்னையே கடவுள் என்று சொல்லுகிறாய். என்ன தைரியம் உனக்கு? ..." என்று கத்த தொடங்கினார்.
கலைஞர் உடனே தன் டேட்டாபேஸில் அலச, கடவுள் என்றால் மற்றொரு வார்த்தை -தெய்வம்... அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.. என்று ப்ளாஷ் அடிக்கிறது. பிதா என்றால் தந்தை என்றும் ஒளிர்கிறது.
"நீங்கள் என் தந்தை மாதிரி, பெரியவராகவும் இருப்பதால் நீங்க "தந்தை பெரியார்" என்று அழைக்கிறது.
பக்கத்தில் இருக்கும் அறிஞர், "அவர் எனக்குதான் முதலிலிருந்தே தந்தை," என்று சண்டைக்கு வருகிறார்.
"அப்படியென்றால் நீங்கள் எனக்கு மூத்தவர். அதனால் உங்களை அறிஞர் அண்ணா என்று கூப்பிட போகிறேன்."
கலைஞர், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் - மூவரும் எலக்டரிக் டிரெயினில் ஏறுகிறார்கள்.
இவர்கள் ஏறிய பெட்டியில் ஓர் இளைஞர் குமுதம் படித்துக்கொண்டு இருக்கிறார். அதன் அட்டையில் எந்திரன் படம் இருப்பதை பார்த்து எந்திரன் குஷியாகிறது. அந்தப் புத்தகத்தை வாங்கி ஒரு நொடி கண்ணுக்குநேராகப் பிடித்துவிட்டு திருப்பித் தருகிறது.
புத்தகம் கொடுத்தவர், "அதற்குள் படித்துவிட்டீர்களா?"
"படிப்பதற்கு என்ன இருக்கிறது? குமுதத்தில் வெறும் படம்தானே. அதனால் உடனே பார்த்துவிட்டேன்" என்கிறது.
பக்கத்தில் ஒரு கணக்கு வாத்தியார் கால்குலேட்டரை வைத்து ஏதோ தட்டிக்கொண்டிருக்கிறார். எந்திரன் என்ன என்று கேட்க, அவர் 1.7லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் என்று தெரியவில்லை என்று சொல்ல எந்திரன் டக் என்று விடை சொல்லுகிறது. இதில் எத்தனை கிலோ ஒரு ரூபாய் அரிசி வாங்கலாம், எத்தனை கிராம் மளிகைப்பொருள்கள் வாங்கலாம் என்றெல்லாம் விஜய்காந்த் மாதிரி புள்ளிவிவரம் சொல்லுவதை பார்த்து எதிர்சீட்டில் இருக்கும் இளைஞர் ஆர்வமாகக் கிட்டே வருகிறார்.
அப்போது அந்த இளைஞரைச் சுற்றி ஆர்.எஸ்.எஸ். கோஷ்டி ஒன்று வம்பு செய்ய உடனே எந்திரன் அவர்களை வாய்க்கு வந்தபடி தூவேஷிக்கிறது. அந்த கோஷ்டி அடுத்த ஸ்டேஷனில் இறங்கிப் போய்விடுகிறார்கள்.
"உன் பெயர் என்ன?" என்று எந்திரன் கேட்கிறது.
அதற்கு அந்த இளைஞர், "எனக்கு வேலை எதுவும் இல்லை, சும்மா ஊர்சுற்றுகிறேன். அரேபிய மொழியில் ராகுல் என்றால் ஊர்சுற்றுபவர் என்று பெயர். அதனால் என்னை எல்லோரும் ராகுல் என்று அழைப்பார்கள். பணம், பதவி என்று நிறைய இருந்தாலும், ஒரு ஜாலிக்கு ரயிலில் சுற்றுவேன், பிட்டுக்கு மண் சுமப்பேன்..குடிசையில் டீ குடிப்பேன்." என்று அடுக்கிக்கொண்டே போகிறார். "என்னை அந்தக் கும்பலிடமிருந்து காப்பாற்றியதற்கு நன்றி. பதிலுக்கு உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?" என்றும் விசாரிக்கிறார்.
எந்திரன் சற்றும் யோசிக்காமல், "என்னிடம் 2G ஃபோன் தான் இருக்கிறது. எனக்கு இப்போது லேடஸ்டாக 3G ஃபோன் வேண்டும்," என்று கேட்கிறது.
உஷாரான இளைஞர், "என் அம்மாவிடம் கேட்டுச் சொல்லுகிறேன்" என்று கூறி அடுத்த ஸ்டேஷனில் வண்டி நிற்பதற்கு முன்பாகவே இறங்கி தலைதெறிக்க ஓடுகிறார்.
எந்திரனுக்கு உலக அறிவு, ஞானம் எல்லாவற்றையும் பகுத்தறியச் சொல்லிதர முடிவுசெய்து பெரியவரும் அறிஞரும் அறிவாலயத்துக்கு அப்டேட் செய்ய அழைத்து போகிறார்கள். அங்கே சந்தானம், கருணாஸ் போல மணிமணியாய் இரண்டு 'வீர' இளைஞர்கள் அவருக்கு ஸ்பீச் பிராக்டிஸ் கொடுக்கிறார்கள். அவர்களுடைய பயிற்சி எப்படி இருக்கிறது, "தமிழ் காட்டுமிராண்டி பாஷை, கடவுளை நம்பாதே, பாப்பானையும் பாம்பையும் கண்டால் பாப்பானைக் கொல்லு" என்றெல்லாம் சரியாகச் சொல்கிறதா என்று சோதிக்க வந்த பெரியவரைப் பார்த்து எந்திரன், "தமிழன் மரமண்டை, சோற்றாலடித்த பிண்டம்..." என்று அடுக்குகிறது. பெரியவரும், அறிஞரும் காமெடி உருப்படிகளைக் கண்டிக்கிறார்கள். காமெடி உருப்படிகள் எந்திரனோடு சேர்வதா சேற்றைவாரி அடிப்பதா என்ற குழப்பத்திலேயே மீதி நாள்களைக் கழிக்கிறார்கள் வில்லனாக வரும் கேரக்டர் பெரியவரிடம் இருக்கும் கருப்பு பெட்டியில் இருக்கும் சிகப்பு டிஸ்கை எடுத்து எந்திரனுள் போட, கருப்பு கண்ணாடி, மஞ்சள் துண்டு கரகரத்த குரல் என்று எந்திரன் அடுத்த வெர்ஷன், புதிய கெட்டப்புடன் எழுந்து வருகிறது.
இதற்குள் அறிஞர் வேறு ஒரு ரோபோவை தயாரிக்க அதுவும் கருப்பு கண்ணாடி, வெள்ளை தொப்பி கெட்டபுடன் வருகிறது...
இதற்கு பிறகு படம் குடும்ப படமாகிறது. அதாவது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.

