வியாழன், நவம்பர் 27, 2008

பெண்

ஆறு வயதில் ஆசிரியர் ஆக நினைத்தேன். பத்து வயதில் பொறியாளர் ஆக நினைத்தேன்! பதினாறாவது வயதில் மருத்துவர் ஆக நினைத்தேன். ஆனால் இன்று .............? என் வீட்டுக் குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியர் ஆகி விட்டேன். என் வீட்டில்லுள்ள பழுதடைந்த பொருள்களுக்கு பொறியாளர் ஆகி விட்டேன். என் வீட்டில்லுள்ள நோய்வாய்ப் பட்டவர்களுக்கு மருத்துவர் ஆகி விட்டேன். மொத்தத்தில்............... இனிய இல்லத்தரசி ஆகி விட்டேன்.

இரக்க மனசு

முல்லைக்கொடி படர்திருந்த ஜன்னல் கதவை மூட மனது வரவில்லை; போர்வையில் நடுங்கி கொண்டிருந்தாள் முதியோர் இல்லத்தில் கிழவி

உங்கள் பார்வைக்கு

புகுந்த வீடு புறப்பட்ட புதல்விக்கு புத்தி சொன்னாள் தாய் .......... "லட்சங்கள் தந்து வாங்கிய புருஷன் ; ஹாண்டில் வித் கேர்." இன்றைய காலகட்டத்தின் யதார்த்தை நகைசுவையுடன்,சுருங்க சொல்லி புரியவைத்த சகோதரிக்கு என் வாழ்த்துக்கள். இதனை எழுதியவர் என். கோமதி.நான் படித்து மிகவும் ரசித்தது.நீங்களும் படிக்க வேண்டும் என்று எண்ணி தந்து உள்ளேன்.

திங்கள், நவம்பர் 24, 2008

என் கருத்து

வலைப்பதிவு
இந்ததளத்திற்கு வலைப்பதிவு என்னும் பெயரைவிட மனப்பதிவு என்னும் பெயரே மிக பொருத்தமாக இருக்கும் ;மனதின் எண்ணங்களை, உணர்வுகளை பதிவு செய்யும் இடமாக இருப்பதால் ,இது மன பதிவு தளம் தானே ?
இரெண்டு வருடங்களுக்கு முன்,எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகம் ஆனது .பலரின் சுவாரசியமான பதிவுகளை படித்தேன் .படித்து கொண்டும் இருக்கிறேன்.எனக்கென்று ஒன்று உருவாக்க தயக்கம் ;பல கேள்விகள்;சில சந்தேகங்கள்; வலைத்தளங்களின் தவறான பயன்பாடு பற்றிய பயம். ஆனாலும் ,சரியோ,தவறோ என் கருத்துக்களை கூற ஒரு இடம் வேண்டுமென்று இத்தளத்தை தெரிவு செய்தேன்.
என் எண்ணங்கள், நான் படித்து ரசித்ததை பகிர்ந்து கொள்வது, மற்றவர்களின் கருத்தை அறிந்து கொள்வது என பல பயன்களை பெறுவது என்று இத்தளத்தினை துவங்கி உள்ளேன்.

ஞாயிறு, நவம்பர் 23, 2008

அம்மா அம்மா .............. அம்மா .............. உன் அன்பை சுவாசிக்கிறேன். உன் அருகாமையை அறிகிறேன். உன் தொடுதலை உணர்கிறேன். ஆனால் நீ எங்கே .............? ஆலமரமாய் நீ இருந்தாய்; அரவணைத்து காத்தாய்; மண்ணை விட்டு மறைந்தாய்; அனாதையாக நிற்கின்றேன். கண் கலங்கினால் தவிப்பாயே. இன்று .............................. கண்ணீரில் கரைகின்றேன். ஆனால் நீ எங்கே ...........?