சனி, ஆகஸ்ட் 27, 2011

ரம்ஜான்மட்டன்பிரியாணி

பிரியாணி
தேவையானப் பொருட்கள்:

மட்டன் - 1 கிலோ

அரிசி - 1 கிலோ

எண்ணை - 100 கிராம்

டால்டா - 150 கிராம்

பட்டை - இரண்டு அங்குல துண்டு

இரண்டு கிராம்பு -

ஐந்துஏலக்காய் -

முன்று வெங்காயம் -

1/2 கிலோ தக்காளி -

இஞ்சி - 3 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம்

பூண்டு - 2 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம்

கொ. மல்லி - ஒரு கட்டு

புதினா - 1/2 கட்டு

ப. மிள்காய் - 8

தயிர் - 225 கிராம்

சிகப்பு மிளகாய் தூள் - 3 1/2 டீஸ்பூன்

மஞ்சள் போடி - 1 பின்ச்

ரெட்கலர் பொடி - 1 பின்ச்

எலுமிச்சை பழம் - 1

நெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணையும்

டால்டாவையும் ஊற்றி நல்ல கய்ந்ததும்

ஒரு விரல் அளவு பட்டை , கிராம்பு , எலக்காய் போடவும்.

அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம்

போட்டு நன்றாக கிளறி மூடி போடவும்.

நல்ல பொன் முறுவல் ஆனதும்

இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும்.

ஓவ்வொரு தடவை கிளறும் போதும்

மூடி போட்டு மூடியே தான் வைக்க வேன்டும்.

அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும்.

பிறகு கொ . மல்லி புதினா வை போட்டு கிளறவும்

அதன் பின் தக்காளி ப.மிளகாய் போடவும்.

இரன்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு

தேவையான் அளவு போட்டு வேகவிடவும்.

நல்ல எண்ணையில் எல்லா பொருட்களும்

வதங்கியவுடன்.மட்டனை போடவும்.
போட்டு தீயை அதிகபடுத்தின்றாக முன்று நிமிடம் கிளறவும்.
பிறகு தயிரை நல்ல ஸ்பூனால் அடித்து ஊற்றவும்.

அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும்.

வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும்.

தீயின் அள‌வை குறைத்து வைத்து செய்வ‌தால் அடி பிடிக்காது.

அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும்

ஊறவைத்த அரிசியை வடிக்கவும்

.உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும்,

எலுமிச்சை பழமும் பிழியவும்.

வெந்ததும் முக்கால் பதத்தில் வடித்தல் போதும்.

உடனே சிம்மில் வெந்து கொண்டிருக்கும்

கிரேவியில் கொட்டவும்.

கொட்டி சமப்படுத்தி சட்டிக்கு கிழே

தம் போடும் கண் தட்டு

(அல்லது) டின் மூடி வைத்து

அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு

மேலே வடித்த கஞ்சி சட்டியை வைத்து தம்மில் விடவும்

ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி விட்டு

ரெட்கலர் பொடியை அந்த சுடு கஞ்சி
இரன்டு டேபுள் ஸ்பூனில் கரைத்து துவிவிடவும்.
அதன் பின் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும்
15 நிமிடம் தம்மில் விடவும்.
பிறகு பத்து நிமிடம் புழுங்க விட்டு
மேலிருந்து கீழாக நல்ல உடையாமல்
பதமாக கிளறி சூடாக பறிமாறவும்

ரம்ஜான் பண்டிகை.

உலகமெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த

ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்



முஸ்லிம்களுக்கு ரம்ஜான் பண்டிகை.

ஈத் உல் ஃபிதர் என்று அழைக்கப்படும் இப்பண்டிகை,

பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளையும், பெருமைகளையும் கொண்டது.

ஃபிதர் என்றால் தானம் அளிப்பது என்று பொருள்.

இருப்போர், இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதும்,

இறைவன் முன் அனைவரும் சமம் என்பதும் தான் இப்பண்டிகையின் உட்கரு.

ஈத் என்பது ரமலான் மாதத்தின் இறுதியில் வரும் பண்டிகை.

