ஞாயிறு, மே 29, 2011

விடுமுறை சுற்றுலா- வெள்ளோடுஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

200 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து13 கி தொலைவிலும், ஈரோடு

ரெயில் நிலையதிலிருந்து10கி தொலைவில், சென்னிமலை செல்லும்

பாதையில் அமைந்துள்ளது.

நீர் வறச்சி காலங்களில் விவசாயம் செய்வதற்காக

ஒரு நீர் சேகரிப்புக் குளம்.

அதைச் சுற்றி நிறைய மரங்கள்.

பறவைகளின் சத்தம் தவிற வேறு வித சத்தமும் இல்லாத இடம்.

இவை அனைத்தும், ஈரோட்டிலிருந்து சென்னிமலை செல்லும் பாதையில்

வெள்ளோடு சரணாலயத்தில் உள்ளது.

வெள்ளோடு சரணாலயம் செல்வதற்கு,

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து மூலம் பயணம்

செய்யலாம்,

ஈரோட்டில் இருந்து வெள்ளோடு சரணாலயத்துக்கு பஸ் டிக்கெட் ரூ.4.

அல்லது வாகனங்கள் மூலம் செல்ல விரும்புபவர்கள். ஈரோடு ரயில்

நிலையத்தில் இருந்து சென்னிமலை பாதையில் 15 கி.மி

பயணம் செய்ய வேண்டும்.


வெளிநாட்டு பறவைகள் அக்டோபரில் வந்து முட்டையிட்டு குஞ்சு

பொறித்து மார்ச்சில் சொந்த நாடுகளுக்குச் சென்று விடும்.


கொசு உள்ளான், கூழக் கடா, நெடுங்கால் உள்ளான், வண்ண நாரை,

வெள்ளை அரிவாள்மூக்கன் போன்ற வெளிநாட்டு பறவைகள் வந்து,

மீண்டும் திரும்பிச் சென்று விடுகின்றன.


கடந்த 10 ஆண்டுகளில் 93 வகைகளை சேர்ந்த 31 ஆயிரம் வெளிநாட்டு

பறவைகள் மீண்டும் திரும்பிச் செல்லாமல் இங்கேயே தங்கி விட்டன.

பாம்புதாரா, நீர் காகம், பெரிய நீர்காகம், உண்ணி கொக்கு,

நீளவால் இலைக் கோழி, நாமக்கோழி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி

 மற்றும் பல்வேறு வகை சிட்டுக்குருவி ரக பறவைகள்தான்

இங்கேயே நிரந்தரமாக தங்கி இருக்கின்றன.

அனுமதி இலவசம்

சரணாலயம் பற்றிச் சொல்லுங்கள் என்று பணியாளரிடம் கேட்ட போது, 

" நீர் சேகரிப்பு குளத்திற்கு  வாய்காலில் வரும் நீரினாலும்,

மழையினாலும் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும்.

இங்கு 77.185 ஹெக்டர் பரப்பளவு உள்ளது.

110க்கு மேல் வகையான பறவைகள் வந்து செல்கின்றன.

வெளிநாட்டுப் பறவைகளில் ஆண்டிவாத்து,  வண்ண நாரை

பெலிக்கான் போன்ற பறவைகள் புதிதாக வந்திருக்கிறது.

சீசன் காலங்களில் பறவைகள் நிறைய வருகின்றது.

பறவைகளின் சீசன் காலம் ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை.

மற்ற காலங்களில் பறவைகள் குறைவாக இருக்கும்.

மாலை 5 மணி முதல் பறவைகள் தங்குவதற்கு வரும்போது

அனைத்து வகைகளையும் பார்க்கலாம்.

காலை 8 மணிக்கு மேல் பறவைகளில் சில வகைகள் மட்டுமே

பார்க்க முடியும்" என்றார்.


பார்வையாளர்களுக்கு பறவைகளைப் பார்த்து ரசிப்பதற்காக

ஆங்காங்கே   நிழற்குடை கள்  அமைக்கப்பட்டுள்ளது.

கழிப்பிட வசதிகள் உள்ளது.


அங்கு உள்ள பணியாளர்கள் பறவைகளைக் காப்பதற்காக

விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றார்களாம்.


நீர் காகம்,கொக்கு வகைகள் காலையில் கிளம்பிச் சென்று

மாலையில் மீண்டும் அங்கு வந்து விடுகின்றன.

ராக்கொக்கு பறவைகள் மாலையில் வெளியேறி

அதிகாலை சரணாலயம் திரும்புகிறது.

பறவைகளை காண விரும்பும் சுற்றுலா பயணிகள் காலை 6மணிக்கு

அல்லது மாலை 5 மணியில் இருந்து 6.30க்குள் வந்தால்

அனைத்து வகை பறவைகளையும் பார்க்க முடியும்

பறவைகளை காண வனத்துறை சார்பில்

தொலைநோக்கிகருவிஉடன் பார்வையாளர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு உணவகமும் உள்ளது.


ஈரோட்டை சுற்றி, பார்க்க பல இடங்களும் உள்ளது.

சென்னிமலை கோவில், ஈரோட்டிலுள்ள திண்டல் முருகன் கோவில்,

மிக பழமையான கோட்டைஈஸ்வரன் கோவில், பார்க், பவானி  கூடுதறை

சங்கமேஸ்வரர் கோவில், பவானிசாகர் அணை , கோபிசெட்டிபாளையம்

என பல இடங்கள் உள்ளது.

அதனால் சரியானபடி திட்டம் இட்டு சென்றால் விடுமுறை இனிமையாக

கழிக்கலாம்.

சனி, மே 28, 2011

விடுமுறை சுற்றுலா- வேட்டங்குடி


அதிக அளவில் பிரபலமாகாத இந்த வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்,

மதுரை - காரைக்குடி வழித்தடத்தில் உள்ளது

மதுரையிலிருந்து மேலூர் 30கி.மீ.

பின்னர் மேலூரிலிருந்து சுமார் 25கி.மீ

ரம்மியமான சாலையில் பயணம் செய்தால், வேட்டங்குடி வந்துவிடும்

இன்னொரு வழி சொல்லுவது என்றால்

மதுரையில் இருந்து 55 கி.மீ. தொலைவில் திருப்புத்தூர்

சாலையையொட்டி உள்ளது என்றும் கூறலாம்.


இந்த சரணாலயம் 39 .9  ஹெக் பரப்பளவு கொண்டது.

மதுரையில், பச்சைப் பசேல் என்று உள்ள கண்மாயை பார்ப்பது

மிகக் கடினம், அதை இங்கே காணலாம்

இங்குள்ள கொள்ளுகுடிப்பட்டி கண்மாய்க்கு மழைக்காலத்தில்

வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன

 வேட்டங்குடி, இடம் பெயர்ந்து வரும் பறவைகளுக்கு புகலிடமாக உள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் என சுமார் 20 ,000
 பறவைகள் வருவதாக கூறுகிறார்கள்.

பறவைகள் ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து வருகின்றன.

இப்பகுதி    அதிகம் அறியப்படாததால் பறவைகள் எந்த நாடுகளிலிருந்து

வருகின்றன,என்னென்ன பறவைகள் போன்ற விவரங்கள் அதிகம்

அறியக்கூடிய நிலையில் இல்லை.


செப்டம்பர் - ஜனவரி வரை பறவைகளைப் பார்க்கும் பருவம்.உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை,

பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன்,

 நத்தை கொத்தி நாரை (Blue winged teal, Cattle egret, Painted stork, Eastern Grey heron,

Glossy ibis, Darter or Snake bird, Spoonbill, Asian openbill stork) முதலிய 13 வகைகளுக்கு

மேலான பறவைகளை இங்கு காணலாம்.

தற்போது இவ்வகைகளே அறியப்படுகிறது.

பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டு, குஞ்சு பொறித்து சென்று விடும்

சூரிய உதயத்தின் போதும், சூரிய மறைவின் போதும்,

பறவைகளைப் பார்ப்பதற்கு சரியான நேரம்.

பறவைகளை பார்ப்பதற்கு, பைனாகுலர் ஒன்றும் வைத்துள்ளார்கள்.


பறவைகள் ஆராய்ச்சி செய்ய, பார்வையாளார்கள் தங்குவதற்கு என்று

அறைகள் கொண்ட விடுதி உள்ளது.

 இது வரை, அவை திறந்திருந்து பார்த்தது இல்லை,

அவை எல்லாம் சிபாரிசு மற்றும் சக்தியுடைய ஆட்களுக்கு மட்டும் என்று

கூறுகிறார்கள்.


இக்கிராமத்தினர், பறவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடும்

என்பதால், மிக நீண்ட வருடங்களாக, தீப ஒளித் திருநாளின் போதும்,

பட்டாசு வெடிப்பது இல்லை என்கிறார்கள்.


கடைகள் ஏதும் இல்லை என்பதால், உணவுப் பொருட்களும்,

 தண்ணீரும் கொண்டு செல்வது அவசியம்.

 பிளாஸ்டிக் தவிர்க்க இயலாது எனில், கையுடன் திரும்பக் கொண்டு

வந்து விடுவது நல்லது.


How to Reach

By Train

Chennai to Rameswaram broad gauge train service reached

sivaganga by train via Trichy and Karaikudi.

By Bus

Sivagangai is connected by road to all the important

towns in Tamilnadu.

