வியாழன், ஜனவரி 13, 2011

தைத் திங்களே வருக

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
சூரியன் மகர ராசியில், அதாவது பூமத்திய ரேகையிலிருந்து வடக்குப் பக்கம் போக ஆரம்பிக்கும் முதல் நாள் நமது பொங்கல் திருநாள். சூரியன் இத்தகைய நிலையிலுள்ள காலத்தை சமஸ்கிருதத்தில் உத்தராயணம் என்பார்கள்.
பொங்கலுடன் புத்தாண்டும் பிறக்கிறது .இரெட்டை கொண்டாட்டம்.
உலகுக்கு உணவளித்த உழவர்
வாழ்வுக்கு வளம் அளித்த
ஆதவன் தாள் பணிவோம்;
கொடையாய்ப் பேயட்டும் மழை
நிரம்பி வழியட்டும் நீர்நிலை
பொன்னாய் விளையட்டும் பூமி
பாலாய் பொங்கட்டும் வாழ்வு
கரும்பாய் இனிக்கட்டும் மனது.
பசிக்கு உணவளிக்கும் உத்தமர்
உயர்வாய் வாழ தோள் கொடுப்போம்.
இந்த புத்தாண்டு எல்லோருக்கும், அமைதியையும், நல்ல நினைவுகளையும், செல்வத்தையும் தரும் குறைவில்லா ஆண்டாக அமைய எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்.

vanga pesalam


நான் browsing பண்ணிட்டு இருக்கும் போது 'வாங்க பேசலாம் 'என்ற இந்த பகுதியை பார்க்க நேரிட்டது. இதில் பேசப்படுவது இன்றைய கால கட்டத்தில் பரவலாக காணப்படும் ஒரு முக்கியமான விசியம்; இன்று பலராலும் அனுபவிக்கப் படுவது. இதோ உங்கள் பார்வைக்கு----

புதன், ஜனவரி 12, 2011

சுவையான குழம்பு

தேவையான பொருட்கள்:
சாம்பார் வெங்காயம் - கால் கிலோ,
புளி - எலுமிச்சை அளவு,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள், -2 டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்.
இஞ்சி பூண்டு விழுது-- 2 டீஸ்பூன்
வறுத்து அரைக்க:
கசகசா, --ஒரு டேபிள்ஸ்பூன்,
சோம்பு ----ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய் - ஒரு கப்,
மிளகாய் வற்றல் - 2.
இவை அனைத்தையும் எண்ணெயில் வறுத்து விழுதாக அரைக்கவும்..
அல்லது பொடிக்கவும்.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, சாம்பார் வெங்காயத்தை வதக்கவும்.
வதக்கிய பின் பொடி அல்லது அரைத்த மசாலா போட்டு வதக்கவும்.
பிறகு, இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும்.
இப்போது புளியைக் கரைத்து விடவும்.
ஒரு கொதி வந்ததும்,மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்க்கவும்.
உப்புப் போடவும்.
நன்றாகக் கொதி வரட்டும்.
எண்ணை மேலே வருமளவு அடுப்பில் இருக்கட்டும்.
குழம்பு சிறிது கெட்டியானவுடன் அடுப்பை அணைக்கவும்.
சிறிதளவு சாம்பார் வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி,
எண்ணெயில் சிவக்க வறுத்து அதில் தூவவும்.

ஞாயிறு, ஜனவரி 09, 2011

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

பொதுவாக குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் இருப்பதாக I feel. So,


பொடுகு ஏன் வருது?
நிறைய காரணங்கள் இருக்கு என்கிறார்கள்.
பாரம்பரியம்வெயில், உடல் சூடு, தூசி, ஹார்மோன் பிரச்சனை, உட்கொள்ளும் நீரின் அளவு குறைதல், பராமரிப்பு இல்லாதது, உடல் நலமின்மை-இப்படி பல.


பொடுகு என்பது என்ன?
இது ஒரு வகையான தோல் நோய் அல்லது தோல் உரிதல்என்றும் சொல்வார்கள். இது எல்லா வயதினற்கும் வரும்.

பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1.Dry Dandruff --------- வறண்ட பொடுகு
தலையில் எண்ணைப் பசை சரியான அளவில் உற்பத்தி ஆகாத காரணத்தால் வருவது. சொரிந்தால் பவ்டர் போல் உதிருவது நிறைய T.வ. விளம்பரங்களில் காட்டப் படுவது.
விரைவில் பரவும்.
அரிப்பு இருக்கும்.
வியர்வையால் தலை நாற்றம் இருக்கும்.
முகத்தில் சிறிய பருக்கள் , தோள்ப்பட்டை,கழுத்தில் சின்ன கட்டிகள் வரலாம்.
ஆனால் குணப்படுத்துவதும் , சுத்தம் செய்வதும் எளிது.

2. Oily Dandruff ---------- எண்ணை பொடுகு
தலையில் அதிகமாக எண்ணைப் பசை உற்பத்தி ஆகும் காரணத்தால்வருவது.
சொரிந்தால் உதிராது. தலையில் பிசுபிசுப்பாய் உணர்வது.
மற்றவர்களுக்குப் பரவாது.
அரிப்பு அதிகம் இருக்காது.
வியர்த்து தலையில் சீக்கிரம் அழுக்கு சேர்ந்து விடும்.
முகத்தில் பருக்கள், கழுத்து, தோள்ப்பட்டையில் நீரிருக்கும் கட்டிகள் கொப்பளங்கள் வரலாம்.
ஆனால் குணப்படுத்துவதும், சுத்தம் செய்வதும் கொஞ்சம் சிரமம்.

பொதுவான பராமரிப்பு-----
அதிகம் தண்ணீர், பழச்சாறு குடிக்க வேண்டும்.
நகங்களை வெட்டவும். தலையை சொரிந்து விட்டு , அதே நகங்கள் முகத்தில் பட்டால் பருக்கள் வரும்.
வெய்யிலில் அதிகம் அலையக் கூடாது. போனாலும் குடை பயன் படுத்தவும். தலைக்கு மெல்லிய scarf [ஸ்கார்ப் ] கட்டிக் கொள்ளவும்.
தலையணை, போர்வை , துண்டு --------- சுத்தமாக இருக்க வேண்டும்.
சீப்பை வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் விட்டு கழுவிப் பயன்படுத்தவும்.
முடியை சுத்தமாக வைத்து இருப்பதும்,,டென்சன் இல்லாமலும் இருப்பது மிகவும் நல்லது.

தீர்வு-
துளசி எண்ணை, வேப்பிலை எண்ணை இரெண்டையும் சம அளவில் கலந்து மயிர்க்கால்களில் படும்படியாகத் தேய்த்து மசாஜ் செய்து குளிப்பதால், பொடுகு மட்டும் அல்ல பேன் தொல்லையும் தீரும்.

கொஞ்சம் தயிர் , ஒரு எலுமிச்சையின் சாறு, ஒரு வெள்ளைக் கரு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் 4-5 வாரங்களில் குணம் ஆகும்.
வாரம் இரு முறையாவது கட்டாயம் செய்ய வேண்டும்.
தேய்த்து அரைமணி நேரம் கழித்து தரமான ஷாம்பூ கொண்டு அலசவும்.

வசம்பு பவுடர், தேங்காய் அரைத்த நைஸ் விழுது அல்லது தயிருடன் கலந்து தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம்.

குப்பைமேனி இலையின் சாறு, தேங்காய் எண்ணை, உப்பு அல்லது சர்க்கரை கலக்கவும். முடியைப் பிரித்து பிரித்து காட்டன் கொண்டு தலையில் தடவவும்.கிழே ஒரு துணியை விரித்துக் கொள்ளவும். பொடுகு உதிரும். கால் மணி நேரத்தில் சுத்தம் செய்யலாம். ஆண்களுக்கும் செய்யலாம்.

கறிவேப்பிலை, துளசி, எலுமிச்சை சாறு, எலுமிச்சை விதை ஆகியவற்றை அரைத்து, பேஸ்ட் போல் செய்து தலைக்கு தேய்த்து ஊறி குளிக்கவும்.
குருணை போல் இருக்கும் பொடுகு நீங்கும்.

செம்பருத்திப் பூவை அரைத்து தேய்த்துக் குளித்தாலும் பொடுகு போகும்.

பொடுகு ஷாம்பூ பயன்படித்திய பின் அதன் கெமிக்கல் தன்மை நீங்க, செம்பருத்தி இலையை வெந்நீரில் வேக வைத்து , தேய்த்துக் குளிக்கவும்.

எலுமிச்சை சாற்றைத் தலையில் தடவி கால் மணி நேரம் ஊறி குளிக்கவும்.

வால் மிளகை அரைத்துத் தடவிக் குளிக்கலாம்.

பொடுகு நீக்கும் ஸ்பெசல் பேக்-
துளசிப் பவுடர் ---------- 5 ஸ்பூன்
வேப்பிலை தூள் ----------- 5 ஸ்பூன்
எலுமிச்சை சாறு ------------ 2 ஸ்பூன்
புளித்த தயிர் ----------------- 3 ஸ்பூன்
எல்லாவற்றையும் கலந்து 15 நிமி ஊற வைக்கவும்.
பின் மயிர்க்கால்களில் படும்படிப் பூசி அரை மணி நேரம் கழித்து, மைல்ட் ஹெர்பல் ஷாம்பூ கொண்டு அலசவும்.
வாரம் இரு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் மகிமை

அம்மைக் கொப்புளங்கள், புண்கள் குணமாக...
மஞ்சள், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துப் பற்றுப்போட்டு வர, மூன்று தினங்களில் அம்மைக் கொப்புளங்கள், புண்கள், சேற்றுப்புண்கள் போன்றவை மறையும்.

கட்டிகள், சிறங்குகள் மறைய...
மஞ்சளுடன் துத்தி இலையைச் சேர்த்த ரைத்து கட்டிகள்மீது பூசி வர, அவை பழுத்து உடையும்.

