புதன், நவம்பர் 23, 2011

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

சோப்பு எல்லோரும் பயன்படுத்துகிறோம்.

அதில் இரசாயனப் பொருட்கள்    இருப்பது தெரிந்த விஷயம்

.இந்த கால கட்டத்தில் இதெல்லாம் யாரும்   பார்ப்பது இல்லை.

ஆனாலும், இன்னும் குளியல் பொடி பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள் ;  

மஞ்சள் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்குகிறது.

அதனுடன் சில பொருட்களை சேர்த்து செய்யப்படும் குளியல் பொடி

சருமத்தை பாதுகாக்கிறது.

தேவையான பொருட்கள்- 

பாசிப்பயறு ------- 500  கிராம்

கடலைப் பருப்பு ---- 250  கிராம்

கஸ்தூரி மஞ்சள் ---- 150  கிராம்  

விராலி மஞ்சள் ------ 50  கிராம்

வெட்டி வேர்- ----------- 20  கிராம்

பூலான் கிழங்கு ----- 100  கிராம்

கார்போக அரிசி ------ 50  கிராம்

மூன்று நாட்கள் வெயிலில்   நன்கு காய வைக்க வேண்டும்.

மெஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.


தினம் இரு முறை பயன் படுத்தினால் நாளடைவில் நிறம் கூடும்.

தினம் சோப்புக்குப் பதில் இந்த பொடியை பயன்படுத்தலாம்.


குழந்தைகளுக்கு - 

உடம்பில் தேங்காய் எண்ணை அல்லது

நல்லெண்ணெய் தேய்த்து , 15  நிமி கழித்து இந்த பொடியை


தேய்த்துக் குளிப்பாட்டவும்.


எண்ணைப் பசை சருமம் உள்ளவர்களுக்கு-

எலுமிச்சை சாறு அல்லது தேங்காய்த் தண்ணீர் முகத்தில் தடவி

சிறிது நேரம் கழித்து ,  இந்த பொடியை பயன்படுத்திக் கழுவவும்.  .

உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கு-   

தேங்காய்ப் பால் அல்லது ஆலிவ் ஆயில் முகத்தில் தடவி

சிறிது நேரம் கழித்து ,  இந்த பொடியை பயன்படுத்திக் கழுவவும். 

முகத்தில் சுருக்கம் உள்ளவர்களுக்கு- 


முகத்தில் முட்டையின் வெள்ளை கருவைத் தடவி

சிறிது நேரம் கழித்து ,  இந்த பொடியை பயன்படுத்திக் கழுவவும்.

சனி, நவம்பர் 19, 2011

ஆரோக்கிய ஆலோசனைகள்சபரிமலை பக்தி பயணம் மீண்டும் களை கட்டத் தொடங்கி விட்டது. 
அய்யப்ப பக்தர்கள் அணி அணியாய் மலையேறத் தயாராகி விட்டனர். 
அவர்களது ஆன்மிக பயணம் ஆனந்தமாய் அமைய, 
ஆரோக்கிய ஆலோசனைகளை 
தமிழ்நாடு மருத்துவர் சங்கத்தின் தலைவரான 
பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி வழங்குகிறார்…!

“சபரிமலை கடல் பரப்பில் இருந்து
 467 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. 
அதிக உயரம் என்பதால் மலையில் மேலே செல்லச்செல்ல 
ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். 
அந்த பற்றாக்குறையை சமாளிக்க `
சாமியே சரணம் ஐயப்பா..’ என்று சத்தமாக 
கோஷம் எழுப்பியபடியே மலை ஏற வேண்டும்.
 அப்படிச் செய்யும் போது கூடுதல் ஆக்சிஜன் 
உடலுக்குள் செல்லும். 
வாயைத் திறந்து நன்றாக சுவாசித்தால், 
உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். 
மலை ஏறும்போது இதயத்தசைகளுக்கு தேவையான அளவு 
ஆக்சிஜன் கிடைக்காவிட்டால், மாரடைப்பு உருவாகக்கூடும். 
ஆஸ்துமா தொந்தரவு (Wheezing) இருப்பவர்களுக்கும் 
மலை ஏறும்போது அதிக ஆக்சிஜன் தேவைப்படும்.
மலை ஏறிக்கொண்டிருக்கும்போ
து சுவாசத்தடை, மார்பு வலி போன்றவை ஏற்பட்டால் 
உடனடியாக மலைப் பகுதியில் இருக்கும் 
ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். 
உடலில் ஏற்படும் சின்னச்சின்ன அறிகுறிகளைக்கூட
 அலட்சியம் செய்யக்கூடாது”

“பயணத்திற்கு முன்பு ஒவ்வொருவரும் 
தங்கள் குடும்ப டாக்டரிடம் 
ஆலோசனை பெற்றுக் கொள்வது மிக நல்லது. 
ஐம்பது வயதைக் கடந்திருந்தாலோ
, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், 
கொலஸ்ட்ரால் பிரச்சினை இருந்தாலோ 
அவர்கள் முழு பரிசோதனை செய்து,
 குடும்ப டாக்டரிடமும் ஆலோசனை பெற்ற பின்
பே பயணத்தை மேற்கொள்ள வேண்டும்”

பயணத்தின்போது உடன் வைத்திருக்க வேண்டிய மாத்திரைகள் 

எல்லா பக்தர்களும் இருமுடி கட்டோடு 
`பர்ஸ்ட் எய்டு’ பாக்ஸ் ஒன்றை வைத்திருக்க வேண்டும். 
அதில் வாந்தியை போக்கும் மாத்திரை, 
வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மாத்திரை, 
காய்ச்சல் மற்றும் உடல் வலிக்குரிய மாத்திரைகளை 
வைத்திருக்க வேண்டும். 
பாண்டேஜ், உடல் வலிக்கான ஸ்பிரே, 
ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் 
அதற்குரிய `மாஸ்க்’, இன்ஹேலர்,
 இதய நோய் இருப்பவர்கள் 
அதற்காக டாக்டர் தந்திருக்கும் மாத்திரைகளையும் 
கொண்டு சென்று, 
தேவைப்படும்போது உடனடியாக பயன்படுத்த வேண்டும்”

சர்க்கரை நோயாளிகள் மலையேறும்போது கவனிக்க வேண்டிய விஷயம் 
“வெறுங்காலோடு மலை ஏற வேண்டும் என்பது ஐதீக நம்பிக்கை. 
ஆனாலும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் 
அதற்குரிய செருப்பை அணிந்துகொண்டுதான் மலை ஏறவேண்டும்.
 சிறிய முள் குத்தினால்கூட அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். 
வழக்கமாகவே சபரிமலை வழிபாட்டு சீசன் முடிந்த பிறகு, 
காலில் காயத்துடன் சர்க்கரை நோயாளிகள்
 சிகிச்சைக்கு வருவதும் அவதிப்படுவதும் அதிகரித்து வருகிறது. 
பாதிப்பு எதுவும் ஏற்படாத அளவிற்கு 
அவர்கள் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்தால், 
`ஹைப்போக்ளைசீமியா, (Hypoglycemia) என்ற பாதிப்பு ஏற்படும்.
 உடன டியாக அதை சரிசெய்ய வேண்டும். 
இல்லாவிட் டால் அதன் பாதிப்பு மிக மோசமாகிவிடும்.
 திடீரென்று பசிப்பது பின்பு அதிக வியர்வை வெளியேறுவது,
 மயக்கம் ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறியாகும்.
 சிலருக்கு வலிப்பும் வந்து விடும். 
சர்க்கரை நோயாளிகள் எப்போதும் 
சுவீட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
 மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் 
உடனே சுவீட் சாப்பிட வேண்டும் 
அல்லது குளிர்பானத்தை பருக வேண்டும்.
 இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் பக்தர்கள், 
பயண காலத்திலும் தவறாமல் 
இன்சுலினை செலுத்திக்கொள்ள வேண்டும்”

பொதுவாக இந்த பக்தி பயணத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் 
“பத்து வயதிற்கு கீழும்
, ஐம்பது வயதிற்கு மேலும் உள்ள பெண்களையே 
தரிசனத்திற்கு அனுமதிக்கிறார்கள். 
ஐம்பது வயதைக் கடந்து மனோபாஸ் காலத்தை அடைந்த பெண்களுக்கு 
இயல்பாகவே எலும்பு பலம் குறையும். 
`ஆஸ்டியோபோரோசிஸ்’ போன்ற எலும்பு பலகீன நோய்கள் 
அவர்களுக்கு தோன்றும். 
பெண்கள் கீழே விழுந்துவிட்டால் எலும்பு முறிவு ஏற்படலாம். 
அதனால் அவர்களை உடனே டோலியின் உதவியோடு 
அருகில் உள்ள சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லவேண்டும். 
மலை ஏற்றத்தின் போது உடல் தளர்ச்சியோ, 
அதிக சோர்வோ ஏற்பட்டால் ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி பழம் 
போன்றவைகளை சாப்பிடலாம். 
வயதானவர்களுக்கு குளிர்காலத்தில் 
மூட்டு நோய் (arthritis) பாதிப்பு அதிகம் ஏற்படும். 
அவர்கள் எப்போதும் அதற்குரிய மருந்து, மாத்திரை களோடு
 பயணத்தை மேற்கொள்ள வேண்டும்”