 Government and private buses could also take you there from

anywhere in Tamilnadu.

By Air

The nearest airport is at Madurai is about 45 kms away

from SivagangaiThe nearest airport is at Madurai flights are available to

Chennai, Coimbatore and Trichy.


 
 
contact-
 
Tourist Officer
 
Govt. of TamilNadu Tourist Office
 
Bus Stand Complex
 
Rameshwaram- 623526
 
ph-04573-221371

வெள்ளி, மே 27, 2011

விடுமுறை சுற்றுலா- வேடந்தாங்கல்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பறவைகள்

சரணாலயம் வேடந்தாங்கல் ஆகும்


சென்னையில் இருந்து 85 கி.மீ. தொலைவில் வேடந்தாங்கல்

பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.


1858 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் பழமையான

பறவைகள்சரணாலயம் ஆகும்.


இது  30 ஹேக் அளவிலான ஒரு சதுப்பு நிலப் பரப்பு.


இங்குள்ள மரங்களும், ஏரியும் பறவைகள் கூடு கட்டி வாழ்வதற்கு

 எற்ற சூழ்நிலையை தருகின்றன.

இங்குள்ள பெரிய ஏரியில், ஆண்டுதோறும் மழைக் காலத்தில் நீர்நிரம்பும்.

அப்போது ஏரியில் நீர்கடப்பை மரங்கள் அடர்த்தியாக வளர்கின்றன.

இங்கு நிலவும் தட்ப வெப்ப நிலை பறவைகளின்

இனப்பெருக்கத்திற்குஏற்றதாக உள்ளது.

எனவே,  வெளிநாடுகளைச் சேர்ந்த பறவைகள்  இனப்பெருக்கத்திற்காக

ஆண்டுதோறும் இங்கு வருகின்றன.

இனப்பெருக்கம் முடிந்ததும் திரும்பிச் செல்கின்றன


பறவை ஆர்வலர்களின் சொர்க்கம் என்றே இதைச் சொல்லலாம்.


குளிர்காலமே பறவைகளை பார்ப்பதற்கு ஏற்ற பருவமாகும்.


அதிகாலை அல்லது மாலை3-6 வரை   பார்ப்பதற்கு ஏற்ற நேரம் ஆகும்.உலகப்புகழ் பெற்ற இந்த சரணாலயத்தில் தற்போது, கூழை கடா, நத்தை

கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நீர் காகம்,

மிளிர் உடல் அரிவாள் மூக்கன், வர்ண நாரை, குருட்டுக் கொக்கு, வெள்ளை

கொக்கு, பாம்பு தாரா, சாம்பல் நாரை, நீர் வாத்து உள்ளிட்ட 26 வகையான

பறவைகள் உள்ளன.


சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் கூடுகட்டி வசிக்கின்றன.


இந்த பறவைகள் அனைத்தும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்,

பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, சைபீரியா உள்ளிட்ட உலகின் பல்வேறு

நாடுகளை சேர்ந்தவை.


இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்து விட்டு அதனுடன் மீண்டும்

தாய் நாடு செல்லும்


மதுராந்தகம், உத்திரமேரூர், பழையபுத்தூர், வேடந்தாங்கல் உள்ளிட்ட

ஏரிகளில் தண்ணீர் போதுமான அளவில் இருப்பதால் இந்த பறவைகளுக்கு

தேவையான தீனி கிடைக்கிறது.


இந்த பறவைகளில் பெரும்பான்மையானவை, முட்டையிட்டு குஞ்சு

பொரித்து பாதுகாத்து வருகின்றன.

முட்டைகளையும், குஞ்சுகளையும் ஆண், பெண் பறவைகள் தீவிரமாக

பாதுகாத்து வருகின்றன.

ஆண் பறவை இரை தேட சென்றால் பெண் பறவையும்,

பெண் பறவை இரை தேட சென்றால் ஆண் பறவையும் பாதுகாக்கிறது.


வேடந்தாங்கலில் நீர் நிறைந்த ஏரிகள் பல உள்ளன.

அவற்றில் அடர்த்தியாக வளர்ந்துள்ள மரங்களில் பறவைகள்

கூடு கட்டி இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.


வேடந்தாங்கல் ஏரி மற்றும் அருகில் உள்ள கருக்கிலி ஏரி

ஆகியவற்றை,வனத்துறை பராமரித்து பாதுகாத்து வருகிறது.

 வேடந்தாங்கல் ஏரியில் நீர்கடப்பை, மூங்கில், கருவேலம், நாவல் என,

ஐந்தாயிரம் மரக்கன்றுகளும், கரிக்கிலி ஏரியில் 10 ஆயிரம் கன்றுகளும்

   வனத்துறையினாரால்    நடப்பட்டுள்ளன.

அவை, தற்போது அடர்ந்து வளர்ந்து, பறவைகள்

வாழ்விடங்களாய் இருக்கின்றன.


இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பறவைகளைப் பாதுகாப்பதில்

மிகுந்த கவனம் செலுத்துகின்றனர்.

பல ஆண்டுகளாக இவர்கள் வெடி வெடிப்பதில்லையாம்,

சத்தம் போட்டு பேசுவதில்லையாம்,

கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டுவதில்லையாம்.

இப்படி 250 ஆண்டுகளாக தொடர்ந்து பறவைகளைப்

பாதுகாத்து வருகின்றனர்வேடந்தாங்கல் சரணாலயத்தை காண கட்டணமாக

சிறுவர்களுக்கு ரு 2, பெரியவர்களுக்கு ரு 5 வசூலிக்கப்படுகிறது.


கேமராவுக்கு ரு 25, வீடியோ கேமராவுக்கு ரு 150 கட்டணம்

செலுத்த வேண்டும்.


அற்புதமான புகைப்படங்கள் எடுக்க அருமையான location.


செவ்வாய்கிழமை சரணாலயத்திற்கு விடுமுறை நாள்.


காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சரணாலயம் திறந்திருக்கும்.

பார்வையாளர்கள் வசதிக்காக உயர் கோபுரத்தில்[ 24' ] பைனாகுலர்

அமைக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் பறவைகளை மிக அருகில் ரசிக்கலாம்.இரை தேட செல்லும் பறவைகள் மாலையில் கூடுகளுக்கு திரும்பும்போது

வானில் வட்டமிட்டபடி வரும்.

பழ வண்ணங்களில், பலவகையான பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும்.

இது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும்.


 மரங்களிடையே நடந்து செல்ல பாதைகளும், ஆங்காங்கே அமர்ந்து

பறவைகளை ரசிப்பதற்கு பெஞ்சுகளும் அமைக்கப் பட்டு இருக்கிறது.

பறவைகளை கலவரப்படுத்தாமல் ஓசையின்றி ஒரு புறமாக இருந்து

மௌனமாக பறவைகளின் அருமையான செயல்பாடுகளை கவனிப்பது

ஒரு சுவாரசியமான அனுபவம் ஆகும்.


பறவைகளும் ஓரளவிற்கு மனித நடமாட்டத்திற்கு பழக்கப்பட்டே

இருக்கின்றன என்றே கூறலாம்.

அதற்காக எல்லை மீறி அவற்றை பயமுறுத்தக்கூடாது.

அவை நம் நாட்டின்  அழகிய   விருந்தாளிகள்.
சுற்றுலா பயணிகள் தங்குவதற்கென விடுதி சரணாலயத்தின் நுழைவு

வாயிலிருந்து ஒரு கிமி தொலைவில் உள்ளது.

இரண்டு A.C  அறைகளும்,  இரண்டு A.C  இல்லாத அறைகள் என

மொத்தம் 4 அறைகள் தான் உள்ளது.

ஒரு அறையில் 12 மணி நேரம் தங்கலாம்.

அதற்கான கட்டணம் ரு 750.

கிண்டி வன உயிரின காப்பாளர் அலுவலகத்தில் இதற்கு

முன்பதிவு செய்து கொள்ளலாம்.சென்னையில் இருந்து செங்கல்பட்டு சென்று, அங்கிருந்து

வேடந்தாங்கல் செல்ல வேண்டும்.

தாம்பரம், பாரிஸ் கார்னரிலிருந்து செங்கல்பட்டுக்கு செல்ல

பேருந்து வசதி உள்ளது.


மதுராந்தகம், செங்கல்பட்டில் இருந்து குறைந்த பஸ் இயக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர்.

சீசன் காலத்திலாவது கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

சுற்றுலா பயணிகளுக்கு ஓட்டல் வசதி இல்லை.

இதனால் பயணிகள் இரவில் வீடு திரும்பி விடுகின்றனர் என்கிறார்கள்
                  
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைப் பார்வையிட

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலமே சிறந்ததாகும்.பழங்கள், தேநீர், குளிர்பானங்கள், snacks   ஆகியவை சரணாலயத்திற்கு


வெளியில் உள்ள கடைகளில்   கிடைக்கிறது.


கழிப்பறை வசதிகளும் உள்ளது.

 
GUIDE களும் உள்ளனர். கட்டணம் கொடுக்க வேண்டும்.


பைனாகுலர், CAMERA WITH ZOOM LENS, குறிப்பு எடுக்க ஒரு நோட்டு புத்தகம்

கொண்டு செல்வது நம் பயணத்தை இன்னும் சுவாரசியம் ஆக்கும்.காஞ்சிபுரம், மகாபலிபுரம் - இங்கிருந்தும் செல்லலாம்.


