வியாழன், மே 19, 2011

கூந்தல் பராமரிப்பு

 முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். இதோ சில டிப்ஸ்…


வெந்தயம்:
கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது மட்டுப்படும்.


எள்ளுச்செடி:
எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளிப்பதற்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தலில் விரைவிலேயே நரை ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.


ஆலிவ் ஆயில்:
ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முறையாக மசாஜ் செய்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வு மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
இது பொடுகை நீக்கும் இயற்கையான தீர்வாகவும் அமைகிறது. ஆலிவ் ஆயிலுடன் சம அளவு பாதாம் எண்ணெய் அல்லது ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றை கலந்தும் பயன்படுத்தலாம். இதுவும் கூந்தல் பராமரிப்பிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

பசும்பால்
புதிதாக காய்ச்சப் பட்ட பசும்பாலால் தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும். பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, நாளடைவில் கூந்தல் உதிர்தல் குறைந்து விடும். இதேபோல் பிரஷ் கிரீம் அல்லது வெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

பூண்டு:

கூந்தல் உதிர்தல் பிரச்னைக்கு பூண்டு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பூண்டு ஆயில் மற்றும் பூண்டு சாறு ஆகியவற்றால் தலையில் நன்கு மசாஜ் செய்து வந்தால் கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கும். உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது கூந்தல் வளர்ச்சிக்கு துணை புரியும்.

சீரகம்:

சீரகத்தை நன்கு கறுப்பாகும் வரை வறுத்து பொடி செய்து பின் அதை ஆலிவ் ஆயிலுடன் கலந்து வைக்கவும். இந்த எண்ணெயை, தலையில் தேய்க்கும் முன் நன்கு கலக்கி விட்டு தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
பின்னர் சிறிது நேரம் நன்றாக ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நாளடைவில் குறையும்.

தேங்காய் பால்:

தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துவந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து அதை தண்ணீரில் கலந்து, மிதமாக சூடுபடுத்தி தலையில் தேய்க்க வேண்டும்.  [ 30  நி  ]  சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.


செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதுயம் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், தலை “ஜில்’ லென்றிருக்கும். தலை முடி “புசுபுசு’வென அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தல், ஆறடி கூந்தலாகி விடும்

அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

ஐந்தாறு நெல்லிக்காய்களை கொட்டை நீக்கி எடுத்து கொள்ளவும். அதை எலுமிச்சம் பழம் சாறு விட்டு, அம்மியில் வைத்து மை போல் நன்றாக அரைக்கவும்.
இதை தலையில் தேய்த்து குளிக்கவும். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை செய்துவந்தால், முடி உதிர்வது நின்றுவிடும்.
இளநரை இருந்தாலும் வெகு விரைவில் மறைய

 ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு குறையும்.


ஒரு கை அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும்.அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால்  பொடுகு  வராமல் தடுக்கலாம்  .

வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .

சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .

வெந்தயம் ,வேப்பிலை,கறிவேப்பிலை ,பாசிபருப்பு ,ஆவாரம்பூ இவை  எல்லாவற்றையும்  வெயில் காயவைத்து  மிஷினில் கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு   பதிலாக  வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலச.. பளபளக்கும் உங்கள் கூந்தல்

ஹேர் டிரையர்  அடிக்கடி  உபயோகித்தால் தலை வறண்டு,முடியின் வேர்கள் பழுதடைந்து விடும் .

அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .

ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்

.தலை குளித்த பின்பு ஒரு கப் சுடுதண்ணியில் 1/2  கப் வினிகரை கலந்து  தலையை அலசவும் அப்படியே  துண்டால் தலையை கட்டி கொள்ளவும் .15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும் பின்பு தலையை பேன்  சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்து விடும் .இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் பேன் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம் .

முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து  தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால்   பளபளக்கும் உங்கள்  கூந்தல்

.முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன்,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்

.இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது .அது முற்றிலும் தவறு .தலைக்கு  தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .
அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.எண்ணெய் குளியல் மிகவும் அவசியம்

.சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு  இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில்  காயவைத்து தலையில் தடவி  சீயக்காய்  தேய்த்து  குளித்து வந்தால் உடல் சூடு  தணியும் . முடி உதிர்வதையும்  தடுக்கலாம் .

கறிவேப்பிலை மற்றும் மருதாணி இரண்டையும்  அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம் .