திங்கள், நவம்பர் 22, 2010

சுலபமானவை

ஒரு கப் பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

நீரை வடித்து விட்டு நான்கு அல்லது ஐந்து பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைக்கும் போது கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம்.

இந்த மாவை , மோரில் நீர்க்க கரைக்கவும்.

ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து கரைத்த மாவை ஊற்றி கைவிடாமல் கிளறவும்.

சப்பாத்தி மாவு பதத்தில் வந்ததும் இறக்கவும்.

ஆறியதும் கையால் நன்கு பிசைந்து சீடைகளாக உருட்டவும்.

எண்ணையில் பொரிக்கவும்.

புளிப்பும், காரமுமான சுவையான சீடை ரெடி.

தயிரை துணியில் கட்டி தொங்க விட்டு நீரை நீக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்துமல்லி அரைத்து ,உப்பிட்டு தயிருடன்கலக்கவும்.

டோஸ்ட் செய்த பிரெட் மீது தடவி சாப்பிடலாம்.

இதனுடன் cheese துருவியது அல்லது cheese slice வைத்தும் சாப்பிடலாம்.

ஒரு கப் ரவையை [வெள்ளை or கோதுமை] வறுக்கவும்.

ரைஸ் குக்கரில் 3ts எண்ணை ஊற்றி கொஞ்சம் சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி , நான்கு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொஞ்சம் நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் காரட் துண்டுகள், கொஞ்சம் பச்சைப் பட்டாணி, கொஞ்சம் பீன்ஸ் துண்டுகள், கொஞ்சம் குடைமிளகாய் துண்டுகள், போட்டு வதக்கி ரவையைப் போட்டு இரண்டரை கப் நீர் விட்டு உப்பிட்டு வேக விடவும்.

வெந்ததும் 1ts நெய் or எண்ணையில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ,முந்திரி, வேர்க்கடலை தாளித்து போடவும்.

எண்ணை குறைவான சத்தான கிச்சடி ரெடி.

அடிக்கடி கிளற வேண்டாம்.

நேரம் மிச்சம்.

HARRY POTTER Vs TR

மெக்சிகன் ரைஸ்

பாசுமதி அரிசி ------------------- 2 கப்

பெரிய வெங்காயம்---------------1

வெங்காயத்தாள் ------------------கொஞ்சம்

மிளகாய் வற்றல் ----------------20

பூண்டு-----------------------------6 பல்
அஜினோமோட்டோ ------------1/4 ts

எண்ணை --------------------------1/4 கப்

செய்முறை-12 மிளகாய் வற்றல், 8 பல் பூண்டு , மையாக அரைக்கவும்.

அரிசியை 10 நி ஊறவிட்டு இரண்டு முறை கழுவவும்.

நீரை வடிகட்டவும்.

4 கப் நீரில் இரண்டு விசில் விடவும். 10 நி சிம்மில் வைக்கவும்.