இங்கிருந்து 9கிமீட்டர் தொலைவில்   உத்திரமேரூர் செல்லும் பாதையில்     

கரிக்கில்லி என்ற இடத்தில் இன்னுமோர் பறவைகள்

சரணாலயம் அமைந்துள்ளது.

இங்கு சீசன் காலங்களில் மட்டுமே பறவைகள் வருகின்றன.
How to Get There

By Air :
 Chennai is the nearest and most convenient airport, connected by

daily Indian Airlines flights from


Delhi (6:40, 10:15, 16:45 & 19:00),


 Mumbai (7:05, 9:20, 11:45, 18:10 & 20:30),
Bangalore (8:30) and Kolkata (14:30 & 18:10).

By Rail :

Chengalpattu is the nearest railhead.

 Delhi is convenientlyconnected through


the Thirukkural Exp. (6:00, Sat) &

T N Smprk Krnti (7:25, Tue, Thu)


while Mumbai through the Madurai Exp. (00:15, Fri) &

Nagarcoil Exp. (12:05, Tue, Sat).


Daily trains running Chennai-Chengalpattu include

the Nellai Exp. (21:00), Kanyakumari Exp. (17:30),


Pandian Exp. (21:30), Pearl City Exp. (18:30),


 Anantapuri Exp. (19:30) & Rock Fort Exp. (22:30).

By Road :
To travel by road from Chennai,

 take the national highway no. 45 to Chengalpattu

and head south towards Padalam junction.


A right turn here will lead to the sanctuary road.


The sanctuary can also be accessed from other nearby towns of

Kanchipuram and Mahabalipuram,


 but the road is not very well maintained.


State transport buses ply between Chennai and Chengalpattu,


 the best option however would be to travel in your

own four wheeler


or


 hire a taxi from Chennai


The sanctuary can be reached by car from Chennai,between 1,5

and 2 hours to get there.

Take the highway to the south, passing the airport, Pallavaram,

Tambaram, Chengalpattu and don't miss the signpost to the right.

From the signpost it's another 12km to the sanctuary.Distances from Major CitiesChennai : 86 km (SW)

Chengalpattu : 30 km

Delhi : 1784 km

Bangalore : 29 km

Contact Details

Wildlife Warden
259 Anna Salai
DMS compound
Teynampet
Chennai 600 006
Ph. 044-24321471


 


 


 

 


திங்கள், மே 23, 2011

கூந்தல் பராமரிப்பு

தலையில் முடி அடர்த்தியாக வளர


ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து

நல்லெண்ணையில்காய்ச்சி, வடிகட்டிய பின்

 தலைக்குத் தேய்த்தால்

தலை முடி அடர்த்தியாக வளரும்.


முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய்

தலைக்குத் தடவி

ஒருமணி நேரம் கழித்து

கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.


செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி

அரைமணி நேரம்ஊறிய பின்

தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும்.


கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4,

இரண்டையும் நன்றாக அரைத்து

அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால்

கூந்தல் நல்லகருமையான நிறத்துடன் வளரும்.

.
கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை

சம அளவுஎடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி

கூந்தலில் தடவினால் முடிநன்றாக வளரும்.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து

தலையில் பேக் போலபோட்டு ஊறிய பிறகு

தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.


. எலுமிச்சை ஜுஸ்ஸுடன் தேங்கெண்ணெயை கலந்து

தலையில் பூசிகுறைந்தது அரைமணி நேரம்

ஊறவைத்து குளிக்கலாம்.

[சளி, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம்]


 வேப்பெண்ணெயை இலெசாக சூடுபடுத்தி

அதை தலையில் பூசிஊறவைத்த பிறகு

ஷாம்பு போட்டு குளிக்கலாம்.


 வேப்ப இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறவைத்து

அந்தநீரை தலை குளிக்க பயன்படுத்தலாம்.


 தயிரில் குருமிளகை பொடித்துகலந்து

தலையில் பூசிவிட்டு

 நன்கு ஊறீய பின்பு குளிக்கலாம்.


தேங்கெண்ணெயில் கருவேப்பிலையைப் போட்டூ

 நன்கு காய்ச்சிஆறவைத்து

அதை தலையில் தேய்த்து ஊறவைத்து

தலை குளித்து வரலாம்.


உலர்ந்த நெல்லிகாயை தேங்கெண்ணெயில் போட்டு காய்ச்சி

அதைஆரவைத்து  பயன்படுத்தலாம்.


தயிரை பூசி ஊறவைத்து தலைகுளிப்பதும் நல்லது.


பிரம்மி ஹெர் ஆயிலுடன் தேங்கெண்ணெயை சமமாக கலந்து

தினமும் பூசுவதும் பலனை தரும். பொதுவாக இளநரையை ஏற்படும் காரணங்களில் முக்கியமாக

டென்ஷனும் ஒரு காரணமாக கூறப்படுகின்றது.

இவை இளநரைக்கு மட்டுமல்லாமல்

உடலில் பல கோளாருகளுக்கும்

இந்த டென்ஷனும்

அதனால் ஏற்படும் ஸ்டிரஸ் காரணமாக உள்ளதால்

கூடிய வரை டென்ஷனை தவிர்த்து வாழ்வது தான்

முழு உடல்ஆரொக்கியத்திற்கும் நல்லது.


பொதுவாக தலைக்கு வரும் தலையாய பிரச்சனையே

முடி கொட்டுவது தான்.

அவை ஏற்பட பல காரணங்கள் இருப்பினும்

சரிவர பராமரிப்பின்மை கூட

ஒரு முக்கிய காரணம் என்றும் சொல்லலாம். இன்றைய அவசர உலகில் ஏதோ குளித்தோமா

காயவைத்தோமா என்றும்,

இன்னும் சிலர் அதுவாகவே காயட்டும் என்றும்

அப்படியே விட்டுவிட்டு

வேறு வேலையைப் பார்க்க செல்வார்கள்

 இவ்வாறு இல்லாமல் முடிக்கேன்று சிறிது தருணம் ஒதுக்கி

அதைபராமரித்து வந்தால் பிறகு

ஒரு பிரச்சனையும் ஏற்படாது.


 அதற்கு வாரம் ஒரு முறை எண்ணெய் மசாஜ் செய்தல் வேண்டும்.

 சிறிது எண்ணெயை கைகளில் பூசிக் கொண்டு

விரல்களால் தலையின்

எல்லா பாகத்தில் இலேசாக அழுத்தி

ஒரு பத்து நிமிடம் மசாஜ் செய்து

அதன் பிறகு குளிக்கலாம்.


 முட்டையை உடைத்து சிறிது எண்ணெயில் கலக்கி

தலையில் பூசி ஒருஇரண்டு மணி நேரம்

ஊறவைத்துவிட்டு பிறகு குளிக்கலாம்.


வெந்தயம், சிறுபருப்பை ஊறவைத்து அரைத்து

தலையில் பூசி குறைந்தது

ஒரு மணிநேரம் ஊறவைத்து

பிறகு அதை கழுவி விடலாம்.


வாரம் ஒரு முறை சீயக்காயை ஊறவைத்து அரைத்து

ஷாம்புக்கு பதிலாக போடலாம்.அதிக வெய்யில் என்றால் குடை நிழலில் அல்லது

தலைக்கு தொப்பியை அணிந்துக் கொள்வது நல்லது.


 உளுத்தம் பருப்பை ஊறவைத்து மையாக அரைத்து

அதை தலைமுழுவதும் பூசிவிட்டு குளித்தால்

முடி பளபளப்பாக இருக்கும்.


நீண்ட முடியானால் அதன் நுனியை அடிக்கடி

கத்தரித்துவிட வேண்டும்.

குட்டையான முடி வைத்திருப்பவர்கள்

குறைந்தது இரண்டுமாதத்திற்கொரு முறை

கத்தரித்துக் கொள்வது நல்லது.


 ஷாம்பூ மட்டும் போட்டு குளிக்கக்கூடாது

தொடர்ந்துஅதன் கண்டிஷனரையும் போட வேண்டும்

இல்லாவிடில் முடி வறண்டு விடும்.


 ஈரத்தலையை வாரக்கூடாது

முடி அதிகமாக கழன்று வரும்,

சற்று உலர்ந்த பின்னரே வார வேண்டும்.

பெரிய பற்கள் கொண்ட சீப்பை அல்லது

பிரஷ்ஹை உபயோகிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் குறைந்தது இருபது முறையாவது

இலேசாக அழுத்தி வார வேண்டும்.


 வேலைக்கு போறவரனால் தினமும் படுக்க செல்லும் முன்

 சிறிதுஎண்ணெயை தலையில் பூசி

காலையில் குளித்துவிடலாம்.


 இவ்வாறு சிறியதொரு பராமரிப்புகள் இருந்தாலே

முடிசம்பந்தமாக வரும் பிரச்சனைகளை குறைக்கலாம்.

பிரச்சனை வந்தப் பிறகு பரிகாரம் தேடுவதற்கு பதில்

தலைமுடிஆரோக்கியமாக இருக்கும்போதே

அதை பேணிகாத்து தக்கவைத்துக்

கொள்வது மிக மிக அவசியம்


இர‌வி‌ல் ஒரு கப் தயிரில்

ஒரு கை‌ப்‌பிடி வெந்தயத்தை போட்டு

ஊற வைக்கவும்.


