ஐப்பசி மாதத்தில் சூரியனின் நிலை. |
அதைவிட்டு வெளியேறும் வரையிலான
30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்
துலா மாதம்' என்று போற்றப்படும் ஐப்பசி மாதத்தில்
பகலும், இரவும் சமமாக இருக்கும்.
அதனால்தான் அது, "துலா (தராசு) மாதம்' என்று பெயர் பெற்றது.
துலா ஸ்நானம்
ஐப்பசி மாதத்தில் காவிரி நதியில் நீராடுவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.
கங்கை நதியைவிட காவிரி, ஐப்பசியில் அதிகம் புனிதம் பெறுவதாக
சாத்திர நூல்கள் கூறுகின்றன.
ஐப்பசி மாதத்தில் மாயூரம் காவிரி நதிக்கரையோரம் உள்ள
நந்திக்கட்டத்தில் கங்கையானவள் நீராடுகிறாள்.
மேலும் பாரதத்தில் உள்ள அனைத்து நதிகளும் அங்கு நீராடி,
தங்களிடம் மக்கள் தொலைத்துச் சென்ற
பாவங்களைப் போக்கிக் கொள்கின்றன
என்றும் புராணங்கள் கூறுகின்றன.
அதனால்தானோ என்னவோ,
""ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமோ?'' என்றொரு பேச்சு வழக்கு உள்ளது.
இத்திருத் தலத்தில் ஐப்பசி இறுதியில் நடைபெறும்
"கடைமுக தீர்த்தவாரி' மிகவும் சிறப்புடையது.
விஷ்ணுவும், சிவனும், தேவர்களும் இந்த இடத்தில் நீராடியதாக ஐதீகம்.
விஷ்ணுவுக்கு வீரஹத்தி நீங்கி, முகம் பொலிவு பெற்றது.
நரகாசுரனைக் கொன்றதால்,
விஷ்ணுவுக்கு வீரஹத்தி தோஷம் ஏற்பட்டது.
இந்த தோஷம் ஏற்பட்டால் உடலும், முகமும் களை இழந்து விடும்.
இதைப் போக்க என்ன வழி என,
சிவபெருமானிடம் ஆலோசனை கேட்டார்.
"இந்த சம்பவம் நிகழ்ந்தது துலா மாதத்தில்.
இந்த மாதம் முழுவதும், சூரிய உதயத்தில் இருந்து,
ஆறு நாழிகை (144 நிமிடம்) வரை,
இவ்வுலகிலுள்ள, 66 கோடி தீர்த்தங்களும்
காவிரியில் வாசம் செய்யும்.
அந்த நேரத்தில் அதில் நீராடினால் தோஷம் நீங்கும்...' என்றார்.
விஷ்ணுவும் அவ்வாறே நீராடி, தோஷம் நீங்கப் பெற்றார்.
தன் மைத்துனருடன் சிவனும் நீராட அங்கே வந்தார்.
சிவ விஷ்ணு தரிசனத்தை ஒரே நேரத்தில் பெற்ற மகிழ்ச்சியில்,
எல்லா தேவர்களும் நீராடினர்.
எனவே, காலை, 6:00 மணியில் இருந்து, 8:15 மணிக்குள்
இந்த மாதம் முழுவதுமே காவிரியில் நீராடலாம்.
ஐப்பசி மாதப்பிறப்பன்று எல்லா சிவாலயங்களிலும்,
சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்வர்.
அன்று சிவன், காவிரி ஸ்நானம் செய்வதாக ஐதீகம்.
ஐப்பசி மாதத்தில்தான் தீபாவளிக்காக கங்காஸ்நானமும் செய்கின்றனர்.
முருகப் பெருமானுக்குரிய கந்தசஷ்டியும் இம்மாதத்தில் வருவதால்,
திருச்செந்தூரில் கடல் ஸ்நானம், நாழிக்கிணறு ஸ்நானம்
விசேஷமாக இருக்கிறது
. மொத்தத்தில், இது ஒரு புண்ணிய ஸ்நான மாதம்.
ஸ்ரீரங்கத்தில் அருள் புரியும் ஸ்ரீரங்கநாதருக்கு
ஐப்பசி மாதத்தில் தங்கக் குடத்தில்
ஸ்ரீரங்கம் தென்கரையில் ஓடும் காவிரி நதியிலிருந்து
திருமஞ்சனத்திற்கு யானை மீது தீர்த்தம் கொண்டு வருவார்கள்.