உணவில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை..
பக்தர்கள் உணவில் மிகுந்த கவனம் காட்ட வேண்டும். 
சுத்தமானதாகவும், சுகாதாரமான இடத்தில் தயாரிக்கப்பட்டதாகவும் 
அவை இருக்க வேண்டும். 
சுத்தமான தண்ணீரை மட்டுமே பருக வேண்டும். 
தெருவோர கடைகளில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
. சுத்தமான உணவு சாப்பிடாவிட்டால் 
உணவு விஷத்தன்மையாகி வாந்தி, பேதி ஏற்படும். 
அது உயிருக்கே கூட ஆபத்தாக ஆகிவிடக்கூடும்.”

“அங்கு கொசு, பூச்சி, வண்டு தொந்தரவு இருக்கத் தான் செய்யும். 
அவை கடித்தாலும் பாதிக்காத அளவிற்குரிய கிரீம் உள்ளது. 
அதை உடலில் பூசிக்கொள்ளலாம். 
எல்லா நேரங்களிலும் முழுக்கை சட்டை அணிந்து கொள்ளவேண்டும். 
கால்களில் சாக்ஸ் அணிந்து கொள்ளலாம்.
 கொசு கடிப்பதால் தான் மலேரியா, 
டெங்கு, யானைக்கால் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன
 என்பது குறிப்பிடத்தக்கது”
மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் மாலை அணிந்ததும் அந்த 
பழக்கத்தில் இருந்து விடு பட்டுவிடுகிறார்கள். 
அவர்களுக்கு பயணத்தின் போது குறிப்பிடத்தக்க பாதிப்புகள் 
ஏதாவது ஏற்படுமா?
மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் 
அதை நிறுத்தும்போது சிலருக்கு `
வித்ட்ராயல் சிம்டம்ஸ்’ (Withdrawal Symptoms) ஏற்பட்டு 
உடல் பாதிப்பிற்குள்ளாகும். 
அதனால் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் 
பயணத்தில் நோய்வாய்ப்பட்டால்
 டாக்டரிடம் தனக்கு முன்பு குடிப்பழக்கம் இருந்ததைக்கூறி, 
சிகிச்சை பெற வேண்டும். 
வலிப்பு நோய் இருப்பவர்கள்
 டாக்டர்கள் அனுமதி பெற்றே பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
 அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் 
ஒரு நாள் கூட மருந்து சாப்பிடுவதை தள்ளிப்போடக்கூடாது”

ஆன்மிக பயணத்தின்போது அறிமுகமற்ற நீர்நிலைகளில்
 பக்தர்கள் குளிக்கிறார்கள். 
அப்போது அவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
பக்தர்கள் ஆற்றில் மிகக் கவனமாக குளிக்க வேண்டும். 
நீர் நிலைகளில் படகில் பயணம் செய்வதாக இருந்தால் 
`லைப் ஜாக்கெட்’ அணிந்துகொள்ள வேண்டும். 
அடுத்தவர்கள் `டவலை’ பயன்படுத்தக்கூடாது. 
பொது தொலைபேசி ரிசீவரை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும்
. இருமல், தும்மல் ஏற்படும்போது
 துணியால் மூக்கையும், வாயையும் மூடிக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக `4 F ‘எனப்படும் FOOT CARE, FOOD CARE, FUN CARE, FLUCARE 
ஆகியவைகளில் பக்தர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்”

தரிசனம் முடிந்த பின்பு மலையில் இருந்து வேகமாக இறங்கலாமா?
வேகமாக இறங்கக்கூடாது.
 மலை ஏறுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறோமோ 
அதே அளவு நேரத்தை இறங்கவும் எடுத்துக்கொள்ள வேண்டும். 
செங்குத்தான மலைகளில் ஓடி வேகமாக இறங்கி வந்தால் 
தசை பிடிப்பு ஏற்பட்டு விடக்கூடும். 
சபரிமலை பயணம் மட்டுமின்றி 
திருமலை போன்ற மலைச்சார்ந்த ஆன்மிகப் பயணம், சுற்றுலா 
மேற்கொண்டாலும் மேற்கண்டவைகளை கடைப்பிடிக்க வேண்டும். 
ஆரோக்கிய பயணமே, முழு ஆனந்தத்தை நமக்கு தரும்”

வெள்ளி, நவம்பர் 18, 2011

சபரி மலை வழிகள்

போக்குவரத்து தகவல்கள் -

சபரி மலை வழிகள்


சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பக்தர்கள் 


அடர்ந்த காட்டு வழியாக ஆபத்தான பயணம் செய்து 


ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டி இருந்தது.


 எனவே மண்டலபூஜை-மகரவிளக்கு நடைபெறும் சமயத்தில் , 


மன்னரகுளஞ்சி-சாலக்கயம் சாலை வழியாக


 5000 பக்தர்களே தரிசனம் செய்து வந்தனர். 


ஆனால் இப்போது சபரிமலைக்கு செல்ல 


எருமேலி, வண்டிபெரியார், சாலக்கயம் ஆகிய 


மூன்று பாதைகளும் சரிசெய்யப்பட்டு 


சாலை அமைக்கப்பட்டுள்ளது. 


இதனால் சுமார் 4 கோடிக்கும் மேலான பக்தர்கள் 


இந்த மூன்று வழிகளில் சென்று 


ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.

1. எருமேலி வழியாக பெரிய பாதையில் நடந்து செல்பவர்கள் அடர்ந்த காடு மற்றும் மலை வழியாக


 61 கி.மீ. பயணம் செய்தால் சபரிமலையை அடையலாம்.

2. குமுளியிலிருந்து கோட்டயம் செல்லும் வழியில் 


94. கி.மீ தூரத்தில் வண்டிப்பெரியார் உள்ளது. 


அங்கிருந்து 12.8 கி.மீ. தூரம் சென்றால் 


சபரிமலையை அடையலாம்.

3.சாலக்கயத்திலிருந்து சபரிமலை செல்வது தான்


 மிக எளிதான வழி. 


சாலக்கயத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் பம்பை உள்ளது. 


பம்பையிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் சபரிமலை உள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து

1. செங்கோட்டை-புனலூர்-பத்தனம்திட்டா வழி - 170 கி.மீ.

2. குமுளி-வண்டிபெரியார்-எருமேலி-பிலாப்பள்ளி - 180 கி.மீ.


சபரிமலைக்கு கோட்டயம் மற்றும் செங்கனூரிலிருந்து 


புனலூர் வரை ரயிலிலும், 


புனலூரிலிருந்து பம்பைக்கு பஸ்ஸிலும் செல்லலாம்.

சபரிமலைக்கு திருவனந்தபுரம், கொச்சி, நெடும்பாசேரி வரை விமானத்திலும், 


அங்கிருந்து பம்பைக்கு பஸ் மற்றும் கார் 


மூலமாக செல்லலாம்.

கோவை, பழநி, தென்காசி போன்ற இடங்களிலிருந்து வரும் கேரள அரசு பஸ்கள் பம்பை வரைக்கும் செல்லும். 


தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களிலிருந்து வரும் 


பஸ்கள் நிலக்கல் வரை மட்டும் அனுமதிக்கப்படும். 


அங்கிருந்து பம்பைக்கு 


கேரள அரசு பஸ்களில் மட்டுமே செல்ல முடியும்.

புறப்படும் இடம்சேரும் இடம்தூரம்

எருமேலி

பம்பா

56 கி.மீ.

கோட்டயம்

எருமேலி

72 கி.மீ.

கோட்டயம்

பம்பா

128 கி.மீ.
செங்கனூர்
பம்பா
93 கி.மீ.

திருவல்லா
பம்பா99 கி.மீ.
எர்ணாகுளம்பம்பா(வழி)
கோட்டயம் 
200   கி.மீ.
ஆலப்புழாபம்பா
137 கி.மீ.
புனலூர்பம்பா
105 கி.மீ.
பத்தனம்திட்டாபம்பா69 கி.மீ.
பந்தளம்பம்பா
84 கி.மீ.
திருவனந்தபுரம்பம்பா
175 கி.மீ.
எர்ணாகுளம்
எருமேலி (வழி)பாளை, பொன்குன்னம்
175கி.மீ.

சென்னையிலிருந்து

1. சென்னையிலிருந்து சபரிமலை தூரம் 780 கி.மீ

2. சென்னையிலிருந்து பம்பைக்கு மதியம் 2 மணி முதல் 


இரவு 8 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும்


 சிறப்பு அரசு பஸ் விடப்படுகிறது.(தேனி, கம்பம் வழியாக)

3. சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் 


மதியம் 3.25 மணிக்கும், 


சென்னை - திருவனந்தபுரம் மெயில் 


இரவு7.45 மணிக்கு புறப்படுகிறது. 


கோட்டயத்தில் இறங்க வேண்டும்.

பாண்டிச்சேரியிலிருந்து

பாண்டிச்சேரியிலிருந்து சபரிமலைக்கு 3 வழிகளில் செல்லலாம்.