வெங்காயம், வெங்காயத் தாளை பொடியாக நறுக்கவும்.

2 ஸ்பூன் எண்ணையில் மிளகாய், பூண்டு விழுதை பச்சை வாசனை போக வதக்கவும்.

இதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் சாதம், அஜினோமோட்டோ சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும். இறக்கவும்.

வேறு ஒரு கடாயில் 1/4 எண்ணை ஊற்றி நன்கு காய்ந்ததும் 8 மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி ஆற விடவும்.

ஆறியதும் சாதத்தில் ஊற்றிக் நன்கு கலந்து விடவும்.

சூப்பர் ஆன காரமான சாதம் தயார்.

இடியாப்பம் பாயா

இடியாப்பம்
பச்சரிசி ---------------------------4 கப்
புழுங்கல் அரிசி ----------------1 கப்
செய்முறை-
இரண்டு அரிசிகளையும் ஒன்றாக கலந்து 4- 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் நன்கு கழுவி களைந்து நிழலில் காய விடவும்.
சிறிது ஈரம் இருக்கும் போதே மிசினில் மாவாக அரைக்கவும். கொஞ்சம் கொரகொரப்பாக இருக்க வேண்டும்.
கடாயை காய வைத்து கொஞ்சம், கொஞ்சமாக மாவைப் போட்டு வறுத்து எடுக்கவும். சிம்மில் வைத்து செய்யலாம்.
கோலம் போட்டால் பிசிறு இல்லாமல் கம்பி இழுக்க வர வேண்டும்.
பின் கட்டி இல்லாமல் சலித்து வைக்கவும்.
தேவையான போது தேவையான அளவு மாவை எடுத்து சிறிது உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரை தெளித்துப் பிசையவும்.
இடியாப்ப குழாயில் போட்டு இட்லித் தட்டில் பிழியவும்.
6-7 நிமி வெந்து விடும்.


இதற்கு super combination பாயா !!
சென்னையில் இது ஒரு famouse dish.
இதற்கு ஒரு தனி fans இருக்கிறார்கள்.
சில குறிப்பிட்ட கடைகளும் உண்டு.
o.k. இப்ப நாம் எப்படி இதை செய்யலாம் என்று பார்ப்போம்.


பாயா

ஆட்டுக்கால் ---------------------------2
சின்ன வெங்காயம் --------------------ஒரு சிறிய கப்
தக்காளி [மீடியம் ]----------------------2
இஞ்சி ------------------------------------ஒரு சிறிய துண்டு
பூண்டு ------------------------------------6 பல்
பட்டை ------------------------------------1 துண்டு
லவங்கம் ---------------------------------2
ஏலக்காய் ---------------------------------2
பச்சை மிளகாய் -------------------------2
பொட்டுக் கடலை -----------------------2 ts
தேங்காய் -------------------------------1 மூடி
எண்ணை -------------------------------3ts

செய்முறை-
ஆட்டுக்காலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டவும்.
தேங்காய் கடலையை ஒன்றாக அரைத்து ஒன்றாம், இரண்டாம் பால் எடுக்கவும்.
குக்கரில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு சிறிது உப்பிட்டு வதக்கவும்.
அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதில் ஆட்டுக்காலைச் சேர்த்து சிறிது வதக்கி இரண்டாம் பாலை [2 டம்ளர் ]சேர்த்து குக்கரை மூடவும்.
5-6 விசில் விடவும்.
பின் குக்கரைத் திறந்து முதல் பாலை ஊற்றி 3 நி கொதிக்க விடவும்.
சுவையான பாயா ready.

கோளறு பதிகம்

எட்டாவது பாடல்

வேள்பட வீழிசெய் தன்று
விடைமேல் இருந்து
மடவாள்த னோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை
மலர்சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை
அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்-

மன்மதன் அழியும்படி அந்நாளில் விழித்து நோக்கி உமாதேவியாரோடும் கூடினவராய் சந்திரனையும், வன்னியையும், கொன்றைமலரையும் சிரசில் தரித்து எருதின்மேல் எழுந்தருளி வந்து அடியேனது உள்ளத்தில் புகுந்த காரணத்தால் ஏழு கடல்களும் சூழ்ந்த இலங்கைக்கு அரசனாகிய இராவணனோடு ஆழ்ந்த கடல்களும், பிறதுன்பங்களும் வருத்தாமல் தொண்டர்களுக்கு நல்லனவே செய்யும்.