உலர்ந்த ஆரஞ்சு தோல் - 50  கிராம்,
 வெந்தயம் -50  கிராம்,
 பிஞ்சு கடுக்காய் - 10 கிராம்,
 வால் மிளகு - 10 கிராம்,
பச்சை பயறு - கால் கிலோ...
எல்லாவற்றையும் கலந்து நன்கு காய வைத்து பின் அரைத்துக் கொள்ள வேண்டும்.
 இதை வாரம் இரு முறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளித்து வந்தால்   பொடுகு,புண்,அரிப்பு  போவதுடன் தலையும் சுத்தமாகும்.மேலும் கூந்தல் வாசனையாகவும்,  பளபளப்பாகவும் மாறும்.

செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க, தலை முடி மூலிகை குளியல் போல மிகவும்  வாசனையுடன் இருக்கும். இதை போட்டு குளித்த பிறகு எண்ணெய், சீயக்காய் எதுவும் தேவையில்லை. கூந்தலும் சுத்தமாகிவிடும். இளம்  நரைக்கு-
அரை கிலோ நல்லெண்ணையைக் காய்ச்சி இறக்கி வைத்து, அதில் இரண்டு அல்லது மூன்று கைப்பிடி பச்சை கருவேப்பிலையைப் போட்டு மூடிவைக்கவும்.
மறுநாள் இந்த எண்ணையை மிதமாகக் சூடு பண்ணி தலைக்குத் தேய்த்து
சில நிமிடங்கள் கழித்து சீகைக்காய் தேய்த்து அலசவும்.
வாரம் இரண்டு முறை குளித்தால் நல்ல மாற்றம் தெரியும்.

ஒரு கைப்பிடி கருவேப்பிலை அரைத்து ,அதில் மூன்று டீஸ்பூன் வெந்தயப் பொடி கலந்து தலைக்கு பேக் போட்டுக் காய்ந்ததும் அலசவும்.
வாரம் ஒரு முறை செய்தாலே கூந்தல் கருமையாகும்.


மருதாணி இலை--- ஒரு கைப்பிடி
கருவேப்பிலை ----- ஒரு கைப்பிடி
செம்பருத்தி இலை ---- ஒரு கைப்பிடி
கொட்டை நீக்கிய பூந்திக் கொட்டை -- 4
இவற்றை முதல் நாளே ஊற வைக்கவும். 
அடுத்த நால் அரைத்து பேக் போல் போட்டு நன்கு தேய்த்து பின் அலசவும்.
வாரம் ஒரு முறை செய்தாலே கூந்தல் சுத்தமாகி வாசனையுடன் இருக்கும்.


பிசுபிசுப்பு நீங்க-
கருவேப்பிலை, கொட்டை நீக்கிய நெல்லிக் காய், செம்பருத்திப்பூ சம அளவில் எடுத்து கொஞ்சம் நீர் சேர்த்து அரைக்கவும்
அதனுடன் வடித்த கஞ்சி சேர்த்து தலையில் நன்கு தேய்த்து அலசவும்.சோற்றுக் கற்றாழை ஜெல் உடன் சம அளவு கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.
இந்த பேக்கை போட்டு கால் மணி நேரம் ஊறி பின் அலசவும்.
வாரம் ஒரு முறை செய்தாலே தலை குளிர்ச்சி ஆவதுடன் முடியும் நன்கு வளரும்.

சுருள்ப் பட்டை --- 10கி
பிஞ்சுக் கடுக்காய் ----10கி
வெந்தயம் ------------10கி
கருவேப்பிலை -------10கி
செம்பருத்திப்பூ -----10கி
ரோஜா மொக்கு -----10கி
இவற்றை ஒன்றிண்டாகத் தட்டவும்.
இதை அரைக்கிலோ தேங்காய் எண்ணையில் போட்டு பத்து நாட்கள் வெயிலில் வைக்கவும்.
தினம் தடவவும்.


இளநரை நீங்க....

நான்கு ஸ்பூன் மருதாணி பொடி
2 ஸ்பூன் காபி அல்லது டீ டிகாக்ஷன்
ஒரு முட்டை
அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகிய அனைத்தையும் கலந்து தலையில் நன்றhகப் பரவும்படித் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பிறகு கூந்தலை அலசவும். இளநரை நீங்கும்

கூந்தல் வறட்சியைத் தடுக்க...

தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை லேசாக சூடு படுத்தி தலை முழுவதும் நன்றhக மசாஜ; செய்யவும்.
வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலை தலையில் பலமுறை ஒற்றி எடுக்கவும். பிறகு சுத்தமான சீயக்காய் அல்லது மூலிகை பவுடரால் கூந்தலை அலசவும்.முடி உதிர்வதைத் தடுக்க...

வாரம் ஒரு முறை ஹாட் ஆயில் மசாஜ; செய்யவும்.
சிறிதவு துவரம் பருப்பு
கசகசா
வெந்தயம்
கறிவேப்பிலை ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து முட்டையுடன் கலந்து தலையில் தடவிஇ சிறிது நேரம் ஊறி அலசவும்.

கூந்தல் பளபளக்க...

ஒரு கிண்ணத்தில் சிறிது பீர் ஊற்றி அதை 2 மணி நேரம் வெளியில் வைத்திருந்து எடுத்து. பிறகு கூந்தல் முழுவதும் தடவி அரை மணி நேரம் ஊறி அலசவும்.

முன்தலை வழுக்கையைத் தவிர்க்க...

தலை முடியை மேல் நோக்கி தூக்கி வாருவதைத் தவிர்க்கவும். இறுக்கமாகப் பின்னி கிளிப் அல்லது ஹேர் பேண்ட் போடக் கூடாது.
இரவு படுப்பதற்கு முன் தினமும் அரை ஸ்பூன் ஆலிவ் ஆயிலையும், அரை ஸ்பூன் விளக்கெண்ணெயையும் கலந்து முன் தலையில் நன்றhக மசாஜ; செய்துவிடவும். காலையில் கூந்தலை அலசலாம்.
அழுக்கோ, பொடுகோ சேராமல் பார்த்துக் கொள்ளவும்.

பேன் தொல்லை நீங்க...

வேப்பிலை, துளசி இரண்டையும் அரைத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து அலசவும்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இப்படிச் செய்தால்  பேன் தொல்லை நீங்கும் .

 பொடுகு நீங்க...

 வாரம் ஒரு முறை ஹாட் ஆயில் மசாஜ; செய்யவும்.
படுக்கை விரிப்பு, தலையணை உறை, சீப்பு போன்றவை சுத்தமாக இருக்க வேண்டும்.
தேங்காய் பாலில் எலுமிச்சம் பழம் பிழிந்து மண்டையில் படும்படி நன்றாகத் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.
வெள்ளை முள்ளங்கியில் சாறு எடுத்து தலையில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து அலசவும்.
வாரம் ஒரு முறை வீதம் பொடுகு போகும்வரை இதைத் தொடரவும்.

கூந்தல் நுனிகள் வெடித்திருந்தால்...

வெடித்த நுனிகளை டிரிம் செய்துகொள்ளவும்.
ஆறு மாதங்களுக்கு  மறுபடியும் மறுபடியும் டிரிம் செய்யவும்.
கூந்தலை போஷாக்குடன் வைத்திருக்கவும்.
ஷாம்பூ அதிகம் உபயோகிக்கக் கூடாது.
ஷாம்பூ குளியலுக்குப் பிறகு கண்டிஷனர் உபயோகிக்கவும்.
இரவு சிறிதளவு வெந்தயத்தை ஊறவைத்து, காலையில் அதை விழுதாக அரைத்து, தயிரில் சேர்த்து தலைமுடி முழுவதும் தடவி ஒரு மணி நேரம் கழித்து நன்றாக அலசவும். இது கூந்தலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு கண்களுக்கும், உடம்புக்கும் குளிர்ச்சி கொடுக்கும்.  

நல்ல சுத்தமான தேங்காய் எண்ணெய் தேவை..
கறிவேப்பிலை நிறைய வாங்கி அதை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடிக்கவும் . தண்ணீர் ஊற்ற கூடாது.
நெல்லிகாய் பொடி வாங்கவும்.  .
ஒரு அடிகனமான பாத்திரத்தில் (பெரிய பாத்திரம் வேண்டும்) தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்க்க வேண்டும்.
எண்ணெய் நன்கு காய்ந்த உடன் அதில் நெல்லிகாய் பொடி, கறிவேப்பிலை போட்டு நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு லிட்டர் எண்ணெய் முக்கால் லிட்டராக ஆகும் வரை கொதிக்க  விடவும். .
பின்பு அதை எடுத்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி தினமும் தேய்த்து வந்தால் நல்ல முடி வளரும், கருப்பாகவும் இருக்கும்.கருத்துகள் இல்லை: