வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும்.
இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர்.
இந்தியா முதற்கொண்டு பல நாட்டவரால் விரும்பி
உண்ணப்படும் உணவாக உள்ளது.
பண்டைய காலங்களில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில்
அரச வம்சத்தினர் தமது அழகை மெருகூட்டுவதற்காக
இக்காளானைத் தினமும் தங்கள் உணவில் சேர்த்து வந்தனர்.
இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும்,
சில விஷமற்றதாகவும் வளரும்.
விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும்,
அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.
காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது.
உலகில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள்உள்ளன.
அவற்றுள் 100 வகை காளான்கள் மட்டும்
நச்சுத் தன்மையற்றவையாகவும்,
உணவாகவும் பயன்படுத்தப்படக்கூடிய வகையாகும்.
இக்காளான்களில் 90 சதவீதம் ஈரப்பதமும்,
அதிகளவில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதமும்,
அமினோ அமிலங்களும் மற்றும் நுண் ஊட்டச் சத்துக்களும்,
வைட்டமின்களும் உள்ளன.
இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன.
இவற்றுள் மொக்குக்காளான், சிப்பிக்காளான், வைக்கோல் காளான் என்ற
மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது
பயன்கள்
காளான் என்பது சைவ பிரியர்களின் வரப்பிரசாதம்.
அனைவருக்குமே ஏற்ற வகையில் இயற்கை அளித்திருக்கும் உணவு
நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரத சத்து முதல்
பல்வேறு உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் குவிந்து கிடக்கின்றன
இன்று பரவலாக காணப்படும் இரத்த கொதிப்பு மற்றும் இரத்த கொழுப்பு
போன்ற உயிர் கொல்லி நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
அதற்கு தேவையான பொட்டாசியம் என்ற சத்து அடங்கியுள்ளதால்
தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும்
இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine)
எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள்
இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசøரைடு பாஸ்போலிட்
போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை
எந்த வித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி
பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது.
இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.
இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன்
இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது.
இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.
பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது
உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும்.
வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம்,
உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்.
இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால்
சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது.
இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.
இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை.
அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது.
அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான்.
100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது.
சோடியம் 9 மி.கி உள்ளது.
எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள்
போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும்
மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய
சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.
மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால்,
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.
எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.
மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள்
தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து
சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கும் இரத்தத்தில் குளுக்கோஸின்
அளவை கட்டுபடுத்த இது உதவுகிறது.
சர்க்கரை நோயைக் குணப்படுத்த தயாரிக்கப் படும் மாத்திரைகளில்
காளான் பொடிகள் பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியமான விஷயம்.
ஸ்ட்ரெஸ் என்ற மனச்சோர்வையும் போக்கும்
அறுமருந்தாகவும் இது செயல்படுகின்றது.
அனிமிக் என்ற இரத்த சோகையை கட்டுபடுத்தவும் இது உதவுகிறது.
புற்று நோய் நிவாரணியாகவும் பயன்படுகின்றது
இதில் அதிகம் நீர்சத்து இருப்பதால்,
உடல் எடையை குறைபவர்களுக்கு
ஏற்ற உணவாகும்.
காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால்
பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக