வியாழன், அக்டோபர் 11, 2012

துளசி

வறண்ட கூந்தலுக்கு-

கால் கிலோ நல்லெண்ணையில்

துளசி இலை இரண்டு கைப்பிடி,

மிளகு 50 கி போட்டுக் காய்ச்சவும்.

வாரம் இரண்டு முறை தலைக்குத் தேய்த்து

சீயக்காய் அல் பயத்தம் மாவு போட்டு அலசவும்.

பொடுகு போகும்; கூந்தல் மிருதுவாகும்.

பனிகால முடி கொட்டுதல்-

சம அளவு தாமரை இலைச் சாறு,

துளசி சாறு கலந்து, மிதமான தீயில்

காய்ச்சி வடிகட்டவும்.

தினமும் இந்த எண்ணையை  லேசாக சூடு செய்து

தலையில் தடவி வந்தால்

முடி கொட்டுதல், இளவயது  வழுக்கை மறையும்.

பேன் தொல்லை நீங்க-

துளசியை மைய அரைத்து தலையில் தேய்த்து,

அரை மணி நேரம் ஊறவும்.

வெது வெதுப்பான நீரில் அலசவும்.

முடிக்கு கண்டிஷனர் -

சம அளவு துளசி, செம்பருத்தி இலை,

சுத்தம் செய்த  4 புங்கங்காய் தோல்

மிக்ஸியில்  அரைக்கவும்.

எண்ணை  தேய்த்து குளிக்கும் போது

இந்த விழுதை தேய்த்து அலசவும்.

சருமம் மிருதுவாக-

பால் பவுடர்-- 1/2 டீஸ்பூன்

துளசி பவுடர் --1/2 டீஸ்பூன்

சந்தனப் பவுடர் -1/4 டீஸ்பூன்

கஸ்துரி மஞ்சள் தூள்--1/4 டீஸ்பூன் 

இவையுடன் பால் கொஞ்சம்

சேர்த்து நன்கு குழைத்து

தினமும் முகம், கை, காலில்

தேய்த்துக்   குளிக்க நல்ல நிறமும் கிடைக்கும்.

கண்ணிற்கு கீழ் கருவளையம் நீங்க-

துளசி இலை 5

வெள்ளரி விதை 2 டீஸ்பூன்

சிறிது கஸ்துரி மஞ்சள் தூள்

அரைத்து கண்ணிற்கு கீழ்

நன்கு தடவி 2 நிமி கழித்து கழுவவும்.


சுடு நீரில் துளசியை போட்டு ஆவி பிடித்தால்

சளி, மண்டை குத்தல் நீங்கும்.

5 துளசி இலையை தண்ணீரில்

போட்டு குடித்து வந்தால்

தொடர் இருமல் நீங்கும்.

கட்டிகள், வெட்டுக்காயம், வண்டுகடி

அந்த இடத்தில் துளசியை அரைத்து பூசினால்

உடனடி குணம் தெரியும்.

ஒரு வயதான குழந்தைகளுக்கு

ஒரு டீஸ்பூன்  துளசி சாறு கொடுத்தால்

மாந்தம், வயறு சம்மந்தமான

பிரச்சனைகள் தீரும்.

பரு தொல்லைகளுக்கு-

சந்தன தூள், வேட்டிவேர் பவுடர்,

துளசி சாறு, எலுமிச்சை  சாறு

தலா ஒரு டீஸ்பூன் கலந்து பூசி,

ஐந்து நிமிடம் கழித்து கழுவவும்.

துளசியை ரசமாக செய்து சாப்பிட்டால்

வாய் கசப்பு, ஜுரம் நீங்கும்.

சிறுநீரகக் கல் நீங்க

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு

இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் வெறும் வயிற்றில்

 அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து

அருந்தி வந்தால் சிறுநீரகக் கல்

படிப்படியாக கரையும்.

இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது.

 இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள்,

விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி

ரத்தத்தை சுத்தமாக்கும்.

10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி

2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி

கஷாயம் செய்து சூடாக அருந்தி,

பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு ந

ல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால்

மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.


துளசி (Ocimum sanctum) மூலிகைகளின் அரசியாக போற்றப் படுகிறது.