கால் ஆணி குணமாக...
மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள்மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

கண் பார்வை தெளிவடைய...
ஒரு ஸ்பூன் மஞ்சள்தூளை நன்கு கொதிக்க வைத்து, அதைப் பஞ்சில் நனைத்துக் கண்களில் ஒற்றியெடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஆறு முறை வீதம் குறைந்தது பத்து நிமிட அளவில் செய்துவர, கண்களில் நீர்வடிதல், கண்களில் சதை வளருதல், கண்பார்வைக் குறைபாடுகள் போன்றவை நீங்கும்.

சளி, மூக்கடைப்பு நீங்க...
மூன்று சிட்டிகை மஞ்சள்தூளை சூடான பாலில் கலந்து தினசரி இரவில் சாப்பிட்டு வர, நெஞ்சில் கட்டியிருக்கும் கோழைக்கட்டு விலகும். முனை முறியாத மஞ்சளைத் தீயில் கொளுத்த ஆவியுண்டாகும். அதில் உண்டாகும் ஆவியை மூக்கால் நுகர, தலைவலியும் மூக்கடைப்பும் தானே விலகும்.

காசநோய் மறைய..
.முதலில் வெற்றிலையை நீர் விட்டு இடித்து, இரண்டு லிட்டர் அளவில் சாறு எடுத்துக் கொள்ளவும். இதில் மஞ்சள், அதிமதுரம் வகைக்கு கால் கிலோ அளவில் எடுத்து, வெற்றிலைச் சாற்றில் ஊற வைக்கவும். சாறு முற்றிலும் சுண்டி உலர்ந்த பின், மேற்கண்ட இரண்டையும் ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்தத் தூளில் கால் ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர, எவ்வளவு பாதிப்புக்கு உள்ளான காசநோயும் மறையும்.

புற்றுநோய் கட்டுப்பட...
வெற்றிலையை இடித்து ஒரு லிட்டர் அளவுக்குச் சாறெடுத்து, அதில் கால் கிலோ மஞ்சளை ஊற வைத்து உலர்த்தவும். பின்னர் கீழாநெல்லியை இடித்து ஒரு லிட்டர் அளவில் சாறெடுத்து, அதில் ஏற்கெனவே உலர்த்திய மஞ்சளை மீண்டும் இந்தச் சாற்றில் ஊறவைத்து, பின் வெயிலில் காயவைத்து உலர்த்திக் கொள்ள வும். இத்துடன் கடுக்காய்த் தோல், நெல்லிவற்றல், தான்றிக்காய் தோல் ஆகியவற்றை வகைக்கு கால் கிலோ அளவில் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூள் செய்து பத்திரப்படுத்தவும்.
சித்தர்கள் அருளிய அற்புத மருந்து இது. இதனை உதாசீனப்படுத் தாமல் புற்றுநோய்க்கு உட்பட்டோரும், புற்று நோயைத் தடுக்க நினைப்போரும் காப்பு மருந்தாய்க் கொள்ளலாம்.

சிறுநீரக நோய்கள் விலக...
சிறு நெருஞ்சில் இலைகளைப் பறித்து வந்து, அதில் அரை லிட்டர் அளவு சாறெடுக்கவும். கீழாநெல்லி இலைகளைப் பறித்து அதிலும் அரை லிட்டர் சாறெடுக்கவும். இரண்டையும் ஒன்றாய்க் கலந்து, இதில் கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல், சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கி, சிறுநீரகம் செழுமையாய் செயற்படும். . சித்தர்களின் சுவடிகளில் சொல்லப்பட்ட அரிய மருந்து இதுவாகும்.

முடிவளம் குறைக்க...
சில பெண்களுக்குத் தேவையில்லாமல் கால்கள், கைகள் மற்றும் உதட்டின் மேற்பகுதி களில் பூனை முடிகள் போன்று முளைப்ப துண்டு.
. .மஞ்சள், துத்தி, குப்பைமேனி, செம்பருத்தி, கடுக்காய்த்தோல், நெல்லிவற்றல், மகிழம்பூ, கிச்சலிக் கிழங்கு, வெட்டிவேர், கடலைப்பருப்பு, சந்தனசீவல் ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் வாங்கி, இத்துடன் உலர்ந்த வெற்றிலை நூறு கிராம், வெள்ளை மிளகு 25 கிராம் சேர்த்து ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.அதிகாலைக் குளியலின்போது, சூடான பசும்பாலில் தேவையான அளவு பரிமள சுகந்த ஸ்நானப் பொடியைக் கலந்து, தேவையற்ற முடி உள்ள பகுதியில் தேய்த்து அன்றாடம் குளித்துவர, தேவையற்ற முடிகள் நீங்கும்.
நன்றி-சித்த மருத்துவர்-அருண் சின்னையா

வத்தக் குழம்பு

தினமும் பருப்பு போட்டே செய்வது சலிப்பு என்றால், சாப்பிடுவது மகாபோர்.
கொஞ்சம் காரசாரமாய் ,செய்வதற்கு சுலபமாய், சாப்பிட ருசியாக இருப்பதில் best choice வத்தக்குழம்பு alais வற்றல் குழம்பு.