இந்த மாதம் முழுவதும் பகல் வேளைகளில்

முஸ்லிம்கள் உண்ணா நோன்பு கடைபிடிக்கின்றனர்.

சூரியன் உதிப்பதற்கு முன் உணவு உட்கொண்டு,

சூரியன் மறைந்தபின் தான் தமது நோன்பை முடிக்கிறார்கள்.

நோன்பு இருப்பவர்கள் பகலில் நீர் அருந்துவது இல்லை,

எச்சில் கூட விழுங்குவதில்லை.

ஈத் பண்டிகை அன்று காலை உறவினர்களும், நண்பர்களும்

ஈத்-முபாரக் என்ற வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.

எல்லோரும் கூடி தொழுகை நடத்துகிறார்கள்.

இது பெரிய மைதானத்தில் நடக்கும்.

அங்கு முஸ்லிம் மதத்தலைவர் காஜி ஊர்வலமாக அழைத்துவரப்படுவார்.

தொழுகைக்குப் பின் அவர் அறிவுரை வழங்குவார்.

இதற்குப் பிறகு தங்கள் உறவினர்களையும்

நண்பர்களையும் சந்தித்து விட்டு,

படைத்து வைத்துள்ள விருந்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து,

தாமும் உண்டு மகிழ்வர்.

முஸ்லிம்களில் ஷியா பிரிவினர்

ரமலான் மாதத்து இருபத்தி ஒன்றாவது நாளையும்,

இருபத்திரண்டாவது நாளையும் துக்க நாட்களாகக் கருதுகிறார்கள்.

இந்த துக்கம் முகம்மது நபி நாயகத்தின் மாப்பிள்ளை அலியின்

வீரமரணத்திற்காக அனுசரிக்கப்படுகிறது.

இந்த மாதத்தில் தான் புனித குர் ஆன்

மேலுலகிலிருந்து இவ்வுலகிற்கு வந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த மாதத்தின் கடைசி பத்து இரவுகளில்

குர்ஆன் முதலில் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.


எத்தனை முறை படித்தாலும் அலுப்போ சலிப்போ

ஏற்படுத்தாத ஒரு நூல் இருக்கிறது.

ஒவ்வொரு முறை படித்து முடிக்கும்போது

ம் மீண்டும் படிக்கத் தூண்டும் நூல்.

அதுதான் அருள்மறை குர்ஆன்.

குர்ஆன் இறைவனின் திருச்செய்தி ஆகும்.

அது அருளப்பட்டது, முழுக்க முழுக்க மனிதர்களுக்காக.

எல்லோருக்கும் அதில் உரிமை உள்ளது. ‘

அது எங்களுக்கு மட்டுமே சொந்தம்’ என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது.

குர்ஆனைப் படிப்பவர்கள்தாம் அதிலிருந்து அறிவுரை பெற முடியும். ‘

இது நமக்காகவே அருளப்பட்ட வேதம்’ என்ற உணர்வுடன்

ஒருவர் அதைப் படித்தால் அவர் இறைவனுடன் தொடர்பு கொள்கிறார்.

வல்லமை மிக்க இறைவன் மனிதர்களுடன் உரையாடுவது போலவும்

தன்னுடைய அறிவுரைகள், கட்டளைகள், செய்திகள்

ஆகியவற்றை மனிதனுக்கு நேரடியாக வழங்குவது போலவும்

ஓர் அனுபவம் குர் ஆனைப் படிப்பவர்க்கு ஏற்படுகிறது.

இவ்வாறு இறைவனுடன் உரையாடும் மாபெரும் அருட்பேறு

மனிதர்களுக்குக் கிடைக்கிறது.

உலகின் படைப்பாளனும் பாதுகாப்பாளனுமான

இறைவனின் அருட்செய்தியைப் படித்துப்

புரிந்துகொள்வதைவிட மிகச் சிறந்த பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும்?

இதை நிராகரிப்பவர்கள் பார்வையிருந்தும்

பார்க்கத் தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள்.

ர‌க்‍ஷா ப‌ந்த‌ன்

சனிக்கிழமை, ஆகஸ்ட் 13, 2011,

பெ‌ண்க‌ள் த‌ங்களது சகோதர‌ர் ம‌ற்று‌ம்

சகோதர‌ர்களாக பா‌வி‌ப‌வ‌ர்களு‌க்கு

ரா‌க்‌கி அ‌ணி‌வி‌க்கு‌ம் தினமே ர‌க்‍ஷா ப‌ந்த‌ன் ‌விழாவாகு‌ம்.

ர‌க்‍ஷாப‌ந்த‌ன், ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம்

ஆவணி மாத பௌர்ணமி தினத்தன்று

கொண்டாடபடும் பண்டிகையாகும்

பெண்கள் பூஜை‌யி‌ல் ம‌ஞ்ச‌ள்_நூலை வை‌த்து பூஜை‌செய்து,

த‌ங்ககள் சகோதர‌ர்க‌ள் பல்லாண்டுகால‌ம்

நலமாக வாழவே‌ண்டி

அ‌ந்தம‌ஞ்ச‌ள் க‌யிறை தமது சகோதரர்கள், (அல்லது)

சகோதரர்களாக பா‌வி‌பவ‌ர்க‌ளி‌ன் கை மணிக்கட்டில்

கட்டுவதுதா‌ன் இந்தபண்டிகையின் முக்கிய அம்சம்

.ஒரு ஆ‌ண் இ‌ந்த ம‌ஞ்ச‌ள்க‌யிறை க‌‌ட்டி‌க்கொ‌ள்வத‌ன் மூல‌ம் ,

அந்த சகோதரியின் வாழ்க்கை பாதுகா‌ப்‌பி‌ற்கு‌ம், நலத்திற்கும்

உறுதுணையாக இருப்பேன் என உறுதி கூறுவதாக கருதபடுகிறது.

சகோதரனின் கையில் அன்பு சகோதரி ராக்கிகட்டி

அவனுடைய சுபீட்சத்திற்கு பிராத்தனையும் செய்கிறாள்,

பதிலுக்கு அவளுக்கு நிறையபரிசுகள் கிடைக்கின்றன.

அண்னண்

தங்கை மட்டுமின்றி,

ஆண், பெண் இடையேயான சகோதர பாசத்தை

வெளிக்கொணரும் பண்டிகை இது.

இந்நாளில், அக்கா, தங்கை மற்றும் பெண்கள்,

தங்கள் உடன் பிறந்த மற்றும் வயதில் மூத்த ஆண்களை,

தனது உடன் பிறந்தவர்களாக நினைத்து,

ரக்ஷா பந்தன் நாளில்,

அவர்களது கையில் ராக்கி கயிறு கட்டி,

நெற்றியில் திலகமிட்டு, இனிப்பு வழங்கி,

அவர்கள் நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும் என,

கடவுளை வணங்குவர்.

ஆண்களும், தங்கள் சகோதரியின் துன்பங்களை,

தான் ஏற்றுக்கொண்டு,

அவரை மகிழ்ச்சியாக வாழ வைப்பேன் என,

கடவுளிடம் உறுதியளித்து,

இனிப்பு, புத்தாடை, நகை மற்றும் பணம் வழங்குவர்.

துவக்கத்தில் மஞ்சள் நூலாக மட்டுமே இருந்த ராக்கி,

பின்னாளில், பல வண்ண கயிறுகளால் தயாரிக்கப்பட்டது.

தற்போது, கடவுள் உருவம் பதித்த,

வண்ணமிகு கலைநயமிக்க வேலைப்பாடுகள்

நிறைந்த ராக்கி கயிறுகள் கட்டப்படுகின்றன.

இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டுமே

முன்பு கொண்டாடப்பட்டு வந்த ரக்ஷா பந்தன்,

தற்போது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும்

சிறப்பாக கொண்டாப்படுகிறது.


மகாபலியின் தீவிர பக்தியில் அகம் குளிர்ந்த விஷ்ணு,

என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார்.

அதற்கு மகாபலி, தனது நாட்டை

விஷ்ணு தான் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தான்.

அதையேற்றுக் கொண்ட விஷ்ணு,

வைகுண்டத்தில் இருந்து இறங்கி வந்துவிட்டார்.

கணவனை காணாத லட்சுமி,

மகாபலியின் நாட்டிற்கு வந்தார்.