ஞாயிறு, நவம்பர் 21, 2010

கோளறு பதிகம்

ஏழாவது பாடல்

செப்பிள முலைநன் மங்கை
ஒருபாக மாக
விடைஏறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும்
முடிமேல் அணிந்த என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம்
மிகையான பித்தும்
வினையான வந்த நலியா
அப்படி நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்-

செப்பைப் போன்ற தனங்களையுடைய உமாதேவியார் ஒருபக்கத்தில் அமர இடபத்தை ஊர்ந்து அருளுகின்ற செல்வராகிய இறைவர் திங்களையும், கங்கையையும் முடியில் தரித்து அடியேனுடைய உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால் வெப்பம், குளிர்ச்சி, வாதம், பித்தம் மற்ற தீவினைகளும் தொண்டர்களை அதிகம் வருத்தாது நல்லனவே செய்யும்.

கோளறு பதிகம்

ஆறாவது பாடல்

வாள்வரி அதள தாடை
வரிகோ வணத்தர்
மடவாள்த னோடும் உடனாய்
நாள் மலர் வன்னி கொன்றை
நதிசூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு
கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளறி நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்-
ஒளியையும், கோடுகளையும் உடைய புலித்தோலாடையையும், கட்டின கோவணத்தையும் உடைய இறைவர், அன்றலர்ந்த மலர்களையும், வன்னியையும் ,கொன்றைமாலையையும், கங்கையையும் திருமுடியில் சூடி உமாதேவியாருடன் எழுந்தருளி வந்து அடியேனது உள்ளத்தில் புகுந்த காரணத்தால் கொலைத் தொழிலையுடைய சிங்கம், புலி, கொல்லுதல் உடைய யானை, பன்றி, கரடி, மனித குரங்கு ஆகிய இவைகள் தொண்டர்களுக்கு நல்லனவே செய்யும்.

கோளறு பதிகம்

ஐந்தாவது பாடல்


நஞ்சணி கண்டன் எந்தை

மடவாள்த னோடு
விடைஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை

முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும்
உரும் இடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.பொருள்-

விஷத்தை உண்டதால் திருநீலகண்டத்தை உடையவரும், எமது தந்தையும் உமாதேவியோடு காளை வாகனத்தில் ஊர்ந்து அருளுகின்ற பரமனாகிய சிவபெருமான், வன்னியையும், கொன்றை மலரையும் முடியில் தரித்து இரவில் அடியேனது உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால் கொடிய சினமுடைய அசுரரோடும், அச்சத்தை உண்டாக்கும் இடியும், மின்னலும் மிகுதியான பூதங்களும் தொண்டர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.

புதன், நவம்பர் 17, 2010

கோளறு பதிகம்

நான்காவது பாடல்


மதிநுதல் மங்கை யோடு
வடபால் இருந்து
மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை
முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி
நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.


பொருள்-

பிறைபோலும் நெற்றியை உடைய உமையம்மையோடு வடதிசையில்
இருந்து வேதங்களை திருவாய் மலர்ந்து அருளுகின்ற எங்கள் சிவபெருமான் , கங்காநதியோடு கொன்றைமாலையைத் திருமுடியில்
சூடி அடியேன் உள்ளத்தில் புகுந்த காரணத்தால் சினமுடைய காலனும்,
நமனும், யமதூதர்களும் ,கொடிய நோய்களும் ஆகிய இவை எல்லாம்
தொண்டர்களுக்கு மிக நன்மையே செய்யக்கூடியனவாம்.

செவ்வாய், நவம்பர் 16, 2010

punch dialog

U can expect a BUS from a bus stop
but
U can not expect a FULL from a full stop

U can find TEA in a teacup
but
U can not find WORLD in a worldcup

U can find KEYS in keyboard
but
U can not find MOTHER in motherboard
A mechanical ENGINEER can become a MECHANIC
but
A software ENGINEER can not become a SOFTWARE
U can become an ENGINEER if U study in an engineering college
but
U can not become a PRESIDENT if U study in Presidency college


U may have AIRTEL or BSNL connection
but
when U sneeze uwill say HUTCHதிங்கள், நவம்பர் 15, 2010

கூந்தல் பராமரிப்பு

கூந்தல் உடையவள் கொண்டை முடிவாள் என்பது பழைய மொழி.
இப்பத்தான் கூந்தலே பிடரி வரைதானே இருக்கிறது!!! இதில் எங்கே கொண்டை
முடிவது? ஜடையே பின்ன முடியாது; It is o.k இருப்பதை காப்போம்;

வாரத்தில் மூன்று நாட்களாவது எண்ணை தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். [is It possible?]
அதாவது எண்ணையை தலையில் தடவி நன்றாக வேரில் இறங்குமாறு
அழுத்தித் தேய்க்க வேண்டும். பத்து நிமிடம் செய்தால் போதும்.
இதற்கு தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய், ஆலிவ்ஆயில், ஹோமியோபதி
ஆயில் பயன் படுத்தலாம்.
பொதுவாக ஏதாவது ஒரு எண்ணையை நீண்ட நாட்களாக உபயோகப் படித்தி
வந்தால் அதையே உபயோகிப்பது நல்லது.
நல்ல தரமான ஹெர்பல் ஷாம்பூ அல்லது சீகைக்காய் பொடி கொண்டு
கூந்தலை அலசலாம்.
தேங்காய்ப் பாலை தடவி கொஞ்ச நேரம் ஊறவிட்டு அலசலாம்.
இதனால் கூந்தலின் எண்ணைப் பசை அதிகரித்து, கருமையாகவும் நீளமாகவும்
வளரும். உலர்ந்த கூந்தல் உடையவர்கள் இதனால் பயன் பெறலாம்.
வாரம் இரண்டு முறை இதை செய்தால் இரண்டு மாதத்தில் பலன் தெரியும்???