இது பெருமாளுக்கு நடைபெறும் "துலா ஸ்நானம்' ஆகும்.
பார்வதி தேவி, விரதம் கடைப்பிடித்து
சிவபெருமானின் உடலில் சரிபாதி இடத்தைப் பெற்றது
துலா மாதமான ஐப்பசியில் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
கங்கையாகிறாள் காவிரி:-
ஐப்பசி மாத அமாவாசை அன்று காவிரி நதியில் நீராடினால்
கங்கையில் நீராடிய பலன் கிட்டும்.
அன்று "காவிரியானவள் கங்கையாக மாறுகிறாள்' என்று
காவிரி புராணம் உரைக்கின்றது.
அன்று மறைந்த முன்னோர்களுக்கு காவிரி நதிக்கரையில்
நீர்க்கடன், தர்ப்பணம், வழிபாடுகள் செய்ய உகந்த நாள் என்பர்.
கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி விரதம் ஆகிய விரதங்கள்
ஐப்பசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
திருப்பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமி,
மகாவிஷ்ணுவிற்கு மாலை சூடிய நாள்,
ஓர் ஐப்பசி மாத சதுர்த்தி நாள் ஆகும்.
இந்த நாளில்தான் ராமபிரான் பதினான்கு ஆண்டுகள்
வனவாசம் அனுபவித்த பின்,
சீதாப் பிராட்டி மற்றும் லட்சுமணனுடன் அயோத்திக்கு வந்தார்.
தீபாவளி:-
இதே ஐப்பசி சதுர்த்தசி நாளில்தான் நரகாசுரன்,
ஸ்ரீகிருஷ்ணரின் தேவியான சத்தியபாமாவினால் கொல்லப்பட்டான்.
அந்த நாளே தீபாவளியாக மாறியது.
ஐப்பசிமாத திருவோணநட்சத்திரத்தில் பொய்கைஆழ்வாரும்,
அவிட்ட நட்சத்திரத்தில் பூதத்தாழ்வாரும்,
சதய நட்சத்திரத்தில் பேயாழ்வாரும் அவதரித்தார்கள்.
மாமன்னர் ராஜராஜசோழன் சதயநட்சத்திரதினத்தில் பிறந்தார்
என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து ஆண்டுதோறும் ஐப்பசி மாதம்
தஞ்சாவூரில் இரண்டுநாள் சதயவிழா
கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
லெஷ்மி பூஜை:
இந்த மாதம் மற்றொரு விசேஷம் என்ன வென்றால
தீபாவளி அன்று லெஷ்மி பீஜை செய்வார்கள்.
வட இந்தியாவில் இப்பூஜை மிகவும் விமரிசையாக கொணடாடுவார்கள்.
வ்ணிகர்கள் தீபாவளி அன்று புது கணக்கு போடுவார்கள்
இந்த நன்னாளில் லஷ்மி பூஜை செய்வதால்,
வீட்டில் சகல ஐஸ்வரியங்களும்,
மகாலெட்சுமியின் பரிபூர்ண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
செல்வத்தை அள்ளி வழங்குவதில் வஞ்சனை காட்டாதவரும்,
மகாலெஷ்மியின் சகோதரர் ஆன குபேரரை வணங்க உகந்த நாள் ஆகும்.
வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என
காவிரியின் பெருமையை விவரிப்பதே துலா புராணம் ஆகும்.
இந்த மாதத்தில் தினமும் சூரிய உதயத்திற்கு முன்
காவிரியில் நீராடி புனிதமாவதே துலா ஸ்நானம் வழிபாடாகும்.
இதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி 2 நாட்களில் நீராடுவது மிகவும் சிறப்பு.
காவிரியில் புனித நீராடிய பிறகு
துலா புராணத்தினை முழுவதுமாகவோ அல்லது
ஒவ்வொரு பகுதியாகவோ தினமும் படிப்பது சகல நலன்களையும் தரும்.
ஐப்பசியில் அடைமழை என்பது
இப்போதெல்லாம் மிகக் குறைந்து விட்டது,
காடுகள் அழிந்து பல வீடுகள் முளைத்து வருவதும் இதற்குக் காரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக