வெள்ளி, மே 11, 2012

குருபெயர்ச்சிப் பலன்கள்-2012--2013

குருபெயர்ச்சிப் பலன்கள்


வாக்கிய பஞ்சாங்கப்படி குருபகவான்

மே மாதம் 17ந் தேதி வியாழக் கிழமை 2012

மாலை, 6.25 மணிக்கு,

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு

கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில் 

பெயர்ச்சிஅடைகிறார்.


[ 17-05-2012------ 27-05-2013 ]


குரு ஸ்லோகம்-

குருபிரம்மா குருவிஷ்ணு 
  
குரு தேவோ ம ஹேஸ்வர 

குரு சாக்ஷாத் பரப்பிரம்மா 

தஸ்மை ஸ்ரீ குருவே நம.

குரு காயத்ரி -

விருஷபத்வஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய தீமஹி

தன்னோ குரு ப்ர சோதயாத். 


நற்பலன் பெரும் ராசிகள்-

மேஷம், கடகம், கன்னி,

விருச்சிகம்,மகரம்

சுமாரான பலன் பெரும் ராசிகள்-

மிதுனம்,தனுசு,

கும்பம், மீனம்

பரிகார ராசிகள்

ரிஷபம், சிம்மம், துலாம்


பலன்கள் -


ராசி-மேஷம்--80 %

[அசுவினி,பரணி,கார்த்திகை 1ம்பாதம்]

நல்ல நேரம் பொறந்தாச்சு!


கல்யாண யோகம்வந்தாச்சு!

சொல்ல வேண்டிய பாடல்-

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஓளியாய்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


பரிகாரம்-

முருகன் வழிபாடு
ராசி-ரிஷபம் --55%

[கார்த்திகை 2,3,4ம் பாதம்,

ரோகி ணி, மிருக சீரிடம் 1,2ம்பாதம்]

பிள்ளையால் சாதகம்!


வேலையில் பாதகம்!

சொல்ல வேண்டிய பாடல்-

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு

தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே!

பரிகாரம்-


சிவபெருமான் வழிபாடு

ராசி-மிதுனம் 65%

[மிருகசீரிடம் 3,4ம் பாதம்,திருவாதிரை,

புனர்பூசம் 1,2,3ம் பாதம்]

உடல்நிலை திருப்தி

மனநிலை அதிருப்தி

சொல்ல வேண்டிய பாடல்-

ஆடிப்பாடிஅகம் கரைந்து

இசைப் பாடிப்பாடி கண்ணீர் மல்கி

நாடி நாடி நரசிங்கா என்று

வாடி வாடும் இவ்வானுதலே!

பரிகாரம்-

லட்சுமிநரசிம்மர் வழிபாடு

ராசி-கடகம் 85%

[புனர்பூசம் 4ம் பாதம், 

பூசம்,ஆயில்யம்]

வீட்டில் மகிழ்ச்சி

பணியில் புத்துணர்ச்சி

சொல்ல வேண்டிய பாடல்-

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே 

இம்மையே இராமவென் றிர ண்டெழுத்தினால்!

பரிகாரம்-

ராமர் வழிபாடு
ராசி-சிம்மம் 55%

[மகம்,பூரம், உத்திரம் 1ம் பாதம்]

பத்தாமிட குருவால்

பணியில் கவனம்

சொல்ல வேண்டிய பாடல்-

அருமறை முதல்வனை ஆழிமாயனைக்

கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனை 

திரும கள் தலைவனை தேவ தேவனை

இருபத முளரிகள் இறைஞ்சி ஏ த்துவாம்!

.பரிகாரம்-

கிருஷ்ணர் வழிபாடு


   ராசி-கன்னி 75%

[உத்திரம் 2,3,4ம் பாதம்,அஸ்தம்,

சித்திரை 1, 2 ம் பாதம்]

சொத்து வாங்குவீங்க

சுகமாய் இருப்பீங்க

சொல்ல வேண்டிய பாடல்-

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்

அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்  

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே!  

பரிகாரம்-

ரங்கநாதர் வழிபாடு
ராசி-துலாம் 55%

[சித்திரை 3,4ம்பாதம்,சுவாதி,

விசாகம் 1,2,3ம்பாதம்]

சிரமப்படுத்துறதுக்கே

வந்துட்டாரு அஷ்டமக் குரு

சொல்ல வேண்டிய பாடல்-

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான் 

விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம் 

தன்மையினாற் க ண்ணிற் ப ணிமின் க னிந்து!

பரிகாரம்-

விநாயக ர் வழிபாடு
ராசி-விருச்சிகம் 70%

[விசாகம் 4ம்பாதம்,அனுஷம்,

கேட்டை ] 

ஏழரையின் தாக்கத்தை

ஏழாமிட குரு குறைப்பார்

சொல்ல வேண்டிய பாடல்-

புத்தியும் பலமும் தூயபுகழோடு

துணிவும் நெஞ்சில்

பத்தியும் அச்சமிலாப் ப ணிவும்

நோயில்லா வாழ்வும்

உத்த ம ஞானச் சொல்லின் ஆற்றலும்

இம்மை வாழ்வில்

அத்தனை பொருளும் சேரும்

அனுமனை நினைப்பவர்க்கே!