பாரம்பரிய குழம்பு-------
தேவையான பொருட்கள்-
சுண்ட வற்றல் or மணத்தக்காளி வற்றல் --------- 2ts
கடுகு-------------------------- கொஞ்சம்
பெருங்காயப் பவுடர் -------- 1/4 ts
கடலைப் பருப்பு -------------- 1/2 ts
உளுத்தம் பருப்பு -------------- 1/2 ts
வெந்தயம் --------------------- 1/4 ts
மிளகாய் வத்தல் ------------- 4
சாம்பார் மிளகாய்ப் பொடி -- - 3 ts
புளி ------------------------------ ஒரு எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை ----------------- கொஞ்சம்
நல்லெண்ணெய் -------------- 5 ts
செய்முறை ----------
புளியை கரைத்து வடிகட்டி ஒரு சிறிய கப் அளவு எடுக்கவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணையை ஊற்றி , காய்ந்ததும் பெருங்காயப் பொடி போடவும். அது பொரிந்ததும்
கடுகு, அது வெடித்ததும்,
கடலைப் பருப்பு, உளுந்த பருப்பு போட்டு, சிவந்ததும்,
கறிவேப்பிலை , மிளகாய் வத்தல் போடவும்.
வெந்தயம் சேர்க்கவும். அளவு கொஞ்சமாக இருக்க வேண்டும். அதிகம் சிவக்கக் கூடாது. குழம்பு கசந்து விடும்.
வத்தல் சேர்த்து நன்கு வறுக்கவும்.
அதில் புளித் தண்ணீர் சேர்க்கவும்.
சாம்பார் மிளகாய்த் தூள் சேர்க்கவும்.
உப்பு போடவும்.
நன்கு கொதி வந்ததும் இறக்கவும்.
பொதுவாக வத்தல் குழம்பு அதிக அளவில் செய்ய முடியாது.
வேண்டும் என்றால், புளித் தண்ணீர் அதிகம் ஊற்றி , கொதித்ததும் 2 ts அரிசி மாவை கொஞ்சம் நீரில் கரைத்து ஊற்றி கெட்டி யானதும் இறக்கவும்.
இதற்கு சுட்ட அல்லது பொறித்த அப்பளம் அல்லது வடாம் நல்ல combination.
சுடு சாதத்தில் வத்தக் குழம்பு ஊற்றி, நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட வேண்டும்.

மாடர்ன் வத்தல் குழம்பு--
தேவையான பொருட்கள் --

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள் ----
தனியா ----------------------------- 4 ts
மிளகாய் வத்தல் ---------------- ௪

துருவிய தேங்காய் ------------ 8 ts
கசகசா --------------------------- 1 ts

நறுக்கிய பெரிய or சிறிய வெங்காயம் ------------ ஒன்று or 10
மேலே கொடுத்துள்ளவைகளை [ இடம் விட்டு இருப்பதை ]தனித் தனியே வறுக்கவும். ஒன்றாகவே அரைக்கலாம்.

தாளிக்கத் தேவையான பொருட்கள்-
பெருங்காயத் தூள் ---------- 1/2 ts
கடுகு ------------------------ 1/2 ts
கடலை பருப்பு -------------- 2 ts
உளுந்துப் பருப்பு ------------- 2 ts
கறிவேப்பிலை -------------- கொஞ்சம்
மிளகாய் வத்தல்---------- 6
சாம்பார் வெங்காயம் -------- கொஞ்சம் [ சிறியது என்றால் இரண்டாக நறுக்கவும்,சிறியதாக இருந்தால் முழுதாகப் போடவும் ]
சுண்ட or மணத்தக்காளி வத்தல்---------- 2 ts
நறுக்கிய தக்காளி -------------------------- 3
நல்லெண்ணெய் -------------------------- 8ts
பொதுவாகவே வத்தல் குழம்பிற்கு எண்ணை அதிகம் வேண்டும்.
எண்ணையில் மேலே சொன்ன வரிசைப்படி வதக்கவும்.
இதில் வதக்குவதுதான் main. நன்கு வதங்க வேண்டும். தக்காளி நன்கு மசிந்து விட வேண்டும்.
இந்த நிலையில் அரைத்ததை சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
ஒரு எலுமிச்சை அளவு புளியில் எடுத்த ஒரு கப் புளித் தண்ணீரை ஊற்றவும்.
இதனுடன்,
மஞ்சள் தூள் --------- 1/2 ts
வெறும் மிளகாய்த் தூள் ---- 1 or 2 ts
உப்பு ------------------------ தேவையான அளவு
இவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து எண்ணை பிரியும் வரை வைக்கவும்.
வற்றலுக்குப் பதில் முருங்கைக் காய் சேர்க்கலாம்.
குழம்பு திக்காக இருக்க வேண்டும்.
அருமையான வத்தல் குழம்பு தயார்.


வியாழன், ஜனவரி 06, 2011

சுலப சமையல்

பன் டோஸ்ட்-------
பன் -------------- 1
பெரிய வெங்காயம்------ 1[ பொடியாக நறுக்கியது]
தக்காளி-------------- 1/2 [ விருப்பம் , நறுக்கியது]
குடை மிளகாய்--------- பொடியாக நறுக்கியது கொஞ்சம்
வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு----1
இஞ்சி பூண்டு பேஸ்ட்-------- 1 ts
கரம் மசாலாப் பொடி---------- 1/2 ts [ விருப்பம்]
மிளகாய் தூள்------------------ 1 ts
பொடியாக நறுக்கிய கொத்து மல்லி---------- கொஞ்சம்
எண்ணை--------------------------- தேவையான அளவு
உப்பு ----------------------------------- தேவையான அளவு
செய்முறை-------
பன்னின் நடுவில் ,ஒரு சிறிய கிண்ணமோ, கரண்டியோ பயன்படுத்தி வெட்டி எடுக்கவும். [ ஒரு scoop icecreamபோல்]
பன்னின் வெள்ளைப் பகுதியில் வழித்து எடுக்கவும்.
ஒரு டீஸ்பூன் எண்ணையில் வெங்காயம் வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடிகள் சேர்த்து வதக்கவும்.
மசித்த கிழங்கு சேர்த்து நன்கு கலக்கவும்.
உப்பு போடவும். மல்லித் தழை சேர்த்து கலக்கவும்.
வெட்டி எடுத்த பன் பகுதியையும் உதிர்த்து சிறிது அதனுடன் நன்கு கலந்து வைக்கவும்.
பன்னின் குழிவான பகுதியில் மசாலாவை வைக்கவும்.
வழித்து எடுத்த பன்னால் மூடவும்.
ஒரு தவாவில் எண்ணை, நெய், பட்டர் [ your choice] ஒரு ஸ்பூன் ஊற்றி பன்னை கவனமாக இரண்டு பக்கமும் வாட்டி எடுக்கவும்
ஒரு சுவையான snack ready .
டிப்ஸ்-
தக்காளியை இரண்டாக வெட்டி, பிழிந்து விட்டு பயன்படுத்தினால், சிறுநீரக கல் உருவாக காரணம் என்று சொல்லப்படும் விதைகள் போய்விடும்.
இதுபோல் dry வகைகள் செய்யும் போது மசாலா நீர் இன்றி இருக்கும்.
dry மசாலாக்களுக்கு உருளைக் கிழங்கை பயன்படுத்தும் போது, கிழங்கை தண்ணீரில் வேக வைக்க கூடாது. ஆவியில் வேக வைக்க வேண்டும். அதாவது இட்டிலி தட்டு அல்லது elctric rice cooker மேல் தட்டு அல்லது சாதாரண குக்கரில் அரிசி வேகவைக்கும் போது ஒரு மூடிய பாத்திரத்தில் வைக்கலாம். தண்ணீர் வேண்டாம். ஆறிய பின் தோலுரிக்கலாம்.
வேறு எந்த காய்களையும் பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.
கட்டாயம் கிழங்கு இருக்க வேண்டும்.

bread toast-
இதே மசாலா பயன்படுத்தலாம்.
தக்காளி வேண்டாம்.
பொடியாக நறுக்கிய mushroom சேர்க்கலாம்.
non stick தவாவில் கோடு மாதிரியான design உள்ளது வந்துள்ளது.
ஒரு சாண்ட்விட்ச் bread loafமேல் பக்கம் பட்டர் தடவவும்.
உள் பக்கம் இந்த மசாலாவை வைக்கவும்.
அதன் மேல் துருவிய cheese வைக்கவும்.
மேலே வட்டமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளிரி slices வைக்கவும்.
மற்றொரு breadloaf மேல் பட்டர் தடவி , stuff பண்ணிய loaf மேல் மூடவும்.
தாவாவை நன்கு சூடு பண்ணவும்.
அதில் ஒரு ஸ்பூன் பட்டர் ஊற்றி, bread வைக்கவும்.
அடுப்பை சிம் யில் வைக்கவும்.
நன்றாக அழுத்தி விடவும்.
திருப்பி போடவும்.
நன்கு அழுத்தி விடவும்.
தவாவின் கோடுகள் பதிய வேண்டும்.
சாஸ் உடன் சாப்பிடவும்.

புதன், ஜனவரி 05, 2011

வண்டலூர் மிருககாட்சி சாலை

இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் ஒரு செய்தி படித்தேன். வண்டலூர் மிருககாட்சி சாலையில் night-safari [ இரவில் மிருகங்களைப் பார்ப்பது ] அமைப் பதாக அரசு முடிவு செய்து இருப்பதாக. எனக்கு இதைப் படித்ததும் கோவமா, வருத்தமா, எரிச்சலா என்று புரியாத ஒரு உணர்ச்சி வந்தது. ஏனென்றால் அதற்கு இரண்டு நாட்கள் முன்தான் அங்கு போய் வந்தேன்.

வழக்கம் போல் கூட்டம்; அன்று பள்ளி விடுமுறை நாள் ; சரியான கூட்ட்டம்.
செல்பவர்க்கு, காமிராவிற்கு --- நுழைவு சீட்டு வரிசையில் நின்று வாங்கியாகி விட்டது. அங்கும் நாம் வரிசையில் போய்க்கொண்டு இருக்கிறோம்; போவதும் சினிமாவிற்கு அல்ல; ஒரு காட்சி போய் விடும் என்ற நிலையும் அல்ல; பின் ஏன் இந்த தள்ளு முள்ளு? முதலில் செல்ல முந்துகிறார்கள்; வேடிக்கை.