இதற்கு அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய்,
 
துளவு,குல்லை, வனம், விருத்தம், துழாய், மாலலங்கர்
 
என பல பெயர்கள் உண்டு.
 
துளசி இந்தியா முழுவதும் காணப்படும் செடி வகையாகும்.
 
இதில் நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி,
 
கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகள் உள்ளன.
 
துளசியை பொதுவாக தெய்வீக மூலிகை என்றே அழைப்பார்கள்.
 
கற்ப மூலிகைகளில் இதற்கு தனிச்சிறப்பு உண்டு.
 
இந்து மதத்தினர், இலட்சுமி தேவியின் அம்சமாகவே
 
எண்ணி இதனை வழிபடுகின்றனர்.

துளசியானது இடியைத் தாங்கும் சக்தி கொண்டது

என அறிவியல் அறிஞர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இதனால் தானோ என்னவோ வீடுகளில் துளசி வளர்த்திருப்பார்களோ ? 
 

வியாழன், செப்டம்பர் 06, 2012

மனம் அழுகிறது

சிவகாசி இன்று சிவந்தகாசி ஆகிவிட்டது?

ஒவ்வொரு வருடமும் நிகழும் ஒரு நிகழ்வாகி விட்டது.

கடந்த ஐந்தாறு வருடங்களாக நடந்த விபத்துக்களை

பத்திரிக்கைகள், தொலைகாட்சி செய்திகள் என

எல்லா ஊடகங்களும் பட்டியல் இட்டு சொல்லுகிறார்கள்.

{ஒலிம்பிக்ஸ் பட்டியலில் கூட ஒன்றும் இல்லை}

2012ம்  ஆண்டு நிகழ்வும் பட்டியலில் சேர்ந்து விட்டது.

இதை அறியும் போது

நாம் என்ன செய்தோம்?   மனம் அழுகிறது 

நாம் என்ன செய்கிறோம்?

நாம் என்ன செய்யப் போகிறோம்?

[இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம்]

ஒரே பதில் தான்.

அந்த நிமிடம்

வாய் தன்னிச்சையாக " ஐயோ! கொடுமை" என்று சொல்லும்.

சில கண்கள் தன்னிச்சையாக கண்ணீர் விடும்.

நாலைந்து நாட்கள் சரியாக

சாப்பிட முடியாமல்,

தூங்க முடியாமல்,

மனசு பரிதவித்துப் போகும்.

பிறகு வேறு சுவாரஸ்யமான செய்தி

நமக்கு நம்ம குடும்ப பிரச்சனைகள்??????

இதற்கு என்ன தீர்வு?

ஓ !!!!!! மந்திரிமார்கள் வந்துவிடுவார்கள்!!!

சமயத்தில் முதல்வர் கூட வருவார்.

கூடவே பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி

பெரிய விளம்பரம்,

இழப்புப் பணம்!

O.K. DONE!!!!!!!!!!

அந்த பணம் எதை ஈடு செய்யும்?

ஒ.கே. ஈமக்கடனுக்கு ஆகும்.

அதன் பின் அந்த குடும்பம் என்னவாகும்?

சினிமாவாக இருந்தால் கோடீஸ்வரன் ஆவான்.

இது உண்மையான வாழ்க்கை ஆச்சே?

இந்த விபத்துக்கு காரணம் என்ன????

யாராவது பொறுப்பு எடுத்துக்கொள்வார்களா?

அதிகாரிகள் " பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளது;

நாங்கள் தடை விதித்து இருந்தோம்; என்பார்கள்.

"ஆனால் அதை நாங்கள் மறுபடியும் போய் பார்க்கலை;

எங்களுக்கு வர வேண்டியது வந்து விட்டது "

இதுதான் அந்த மழுப்பல் பதிலின் அர்த்தம்.

தொழிற்சாலை முதலாளிகளுக்கு

அந்த தீபாவாளியிலே கோடி சம்பாதிக்க வேண்டும்.

பணம், பணம், பணம்............................

WHERE MONEY  GOVERNS ,THERE LIFE IS VALUELESS.

படிப்பு அறிவு இல்லாத மக்களா?

அறியாமையை பயன்படுத்திக்கொள்ளும்

அரசியல்வாதிகளா, அதிகாரிகளா?

யாரை கேட்க முடியும்?

