புதன், ஜூலை 06, 2011

விளையாட்டுகள்



நாட்டுப்புற விளையாட்டுகள் 


நாட்டுப்புற விளையாட்டுகளை ,"விளையாட்டுக்கள்" 

என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறோம்.

பொதுவாக விளையாட்டுக்கள் ஓய்வு நேரத்தை 

சுவாரசியமாக்கவே என்ற அளவில்தான் நினைக்கிறோம்.

ஆனால் இணையத்தில் இந்த பதிவை படித்த பின்,

நிறைய விசியங்களை ஆழ்ந்து உணர்ந்த போதுதான் 

தமிழர் வாழ்க்கை, இயற்கையோடு இயைந்து, 

உளநலம், உடல்நலம் இரண்டுமே மேம்பட 

நம் முன்னோர்கள் அமைத்து இருப்பது புரிகிறது.

இங்கு நான் விளையாட்டுக்கள் என்ற 

களத்தை மட்டுமே கொடுத்துள்ளேன்.

 அதன் தன்மைகள் நாம் இதுவரை சிந்திக்காத 

கோணத்தை, பரிமாணத்தை தருகின்றன.

விளையாட்டுகளை வகைப்படுத்தி விளக்குவது
 
தன்மையை உணர்ந்து கொள்வதற்குத் 


துணைசெய்யும். 

உடல் திறனையும் அறிவுத் திறனையும் ஒருசேர 

ஆக்கமுறச்செய்யும் ஊக்க சக்திகளாக அமைந்துள்ளன.  


இவை காலம், களம், பங்கு பெறுவோர், பால்,

வயது, பாடல், தன்மை, போட்டி, வரைபடம் என்று
 
பல்வேறுஅடிப்படைகளில் வகைப்படுத்தும் அளவிற்கு 

விரிந்த பரப்பைக்கொண்டவையாக உள்ளன.



கால அடிப்படை

 வேனிற் காலம்                               மழைக் காலம்
             

 வேனிற் கால
விளையாட்டுகள்:
புளியங் கொட்டை விளையாட்டுகள்,
கிட்டிப் புள், பச்சைக் குதிரை,
பந்து,     கபடி,     காற்றாடி,
கள்ளன்-போலீஸ், கண்ணாமூச்சி,
எலியும் பூனையும், பூசணிக்காய்
விளையாட்டு, பல்லாங்குழி, தாயம்,
பம்பரம், கும்மி, கோலாட்டம்.போன்றவை 


மழைக் கால
விளையாட்டுகள்:


பல்லாங்குழி, தாயம், தட்டா மாலை,
ஆடுபுலி ஆட்டம், சில்லுக் கோடு,
கொழுக்கட்டை.
போன்றவை 


ஆடுகளம்



 வீட்டிற்கு உள்ளே
(அக விளையாட்டுகள்)


வீட்டிற்கு வெளியே
(புற விளையாட்டுகள்)

 

பல்லாங்குழி, தாயம், தட்டா மாலை, ஒத்தையா? ரெட்டையா?, 


கரகரவண்டி, ஆடுபுலி ஆட்டம், கொழுக்கட்டை ஆகியவை 


சில அகவிளையாட்டுகள்.

பம்பரம், கிட்டிப் புள், கபடி, சில்லுக் கோடு, பந்து, காற்றாடி,


கள்ளன்-போலீஸ், பச்சைக் குதிரை, கும்மி, கோலாட்டம் ஆகியவை

சில புற விளையாட்டுகள்.