உள்ளே செல்கையில் ஒரு சோதனை; பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் கொண்டு செல்லாமல் இருக்க; அறிவிப்புகளை பார்த்தும், நாமே உணர்ந்தும் செய்ய வேண்டிய செயல்; ஆனாலும் சோதனை செய்தால்தான் செய்வோம் என அடம் பிடிக்கும் மக்கள். சோதிப்பவர்களும்நம்மை சோதித்துவிட்டார்கள். இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள், ஒரு காவல் துறை அதிகாரி, அவர் உதவியாளர் என ஒரு கூட்டம் இருந்தது. நுழைவு வாயிலுக்கு 10 அடி தள்ளி மேசை முன் அமர்ந்து இருக்கிறார்கள். கண்ணால் பார்ப்பதை மட்டுமே வாங்கி வைக்கிறார்கள்.
மக்களும் தாங்களாகப் போய் கொடுப்பதும் இல்லை. பணியாளர்களும் தங்கள் கடைமையை செவ்வனே செய்கிறார்கள்.

உள்ளே போய் விட்டோம். .எங்குபார்த்தாலும் ......................பச்சை பசேல் என்று சொல்லுவேன் என்று எதிர் பார்த்தீர்களா? no chance ; பாதி பச்சைகூட இல்லை. பாதி பச்சை கூட சமீபத்தில் பெய்த மழையால் என்று நினைக்கிறேன். பூ என்பது எங்குமே இல்லை. ஒருவேளை மிருகங்களுக்குப் பிடிக்காதோ என்னவோ????????? அது மிருகங்களின் வீடு; அவைகளுக்குப் பிடித்ததைத்தான் வைக்க வேண்டும். அரசு எப்போதுமே பிறருக்குப் பிடித்ததை தான் செய்யும்???????

மிருகங்களின் வசிப்பிடமோ .................. !!!!!!!!!!!! அவை குடிக்க வைத்திருக்கும் தண்ணீரும், அகழிகளில் இருக்கும் தண்ணீரும் இதற்கு மேல்அசுத்தமாகவே முடியாது என்ற நிலையில் இருக்கிறது. தண்ணீர் மாற்றி பல மாதங்கள் நிச்சியம் ஆகியிருக்கும். அதை குடித்தால் பிராணிகள் infection ஆகி வாந்தி, பேதி வந்து இறந்து விடும். முதலைகள் மூழ்கும் அளவு கூட தண்ணீர் இல்லை.
ஒருவர் மனசு பொறுக்காமல் ' தண்ணீர் கூட மாற்றாமல் என்னடா செய்கிறீர்கள்? கொடுமைடா; பாவிகளா என்று என்னென்னவோ கேட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டும், புலம்பிக் கொண்டும் இருந்தார்.

நம்ம மக்களும் சும்மா இருக்கிறார்களா? மனித குரங்கு... அதுபாட்டுக்கு சிறுநீர் கழித்துக்கொண்டு இருக்கிறது[ அதுவும், நமக்கு பின் பக்கத்தைக் காட்டிக்கொண்டு ரொம்ப decentயாக இருக்குது ] கல்லால் அடிக்கிறார்கள். எனக்கு வந்த ஆத்திரத்திற்கு அவர்களை தூக்கி கூண்டுக்குள் போட்டு விட்டு ,குரங்கை வெளியில் விடலாம் போல் இருந்தது. இங்குமட்டும் அல்ல; பல கூண்டுகளில் இருந்த பிராணிகள் மேல் கல் எறிகிறார்கள். இதில் என்ன அற்ப சந்தோசம் என்று புரிய வில்லை. அவை சுதந்திரமாக வெளியில் இருக்கும் போது அதை பார்த்தாலே ஒன்ஸ் + டூஸ் போய் விடுவோம். கூண்டுக்குள் இருக்கும் தைரியம். முதலிலேயே அவை பாதி பட்டினியுடன் இருக்குதுகள். இதில் கல்லடி வேறு. என்ன பிறவிகளோ?

இன்னொரு type மக்கள்; பிளாஸ்டிக் கவர்களை [ திருட்டுத்தனமாய் உள்ளே கொண்டு வந்தவை ] கூண்டுக்குள் போடுகிறார்கள். அதை சாப்பிட்டு பிராணிகள் இறந்து இருக்கிறதாம். ஒரு சிலர்விலங்குகளைப் பார்த்து பேய் கூச்சல் கத்துகிறார்கள். இது எதற்கு என்று எனக்கு புரியவே இல்லை. சிலர் தாங்கள் சாப்பிடுவதை போடுகிறார்கள். மிருககாட்சி சாலை இருக்கும் நிலைமையில், பசித்தால் புலி கூட புல்லைத் தின்னும். அதனால் மக்கள் போடுவதை அவைகளும் சாப்பிடுது. காலத்தின் கோலம்.

இடம் மட்டும் மிகப் பெரியது. கூண்டுகள் தள்ளித் தள்ளி இருக்குது.
தனியே போக பயமாக இருக்குது.
மீன் காட்சியகம் அழுக்குத் தண்ணீருடன், மிக குறைவானஎண்ணிக்கையில், , சாதாரண வகை மீன்களுடன் இருக்கிறது.
இரவுநேர விலங்குகள் என்ற பெயரில் ஒரு இடம்.
உண்மையிலே மிக இருட்டுடன் போகவே பயமாக இருக்கும் படியாக ஒரே ஒரு மின்விளக்குடன் இருக்கிறது.
அங்கு ஏதாவுது இருக்குதா??????????, இருந்தாலும் கண்ணுக்கே தெரியாதபடி இருக்குது.

சுற்றிப் பார்க்க சைக்கிள், பஸ் மற்றும் திறந்த சிறிய வண்டிகள் இருக்குது.
அங்கங்கே இளைப்பார சிறு மண்டபங்கள் , உட்கார அமர்விடங்கள் இருக்கிறது.
இரண்டு தமிழ் நாடு உணவகம் இருக்கிறது.
ஆவின் நிலையங்கள் இரேண்டோ, மூன்றோ இருக்கிறது.
தண்ணீர் குழாய்கள் இருக்கிறது.

விலங்குகளும் அதிகம் இல்லை. புதிய வகைகளும் இல்லை.
விலங்குகளுக்கு போதிய பராமரிப்பு, சுத்தம் இல்லை.
அங்கு வரும் மக்கள் கூட்டத்திற்கு போதுமான குப்பை தொட்டிகள் இல்லை.
கழிப்பிடங்களும் குறைவு.சுத்தம், பராமரிப்பும்குறைவு.
உணவகத்தில் உணவுவகைகள் திறந்த நிலையிலேயே உள்ளது.
அங்கு வாங்கி கொண்டு வருபவைகளை மூடி தருவது இல்லை. பணியாளர்கள் கையுறை அணிவதில்லை.
வருபவர்கள் picnic வருபவது போல் வருகிறார்கள்.
ஆங்காங்கே சாப்பிட்டுவிட்டு அமர்விடங்களை அசுத்தமாக்கி விடுகிறார்கள். ஓய்வெடுக்க முடிவதில்லை.
சாப்பிட்டு விட்டு அங்கேயே தட்டுகள், காகிதங்கள் போன்ற பொருட்களை வீசி விட்டுப் போய் விடுவதால் குப்பை கூளமாக இருக்கிறது.
சிந்தி இருக்கும் உணவுகளைச் சாப்பிட வரும்காக்கை கூட்டம்; எலிகள், பெருச்சாளிகள் ...........??
தாங்கள் சாப்பிடுவது அல்லாமல் விலங்குகளுடன் பகிர்ந்து கொள்வதால் பாதிப்பு அடைவது வாயில்லா ஜீவன்கள் தான்.
நம்ம வாலிப ஹீரோக்கள் ஒரு சுவர் விடாமல் [ வேலிகளையும் தாண்டி ] தங்கள் பெயரையும்+ ஹீரோயின்கள் பெயரையும் கஷ்டப்பட்டு பொறித்து வைத்து இருக்கிறார்கள். என்னவென்று சொல்வது இதை??????????
அறிவிப்பு பலகைகள் [ information board ] சரியாக இல்லாததால் வழி தெரியாமல் சிரமப்பட வேண்டி இருக்கு.


இவ்வளவு பெரிய பரப்பை கண்காணிப்பது மிகவும் சிரமமான செயல்தான். ஆனாலும் இதற்கு ஒரு தீர்வை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்.
உணவுவகைகளை உள்ளே அனுமதிக்க கூடாது.
ஆங்காங்கே கண்காணிப்பு காமராக்களை பொருத்தலாம்.
விலங்குகளைப் பற்றி அறிந்த அதிக பணியாளர்களை பணியில் அமர்த்தலாம்.
எல்லாவற்றுக்கும் மேல் மக்கள் தாங்களாகவே உணர்ந்து, பொறுப்புள்ள குடிமகன்களாக நடந்து கொள்வது மட்டுமே இதற்கு சரியான தீர்வு ஆகும்.

நாங்கள் சென்றிருந்த பொழுது work in progress என்னும் அறிவிப்பு பலகையைப் பார்த்தேன். ஒரு புறம் வேலைகளும் நடந்து கொண்டு இருந்தது.
அதை தொடர்ந்து நாளிதழில் night safari அறிவிப்பையும் படித்தேன்.
மிக அருமையான திட்டம்.
ஆனால் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாகக் கூடாது.
நன்கு திட்டம் இட்டு, சிறப்பாக வடிவமைத்து, திறம்பட செயல் படுத்தினால் நமது சென்னைக்கு கூடுதல் சிறப்பாகும். A FEATHER ON CAP.