கையிலாகாமல் இதைப் பார்த்து

இதுபோல் எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும்

இருக்கும் என்னைப் போன்ற சாமானியர்களால்

என்ன செய்ய முடியும்?

இதற்கு என்னதான் தீர்வு?????????

நம் நாட்டு

சட்டங்கள் மாற்றப்பட வேண்டுமா?

அரசியல் அமைப்பே மாற வேண்டுமா?

மனித மனங்கள் மாற வேண்டுமா?

மனித நேயம், மானுடம்,

மனித பண்புகள்,சக உயிர்களை நேசித்தல்

 இவை எல்லாம் மறைந்து வருகிறதா?

கேள்விகள், கேள்விகள், கேள்விகள்..................

பதிலே இல்லாத ,

பதிலே தெரியாத

கேள்விகள்!!!!!!!!!

யாராவது கண்டுபிடியுங்கள்...

பகிர்ந்து கொள்ளுங்கள்.....

இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம் . 

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

உணவே மருந்து

நாம் உயிர் வாழ உணவு உண்ண  வேண்டும்.

ஆனால் உணவில் இருக்கும் , நம் உடலுக்குத் தேவையான 

சத்துக்கள் சரியாக போய்ச் சேருகிறதா? 

இதற்கு,சாப்பிட வேண்டிய முறையில் சாப்பிட்டால் 

மட்டுமே உணவின் பலன்கள் நம் உடம்பில் 

போய்ச் சேரும் என்கிறார் உமா வெங்கடேஷ்.

இவர்  ஒரு மருத்துவர் .

பஞ்சபூதங்கள் என்னும் பிரபஞ்ச சக்தியை 

அடிப்படையாக வைத்து மருத்துவம் அளிக்கும் 

'நாடி சமன்படுத்துதல்' [PULSE BALANCING ]

முறையில் வைத்தியம் பார்ப்பவர்.

இவர் கூறுவன-

"நீர், நிலம், காற்று,நெருப்பு,ஆகாயம் 

எனும் பஞ்சபூதங்களின் கூறுகளால் 

ஆனது நமது உடல்.

நீர்- உப்பின் கூறு.

நிலம்-இனிப்பின் கூறு 

காற்று-காரத்தின் கூறு 

ஆகாயம்- புளிப்பின் கூறு 

நெருப்பு- கசப்பின் கூறு 

திடீர்னு காரமா சாப்பிட் டா 

நல்லாயிருக்கும்னு தோணினா

உடம்பில் காற்றின் எனர்ஜி

குறைவாய் இருக்குது என்று அர்த்தம்.


பஞ்சபூதங்களின் எந்த தன்மை 

நம் உடம்பில் குறைகிறதோ 

அது தேவை என்பதை நாக்கு சொல்லும்.

ஒரு பொருளை சாப்பிடனும் 

தோணினா அதை சாப்பிடனும்.

இதுதான் சப்பிடறதோட முதல் சூட்சமம்.

உணவை வாயின் இருபுறமும் 

நல்லா பரப்பி, மெதுவாக 

மென்று சாப்பிட வேண்டும்.

அப்போதுதான் உமிழ்நீர் நன்றாக ஊறி,

உணவுடன் நன்றாகக் கலந்து 

செரிமானத்தை எளிதாக்கும்.

தண்ணீர் குடித்து 15நி கழித்து சாப்பிடனும்.

சாப்பிட்ட பின் 1/2 மணி நேரம் கழித்து

தண்ணீர் குடிக்க வேண்டும்.

தண்ணீரையும் வாய் முழுக்க எடுத்துக்கொண்டு 

ருசித்துக் குடிக்க வேண்டும். 

சாப்பிடும்போது உதடுகள் சேர்ந்து இருக்க வேண்டும்.

உள்ளுக்குள்ளேயே உணவு நொருங்கணும்.

வாய் ரொம்ப திறந்து காற்று போகக்கூடாது.

சாப்பிடும் போ து பேசினால் காற்று

உள்ளே போய்  கேஸ் உண்டாகும்.

எந்த காய் சாப்பிட்டாலும், 

குறைந்தபட்சம் 11நாட்களுக்கு 

அந்த காய் சாப்பிடக் கூடாது.

ஒரேவிதமான சத்துதான் கிடைக்கும்.