இரண்டு முட்டைகளின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு
அதனுடன் வெதுவெதுப்பான நீர் கலந்து கூந்தலில் தடவி கொஞ்ச நேரம்
[அதன் அருமையான மணத்தை பொறுத்துக் கொள்ளும் நேரம்] கழித்து
ஷாம்பூ அல்லது சீகைக்காயிப் பொடி போட்டு அலசவும்.

இரவு பூந்தி கொட்டையை பொடித்து வெந்நீரில் கொதிக்க வைத்து வைக்கவும்.
காலையில் இதை பயன்படுத்தி அலசவும். பொடுகு பிரச்னைக்கு நல்லது.

பாசிப் பயறுடன் வெந்தயம் ஊற வைத்து அரைத்துக் குளிக்கலாம்.
அல்லது மாவாக அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

தினமும் ஆலிவ் ஆயில் அல்லது விளக்கெண்ணை உச்சந்தலையில் தடவிக்
கொண்டு குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.

தினந்தோறும் காலையிலோ, மாலையிலோ ஒரு ஸ்பூன் எண்ணையை
ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு,அதை விரல் நுனியில் எடுத்து மயிர்க்
கால்களில் படும்படியாக தேய்த்து மசாஜ் செய்யவும். 2 நிமிடம் போதும்.
பிறகு முடி முன்புறம் விழும்படி தலையைக் கவிழ்த்து குழாயின் கீழ் தலையை
நன்கு காண்பிக்கவும். குளிர்ந்த நீர் தலையில் விழும்போது விரல்களால்
நன்கு தேய்த்து விடவும்.
இது மயிர்க் கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தலை ஆரோக்கியமாக்கும்.
பின் ஒரு மெல்லிய துண்டை தலையில் சுற்றிக் கொண்டு ஐந்து நிமிடம்
கழித்து தலையை நன்றாக துவட்டவும்.
நன்கு காய வைக்கவும்.
விரல்களால் கோதி சிடுக்கு எடுக்கவும்.
இதனால் தலை வலியோ, ஜலதோசமோ பிடிக்காது.
இப்படி தினமும் எண்ணை தடவி குளிர்ந்த நீரில் குளிப்பதால் மயிர்க் கால்களில்
எண்ணைப் பசை இருப்பது நம் நாட்டு சீதோஷண நிலைக்கு ஏற்றது.
நம்முடைய உடல் சீதோஷண நிலைக்கு ஏற்றதா என்பதை அனுபவத்தில்
அறிய வேண்டும். சரியா?????????????

செய்யக் கூடாதவை-
கண்ட கண்ட hair spray உபயோகிக்க கூடாது.
விளம்பரங்களையும், T.V. பார்த்து உணர்ச்சி வசப்பட்டு புதுப் புது ஷாம்பூ பயன்
படித்திப் பார்க்கும் சோதனை எலிகள் ஆகக் கூடாது.
தலைக்கு சுடு நீர் விட்டு குளிக்கக் கூடாது.
சீப்பால் யார்மீதோ இருக்கும் கோபத்தைக் காட்டி வெடுக் வெடுக் என்று
சிடுக்கு எடுக்கக் கூடாது.
மிகுந்த வாசனைத் தைலங்களை பயன் படுத்தக் கூடாது.
பிறருடைய சீப்பு, பிரஷ், துண்டு பயன் படுத்தக் கூடாது.
கூந்தலை அடிக்கடி வெட்டக் கூடாது.
கூந்தலை மிகவும் இறுக்கமாக கட்டக் கூடாது.
அதிகம் வெயிலில் சுற்றுவது,
அடிக்கடி ஷாம்பூ பயன்படுத்துவது,
சத்தில்லாத உணவு சாப்பிடுவது
கூந்தல் வளர்ச்சியை பாதிக்கும்.