மறுநாள் காலை அ‌ந்த வெ‌ந்தய‌த்தை ம‌ட்டு‌ம் த‌னியே எடு‌த்து

அரை‌த்து ‌மீ‌ண்டு‌ம் அதனை த‌யி‌ரி‌ல் சே‌ர்‌க்கவு‌ம்.

அதை தலையில் தடவி, 20-30 நிமிடம் ஊற விடவும்.

பிறகு தலையை நீரால் அலசவும்.

உட‌ல் ‌சூ‌ட்டை மு‌ற்‌றிலு‌ம் தடு‌க்கு‌ம்.


கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால்,

கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து

தலையில் லேசாகதடவிக்கொண்டு

பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும்.

இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.தேநீரில்  மிஞ்சும் தேயிலைத் தூளில்

எலுமிச்சை சாரை பிழிந்து,

தலையில் தேய்த்துக் குளித்தால்,

தலைமுடி பளபளப்பாகும்.


 நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து

தேங்காய்ப் பாலுடன் கலந்து

தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து

குளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு,

 மயிர்க்கால்களும் நன்கு வலுப்பெறும்.


குழந்தைகளுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால்

சீத்தாப்பழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து

பொடி செய்துதேங்காய் எண்ணையில் கலந்து

தலையில் தடவி

ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.


சோற்றுக் கற்றாழையை கீறி

அதன் நடுவில் வெந்தயம் வைத்து

இரண்டுபக்கமும் கயிறால் மூடி கட்டி விட வேண்டும்.

கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

 பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து,

முளை கட்டிய வெந்தயம்,

சோற்றுக்கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து

அதனுடன்செம்பருத்தி இலையையும் சேர்த்து

பேக் போல தலையில் போட்டு

 ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர்

குளித்தால் வெயிலின்கடுமையால் வரும்

நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம்.


 தேங்காய் எண்ணை ஒரு லிட்டர்,

நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து

அதனுடன் நெல்லிக்காய் சாறு 1/2 லிட்டர் சேர்த்து

நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி

வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து வர

இளநரை வருவதை தவிர்க்கலாம்.


பொடுதலைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை

இந்த மூன்றையும்அரைத்து,

 பின்னர் சோயா பவுடர், நன்னாரி பவுடர், நெல்லிக்காய் பவுடர்

ஆகியவற்றுடன் கலக்க வேண்டும்.

 அத்துடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு,

தேவைக்கு நீர் கலந்து தலையில்

பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தால்

பொடுகு நீங்கி விடும்.


பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும்.

உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி,

அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு

நன்கு காய்ச்ச வேண்டும்.

இளம் சூடு பதத்திற்கு ஆறியதும்,

வேப்பம் பூவுடன் சேர்த்துஎண்ணெயை

தலையில் நன்றாகத் தேய்த்து

அரை மணிநேரம்ஊறிக் குளித்தால்,

பொடுகு பிரச்னை தீரும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள்,

வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டுமுறையோ,

மூன்று வாரங்கள் குளித்தால்

பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.


முடிகொட்டாமல் இருக்கவும்,

பொடுகில் இருந்து தலையைப்பாதுகாக்கவும்

புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ

மூன்றையுமே அரைத்துகலக்கி

தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு

குளிர்ந்த நீரில் குளித்து வந்தால்

முடி கொட்டாது. பொடுகும் வராது. .


 கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்

ஆரோக்கியமற்ற உணவு மற்றும்

இரும்பு சத்து குறைவான

உணவு பழக்கவழக்கம்.

 மன உளைச்சல், கோபம், படபடப்பு.

கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங்,

ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள்.

 கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது

 மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது.

 அளவுக்கதிகமான வெயில், உப்புக் காற்று,

குளோரின் கலந்த நீர்

மற்றும் சுற்றுப்புற மாசு.


பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது.

முடி நன்கு வளர வேண்டுமானால்,

புரோட்டீன் சத்து அதிகம் உள்ள

பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.


 முடி உதிர்வதை தடுக்க சில எளிய முறைகள்:


வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து

தலையில் தேய்த்து

 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும்.

 இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால்,

எந்தகாரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும்.

அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும்.

கருகருவென வளரும்.


இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு,

காலையில்அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து

தலையில் தேய்த்து குளித்துவந்தால்

 முடி உதிர்வது நிற்கும்.

செம்பட்டை முடியும் நிறம் மாறும்.


தலைமுடி நன்றாக வளர

கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து

தலையில் தேய்க்கலாம்.

 இப்படி செய்து வந்தால் முடி உதிராது,

அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.நரைமுடி கருப்பாக வேண்டுமா?

பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே

நரைமுடி தோன்றி விடுகிறது.

சிலருக்கு வம்சாவளியாகவும் நரை வருவதுண்டு.

கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல்

போன்றவற்றால்பித்த நரை உண்டாகும்.

வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.

 மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து,

அதில் எலுமிச்சம்பழச்சாறையும்,

வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ளவேண்டும்.

இக்கலவையை முதல் நாள் இரவே

செய்து கொள்ள வேண்டும்.

காலையில் எழுந்ததும், இக்கலவையை

அனைத்து முடிகளிலும்

படும்படிநன்றாக தேய்த்து

இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து

பிறகுசிகைக்காய்த்தூள் தேய்த்து

 நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும்.

 குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன்,

தலையில் எண்ணெய் பசை

இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.


 கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள்

துவையல் அரைத்துசாப்பிட வேண்டும்.

காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால்,

படிப்படியாக குறைத்து

அறவே நிறுத்தி விடவேண்டும்.


முடி கொட்டுவதை தடுக்க

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து

ஃபிட்ஜில் வைத்து கொள்ளுங்கள்

தினமும் குளிப்பதற்கு முன்பாக

தலையில் நன்கு தேய்த்து

அரைமணிநேரம் நன்கு ஊறவிட்ட

ஷாம்பு போட்டு நன்கு அலசிவிடுங்கள்

ஷாம்பு தினமும் போட வேண்டிய அவசியமில்லை

இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும்.

நிச்சயமாக முடி கொட்டுவது நின்றுவிடும்.


முட்டை -சமையல்

முட்டை- சைவமா? அசைவமா?

கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்துதா?

Always  it is a hundred million dollar question

எதிலிருந்து எதுவந்திருந்தாலும் இரண்டுமே SUPER TASTE.

அதுவும் முட்டையில் செய்யப்படும் RECIPIES  YUMMY.

சீக்கிரமும் செய்யக்கூடிய சுலபமான, சுவையான RECIPIES  நிறைய உண்டு.

முட்டை சமையலுக்கு முன்னால்   சில சுவாரஸ்யமான விசியங்கள்.

முட்டையைப் பற்றி நான் இணைய தளங்களில் படித்ததை -

உங்களுக்காக கொடுத்துள்ளேன்.

உடலுக்குத் தேவையான அனைத்து வகையான

வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) .

, தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின்,

பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு

தேவைப்படும் பாஸ்பரஸ்

காயங்களைக் குணமாக்கவும்,

நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படும் துத்தநாகம் என்னும்

தாதும் இதில் உள்ளது.

 மற்ற அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது

முட்டையின் விலையும் குறைவு.

புரதம் மற்றும் விட்டமின் நிறைந்த உணவு முட்டை.

எனவே உடல் ஆரோக்கியத்திற்கும், பார்வை திறனுக்கும்,

இரத்த சிவப்பணு உற்பத்திக்கும் மிகவும் உகந்தது.

'தினம் ஒரு முட்டை'' உண்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்

வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி

முடிவு ஒன்று சொல்கிறது.

ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச் சத்து இருக்கிறது.

மு‌ட்டையை எ‌வ்வாறு சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டாலு‌ம்

இ‌ந்த கலோ‌ரி‌ச்ச‌த்துக‌ள் குறைவ‌தி‌ல்லை.

இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது.

20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது.

சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும்.

சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கும்.

உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள்.


உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள்

முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.

தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது.


ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே

 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது.


குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அத‌ன்

வெ‌‌ள்ளை‌க் கருவை ம‌ட்டு‌ம் கொடு‌த்து சா‌ப்‌பிட‌ப் பழ‌க்க வே‌ண்டு‌ம்.

பி‌ன்ன‌ர் ‌சி‌றிது ‌சி‌றிதாக அவ‌ர்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் கருவை கொடுக்கலாம்.

உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற

நோய்கள் வராமல் தடுக்கிறது.

அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானது இல்லை.

மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை.


மசாலா முட்டை-தேவையான பொருட்கள்-முட்டை --------------------------- 5

பொடியாக நறுக்கிய வெங்காயம்------------------- 1

பொடியாக நறுக்கிய சுமாரான சைஸ் தக்காளி ------------ 2

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ----------------- 2

பட்டை------------------------------------------------------------ 1/4'

கிராம்பு --------------------------------------------------------- 2

ஏலக்காய் ---------------------------------------------- 1

சோம்பு --------------------------------------------------- 1/2 ts

இஞ்சி பூண்டு விழுது ----------------------------- 1 ts

தனியா தூள்-------------------------------------- 1 ts

தனி மிளகாய்த் தூள்------------------ 1/2 ts

மஞ்சள் தூள்------------------------------ 1/4 ts

மிளகுத் தூள் ------------------------------ 1/2 ts

எண்ணை --------------------------------------- 3 ts

உப்பு -------------------------------------------- தேவையான அளவு

 நறுக்கிய கொத்து மல்லி   இலைகள் --------------------- கொஞ்சம்செய்முறை-
முட்டைகளை வேக வைத்து இர்ண்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணை ஊற்றி , சூடானதும் சோம்பு போடவும்.