பரிகாரம்-

ஆஞ்சநேயர் வழிபாடு
ராசி-தனுசு 60%


[மூலம்,பூராடம்,

உத்திராடம் 1ம் பாதம்]

அயர வைப்பார்


ஆறாமிட குரு
சொல்ல வேண்டிய பாடல்-


இல்லாமை சொல்லி ஓருவர் தம்பால் சென்று இழிவுபட்டு

நில்லாமை நெஞ்சில் நினைகுளிரேல் நித்தம் நீடுதவம்

கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்

செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே !

பரிகாரம்-


துர்க்கை வழிபாடு


ராசி-மகரம் 80%

[உத்திராடம் 2,3,4ம் பாதம்,

திருவோணம்,அவிட்டம் 1,2ம்பாதம்]

அற்புதம் நிகழ்த்துவார்

ஐந்தாமிட குரு

சொல்ல வேண்டிய பாடல்-

உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே

உலகமெல்லாம் காத்துநிற்கும் தேவி மகாலட்சுமியே

உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலட்சுமியே

உன்பாதம் சரணடைந்தோம் நலம் தருவாய் அம்மா!

பரிகாரம்-

லட்சுமி வழிபாடுராசி- கும்பம் 55%

[அவிட்டம் 3,4 ம் பாதம்,

சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதம்]

கனவு நிறைவேறும்

வருமானம் தடுமாறும்

சொல்ல வேண்டிய பாடல்-

ஆடியபாதம் மன்றாடிய பாதம்

ஆடியபாதம் நின்றாடிய பாதம்

பாடிய வேதங்கள் தேடிய பாதம்

பக்திசெய் பக்தருக்கு தித்திக்கும் பாதம்

நாடிய மாதவர் தேடிய பாதம்

நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம்

பரிகாரம்-

நடராஜர் வழிபாடு


 
ராசி- மீனம் 60%


[பூராட்டாதி 4ம் பாதம், 


உத்திரட்டாதி, ரேவதி]


அஷ்டமசனி காலம்


பொறுமையாக இருங்க
சொல்ல வேண்டிய பாடல்-


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே

பரிகாரம்-


வெங்கடாஜலபதி வழிபாடு


  

நன்றி -------- தினமலர்


வேதநூல் தர்ம சாஸ்திரம் 
மேன்மையை அறிந்தோனாகி 
சாதனையால் கற்பகத் 
தனி நாட்டின் இறைவனாகி 
சோதியாய் குருவுமாகி 
சொர்க்கத்தை மண்ணில் நல்கும் 
ஆதியாம் குருவே நின்தாள் 
அடைக்கலம் போற்றி! 


- இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால்

குருவின் அருட்பார்வையால் கல்வி சிறக்கும்.

செல்வம் செழிக்கும்.

தொழில் மேன்மை கிடைக்கும்.
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை 
ஆறங்கமுதல் கற்ற கேள்வி 
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த 
பூரணமாய் மறைக்கு அப்பாலாய் 
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை 
இருந்தபடி இருந்து காட்டிச் 
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் 
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
பெருநிறை செல்வம் மேன்மை 
பெற்றிடும் சுகங்கள் யாவும் 
வருநிறை மரபு நீடி வாய்க்கும் சந்ததி தழைக்க 
குருநிறை ஆடை ரத்னம்தான் பெற அருளும் தேவ 
குருநிறை வியாழன் பொற்றாள் 
குரைகழல் தலைக் கொள்வோமே.
ஆலின்கீழ் அறங்களெல்லாம் 
அன்றவர்க்கு அருள்செய்து 
நூலின் கீழ் அவர்கட்கெல்லாம் 
நூண்பொருளாகி நின்று 
காலின்கீழ் காலன்தன்னைக் 
கடுகத்தான் பாய்ந்து பின்னும் 
பாலின்கீழ் நெய்யு மானார் 
பழனத்தெம் பரமனாரே மறைமிகு கலைநூல் வல்லோன் 
வானவர்க்கு ஆசான் மந்திரி 
நறைசொரி கற்பகப்பொன் 
நாட்டினுக்கு அதிபதியாகி 
நிறைதனம் சிவிகை மன்றல் 
நீடு போகத்தை நல்கும் 
இறைவன் குரு வியாழன் 
இருமலர்ப்பாதம் போற்றி போற்றி! 

இந்த பாடல்களை தினமும் மாலையில் விளக்கேற்றி சொல்லி வர 

கஷ்டங்கள் குறைந்து நன்மை பெற லாம். 


குரு பாடல்-2அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி 
நன்றாக வானவர் மாமுனிவர் நாடோறும் 
நின்றார வேத்து நிறைகழலோன் புனைகொன்றைப் 
பொன்றாது பாடிநம் பூவல்லி கொய்யாமோ