கூந்தல் வளர்ச்சி பரம்பரையைப் பொருத்தும் இருக்கு.
அதற்காக நம்ம முயற்சியைக் கைவிடக் கூடாது.
ஊதுற சங்கை ஊதுவோம்;
பின் அவரவர் விதி;
சொல்வதையும் சொல்லிட்டு இது என்ன என்கிறீகளா?
சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்!
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

சிறு குறிப்புகள்

உருண்டை மஞ்சள் மொத்தமாக வாங்கி வைத்தால்
கொஞ்ச நாளில் ஓட்டை விழுந்து மாவாக கொட்ட ஆரம்பிக்கும்.
இதை தவிர்க்க மஞ்சள் வாங்கியதும் வெயிலில் உலர்த்தி ஈரமில்லாத ஒரு
டப்பாவில் போட்டு ஒரு கற்பூர கட்டியையும் போட்டு வைத்தால்
உளுத்துப் போகாமல் அப்படியே இருக்கும்.
அப்பளம் நமத்துப் போகாமல் இருக்க அப்பளங்களை உளுத்தம் பருப்பு
டப்பாவின் மேலாக வைத்து இறுக மூடி வைக்கவும்.

மூன்று துளை, ஐந்து துளை உள்ள மின்சார பிளக்குகளை உபயோகிக்காமல்
இருக்கும் போது அந்த துளைகள் மீது
பெரிய ஸ்டிக்கர்ப் பொட்டை ஒட்டி வைக்கவும்.

துளைகளை மூட எலெக்ட்ரிக் கடைகளில் குறைந்த விலையில் அடைப்பான்கள் கிடைக்கிறது. அதையும் உபயோகிக்கலாம்.

வாஷ்பேசின் சில சமயம் அடைத்துக்கொள்ளும். 2ts ப்ளீச்சிங் பவுடரை போட்டு15-20 நிமிடம் விடவும். பின் குழாயைத் திறந்து தாராளமாக தண்ணீர் விடவும். அழுக்குகள் நீங்கி அடைப்பு சரியாகிவிடும்.

பித்தளைப் பாத்திரங்களை தேய்க்க புளியைப் பயன்படுத்துவோம்.
அதற்கு பதில் பிழிந்த எலுமிச்சை தோலால் தேய்த்து கழுவினால்
பளிச் சென்று இருக்கும்.

சாம்பார்ப் பொடி

தனியா --------------------------------1/4 கி
மிளகாய் வற்றல் --------------------1/4 அல் 1/2 கி [உங்கள் விருப்பம்]
விரலி மஞ்சள் [நீளம்] ---------------15
மிளகு ---------------------------------50 கிராம்
வெந்தயம் ---------------------------50 கிராம்
துவரம் பருப்பு ----------------------100 கிராம்
கடலைப் பருப்பு --------------------100 கிராம்
உளுத்தம் பருப்பு --------------------75 கிராம்
செய்முறை-
பொருட்களை நன்கு வெயிலில் காய வைக்கவும்.
மிசினில் அரைக்கவும்.
அல்லது எண்ணையில்லாமல் வெறும் வாணலியில் கொஞ்சம்
சூடு வரும்வரை வறுத்து அரைக்கவும்.
அரைத்தவுடன் மூடக்கூடாது.
அரைத்தவுடன் பொடியை ஒரு பேப்பரில் பரத்தி வைக்கவும்.
நன்கு ஆறியவுடன் எடுத்து வைக்கவும்.
கை படாமல் வேண்டும் போது ஒரு ஈரமில்லா கரண்டியில் எடுக்கவும்.

மற்றொரு முறை-
மேலே சொன்ன பொருட்கள் + + +
சீரகம் ------------------------50 கிராம்
பெருங்காயம் ---------------2 to 3 ts
கட்டிப் பெருங்காயம் என்றால் ஒரு சிறு துண்டு
கருவேப்பிலை -----------------ஒரு கைப்பிடி
உப்பு -------------------------------கொஞ்சம்
இது போட்டால் வீடே மணக்கும்.

முதல் வகைப் பொடியில் உளுந்து வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

உப்பும் கல்லுப்பாக [crystal salt] இருந்தால் அதன் சுவையே தனி.
உப்பு சேர்த்து அரைத்தால் ரொம்ப நாள் பூச்சி, வண்டு வராமல் இருக்கும்.

ஞாயிறு, நவம்பர் 14, 2010

நல்ல குடிமகன்

MY LORD
இவரை குற்றம் சொல்ல முடியாது?
தலைக் கவசம் அணிய வேண்டும் என்பது அரசு ஆணை.
அதை யார் போட வேண்டும் ?????????
ஒட்டுனரா? அல்லது அவருடன் செல்பவரா?
இதை புரியும் படி சட்டம் போட்டவர்கள் விளக்கமாக சொல்லி இருக்க வேண்டும்.
SO,,,, யார் மீது தப்பு?
இது POINT NO 1
குழந்தையை காப்பாற்றவும் இதை செய்திருக்கலாம்?
அவரின் பாசத்தையும், கவனத்தையும் பாராட்ட வேண்டும்.
இது POINT NO 2
SO,,,,,,,, இவர் ஒரு நல்ல குடிமகன்தான் !!!!!!!!!!!!!
THAT'S ALL MY LORD.

சனி, நவம்பர் 13, 2010

குரு பெயர்ச்சி

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் குருப் பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா வியாழக்கிழமை தொடங்கியது.
தேவாரப் பாடல் பெற்ற தலமான இது, நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடையும் நாளில், குருப் பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
வாக்கிய பஞ்சாங்கப்படி நவம்பர் 21, ஞாயிறு இரவு 10. 54 மணிக்கு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.
குரு பகவானுக்குரிய மந்திரங்கள்-


குரு காயத்ரி
ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.

குரு ஸ்லோகம்-1
தேவனாம்ச ரிஷிணாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமாமி ப்ருஹஷ்பதிம்.

குரு ஸ்லோகம்-2
குரு பிரஹ்மா குரு விஸ்ணு
குரு தேவோ மகேச்வர:
குரு சாஷாத் பரப்ரஹ்மை
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ.

குரு துதி- 1
வானவர்க்கரசே! வளம் தரும் குருவே!
காணா இன்பம் காண வைப்பவனே!
பொன்னிற முல்லையும் புஷ்பராகமும்
உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!
சுண்டல் தானியமும் சுவர்ண அபிஷேகமும்
கொண்டுனை வழிப்படக் குறைகளைத் தீர்ப்பாய்!
தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்
நிலையாய்த் தந்திட நேரினில் வருக!

குரு துதி- 2
குணமிகு வியாழன் குரு பகவானே!
மனமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்!
ப்ருகஸ்பதி வியாழன் பரகுரு நேசா
கிரகதோஷம் இன்றி கடாட்சித்து அருள்வாய்!

நாள் தோறும் மூன்று முறை சொல்லி வழிபட்டால் குருவருளால் குறைகள் நீங்கி நன்மை பெறலாம்.

வெள்ளி, நவம்பர் 12, 2010

குரு பெயர்ச்சி

நவகிரகங்களில் ஒன்றான குருபகவான் வரும் 21ம் தேதி [ஞாயிற்றுக் கிழமை] கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குரு தசை காலம் 16 ஆண்டுகள்.
நவகிரக மண்டபத்தில் குரு பகவான் மஞ்சள் வஸ்திரம் கட்டி,
வடக்கு நோக்கி இருப்பார்.
இவருக்கு நைவேத்யம் எலுமிச்சை அல்லது தயிர் சாதம்.
இவரது நிலை ஜாதகத்தில் சரியில்லாவிட்டால் வாத நோய் வரும் என்பர்.
இவ்வாண்டு குரு பெயர்ச்சியால் பலனடையும் ராசிகள்:
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், கும்பம்.
இவ்வாண்டு குரு பெயர்ச்சியால் பரிகார ராசிகள் :
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம்.


மேஷம்_[அசுவினி, பரணி, கார்த்திகை]
குரு பெயர்ச்சிப் பலன்_ 50/100
பரிகாரப் பாடல்:
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஊதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே!
சிவ பெருமானை வழிபடுதல் நல்லது.

ரிஷபம்- [கார்த்திகை2,3,4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம்]
குரு பெயர்ச்சி பலன் -50/100
பரிகாரப் பாடல்:
மாலே!நெடியோனே! கண்ணனே!விண்ணவர்க்கு
மேலா!வியன்துழாய்க் கண்ணியனே-மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே!என்றன்
அளவன்றால் யானுடைய அன்பு.
கிருஷ்ணரை வழிபடுதல் நன்று.

மிதுனம்-[மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்]
குருபெயர்ச்சிப் பலன் -40/100
பரிகாரப் பாடல்:
ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
சீறுதல் கொள்ளாத் திருவே போற்றி
ஊக்கமது அளிக்கும் உயிரே போற்றி
ஆக்கம் ஈயும் அன்னாய் போற்றி
திருமாமகளே செல்வீ போற்றி.
லட்சுமி தாயாரை வழிபடுதல் நன்று.

கடகம்- [புனர்பூசம் 4 பாதம், பூசம், ஆயில்யம்]
குருபெயர்ச்சிப் பலன்- 80/100
பரிகாரப் பாடல்:
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே.
திருக்கடையூர் அபிராமியை வழிபடுதல் நன்று.

சிம்மம் -[மகரம், பூரம், உத்திரம்1 பாதம்]
குருபெயர்ச்சிப் பலன்- 45/100
பரிகாரப் பாடல்:
வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே
செந்தில்நகர் சேவகா என்று திருநீறு
அணிவார்க்கு மேவ வராதே வினை.
முருகப் பெருமானை வழிபடுதல் நன்று.

கன்னி- [உத்திரம் 2,3,4 பாதங்கள், அஸ்தம், சித்திரை]
குருபெயர்ச்சிப் பலன்- 70/100
பரிகாரப் பாடல்:
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம்
தன்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து.
விநாயகரை வழிபடுதல் நன்று.