1. பாண்டி - விழுப்புரம் - திருச்சி - மதுரை- குற்றாலம் - புனலூர் 


- பம்பை 650 கி.மீ

2. பாண்டி - விழுப்புரம் - திருச்சி - திண்டுக்கல்- குமுளி - 


எருமேலி- பம்பை 625 கி.மீ

3. பாண்டி - விழுப்புரம் - சேலம் - கோயம்புத்தூர் - குருவாயூர் - 


கோட்டயம் - எருமேலி-பம்பை 750 கி.மீ

ரயில் வழி....

கடலூரிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் 


எதுவும் இயக்கப்படவில்லை.


இரவு 8 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு 


விழுப்புரம் வழியாக செங்கோட்டை செல்லும் 


பொதிகை எக்ஸ்பிரசில் சென்று 


அங்கிருந்து சபரிமலைக்கு செல்லலாம்.

வேலூரிலிருந்து

1. வேலூர் - ஆம்பூர்-வாணியம்பாடி - திருப்பத்தூர் - தர்மபுரி - பவானி - மேட்டூர் - பெருந்துறை - கோவை - பாலக்காடு - 


குருவாயூர் - சோட்டானிக்கரை - வைக்கம் - கோட்டயம் - 


எருமேலி - பம்பை - சபரிமலை 830 கி.மீ

2. வேலூர் - திருவண்ணாமலை - திருச்சி - மதுரை - குற்றாலம் 

செங்கோட்டை- கோட்டயம் - வடசேரிக்கரா - பம்பை - 


சபரிமலை 760 கி.மீ

3. வேலூர் - திருவண்ணாமலை - திருக்கோயிலூர் - மடப்பட்டு 


- உளுந்தூர்பேட்டை - திருச்சி - திண்டுக்கல் - தேனி - கம்பம் - 


எருமேலி - பம்பை - சபரிமலை 689 கி.மீ

ஈரோட்டிலிருந்து

ரயிலில் செல்பவர்கள், ஈரோடு வழியாக திருவனந்தபுரம் செல்லும் 


அனைத்து ரயில்களிலும் சென்று, 


செங்கனூர் இறங்கி, 


அங்கிருந்து சபரிமலை செல்லலாம்.

ஈரோட்டிலிருந்து நேரடி பஸ் வசதி இல்லை.


 சேலம் - குருவாயூர், சேலம் - எர்ணாகுளம் 


அரசு விரைவு பஸ்கள் ஈரோடு வழியாக செல்கின்றன. 


குருவாயூர் அல்லது எர்ணாகுளம் சென்று 


அங்கிருந்து சபரிமலை செல்ல வேண்டும்.

இந்த பஸ்களின் விபரம்: 


சேலம் - குருவாயூர் வழி: ஈரோடு, கோவை, 


பாலக்காடு, திருசசூர்.


 (ஈரோட்டிலிருந்து எர்ணாகுளம் தூரம்: சுமார் 310 கி.மீ.) 

கோவையிலிருந்து

ரயிலில் செல்பவர்கள், கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் 


அனைத்து ரயில்களிலும் சென்று, 


செங்கனூர் இறங்கி, அங்கிருந்து சபரிமலை செல்லலாம்.

கோவையிலிருந்து 3 வழிகளில் சபரிமலை செல்லலாம்.

1. கோவை - திருச்சூர் - பெரும்பாவூர் - தொடுபுழா - 


ஈராட்டுபேட்டா - காஞ்சிராபள்ளி - எருமேலி - சாலக்கயம் - 


சபரிமலை 330 கி.மீ

2. கோவை - திருச்சூர் - எர்ணாகுளம் - அரூர் - சேர்த்தலை - 


ஆலப்புழை - பத்தனம்திட்டா - பம்பை - சபரிமலை 380 கி.மீ

3. கோவை - பாலக்காடு - எர்ணாகுளம் - கோட்டயம் - 


திருவல்லா - பந்தனம்திட்டா - பம்பை - சபரிமலை 360 கி.மீ

திருச்சியிலிருந்து

திருச்சியிலிருந்து மணப்பாறை, திண்டுக்கல், வத்தலக்குண்டு, பெரியகுளம், தேனி, உசிலம்பட்டி, கம்பம், குமுளி வரை 


பஸ்கள் இயக்கப்படுகின்றன.