ஞாயிறு, ஜனவரி 02, 2011

ஒரு CARTOON

தினமணி நாளிதழில் கலைஞர் அவர்களை பற்றி ஒரு கார்டூன் பார்த்தேன் ? மிகவும் சுவாரசியமாகவும், அர்த்தம்முள்ளதாகவும் இருந்தது; உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்; இதோ உங்கள் பார்வைக்கு_______
பதவி மோகம்___
வயது ஒன்றும் அதிகம் ஆகவில்லையே?????????? ஜஸ்ட்எண்பத்து ஐந்துதானே!!.இப்போதுதான் 'இளைஞன்' படத்திற்கு வசனம் எழுதுகிறார்.ஒருவேளை இப்படி இருக்குமோ? தன்னைப் போல் நல்லாட்சி தரக்கூடிய, வலுவான எதிர்க்கட்சிகளின் குடைசல்களைத் சமாளிக்கக்கூடிய தகுதியானவர் ஒருவரும் இல்லை என்ற நினைப்போ?
ஆடம்பர விழாக்கள்_
விழா என்றாலே ஆடம்பரம்தான்; கலைஞர் தொலைக்காட்சியில் வரும் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் வரும் அரங்க அமைப்பும், அதில் ஆடுபவரின் ஒப்பனைகளும், ஆடை அலங்காரமும் பிராமாண்டம்.
சின்னத்திரையே ஜாலம் காட்டினால் வண்ணத்திரை மகா பிரமாண்டம் காட்டாதா? இவருக்கு விழா எடுப்பவர்கள் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள்தானே. ஆடம்பரத்திற்குப் பஞ்சமா;
இந்த விழாக்கள் தரும் விளம்பரத்தில் மயங்காத அரசியல்வாதிகளும் உண்டோ? ஆனாலும் முதுகு வலியுடன் பல மணி நேரங்கள் நாற்காலியிலேயே அமர்ந்து இருப்பது பெரிய சாதனைதான்.
காங்கிரஸ் கூட்டணி_
இது அம்மா கையில் இருக்கிறது. நம்ம தென்னிந்திய அம்மா இல்லைங்கோ; வடஇந்திய அம்மா கையில் இருக்குங்கோ. ஆனால் நம்ம சாணக்கியர் இதற்குள் அரசியல் சதுரங்கத்தில் பல காய்களை நகர்த்தி இருப்பார். முடிவு தெரிய ரொம்ப நாள் இல்லை. எதிர்பாராத மாற்றங்களும் வரலாம். WAIT AND SEE .பலன்தான் இல்லை.
ஈழத் தமிழர் விடுதலை_
இந்தநூற்றாண்டில் அதிக பேசப்பட்ட வார்த்தை. இதைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம்; எப்படி வேண்டுமானாலும் பேசலாம்; சுயலாபத்திற்கும், விளம்பரத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக அரசியல் தலைவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளவும், மக்கள் தங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காவும் இந்த மந்திரச்சொல்லை சில காலமாகவே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதில் தங்களை அரசியல்வாதியாக அடையாளப்படுத்திக் கொள்ள நினைப்பவர்களும் அடக்கம். பலன்தான் இல்லை. அவங்க கஷ்டம் அவங்களோடுதான் இருக்கு. சரி இவரும் பேசிட்டு இருக்கட்டுமே.
வாரிசு அரசியல்-______
அட இது நம்ம நாட்டுக்குப் புதுசா? இது ரோஜா மாமா காலத்தில் துவங்கி அவரின் கொள்ளுப் பேரன் காலம் வரை வந்தாச்சு!!!!!!!!!!
அவரின் வழியில்
திரு. சிதம்பரம்------------- திரு. கார்த்திக்
திரு. முரசொலி மாறன் ------------- திரு. தயாநிதி மாறன்
திரு.E.V.K. சம்பத்----------- திரு. E.V.K.S இளங்கோவன்
திரு. ராஜ சேகர ரெட்டி-------- திரு. ஜெகன் மோகன் ரெட்டி
திருமதி. சோனியா காந்தி-------- திரு. ராகுல் காந்தி
திரு. சஞ்சீவ் காந்தி -------------- திருமதி. மேனகா காந்தி
அம்மா!!!!!!!!!! சொல்லி முடியாது
இதில் பொழைக்கத் தெரியாதவர்கள் பட்டியலும் இருக்கு.அதில் முதல்
நம்ம தேசத் தந்தை காந்தி அவர்கள் நான்கு மகன்கள் இருந்தும் NO USE
திரு. காமராஜ் அவர்கள்
திரு. கக்கன் அவர்கள்
திரு. மொரார்ஜி தேசாய் அவர்கள்
திரு. சாஸ்திரி அவர்கள்
திரு. முத்துராமலிங்கத்தேவர் அவர்கள்
இதுவும் நீண்டு கொண்டே போகும்; so leave it.
எந்த ஒரு குடும்பத் தொழிலுக்கும் ஒரு வாரிசு இருப்பது உலக மரபு. கலைஞருக்குத் தெரிந்த ஒரே தொழில் அரசியல்;
அதனால் உலக நடைமுறைப்படி வாரிசு அரசியல் நடத்துகிறார்.
என்ன !!!!!!11வாரிசுகள் கொஞ்சம் அதிகம்; அதனால் பிரச்சனைகளும் அதிகம்.
so உலக அரங்கில் அவருக்குத் தலைவலி;
மக்களுக்கு வீட்டு அரங்கில் அசைபோட ஒரு வழி.
மீடியாக்களுக்கும், நாளிதழ்களுக்கும் கொண்டாட்டம்;
எனக்கு எழுத ஒரு topic கிடைத்தது. ENJOY..............