துலாம்-[ சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 பாதங்கள்]
குருபெயர்ச்சிப் பலன்- 45/100
பரிகாரப் பாடல்:
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அழகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
நடராஜரை வழிபடுதல் நன்று.

விருச்சிகம்-[ விசாகம் 4, அனுஷம், கேட்டை]
குருபெயர்ச்சி பலன்-70/100
பரிகாரப் பாடல்-
கார கார கார கார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த ஸ்ரீ
ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே.
ராமபிரானை வழிபடுதல் நன்று.

தனுசு- [மூலம், பூராடம், உத்திராடம்]
குருபெயர்ச்சிப் பலன்- 45/100
பரிகாரப் பாடல்:
புத்தியும் பலமும் தூய புகழோடு துணிவும் நெஞ்சில்
பக்தியும் அச்சமிலாப் பணிவும் நோய் இல்லா வாழ்வும்
உத்தம ஞானச் சொல்லின் ஆற்றலும் இம்மை வாழ்வில்
அத்தனை பொருளும் சேரும் அனுமனை நினைப்பவர்க்கே.
ஆஞ்சநேயரை வழிபடுதல் நன்று.

மகரம்- [உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2]
குருபெயர்ச்சிப் பலன்-40/100
பரிகாரப் பாடல்:
அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே
ஆலவாய் ஷேத்திர ஒளியே உமையே
வருவினை தீர்க்கும் ஜெகத் ஜனனி நீயே
வைகைத் தலைவியே சரணம் தாயே.
மீனாட்சி அம்மனை வழிபடுதல் நன்று.

கும்பம்- [அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3]
குருபெயர்ச்சிப் பலன்- 85/100
பரிகாரப் பாடல்:
குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம்அளந்த பிரான்பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஓன்றுமே தொழ நம்வினை ஓயுமே.
ஏழுமலையானை வழிபடுதல் நன்று.

மீனம்-[பூரட்டாதி 4பாதம் , உத்திரட்டாதி, ரேவதி]
குருபெயர்ச்சிப் பலன்-40/100
பரிகாரப் பாடல்:
அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
தங்குரு மரபிற்கெல்லாம் முதற்குரு நாதனாகிப்
பங்கயத் துளவம் நாறும் வேத்திரப்படை பொறுத்த
செங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி.
நந்தீஸ்வரரை வழிபடுதல் நன்று.

வாக்கிய பஞ்சாங்கப்படி, நவம்பர் 21, இரவு 10.54 மணிக்கு குருபகவான்
கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.
நன்றி _____தினமலர்

வெள்ளி, நவம்பர் 05, 2010

புதன், நவம்பர் 03, 2010

செவ்வாய், நவம்பர் 02, 2010

நாம் ஏன் பின்பற்றக் கூடாது?

1.Take a 30 minutes walk every day. And while you walk, smile.
2. Sit in silence for at least 10 minutes each day.
3. Sleep for 7 hours.
4. Live with the 3 E's -- Energy, Enthusiasm, and Empathy.
5. Play more games.
6. Read more books than you did last year.
7. Make time to practice meditation, yoga, and prayer.
They provide us with daily fuel for our busy lives.
8. Spend time with people over the age of 70 & under the age of 6.
9. Dream more while you are awake.
10 . Eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants .
11. Drink plenty of water.
12. Try to make at least three people smile each day.
13. Don't waste your precious energy on gossip.
14. Forget issues of the past. Don't remind your partner with his/her mistakes of the past.
That will ruin your present happiness.
15. Don't have negative thoughts or things you cannot control.
Instead invest your energy in the positive present moment.
16. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
17. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.
18. Smile and laugh more.
19. Life is too short to waste time hating anyone. Don't hate others.
20. Don't take yourself so seriously. No one else does.
21. You don't have to win every argument. Agree to disagree.
22. Make peace with your past so it won't spoil the present.
23. Don't compare your life to others'.
You have no idea what their journey is all about.
Don't compare your partner with others.
24. No one is in charge of your happiness except you.
25. Forgive everyone for everything.
26. What other people think of you is none of your business.
27. However good or bad a situation is, it will change.
28. Your job won't take care of you when you are sick.
Your friends will. Stay in touch.
29. Get rid of anything that isn't useful, beautiful or joyful.
30. Envy is a waste of time. You already have all you need.
31. The best is yet to come.
32. No matter how you feel, get up, dress up and show up.
33. Do the right thing!
34. Call your family often.
35. Your inner most is always happy. So be happy.
36. Each day give something good to others.
37. Don't over do. Keep your limits.
38. Please Forward this to everyone you care about.
"The Source of life is within you. If you remain in touch with that source, everything about you will be beautiful"

கேக் அலங்காரம்

பென்சில் அலங்காரம்
Can you do any of these, anything is possible, amazing videos www animes...

திங்கள், நவம்பர் 01, 2010