1. திருச்சி - குமுளி பயண தூரம் 241 கி.மீ

2. குமுளியில் இருந்து வண்டிப்பெரியார், பாம்பனாறு, 


முண்டக்கயம், காஞ்சிரம்பள்ளி, எருமேலி வழியாக பம்பை 


வரை கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 


குமுளி - பம்பா பயண தூரம்: சுமார் 115 கி.மீ
 
திருநெல்வேலியிலிருந்து

ரயிலில் செல்பவர்கள்,

சென்னையிலிருந்து திருநெல்வேலி வழியாக

குருவாயூர் எக்ஸ்பிரசில் செங்கனூரில் இறங்கி,

அங்கிருந்து பஸ்சில் சபரிமலை செல்லலாம்.

திருநெல்வேலியிலிருந்து பஸ்சில் 2 வழிகளில்

சபரிமலை செல்லலாம்

1. திருநெல்வேலி - செங்கோட்டை - அச்சங்கோவில் -

ஆரியங்காவு- புனலூர் - பத்தனம்திட்டா - பம்பை -

 சபரிமலை 228 கி.மீ

2, திருநெல்வேலி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் -

கொட்டாரக்கரை-சாலக்கயம் - பம்பை -

சபரிமலை 329 கி.மீ

மதுரையிலிருந்து....

மதுரையிலிருந்து பஸ்சில் எருமேலியை அடையும் வழிகள்.

1. மதுரை - நாகர்கோவில் - திருவனந்தபுரம் - - கொட்டாரக்கரா

- பந்தளம் - எருமேலி 474 கி.மீ

2. மதுரை - குற்றாலம் - செங்கோட்டை - அச்சங்கோவில் -

ஆரியங்காவு - குளத்துப்புழை-எருமேலி 385 கி.மீ

3. மதுரை - கம்பம் - குமுளி - வண்டிப்பெரியார் - காஞ்சிரப்பள்ளி -
எருமேலி 253 கி.மீ

எருமேலியிலிருந்து பம்பைக்கு ரான்னிவழி - 80 கி.மீ

4.எருமேலியிலிருந்து காட்டுவழி (பெரியபாதை) காளகட்டி,

அழுதா, கரிமலை, பம்பை, சபரிமலை வரை 56 கி.மீ

5. பம்மை - சபரிமலை 5 கி.மீ

6. மதுரையிலிருந்து பம்பைக்கு நாள்தோறும்

அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் செல்கிறது.

ரயில் வழி....

1. மதுரையிலிருந்து சபரிமலை சென்றடைய

நேரடி ரயில் வசதி இல்லை.

இரவு 8 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும்

பொதிகை எக்ஸ்பிரஸ்

காலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும் .

அந்த ரயிலில் செங்கோட்டை சென்று

அங்கிருந்து சபரிமøக்கு செல்லலாம்.

2. மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு

காலை 6.30 மணி, 11 மணி, மாலை 5 மணிக்கு

பாசஞ்சர் ரயில் உள்ளது.

அந்த ரயிலில் செங்கோட்டை சென்று

அங்கிருந்து சபரிமøக்கு செல்லலாம்.

கேரள பஸ் சர்வீஸ்

சபரிமலை சீசன் ஆரம்பமானதும்

திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம் திட்டா, பந்தளம்,

கொட்டாரக்கரை, எர்ணாகுளம், எருமேலி போன்ற

இடங்களிலிருந்து சிறப்பு பஸ் இயக்கப்படும்.

வழக்கமான கட்டணத்திலிருந்து 30 சதவீதம்

கூடுதலாக வசூலிக்கப்படும்.

சபரிமலைக்கு முக்கிய வழிகளும் தூரமும்

கோட்டயம் வழி

1. கோட்டயம் - கோழஞ்சேரி - ரான்னி - பம்பை - 119 கி.மீ

2. கோட்டயம் - கொடுங்கூர் - மணிமல - பம்பை - 105 கி.மீ

3. கோட்டயம் - மணிமலை - அத்திக்கயம் - பம்பை - 103 கி.மீ

4. கோட்டயம் - பொன்குன்னம் - எருமேலி - பிலாப்பள்ளி -

பம்பை - 90 கி.மீ

எருமேலி வழி

5. எருமேலி - ரான்னி - வடசேரிக்கரை - பம்பை - 76 கி.மீ

6. எருமேலி - கண்ணமலை - பம்பை - 56 கி.மீ

7. எருமேலி - அத்திக்கயம் - பெருநாடு - பம்பை - 64 கி.மீ

8. எருமேலி - செத்தோங்கரை - அத்திக்கயம் - பம்பை - 69 கி.மீ

பந்தளம் வழி 

9.பந்தளம்- பத்தனம்திட்டா - வடசேரிக்கரை - பம்பை - 84 கி.மீ

செங்கோட்டை வழி:

10. செங்கோட்டை - புணலூர் - பத்தனம்திட்டா -

பம்பை - 170 கி.மீ

11. குமுளி - வண்டி பெரியாறு - எருமேலி - பம்பை - 180 கி.மீ

12. நாகர்கோவில் - திருவனந்தபுரம் - பத்தனம்திட்டா -

வடசேரிக்கரை - பம்பை - 225 கி.மீ.