அதன் பின்  பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்க்கவும்.

பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.

பச்சை மிளகாய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கி கூழ்ப் போல்  ஆனதும் மஞ்சள் தூள்,

தனியாத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.

தேவையானால் சிறிது அளவு தண்ணீர் சேர்க்கலாம்.

குறைந்த தணலில் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

கடைசியாக மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

முட்டைதுண்டுகளை சேர்த்து கவனமாக மசாலாவை

 நன்கு கலக்குமாறு பிரட்டவும்.

மஞ்சள் கருவும், வெள்ளைக் கருவும் தனித்தனியாக

பிரியாமல் பார்த்துச் செய்யவும்.

இது கொஞ்சம்  கெட்டியான மசாலா அயிட்டம்.

அந்த பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

கொத்துமல்லி மேலே தூவவும்.

இது எல்லாவற்றிற்கும் பொருத்தமான side dish.முட்டை தொக்கு தேவையான பொருட்கள்முட்டை - 5

பெரியவெங்காயம் - 6

தக்காளி {பெரியது எனின் } - 3

இஞ்சி - 1 துண்டு

பூண்டு  - 4 பல்லு

மிளகாயப்பொடி - தேவையான அளவு

எண்ணை - தேவையான அளவு

உப்பு -தேவையான அளவுசெய்முறை-வெங்காயத்தை நீள வாக்கில் சீவி பொன்னிறமாக வதக்கவும்

.வதங்கி வரும்போது தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி

அதனுடன் சேர்த்து வதக்கவும் .

தக்காளி வதங்கியதும் இஞ்சி, பூண்டு இரண்டையும்

நன்றாக இடித்து இதனுடன் சேர்த்துவதக்கவும்

.பின் மிளகாயப்பொடி உப்பு போட்டு கிளறவும் .

இதனுடன் ஒரு தம்ளர்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் .

நன்றாக கொதித்து வரும்போது அவித்த முட்டையை நாலாக கீறி

{துண்டாகாதபடி } இதனுடன் சேர்த்து கிளறி மூடிவிடவும் .

அடிக்கடி மெதுவாக கிளறி விடவேண்டும்

.தண்ணீர் வற்றியதும இறக்கி பரிமாறுங்கள் .முட்டை குருமாதேவையான பொருட்கள் :முட்டை 6

வெங்காயம் 6

பால் 1/4 கோப்பை

முந்திரி 2 மேஜைக்கரண்டி

பச்சை மிளகாய் 8

தேங்காய் துறுவல் 1 மேஜைக்கரண்டி

தனியா தூள் 3 மேஜைக்கரண்டி

லவங்கம் 6

பட்டை 1

ஏலக்காய் 2

இஞ்சி 1 துண்டு

மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி

நெய் 3 மேஜைக்கரண்டி

உப்பு தேவையான அளவு
செய்முறை :.பச்சை மிளகாய், தேங்காய், தனியா தூள், ஏலக்காய், பட்டை, லவங்கம்,

இஞ்சி, மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

முட்டையின் வெள்ளைக் கருவை பிரித்தெடுத்து

 நன்றாக அடித்துக் கொள்ளவும்.

அத்துடன் மஞ்சள் கரு, பால் மற்றும் உப்பு சேர்க்கவும்.

.இந்தக் கலவையை மேலும் 10 நிமிடத்திற்கு நன்றாக அடித்துக்கொள்ளவும்

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கலவை இருக்கும்

பாத்திரத்தை வைத்து கொதிக்கவிடவும்.

 முட்டை நன்றாக வெந்தவுடன் அதை சதுங்களாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியை சூடாக்கி நெய் சேர்க்கவும்,

சூடான பிறகு நறுக்கிய முந்திரியை பொன்நிறமாக வறுக்கவும்.

.இத்துடன் நறுக்கிய வெங்காயம், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து

 நெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும்.

 அரை கோப்பை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

வெட்டி வைத்த முட்டை துண்டுகளை அதில் சேர்த்து

குருமா தேவையான அளவு கெட்டியாகும் வரை சமைக்கவும்.

கொத்துமல்லி தழைகள் தூவி அலங்கரித்து சூடாக பறிமாறவும்.
அரிசிமாவு   முட்டை அடைதேவையானப் பொருட்கள்:

1/2 கிலோ பச்சரிசி

1 தேங்காய்

2 முட்டை

3 ஸ்பூன் மிளகு

1 கொத்து கொத்தமல்லி

1 சிட்டிகை மஞ்சள் தூள்

150 மில்லி எண்ணெய்

தேவையான அளவு உப்பு
செய்முறை:அரிசியை கழுவி, உலர்த்தி எடுத்து, ரவை பதத்தில் அரைத்து

வை‌த்து‌க்கொள்ள வேண்டும்.

பிறகு அதை ஒரு வாணலியில்  லேசான தீயில் வைத்து

வறுத்துக் கொள்ளவேண்டும்.

தேங்காயை‌த் துருவி பால் பிழிந்துக் கொள்ள வேண்டும்.

மிளகை கொரகொரப்பாக பொடி செய்து கொள்ள வேண்டும்.

கொத்தமல்லியை பொடிசாக அரிந்து கொள்ள வேண்டும்.

மிளகுப் பொடி, கொத்தமல்லி இரண்டையும் மாவில் கொட்டி

அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும்.

முட்டையை நன்றாக கலக்கி மாவில் ஊற்றி,கலக்கவும்.

தேங்காய் பாலையும் ஊற்றி நன்றாக கலந்து

2 மணி நேரம் ஊற விட வேண்டும்.

பிறகு ஒரு தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடை ஊற்றுவது போல்

மாவை ஊற்றி 2 பக்கமும் பொன்முறுகலாக சுட்டு எடுக்க வேண்டும்.எக் stew – சைனீஸ் ஸ்டைல்தேவையான பொருட்கள்
முட்டை - 1

உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

ஸ்பிரிங் ஆனியன் - 2சாஸ் செய்ய


கார்ன் ஃப்ளார் - 1/2 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 3 பல்

எண்ணெய் - 1/4 டீஸ்பூன்

வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் பொடி - 1/4 டீஸ்பூன்

சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 1

சீனி, உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

ஸ்பிரிங் ஆனியன் - 2செய்முறைஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கவும்.

முட்டையை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் உப்பு, மிளகுத்தூள்,

ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து ஆம்லெட் போட்டுக் கொள்ளவும்.

அந்த ஆம்லெட்டை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பூண்டு, கொத்தமல்லி, ஸ்பிரிங் ஆனியன் முதலியவற்றை பொடியாக

நறுக்கிக் கொள்ளவும்.

சாஸ் செய்ய ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி,

பூண்டு, உடைத்த சிவப்பு மிளகாய், ஸ்பிரிங் ஆனியன்,

 கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

சாஸ்களை, மிளகாய் பொடி, மிளகுத்தூள், சீனி, உப்பு போட்டு

 நன்கு கொதிக்க விட வேண்டும்.

பிறகு அடுப்பைக் குறைத்து கார்ன் ஃப்ளாரை சிறிது நீரில் கட்டிகள்

இல்லாமல் கரைத்து ஊற்றி தொடர்ந்து கிளறவும்.

கிரேவி கெட்டியானதும் ஆம்லெட் துண்டுகளை போட்டு கொத்தமல்லி,

ஸ்பிரிங் ஆனியன் தூவி நூடுல்ஸீடன் பரிமாறவும்.

எக்  டொமேட்டோ கிரேவி


தேவையான பொருட்கள்முட்டை - 6

தக்காளி - 3

பெரிய வெங்காயம் - 1

புதினா இலை - 1/2 கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் - 4

மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்

தனிமிளகாய் பொடி - 2 டீஸ்பூன்

தேங்காய்ப்பால் - 1 கப்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க - சோம்பு, மிளகுசெய்முறை

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.

முட்டையை வேக வைத்து தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்து

அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, சோம்பு, மிளகு போட்டு தாளித்து

பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்

 போட்டு வதக்கவும்.

 மிளகாய் பொடி, மஞ்சள் பொடி போட்டு வதக்கி

பின் அரைத்து வைத்துள்ள தக்காளி ஜீஸை ஊற்றவும்.

தக்காளி ஜீஸ் நன்கு கொதித்து பச்சை வாசனை போனவுடன்

உப்பு, புதினா இலைகளை சேர்க்கவும்.

  தேங்காய்ப்   பால் ஊற்றி கொதிக்க விடவும்.

கடைசியாக நறுக்கி வைத்துள்ள முட்டைகளை போட்டு

மஞ்சள் கரு வெளியே வந்து விடாமல் மூன்று நிமி கொதிக்க விடவும்.


