வியாழன், ஜனவரி 19, 2012

நூல் பாண்டியன்

சுமார் அரைகோடி புத்தகங்களை ஒருவர் சேகரித்து 

வைத்துள்ளார்.என்றல் நம்ப முடிகிறதா?

அவர்தான் "நூல்" பாண்டியன்.

மக்களாக அளித்த பட்டம் இது.

சென்னை கே.கே.நகரில் 

"ஆதிபராசக்தி பழைய புத்தக கடை"

ஆரம்பித்து முப்பது வருடங்களாக 

ஆத்மா திருப்தியுடன் கடை நடத்தி வருகிறார்.

இந்த கடை தவிர ஒரு கிடங்கிலும், 

அவர் வீட்டின் பெரும் பகுதியிலும் 

புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்

முதலில் வீடு வீடாக பேப்பர் போடுபவர்;

பின் சொந்தமாக பேப்பர் ஏஜன்சி 

சின்ன, சின்ன வேலைகள்;  

அப்பாவால் அரசு நூலகத்தில் நூலகர்;

என்று பல வேலைகள் செய்தாலும் 

பழைய புத்தகங்களை நோக்கியே 

திரும்ப திரும்ப வந்ததால் 

இன்றுள்ள கடை பிறந்தது.

நூலக வேலையில் மனம் ஒட்டவில்லை 

என்பதற்கு அவர் கூறும் காரணம் 

"அங்கிருந்தவை புதிய நூல்களாம்!!"

சென்னையின் கல்வியாளர்கள், 

சினிமா இயக்குனர்கள், புத்தக பிரியர்கள் 

என்று அனைவருக்கும் அறிமுகம் ஆனவர்.

வெளியூரில்  இருப்பவர்கள் கூட  

போன் மூலம் கூறலாம்.

தன்னிடம் இல்லை என்றாலும் 

இரண்டு, மூன்று நாட்களில் 

"எப்படியோ" வரவழைத்து கொடுத்து விடுவார்.

ஆராய்ச்சி மாணவர்களுக்கு இவர் 

கடை ஒரு அட்சய பாத்திரம்.

தினமும் அலுவலகத்திற்கு போவது போல் 

தன இரு சக்கர வாகனத்தில் 

ஒவ்வொரு பழைய புத்தக கடைகளாக 

சென்று, அரிய நூல்கள் கிடைக்கிறதா?

என்று தேடிக்கொண்டு இருப்பார்.

மாலை மூன்று மணிவரை 

தேடலும், சேகரிப்பும்.

ஓ!  ஒரு முக்கியமான விஷயத்தை 

சொல்ல மறந்து விட்டேன்?

பாண்டியன் வெறும் விற்பனையாளர் அல்ல.

அரிய நூல் சேகரிப்பாளரும் கூட.

1826ல் இலங்கையில் பதிப்பிக்கப்பட்ட

தமிழ் பஞ்சாங்கம்    முதல் 

நூற்றாண்டு கண்ட பல நூல்கள் 

இவரது சேமிப்பில் உள்ளன.

தன்னிடம் இருக்கும் ஒவ்வொரு 

நூலைப் பற்றியும் புள்ளி விவரம் 

வைத்து இருப்பதுதான் வியப்புக்குரிய செய்தி

இவரது ஆர்வத்தின் அடையாளம்.

ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை தேடி 

வாடிக்கையாளர் வரும் போது

அதை விட சிறந்த புத்தகம் இருந்தால் 

அதைப் பற்றி சொல்லி சிபாரிசு செய்வது, 

இவரின் புத்தகங்களின் மீதான  

ஆர்வத்தையும், அறிவையும் காட்டுகிறது.

எல்லா வகை நூல்களையும், 

எல்லா மொழிகளிலும் வைத்துள்ளார்,

மாலை 4 மணி முதல் இரவு 9.30 வரை 

கடை திறந்து இருக்கும்.

வார விடுமுறை இல்லை; 

இவரே பார்த்துக் கொள்கிறார்,

வருமானம் பெரிதாக இல்லை 

இவரிடம் புத்தகம் வாங்கிப் படித்த 

மாணவர்கள் சில சமயங்களில் 

இனிப்பு கொடுக்க வருவார்கள்;

போட்டித் தேர்வில் வென்று 

வேலைக்கு செல்பவர்கள் 

இவரை மறப்பதில்லை;

இந்த சந்தோசமும், ஆத்மா திருப்தியுமே 

இப்பணியை விடாமல் செய்ய முடிகிறது.

பாண்டியன் "இப்பல்லாம் மக்கள் 

புத்தகம் வாசிக்கிறது குறைந்து வருகிறது;

T .V . யிலே பொழுதை விடுகிறார்கள்" 

என சமூக அக்கறையுடன் கவலை படுகிறார்.

நியாமான கவலைதான்.

நூல் பாண்டியன் - 9444429649

நன்றி - புதிய  தலை  முறை