அங்கு காவலனாக இருந்த கணவனை காப்பாற்ற

லட்சுமி ஏழை பெண்ணாக உருமாறினார்.

பின்னர் மகாபலியிடம் சென்று ஒரு கயிறை கட்டிவிட்டு,

தனது நிலையை கூறியுள்ளார்.

உங்கள் சகோதரியை துன்பம் தீண்டாதவாறு


காப்பது உங்கள் கடமை அண்ணா" என அன்புடன் கூறினார்.


இதைக் கேட்டு உள்ளம் பூரித்த பலி,

" உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்.

ஒரு சகோதரனாக நான் செய்து தருகிறேன்" என வாக்குறுதி அளித்தார்.

உடனே "உங்கள் தங்கையான என் கணவரை

என்னுடன் அனுப்புங்கள்" எனக் கேட்டுள்ளார்.

தன் தவறை உணர்ந்த பலி, விஷ்ணுவை அனுப்பி வைத்தார்.


ஜாதி,மாத, இன, மொழி என எல்லாவற்றை கடந்து,

சகோதர அன்பை தெரிவிப்பதன்

ஒரு முக்கிய வெளிப்பாடாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


புதன், ஆகஸ்ட் 24, 2011

பாதம்


பாதம்

புவியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 
ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை.
ஒவ்வொரு விண்மீனும் நான்கு பாதங்கள் கொண்டவை. 
அவை குறிப்பிட்ட நட்சத்திரத்தின் முதலாம் பாதம், இரண்டாம் பாதம், 
மூன்றாம் பாதம், நான்காம் பாதம் எனக் குறிப்பிடப் படுகின்றன
.ஒவ்வொரு பாதமும் 3 பாகை, 20 பாகைத்துளிகள் (நிமிடவளைவுகள்).
 இதன் மூலம் இராசிச் சக்கரம் (ஓரை வட்டம்) 
27 X 4 = 108 பாதங்களாக வகுக்கப்படுகின்றன. 
இதிலிருந்து இராசிச் சக்கரத்திலுள்ள 12 இராசிகள் (ஓரைகள்) 
ஒவ்வொன்றும் 9 பாதங்களை அல்லது 
2-1/4 நட்சத்திரங்களைக்கொண்ட 30 பாகைகளை அடக்கியுள்ளது.

அட்டவணை 

கீழேயுள்ள அட்டவணை நட்சத்திரங்களையும், பாதங்களையும், 
அவற்றோடொத்த இராசிகளையும்
 சூரியன் அந்த இராசிகளில் உள்ள மாதங்களையும் 
காட்டுகின்றது.

நட்சத்திரம்பாதம்இராசிஇராசிக்கான தமிழ் மாதம்
1. அச்சுவினிமுதலாம் பாதம்மேடம்சித்திரை
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
2. பரணிமுதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
3. கார்த்திகைமுதலாம் பாதம்
இரண்டாம் பாதம்இடபம்வைகாசி
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
4. ரோகிணிமுதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
5. மிருகசீரிடம்முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்மிதுனம்ஆனி
நான்காம் பாதம்
6. திருவாதிரைமுதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
7. புனர்பூசம்முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்கர்க்கடகம்ஆடி
8. பூசம்முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
9. ஆயிலியம்முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
10. மகம்முதலாம் பாதம்சிங்கம்ஆவணி
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
11. பூரம்முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
12. உத்தரம்முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்கன்னிபுரட்டாசி
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
13. அத்தம்முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
14. சித்திரைமுதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்துலாம்ஐப்பசி
நான்காம் பாதம்
15. சுவாதிமுதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
16. விசாகம்முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்விருச்சிகம்கார்த்திகை
17. அனுஷம்முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
18. கேட்டைமுதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
19. மூலம்முதலாம் பாதம்தனுமார்கழி
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
20. பூராடம்முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
21. உத்திராடம்முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்மகரம்தை
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
22. திருவோணம்முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
23. அவிட்டம்முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்கும்பம்மாசி
நான்காம் பாதம்
24. சதயம்முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
25. பூரட்டாதிமுதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்மீனம்பங்குனி
26. உத்திரட்டாதிமுதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
27. ரேவதிமுதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்