 

முட்டை குழம்புதேவையான பொருட்கள்:


முட்டை 4,

வெங்காயம் 1

மிளகாய் தூள் 1/2 ,ts

 மஞ்சள் தூள் 1/2 ,ts


, தக்காளி 1,

உப்பு, -தேவையான அளவு

கடுகு- 1/4 ts

சீரகம்.-1/2 ts


எண்ணெயில் வறுத்து அரைக்க:
 
மல்லி 2 ts
 
மிளகாய் வற்றல் 3,
 
 பூண்டு 2 பல்,

இஞ்சி 1/2 இன்ச்,

மிளகு 1 ts
,
 சீரகம் 1 ts,

 தேங்காய் துருவல் 4 ts,

 அரிசி 1/2 ts,

கறிவேப்பிலை சிறிது.செய்முறை:

முட்டைகளை வேக வைத்து இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

தேங்காய் தவிர மற்ற வறுக்க வேண்டிய பொருட்களை

1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்க வேண்டும்.

ஆற வைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து,

வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.

 வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி குழைய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள்,

மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து

 நன்றாக கொதிக்க விட வேண்டும்.

கெட்டியானதும் இறக்கவும்.

மல்லித்தழை போடவும்.


நன்றி- சில இணய தளங்கள்

வெள்ளி, மே 20, 2011

பூண்டு -- சமையல்

பூண்டு குழம்பு

தேவையான பொருள்கள்:

பூண்டு - மூன்று முழுதாக
கடுகு - கொஞ்சம்
சிறிய வெங்காயம் - இரண்டு கப்
தக்காளி - நான்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன
தனியா தூள் - இரண்டு டீஸ்பூன
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெந்தயம் - சிறிதளவு
புளி - எலுமிச்சை அளவு

செய்முறை:

எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் வெந்தயம்,
வெங்காயம்,பூண்டு முழுதாக சேர்த்து  வதக்கி
 பின் பொடியாக நறுக்கிய   தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து உப்பு, கொத்தமல்லி,
கறிவேப்பிலை அனைத்தும் போட்டு நன்கு வதக்கவும்

பிறகு   கெட்டியான   புளி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பாக அரை டீஸ்பூன் மிளகு தூள் போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.


பூண்டுகுழம்பு -மற்றொரு முறை


தேவையான பொருட்கள் :
புளி- ஒரு எலுமிச்சை அளவு
பூண்டு -இரண்டு
சின்ன வெங்காயம்- 6
தக்காளி- ஒன்று
தனியா- இரண்டு மேசைக்கரண்டி
மிளகாய்- பத்து
மிளகு-அரைத்தேக்கரண்டி
சீரகம்-அரைத்தேக்கரண்டி
சோம்பு-அரைத்தேக்கரண்டி
வெந்தயம்- அரைத்தேக்கரண்டி
மஞ்சத்துள் -ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஒரு கொத்து
பெருங்காயம்-அரைத்தேக்கரண்டி
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி


தனியா,மிளகாய்,மிளகு சீரகம், உரித்த பூண்டு ஆறு பற்கள் ஆகியவற் றை சிவக்க வறுத்து அரைத்து வைக்கவும்
புளியையும் தக்காளியையும் கரைத்து வைக்கவும்.
பூண்டு வெங்காயத்தை உரித்து
வெங்காயத்தை மட்டும் பொடியாக நறுக்கி வைக்கவும்.  
கடாயில் எண் ணெயை காயவைத்து அதில் கடுகு, சோம்பு கறீவேப்பிலையைப் போட்டு பொரியவிடவும்.
பின்பு வெங்காயத்தைப் போடவும்.
வெங்காயம் சிவந்ததும் அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும்.
பின்பு உரித்த பூண்டை போடவும்.
அதன் பிறகு புளிக்கரைசலை ஊற்றீ உப்பைப் போட்டு கொதிக்கவிடவும்
குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் மிதந்தவுடன் இறக்கி விடவும்.


பூண்டுகுழம்பு -மற்றொரு முறை


தேவையான பொருட்கள்

பூண்டு - 2 முழு பூண்டு
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - 2 அரை நெல்லிக்காய் அளவு
உப்பு - 11/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்சாம்பார்  மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு,
சீரகம்,
வெந்தயம்,
பெருங்காய பொடி,
கறிவேப்பிலை.

செய்முறை
பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 spoon எண்ணெய் ஊற்றி தாளிப்பு பொருட்களை போட்டு தாளிக்கவும்.
அதன் பிறகு பூண்டு,வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி,அதில் பாதியை எடுத்து அரைத்து கொள்ளவும்.
அதன் பிறகு புளி தண்ணிரை ஊற்றி கொதிக்க விடவும்.
 உப்பு ,மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் அனைத்தும் போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
10 நிமிடம் கழித்து தீயை குறைத்து வைத்து 3 spoon நல்லெண்ணெய் விட்டு நிறுத்தவும்.


பூண்டுகுழம்பு -மற்றொரு முறைதேவையானப் பொருட்கள்:


தக்காளி – 3

புளி – நெல்லிக்காய் அளவு

பூண்டு பல் – 20 அல்லது 25

சாம்பார் வெங்காயம் – 10 அல்லது 15

சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

நல்லெண்ணை – 2 டேபிள்ஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


செய்முறை:

புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி, புளித்தண்ணீரை தனியாக வைத்துக் கொள்ளவும்.

நான்கு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் தக்காளியைப் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு, இறக்கி வைக்கவும்.
ஆறியபின், வெந்த தக்காளியை எடுத்து தோலை உரித்து கரண்டியால் நன்றாக மசித்துக் கொள்ளவும். அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு கடுகு சேர்க்கவும்.
கடுகு வெடித்தவுடன், சீரகம், வெந்தயம், பெருங்காயம் சேர்க்கவும்.
 வெந்தயம் லேசாக சிவந்தவுடன், பூண்டை சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் சாம்பார் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு, கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும்.
அதில் புளித்தண்ணீர், தக்காளி விழுது, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளறி விடவும். குழம்பை மூடி கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும், அடுப்பை தணித்து, சிறு தீயில் வைத்து, குழம்பு சற்று கெட்டியானதும், இறக்கி வைக்கவும்.


செட்டிநாட்டு பூண்டு குழம்பு


தேவையானவை : 1

பூண்டு - 12 பல்

சின்னவெங்காயம் - 20

தக்காளி - 1 பெரியது

கரிவேப்பிலை - கொஞ்சம்

புளி - 1 எலுமிச்சியளவு

மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூண்

பெருங்காயம் - 1/4 டீஸ்பூண்

மிளகாய்பொடி - 1 டீஸ்பூண்

உழுந்து - 1 டீஸ்பூண்

கடுகு - 1 டீஸ்பூண்

தேங்காய்பால் - 2 டேபில் ஸ்பூண்

எண்ணெய் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு


தேவையானவை 2

மல்லி - 2 டேபிள்ஸ்பூண்

ஜீரகம் - 1 டீஸ்பூண்

கசகசா(வெள்ளை) - 1 டீஸ்பூண்

மிளகு - 1/4 டீஸ்பூண்

காய்ந்தமிளகாய் - 3

இஞ்சி - 1 துண்டு

எண்ணெய் - 1 டீஸ்பூண்

அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூண் எண்ணெய் ஊற்றி
தேவையானவை 2 ல் உள்ளவற்றை தனி தனியாக வறுத்து
 அதை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்து வைக்கவும்.

சின்ன வெங்காயம், பூண்டு(நீளவாக்கில்), தக்காளி நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூண் எண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்து, கரிவேப்பிலை போட்டு தாளிக்கவும் .

பின்னர் பூண்டு போட்டு சிறிது வதக்கி வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,காயம் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்னர் பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் புளி, உப்பு சேர்த்து வதக்கவும்
.தேங்காய் பால் சேர்த்து 1 கப் தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்து வற்றி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.


பூண்டுகுழம்பு -மற்றொரு முறை


 பூண்டு - 15 பல்


 வெங்காயம் - 1 (அ) சின்ன வெங்காயம் - 10

 தக்காளி - 2

 புளி தண்ணீர்

தேங்காய் பால் - 1 கப்

 கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க

 எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

 கறிவேப்பிலை, கொத்தமல்லி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

 மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

 மல்லி தூள் - 1 தேக்கரண்டி

 உப்பு

வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் நறுக்கவும்.
 எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

பூண்டு சிவக்க வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் தூள்கள், உப்பு சேர்த்து பிரட்டி தண்ணீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
பின் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
இதில் புளி தண்ணீர் விட்டு கெட்டியாக கொதித்ததும் எடுக்கவும்.

தேங்காய் பாலுக்கு பதிலாக தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம்.


பூண்டுகுழம்பு -மற்றொரு முறை

வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 25 பல் (தோல் நீக்கி நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
புளித்தண்ணீர் - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 அல்லது 1 1/2டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - சிறிது
தேங்காய் - 1 டீஸ்பூன்
(நன்கு வறுத்து அரைக்கவும்)

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருள்களை போட்டு, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி,
 தக்காளியும் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும், புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
அரைத்த விழுதை சேர்த்து, சிறிது நீர் சேர்த்து ,
 நன்கு கொதிக்க விட்டு எடுக்கவும்.

சாதம், உப்பு பருப்பு, பூண்டு குழம்போட நல்லா இருக்கும்.
செஞ்சு 2 நாள் கழிச்சு சாப்பிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
கத்தரிக்காய் அல்லது கோவைக்காய் சேர்த்தும் செய்யலாம்.