இன்று துவரம் பருப்பு பயன்படுத்தினால்,

அடுத்த நாள் பாசிப்பருப்பு 

என்று திட்டமிட்டுக் கொண்டால் 

சம அளவில் எல்லா சத்துக்களையும் பெறலாம்.

காலையில் நடைப்பயிற்சி, 

யோகா, மூச்சுப் பயிற்சி செய்துவிட்டு 

அரை எலுமிச்சை சாறில் 

ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிப்பதால் 

உடம்புக்குத் தேவையான 

இனிப்பு, புளிப்பு,துவர்ப்பு, 

லேசான கசப்பு கிடைக்கும்.

இது பஞ்சபூத சக்தியை பேலன்ஸ் 

பண்ணற எனர்ஜி பானமாகும்.

காலை 7---7.30 மணிக்குள் 

BREAKFAST சாப்பிடனும்.

[Is it  possible?] 

பாதிப்பேர் எளுந்திரிப்பதே 8மணிக்கு.

முடிந்தவரை குளித்துவிட்டு 

சாப்பிடுவது மிகவும் நல்லது.

காலை உணவாக 

4-பாதாம் ,4-பிஸ்தா,

1-வால்நட் ,1-அத்திப் பழம் 

2-முந்திரிப்பருப்பு, 4-காய்ந்த திராட்சை 

1-பேரீச்சை,1-முழு நெல்லிக்காய் 

நெல்லியைத் தவிர மீதியை 

முதல் நாள் இரவே  மண்பாத்திரத்தில் 

ஊறவைக்க வேண்டும்.

11-மணிக்கு பழங்கள் அல்லது 

மிகச் சிறிய அளவில் டிபன் 

1-மணிக்கு மதிய உணவு 

சாதம், பருப்பு, கீரை,

நார்சத்து உள்ள காய்கறிகள் 

இதனுடன் சிறிது பனைவெல்லம் 

இதனால் உடலுக்குத் தேவையான 

இயற்கையான  இனிப்புத் தன்மை கிடைக்கும்.

மாலையில் சுண்டல், பிஸ்கட், டீ ,

வெள்ளரி சாலட் போன்று சாப்பிடலாம் 

இரவு 7-7.30க்குள் டின்னர் 

எளிதில் செரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

சில வயதானவர்கள் இரவில் ராகி கூழ் 

சாப்பிடுகிறார்கள்.

ராகி  எளிதில் செரிமானம் ஆகாது.  

கோதுமை அல்லது கம்பு ரொட்டிகள்,

இட்லி சாப்பிடலாம்.

காலையில் சத்தான உணவு,

மதியம் மிதமான உணவு,

இரவு லேசான உணவு 

இதுதான் உடலை எப்பவும் 

புத்துணர்ச்சியாக வைத்து இருக்கும்.
நன்றி-சிநேகிதி 

வெள்ளி, மே 11, 2012

குருபெயர்ச்சிப் பலன்கள்-2012--2013

குருபெயர்ச்சிப் பலன்கள்


வாக்கிய பஞ்சாங்கப்படி குருபகவான்

மே மாதம் 17ந் தேதி வியாழக் கிழமை 2012

மாலை, 6.25 மணிக்கு,

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு

கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில் 

பெயர்ச்சிஅடைகிறார்.


[ 17-05-2012------ 27-05-2013 ]


குரு ஸ்லோகம்-

குருபிரம்மா குருவிஷ்ணு 
  
குரு தேவோ ம ஹேஸ்வர 

குரு சாக்ஷாத் பரப்பிரம்மா 

தஸ்மை ஸ்ரீ குருவே நம.

குரு காயத்ரி -

விருஷபத்வஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய தீமஹி

தன்னோ குரு ப்ர சோதயாத். 


நற்பலன் பெரும் ராசிகள்-

மேஷம், கடகம், கன்னி,

விருச்சிகம்,மகரம்

சுமாரான பலன் பெரும் ராசிகள்-

மிதுனம்,தனுசு,

கும்பம், மீனம்

பரிகார ராசிகள்

ரிஷபம், சிம்மம், துலாம்


பலன்கள் -


ராசி-மேஷம்--80 %

[அசுவினி,பரணி,கார்த்திகை 1ம்பாதம்]

நல்ல நேரம் பொறந்தாச்சு!


கல்யாண யோகம்வந்தாச்சு!