நன்றி ---தினமலர் 

வியாழன், நவம்பர் 17, 2011

கார்த்திகை மாதம்

கார்த்திகை மாதத்தில் சூரியனின் நிலை


பெரும்பாலான தமிழ் மக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் 


மரபுவழி நாட்காட்டியின்படி ஆண்டின் எட்டாவது மாதம்கார்த்திகை ஆகும்.


 தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும். 


சூரியனானது தமிழில் தேள் என்று சொல்லப்படும் 

விருச்சிக இராசியுள்   புகுந்து அங்கே பயணம் செய்யும் காலமான 


29 நாள், 30 நாடி அல்லது நாழிகை, 24விநாடி அளவே இம் மாதமாகும். 


வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை 


உடையதாகக் எடுத்துக்கொள்ளப்படுகிறது.


மாதங்களில் கார்த்திகை மாதம் மன உறுதி தரும் என்பது ஐதீகம். 


விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில்


 மனசேர்க்கை, உடல்சேர்க்கை, கர்ப்பதானம் 


ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. 


எனவே, கார்த்திகை மாதத்தைத் "திருமண மாதம்" என்று


 இந்து சாஸ்திரம் கூறுகிறது.

கார்த்திகை மாத மகிமை :

கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் 


சூரிய உதயத்தின்போது நீராடுபவர்கள்


 சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய


 புண்ணிய பலனை அடைவார்கள்.

விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில்


 புஷ்பங்களால் அர்ச்சித்து


 பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய 


அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.

கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை 


துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள்,


 பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும்


 ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.

கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள்


 பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.


 கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் இல்லங்களில்


 தீபங்களை ஏற்றி வழிபடுபவர்கள் புண்ணிய பலனை அடைவர்.

கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து 


விரதம் அனுசரிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு 


விஷ்ணு பதத்தை அடைவார்கள். 


கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் 


புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

திருவண்ணாமலை தீபம் :

கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று


 சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்திலிருக்கும் போது


 கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது. 

பஞ்சபூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் 


இவைகளால் ஆனதே பிரபஞ்சம். 


அவற்றுள் நெருப்பை வழிபடுவதுதான் தீபத் திருவிழா.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில்


 மகா தீபம் ஏற்றப்படுவது 


இக்கார்த்திகை மாதத்தில்தான். 


இந்த ஆண்டு தீபத் திருநாள் 


நவம்பர் 24-ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.


 தீபத் திருவிழா என்றதுமே நம் நினைவில் வந்து நிற்பது 

திருவண்ணாமலை திருத்தலம்தான். 


திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 


தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப் பெரிய உற்சவங்களில் ஒன்று. 

இவ்விழா பதினேழு நாட்களுக்கு


 பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. 
துளசி விவாகம் (உத்வான துவாதசி):


 கார்த்திகை மாதம் வளர்பிறை 11ம் நாள் வருவது துளசி விவாகம். 


இந்துக்கள் துளசியை (செடி) தெய்வமாகப் போற்றுகின்றனர். 


துளசிக்கும் மகாவிஷ்ணுவுக்கும்


 திருமணம் நடக்கும் நாள்தான் துளசி விவாகம். 


மத்வ மதத்தினர் உத்வான துவாதசி என்கின்றனர். 

 துளசி மகாலட்சுமியின் தங்கை.  


துளசிக்கோ மகாவிஷ்ணு மீது பிரியம். 


ஆனால் மகாலட்சுமிக்கு ஏற்கெனவே மகாவிஷ்ணுவுடன் 


திருமணம் நடந்துவிட்டது. 


தங்கையே தனக்கு பாதகமான எண்ணங்களுடன்


வலம் வருவதைக் கண்டு வெகுண்டெழும் மகாலட்சுமி


 செடியாக மாறுமாறு தங்கைக்கு சாபமிடுகிறாள்.


 சாபத்தினால் துளசி செடியாக மாறினாலும் 


அவளது அன்பை ஏற்கும் மகாவிஷ்ணு 


தான் சாலிகிராம கல்லாக இருக்கும்போது 


துளசியை தன்னுடனே இருக்குமாறு செய்தார். 