வியாழன், மே 19, 2011

கூந்தல் பராமரிப்பு

 முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். இதோ சில டிப்ஸ்…


வெந்தயம்:
கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது மட்டுப்படும்.


எள்ளுச்செடி:
எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளிப்பதற்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தலில் விரைவிலேயே நரை ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.


ஆலிவ் ஆயில்:
ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முறையாக மசாஜ் செய்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வு மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
இது பொடுகை நீக்கும் இயற்கையான தீர்வாகவும் அமைகிறது. ஆலிவ் ஆயிலுடன் சம அளவு பாதாம் எண்ணெய் அல்லது ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றை கலந்தும் பயன்படுத்தலாம். இதுவும் கூந்தல் பராமரிப்பிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

பசும்பால்
புதிதாக காய்ச்சப் பட்ட பசும்பாலால் தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும். பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, நாளடைவில் கூந்தல் உதிர்தல் குறைந்து விடும். இதேபோல் பிரஷ் கிரீம் அல்லது வெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

பூண்டு:

கூந்தல் உதிர்தல் பிரச்னைக்கு பூண்டு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பூண்டு ஆயில் மற்றும் பூண்டு சாறு ஆகியவற்றால் தலையில் நன்கு மசாஜ் செய்து வந்தால் கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கும். உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது கூந்தல் வளர்ச்சிக்கு துணை புரியும்.

சீரகம்:

சீரகத்தை நன்கு கறுப்பாகும் வரை வறுத்து பொடி செய்து பின் அதை ஆலிவ் ஆயிலுடன் கலந்து வைக்கவும். இந்த எண்ணெயை, தலையில் தேய்க்கும் முன் நன்கு கலக்கி விட்டு தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
பின்னர் சிறிது நேரம் நன்றாக ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நாளடைவில் குறையும்.

தேங்காய் பால்:

தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துவந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து அதை தண்ணீரில் கலந்து, மிதமாக சூடுபடுத்தி தலையில் தேய்க்க வேண்டும்.  [ 30  நி  ]  சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.


செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதுயம் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், தலை “ஜில்’ லென்றிருக்கும். தலை முடி “புசுபுசு’வென அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தல், ஆறடி கூந்தலாகி விடும்

அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

ஐந்தாறு நெல்லிக்காய்களை கொட்டை நீக்கி எடுத்து கொள்ளவும். அதை எலுமிச்சம் பழம் சாறு விட்டு, அம்மியில் வைத்து மை போல் நன்றாக அரைக்கவும்.
இதை தலையில் தேய்த்து குளிக்கவும். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை செய்துவந்தால், முடி உதிர்வது நின்றுவிடும்.
இளநரை இருந்தாலும் வெகு விரைவில் மறைய

 ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு குறையும்.


ஒரு கை அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும்.அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால்  பொடுகு  வராமல் தடுக்கலாம்  .

வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .

சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .

வெந்தயம் ,வேப்பிலை,கறிவேப்பிலை ,பாசிபருப்பு ,ஆவாரம்பூ இவை  எல்லாவற்றையும்  வெயில் காயவைத்து  மிஷினில் கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு   பதிலாக  வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலச.. பளபளக்கும் உங்கள் கூந்தல்

ஹேர் டிரையர்  அடிக்கடி  உபயோகித்தால் தலை வறண்டு,முடியின் வேர்கள் பழுதடைந்து விடும் .

அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .

ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்

.தலை குளித்த பின்பு ஒரு கப் சுடுதண்ணியில் 1/2  கப் வினிகரை கலந்து  தலையை அலசவும் அப்படியே  துண்டால் தலையை கட்டி கொள்ளவும் .15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும் பின்பு தலையை பேன்  சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்து விடும் .இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் பேன் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம் .

முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து  தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால்   பளபளக்கும் உங்கள்  கூந்தல்

.முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன்,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்

.இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது .அது முற்றிலும் தவறு .தலைக்கு  தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .
அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.எண்ணெய் குளியல் மிகவும் அவசியம்

.சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு  இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில்  காயவைத்து தலையில் தடவி  சீயக்காய்  தேய்த்து  குளித்து வந்தால் உடல் சூடு  தணியும் . முடி உதிர்வதையும்  தடுக்கலாம் .

கறிவேப்பிலை மற்றும் மருதாணி இரண்டையும்  அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம் .


உலர்ந்த ஆரஞ்சு தோல் - 50  கிராம்,
 வெந்தயம் -50  கிராம்,
 பிஞ்சு கடுக்காய் - 10 கிராம்,
 வால் மிளகு - 10 கிராம்,
பச்சை பயறு - கால் கிலோ...
எல்லாவற்றையும் கலந்து நன்கு காய வைத்து பின் அரைத்துக் கொள்ள வேண்டும்.
 இதை வாரம் இரு முறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளித்து வந்தால்   பொடுகு,புண்,அரிப்பு  போவதுடன் தலையும் சுத்தமாகும்.மேலும் கூந்தல் வாசனையாகவும்,  பளபளப்பாகவும் மாறும்.

செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க, தலை முடி மூலிகை குளியல் போல மிகவும்  வாசனையுடன் இருக்கும். இதை போட்டு குளித்த பிறகு எண்ணெய், சீயக்காய் எதுவும் தேவையில்லை. கூந்தலும் சுத்தமாகிவிடும். இளம்  நரைக்கு-
அரை கிலோ நல்லெண்ணையைக் காய்ச்சி இறக்கி வைத்து, அதில் இரண்டு அல்லது மூன்று கைப்பிடி பச்சை கருவேப்பிலையைப் போட்டு மூடிவைக்கவும்.
மறுநாள் இந்த எண்ணையை மிதமாகக் சூடு பண்ணி தலைக்குத் தேய்த்து
சில நிமிடங்கள் கழித்து சீகைக்காய் தேய்த்து அலசவும்.
வாரம் இரண்டு முறை குளித்தால் நல்ல மாற்றம் தெரியும்.

ஒரு கைப்பிடி கருவேப்பிலை அரைத்து ,அதில் மூன்று டீஸ்பூன் வெந்தயப் பொடி கலந்து தலைக்கு பேக் போட்டுக் காய்ந்ததும் அலசவும்.
வாரம் ஒரு முறை செய்தாலே கூந்தல் கருமையாகும்.


மருதாணி இலை--- ஒரு கைப்பிடி
கருவேப்பிலை ----- ஒரு கைப்பிடி
செம்பருத்தி இலை ---- ஒரு கைப்பிடி
கொட்டை நீக்கிய பூந்திக் கொட்டை -- 4
இவற்றை முதல் நாளே ஊற வைக்கவும். 
அடுத்த நால் அரைத்து பேக் போல் போட்டு நன்கு தேய்த்து பின் அலசவும்.
வாரம் ஒரு முறை செய்தாலே கூந்தல் சுத்தமாகி வாசனையுடன் இருக்கும்.


பிசுபிசுப்பு நீங்க-
கருவேப்பிலை, கொட்டை நீக்கிய நெல்லிக் காய், செம்பருத்திப்பூ சம அளவில் எடுத்து கொஞ்சம் நீர் சேர்த்து அரைக்கவும்
அதனுடன் வடித்த கஞ்சி சேர்த்து தலையில் நன்கு தேய்த்து அலசவும்.சோற்றுக் கற்றாழை ஜெல் உடன் சம அளவு கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.
இந்த பேக்கை போட்டு கால் மணி நேரம் ஊறி பின் அலசவும்.
வாரம் ஒரு முறை செய்தாலே தலை குளிர்ச்சி ஆவதுடன் முடியும் நன்கு வளரும்.

சுருள்ப் பட்டை --- 10கி
பிஞ்சுக் கடுக்காய் ----10கி
வெந்தயம் ------------10கி
கருவேப்பிலை -------10கி
செம்பருத்திப்பூ -----10கி
ரோஜா மொக்கு -----10கி
இவற்றை ஒன்றிண்டாகத் தட்டவும்.
இதை அரைக்கிலோ தேங்காய் எண்ணையில் போட்டு பத்து நாட்கள் வெயிலில் வைக்கவும்.
தினம் தடவவும்.


இளநரை நீங்க....

நான்கு ஸ்பூன் மருதாணி பொடி
2 ஸ்பூன் காபி அல்லது டீ டிகாக்ஷன்
ஒரு முட்டை
அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகிய அனைத்தையும் கலந்து தலையில் நன்றhகப் பரவும்படித் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பிறகு கூந்தலை அலசவும். இளநரை நீங்கும்

கூந்தல் வறட்சியைத் தடுக்க...

தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை லேசாக சூடு படுத்தி தலை முழுவதும் நன்றhக மசாஜ; செய்யவும்.
வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலை தலையில் பலமுறை ஒற்றி எடுக்கவும். பிறகு சுத்தமான சீயக்காய் அல்லது மூலிகை பவுடரால் கூந்தலை அலசவும்.முடி உதிர்வதைத் தடுக்க...

வாரம் ஒரு முறை ஹாட் ஆயில் மசாஜ; செய்யவும்.
சிறிதவு துவரம் பருப்பு
கசகசா
வெந்தயம்
கறிவேப்பிலை ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து முட்டையுடன் கலந்து தலையில் தடவிஇ சிறிது நேரம் ஊறி அலசவும்.

கூந்தல் பளபளக்க...