சொல்ல வேண்டிய பாடல்-

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஓளியாய்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


பரிகாரம்-

முருகன் வழிபாடு
ராசி-ரிஷபம் --55%

[கார்த்திகை 2,3,4ம் பாதம்,

ரோகி ணி, மிருக சீரிடம் 1,2ம்பாதம்]

பிள்ளையால் சாதகம்!


வேலையில் பாதகம்!

சொல்ல வேண்டிய பாடல்-

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு

தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே!

பரிகாரம்-


சிவபெருமான் வழிபாடு

ராசி-மிதுனம் 65%

[மிருகசீரிடம் 3,4ம் பாதம்,திருவாதிரை,

புனர்பூசம் 1,2,3ம் பாதம்]

உடல்நிலை திருப்தி

மனநிலை அதிருப்தி

சொல்ல வேண்டிய பாடல்-

ஆடிப்பாடிஅகம் கரைந்து

இசைப் பாடிப்பாடி கண்ணீர் மல்கி

நாடி நாடி நரசிங்கா என்று

வாடி வாடும் இவ்வானுதலே!

பரிகாரம்-

லட்சுமிநரசிம்மர் வழிபாடு

ராசி-கடகம் 85%

[புனர்பூசம் 4ம் பாதம், 

பூசம்,ஆயில்யம்]

வீட்டில் மகிழ்ச்சி

பணியில் புத்துணர்ச்சி

சொல்ல வேண்டிய பாடல்-

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே 

இம்மையே இராமவென் றிர ண்டெழுத்தினால்!

பரிகாரம்-

ராமர் வழிபாடு
ராசி-சிம்மம் 55%

[மகம்,பூரம், உத்திரம் 1ம் பாதம்]

பத்தாமிட குருவால்

பணியில் கவனம்

சொல்ல வேண்டிய பாடல்-

அருமறை முதல்வனை ஆழிமாயனைக்

கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனை 

திரும கள் தலைவனை தேவ தேவனை

இருபத முளரிகள் இறைஞ்சி ஏ த்துவாம்!

.பரிகாரம்-

கிருஷ்ணர் வழிபாடு


   ராசி-கன்னி 75%

[உத்திரம் 2,3,4ம் பாதம்,அஸ்தம்,

சித்திரை 1, 2 ம் பாதம்]

சொத்து வாங்குவீங்க

சுகமாய் இருப்பீங்க

சொல்ல வேண்டிய பாடல்-

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்

அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்  

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே!  

பரிகாரம்-

ரங்கநாதர் வழிபாடு
ராசி-துலாம் 55%

[சித்திரை 3,4ம்பாதம்,சுவாதி,

விசாகம் 1,2,3ம்பாதம்]

சிரமப்படுத்துறதுக்கே

வந்துட்டாரு அஷ்டமக் குரு

சொல்ல வேண்டிய பாடல்-

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான் 

விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம் 

தன்மையினாற் க ண்ணிற் ப ணிமின் க னிந்து!

பரிகாரம்-

விநாயக ர் வழிபாடு
ராசி-விருச்சிகம் 70%

[விசாகம் 4ம்பாதம்,அனுஷம்,

கேட்டை ] 

ஏழரையின் தாக்கத்தை

ஏழாமிட குரு குறைப்பார்

சொல்ல வேண்டிய பாடல்-

புத்தியும் பலமும் தூயபுகழோடு

துணிவும் நெஞ்சில்

பத்தியும் அச்சமிலாப் ப ணிவும்

நோயில்லா வாழ்வும்

உத்த ம ஞானச் சொல்லின் ஆற்றலும்

இம்மை வாழ்வில்

அத்தனை பொருளும் சேரும்

அனுமனை நினைப்பவர்க்கே!


பரிகாரம்-

ஆஞ்சநேயர் வழிபாடு
ராசி-தனுசு 60%


[மூலம்,பூராடம்,

உத்திராடம் 1ம் பாதம்]

அயர வைப்பார்


ஆறாமிட குரு
சொல்ல வேண்டிய பாடல்-


இல்லாமை சொல்லி ஓருவர் தம்பால் சென்று இழிவுபட்டு

நில்லாமை நெஞ்சில் நினைகுளிரேல் நித்தம் நீடுதவம்

கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்

செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே !

பரிகாரம்-


துர்க்கை வழிபாடு


ராசி-மகரம் 80%

[உத்திராடம் 2,3,4ம் பாதம்,

திருவோணம்,அவிட்டம் 1,2ம்பாதம்]

அற்புதம் நிகழ்த்துவார்

ஐந்தாமிட குரு

சொல்ல வேண்டிய பாடல்-

உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே

உலகமெல்லாம் காத்துநிற்கும் தேவி மகாலட்சுமியே

உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலட்சுமியே

உன்பாதம் சரணடைந்தோம் நலம் தருவாய் அம்மா!

பரிகாரம்-

லட்சுமி வழிபாடுராசி- கும்பம் 55%

[அவிட்டம் 3,4 ம் பாதம்,

சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதம்]

கனவு நிறைவேறும்

வருமானம் தடுமாறும்

சொல்ல வேண்டிய பாடல்-

ஆடியபாதம் மன்றாடிய பாதம்

ஆடியபாதம் நின்றாடிய பாதம்

பாடிய வேதங்கள் தேடிய பாதம்

பக்திசெய் பக்தருக்கு தித்திக்கும் பாதம்

நாடிய மாதவர் தேடிய பாதம்

நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம்

பரிகாரம்-

நடராஜர் வழிபாடு


 
ராசி- மீனம் 60%


[பூராட்டாதி 4ம் பாதம், 


உத்திரட்டாதி, ரேவதி]


அஷ்டமசனி காலம்


பொறுமையாக இருங்க
சொல்ல வேண்டிய பாடல்-


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே

பரிகாரம்-


வெங்கடாஜலபதி வழிபாடு


  

நன்றி -------- தினமலர்


வேதநூல் தர்ம சாஸ்திரம் 
மேன்மையை அறிந்தோனாகி 
சாதனையால் கற்பகத் 
தனி நாட்டின் இறைவனாகி 
சோதியாய் குருவுமாகி 
சொர்க்கத்தை மண்ணில் நல்கும் 
ஆதியாம் குருவே நின்தாள் 
அடைக்கலம் போற்றி! 


- இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால்

குருவின் அருட்பார்வையால் கல்வி சிறக்கும்.

செல்வம் செழிக்கும்.

தொழில் மேன்மை கிடைக்கும்.
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை 
ஆறங்கமுதல் கற்ற கேள்வி 
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த 
பூரணமாய் மறைக்கு அப்பாலாய் 
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை 
இருந்தபடி இருந்து காட்டிச் 
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் 
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
பெருநிறை செல்வம் மேன்மை 
பெற்றிடும் சுகங்கள் யாவும் 
வருநிறை மரபு நீடி வாய்க்கும் சந்ததி தழைக்க 
குருநிறை ஆடை ரத்னம்தான் பெற அருளும் தேவ 
குருநிறை வியாழன் பொற்றாள் 
குரைகழல் தலைக் கொள்வோமே.
ஆலின்கீழ் அறங்களெல்லாம் 
அன்றவர்க்கு அருள்செய்து 
நூலின் கீழ் அவர்கட்கெல்லாம் 
நூண்பொருளாகி நின்று 
காலின்கீழ் காலன்தன்னைக் 
கடுகத்தான் பாய்ந்து பின்னும் 
பாலின்கீழ் நெய்யு மானார் 
பழனத்தெம் பரமனாரே மறைமிகு கலைநூல் வல்லோன் 
வானவர்க்கு ஆசான் மந்திரி 
நறைசொரி கற்பகப்பொன் 
நாட்டினுக்கு அதிபதியாகி 
நிறைதனம் சிவிகை மன்றல் 
நீடு போகத்தை நல்கும் 
இறைவன் குரு வியாழன் 
இருமலர்ப்பாதம் போற்றி போற்றி! 

இந்த பாடல்களை தினமும் மாலையில் விளக்கேற்றி சொல்லி வர 

கஷ்டங்கள் குறைந்து நன்மை பெற லாம். 


குரு பாடல்-2அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி 
நன்றாக வானவர் மாமுனிவர் நாடோறும் 
நின்றார வேத்து நிறைகழலோன் புனைகொன்றைப் 
பொன்றாது பாடிநம் பூவல்லி கொய்யாமோ