அதனால்தான் இன்றும் நாம் வீட்டில் 


சாலிகிராமம் வைத்து வழிப்படும்போது கூடவே


 துளசி இலைகளும் வைத்து வழிப்படுகிறோம். 

இன்னொரு கதை


 துளசி, ஜலந்தர் எனும் அரக்கனின் மனைவியாக இருக்கிறாள்.


 இருப்பினும் அவள் விஷ்ணுவின் பரம பக்தை. 


அவளது பக்தியும், பதிவிரதைத்தனமும்


 ஜலந்தர் பல கொடுமைகள் செய்து வந்தாலும்


 யாரும் அவனை அழித்துவிட முடியாதப்படி காக்கிறது. 


அழிக்கும் கடவுளான சிவப்பெருமானால் கூட 


அவனை ஒன்றும் செய்ய முடிவதில்லை. 


அதனால் அவர் கடைசியில் மகாவிஷ்ணுவிடமே யோசனை கேட்கிறார்.

வில்லாதி வில்லனாகிய மகாவிஷ்ணுவோ 


வில்லனுக்கு வில்லனாக சிந்தித்து திருவிளையாடல் புரிகிறார். 


அதனால் அவர் அவள் கணவன் ஜலந்தரின் உருவம் கொண்டு 


அவளுடன் உறவுக் கொள்கிறார். 


அதனால் அவளது புனிதத்தன்மை பாதிக்கப்பட்டதால் 


ஜலந்தர் கொல்லப்படுகிறான். 


இதை அறிய வரும் துளசி மிகுந்த கோபம் கொண்டு


 கரிய நிற கல்லாக மாறுமாறும் ,


அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து


 அவர் மனவேதனை அடைவாரென்றும் மகாவிஷ்ணுவுக்கு சாபமிடுகிறாள்.


 பிறகு ஜலந்தருடன் அவளும் உடன்கட்டை ஏறி


தன்னை மாய்த்துக் கொள்கிறாள். 

அவளிடம் சாபம் பெறும் விஷ்ணுவோ சாலிகிராமக் கல்லாக மாறுகிறார்.


 கூடவே தன் மீது பக்தி கொண்டிருந்த துளசியை 


அடுத்தப் பிறவியில் செடியாகப் பிறக்க வைத்து 


கார்த்திகை மாதம் வளர்பிறை 11ம் நாள் 


பிரபோதினி ஏகாதசியில் அவளை மணமுடிக்கிறார்.

இப்பண்டிகை ஆண்டுதோறும் தீபாவளி முடிந்து வரும் 


வளர்பிறையில் துவாதசியன்று வரும்.


 இந்நாளில் துளசிக்கும் மகாகவிஷ்ணுவுக்கும்


 இந்து முறைப்படி திருமணம் நடத்தி வைக்கிறோம்.


 வீடுகளில் துளசி பிருந்தாவனம் வைத்திருப்பவர்கள் 


அதற்கு அலங்காரம் செய்து பூச்சூட்டி


 மஞ்சள் குங்குமம் வைத்து


 மாங்கல்யம் அணிவித்து பூஜை செய்வர்.


 பாயாசம் செய்தும் நைவேத்தியம் செய்வர், 

கார்த்திகை தீபம்:
 


இது கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று


திருவண்ணாமலையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 


ஒருமுறை பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும்


 யார் உயர்ந்தவர் என போட்டி எழுகிறது. 


அப்பொழுது சிவப்பெருமான் தனது தலை எது 


கால் எது என கண்டுப்பிடிக்குமாறு இருவரிடமும் கூறுகிறார். 


ஆனால் அவ்விருவருமே அதில் தோற்றுவிடுகின்றனர். 


அப்பொழுது அவர்களுக்கு தீபஜோதியாய் சிவபெருமான்


 காட்சியளித்த இடம் திருவண்ணாமலை என்பதால் 


அண்ணாமலை தீபம் என்றே இதை அழைகிறோம். 

இதே நாளில் பார்வதி தேவி 


ஆறு குழந்தைகளாக இருக்கும் முருகப்பெருமானை


 ஒரே உருவமாக மாற்றி ஆறுமுகத்தானை உருவாக்கியதால் 


கார்த்திகை தீபத் திருநாள் 


முருகன் கோயில்களிலும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.


 இந்நாளில் வீடுகள் தோறும் 


அகல்விளக்குகள் ஏற்றி வைத்து கொண்டாடுகின்றனர். 


கோயில்களில் ஜோதி ஸ்வரூபமாய் இருக்கும் இருக்கும் 


சிவனைக் குறிப்பிடும் வகையில்


 சொக்கப்பனைக் கொளுத்தி வழிப்படுகின்றனர்.