ஒரு கிண்ணத்தில் சிறிது பீர் ஊற்றி அதை 2 மணி நேரம் வெளியில் வைத்திருந்து எடுத்து. பிறகு கூந்தல் முழுவதும் தடவி அரை மணி நேரம் ஊறி அலசவும்.

முன்தலை வழுக்கையைத் தவிர்க்க...

தலை முடியை மேல் நோக்கி தூக்கி வாருவதைத் தவிர்க்கவும். இறுக்கமாகப் பின்னி கிளிப் அல்லது ஹேர் பேண்ட் போடக் கூடாது.
இரவு படுப்பதற்கு முன் தினமும் அரை ஸ்பூன் ஆலிவ் ஆயிலையும், அரை ஸ்பூன் விளக்கெண்ணெயையும் கலந்து முன் தலையில் நன்றhக மசாஜ; செய்துவிடவும். காலையில் கூந்தலை அலசலாம்.
அழுக்கோ, பொடுகோ சேராமல் பார்த்துக் கொள்ளவும்.

பேன் தொல்லை நீங்க...

வேப்பிலை, துளசி இரண்டையும் அரைத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து அலசவும்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இப்படிச் செய்தால்  பேன் தொல்லை நீங்கும் .

 பொடுகு நீங்க...

 வாரம் ஒரு முறை ஹாட் ஆயில் மசாஜ; செய்யவும்.
படுக்கை விரிப்பு, தலையணை உறை, சீப்பு போன்றவை சுத்தமாக இருக்க வேண்டும்.
தேங்காய் பாலில் எலுமிச்சம் பழம் பிழிந்து மண்டையில் படும்படி நன்றாகத் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.
வெள்ளை முள்ளங்கியில் சாறு எடுத்து தலையில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து அலசவும்.
வாரம் ஒரு முறை வீதம் பொடுகு போகும்வரை இதைத் தொடரவும்.

கூந்தல் நுனிகள் வெடித்திருந்தால்...

வெடித்த நுனிகளை டிரிம் செய்துகொள்ளவும்.
ஆறு மாதங்களுக்கு  மறுபடியும் மறுபடியும் டிரிம் செய்யவும்.
கூந்தலை போஷாக்குடன் வைத்திருக்கவும்.
ஷாம்பூ அதிகம் உபயோகிக்கக் கூடாது.
ஷாம்பூ குளியலுக்குப் பிறகு கண்டிஷனர் உபயோகிக்கவும்.
இரவு சிறிதளவு வெந்தயத்தை ஊறவைத்து, காலையில் அதை விழுதாக அரைத்து, தயிரில் சேர்த்து தலைமுடி முழுவதும் தடவி ஒரு மணி நேரம் கழித்து நன்றாக அலசவும். இது கூந்தலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு கண்களுக்கும், உடம்புக்கும் குளிர்ச்சி கொடுக்கும்.  

நல்ல சுத்தமான தேங்காய் எண்ணெய் தேவை..
கறிவேப்பிலை நிறைய வாங்கி அதை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடிக்கவும் . தண்ணீர் ஊற்ற கூடாது.
நெல்லிகாய் பொடி வாங்கவும்.  .
ஒரு அடிகனமான பாத்திரத்தில் (பெரிய பாத்திரம் வேண்டும்) தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்க்க வேண்டும்.
எண்ணெய் நன்கு காய்ந்த உடன் அதில் நெல்லிகாய் பொடி, கறிவேப்பிலை போட்டு நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு லிட்டர் எண்ணெய் முக்கால் லிட்டராக ஆகும் வரை கொதிக்க  விடவும். .
பின்பு அதை எடுத்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி தினமும் தேய்த்து வந்தால் நல்ல முடி வளரும், கருப்பாகவும் இருக்கும்.திங்கள், மே 16, 2011

பஞ்சாங்கம் பார்ப்பது

பஞ்சாங்கம் என்றால் என்ன?

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான
 
5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்.
 
அவையாவன :
(1) வாரம் (2) நட்சத்திரம் (3) திதி (4) யோகம் (5) கரணம்


(1) வாரம் : என்பது ஞாயிறு முதல் சனி வரையான கிழமைகள் 7 ஐக்
 
குறிக்கும்.

(2) நட்சத்திரம் : என்பது அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27
 
நட்சத்திரங்கள்.

(3) திதி : என்பது ஒரு வானியல் கணக்கீடாகும். அதாவது, வானில்
 
சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவாகும்.

(4) யோகம்: வானில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும்
 
செல்லுகிற மொத்த தொலைவாகும்.

(5) கரணம்: என்பது திதியில் பாதியாகும்.

பஞ்சாங்கத்தை பயன்படுத்துவது எப்படி?


உதாரணத்திற்கு பஞ்சாங்கத்தில் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டிருந்தால்,
 
அதனை எப்படி புரிந்து கொள்வது என பார்க்கலாம். 3 ஏப்ரல் 2011 அன்றைய
 
பஞ்சாங்க விவரத்தை வாசன் பஞ்சாங்கத்தில் இருந்து எடுத்து தருகிறோம்.
 
(நன்றி: வாசன் புக் ஹவுஸ்)
ஆங்கிலம்
தமிழ்
கிழ
திதி
(நா,வி)
நட்சத்திரம்
(நா,வி)
யோகம்
(நா,வி)
கரணம்
(நா,வி)
ஏப் 3
பங் 20
ஞா
அமா
34 44
உத்ரட்டாதி
20 33
பிராம்யம்
8 32
சதுஷ்பாதம்
1 40
 
முதல் நிரலில் ( first column) வருவது ஆங்கில தேதி,
 
2 வது நிரலில் வருவது அதற்கு இணையான தமிழ் தேதி,
 
3 வது நிரலில் வருவது அன்றைய கிழமை (ஞாயிறு),
 
4 வது நிரலில் வருவது அன்றைய திதி அமாவாசை (அன்றைய சூரிய
 
உதயத்தில் இருந்து எவ்வளவு நாழிகை இருக்கும்),
 
அடுத்து வருவது நட்சத்திரம், யோகம், கரணம் போன்றவைகளும்
 
அன்றைய சூரிய உதயத்தில் இருந்து எவ்வளவு நாழிகை இருக்கும் என்ற
 
விவரங்களை நமக்கு மிகவும் எளிமையாகத் தருகிறது.
 
அன்றைய தினத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாழிகைக்கு பிறகு அடுத்தது
 
தொடங்கும் என்று பொருள்.
 
அதாவது, நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டால், உத்திரட்டாதி 34-44
 
நாழிகைக்கு பிறகு, அடுத்த நட்சத்திரமான ரேவதி தொடங்கும்
 
பொருள்.
 
இப்படியே திதி, யோகம், கரணம் போன்றவைகளையும் கண்டு கொள்ள
 
வேண்டும்.

இடத்தை மிச்சப் படுத்துவதற்காக சுருக்கமாக

கொடுத்திருப்பார்கள்அஸ்வினி என்பதற்கு பதில் அஸ் என்று

கொடுத்திருப்பார்கள்.

அமாவாசை என்பதற்கு பதிலாக அமா என்றும் கொடுத்திருப்பார்கள்.

இதன் விரிவை புதியவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, பஞ்சாங்கத்தில்

ஏதேனும் ஒரு பக்கத்தில் கொடுத்து இருப்பார்கள்.

 வாசன் பஞ்சாங்கத்தில், 79ஆம் பக்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள்.
முக்கியக் குறிப்புகள் :

(அ) ஜோதிட ரீதியாக ஒரு நாளின் தொடக்கம் என்பது அன்றைய

தினத்தின் சூரிய உதய நேரமேயாகும்.
(ஆ) பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் யாவும்

அன்றைய சூரிய உதய நேரத்தில் இருக்கும் ஆகாயக் காட்சியாகும்.
(இ) பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கால அளவு (நாழிகை, வினாடி

அல்லது மணி, நிமிஷம்) அன்றைய சூரிய உதயத்திலிருந்து

கணக்கிடப்படுகிறது.

(ஈ) மிக முக்கிய குறிப்பு என்னவெனில், மணி, நிமிஷம் என்பது

நள்ளிரவு 00.00 வில் தொடங்குகிறது.

ஆனால், நாழிகைகள் அன்றைய காலை சூரிய உதயத்தில்தான்

தொடங்குகிறது. சூரிய உதயம் ஆண்டு முழுமைக்கும், எல்லா

நாட்களுக்கும் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும்.
பெரும்பாலான பஞ்சாங்கங்கள் மணி, நிமிஷ அளவுகளிலேயே,

இப்பொழுது கிடைக்கிறது. 

1 நாழிகை = 24 நிமிஷங்கள் ஆகும்.

நட்சத்திரங்களை ஆளும் கிரகங்கள்-


நட்சத்திரங்கள்
ஆளும் கிரகம்
அசுவினி
மகம்
மூலம்
கேது
பரணி
பூரம்
பூராடம்
சுக்கிரன்
கார்த்திகை
உத்திரம்
உத்திராடம்
சூரியன்
ரோகிணி
அஸ்தம்
திருவோணம்
சந்திரன்
மிருகசீரிடம்
சித்திரை
அவிட்டம்
செவ்வாய்
திருவாதிரை
சுவாதி
சதயம்
இராகு
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
குரு
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
சனி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
புதன்

நன்றி- தமிழ் ஜாதகம்