கருவிகள்


பம்பரம், பந்து,  காற்றாடி, சில்லுக் கோடு, 


ஒத்தையா?ரெட்டையா?, தட்டா மாலை,-----ஒரு கருவி 

 கிட்டிப் புள், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், தாயம்



நொண்டி, கோலாட்டம்------.ஒன்றுக்கு மேல் கருவிகள்




பங்குபெறுவோர்


     
சீதைப் பாண்டி, பட்டம், காற்றாடி, கரகர வண்டி.----- தனி நபர்

 பல்லாங்குழி, தாயம், பிஸ்ஸாலே, சில்லுக் கோடு, 



ஆடுபுலி ஆட்டம்,கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், 


ஒத்தையா? ரெட்டையா?, கொழுக்கட்டை.----- இருவர்

 பச்சைக் குதிரை, பம்பரம், கபடி, கண்ணாமூச்சி, பூசணிக்காய், -



எலியும்பூனையும், ஒருகுடம் தண்ணி ஊத்தி, குலைகுலையா முந்திரிக்காய்,       


கள்ளன்-போலீஸ், எறிபந்து, கும்மி, கோலாட்டம், சல்லிக் கட்டு, 


உறியடி, வழுக்கு மரம்.------ குழு




பால் மற்றும் வயது




 ஆடுபுலி ஆட்டம், கபடி, சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம், 



சிலம்பாட்டம், வண்டிப் பந்தயம்.------ ஆண்கள்


பல்லாங்குழி, தாயம், சில்லுக் கோடு, தட்டா மாலை, கும்மி,       

கோலாட்டம், பாண்டி.-------- பெண்கள்

கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை, பந்து, பச்சைக் குதிரை, பம்பரம்,       

புளியங் கொட்டை, கபடி, கள்ளன் போலீஸ்.------ சிறுவர் 

கண்ணா மூச்சி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், 

எலியும்பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி.------- சிறுமியர் 


 கரகர வண்டி, சில்லுக் கோடு, பூப்பறிக்க வருகிறோம், 
    

கிச்சுகிச்சுத் தாம்பாளம், பல்லாங்குழி, கொழுக்கட்டை---- இருபாலர்

பாடல் 


ஒரு குடம் தண்ணி ஊத்தி, பூப்பறிக்க வருகிறோம், 


குலைகுலையாமுந்திரிக்காய், பிஸ்ஸாலே, கண்ணா மூச்சி, 


கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்,கபடி, கொழுக்கட்டை, 


கும்மி, கோலாட்டம்.---------- பாடல் உள்ளவை

 பல்லாங்குழி, தாயம், ஒத்தையா? ரெட்டையா?, ஆடுபுலி ஆட்டம்,


சல்லிக்கட்டு, உறியடி, வழுக்கு மரம்----------------- . பாடல் இல்லாதவை


திறன்


கபடி, சிலம்பாட்டம், உறியடி, வழுக்கு மரம், இளவட்டக் கல்,       


பச்சைக் குதிரை, கும்மி, கோலாட்டம்.---------  உடல் திறன் 

பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம்--------- அறிவுத்திறன்


சல்லிக் கட்டு.----------------- வீர விளையாட்டு


செயல்கள்






 
பந்து, கிட்டிப்புள், கள்ளன்-போலீஸ்---- ஓடுதல்

 கள்ளன்-போலீஸ், எலியும் பூனையும், நொண்டி, கபடி-----
பிடித்தல் .

 கண்ணா மூச்சி, கள்ளன்-போலீஸ், கபடி, நொண்டி.----- 
தொடுதல்

 கள்ளன்-போலீஸ், கண்ணா மூச்சி------ 
ஒளிதல்

 கள்ளன்-போலீஸ், எறிபந்து, கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்----
தேடுதல் 

 கண்ணா மூச்சி, கள்ளன்-போலீஸ்----- 
கண்டுபிடித்தல்




வரைபடம்




 தாயம், ஆடுபுலி ஆட்டம், 



சில்லுக் கோடு, நொண்டி, கபடி.---  வரைபடம் உள்ளவை

 பூசணிக்காய், குலைகுலையா    முந்திரிக்காய், கண்ணா மூச்சி,
       



பச்சைக் குதிரை, சல்லிக் கட்டு, உறியடி.--- வரைபடம் இல்லாதவை

 மேற்கூறிய  வகைப்பாடுகள் அன்றி 



நேரம் , நடுவர், பார்வையாளர்,உடல் உறுப்பு 


என்ற முறையிலும் பலவாறு வகைப்படுத்தலாம்.

     எவ்வாறு வகைப் படுத்தினாலும்


விளையாட்டின் முக்கியக் கூறுகளான 


உடல் திறனும் அறிவுத் திறனும்


அனைத்து விளையாட்டுகளிலும் 


இடம்பெற்று இருப்பதைக் காணலாம்.

செவ்வாய், ஜூலை 05, 2011

மனிதர்களை அறிவோம்

 தனி மனித முயற்சியால் ஒரு தலித் காலனியில், அரசு உதவியின்றி

இயங்கி வருகிறது ஒரு நூலகம்.

இதை பார்த்ததும் உங்களுக்கு என்ன  தோன்றுகிறது?  ஆச்சிரியம்?

படித்துப் பார்த்தால், மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பது சத்திய

வாக்கு என்பதை உணர முடிகிறது.

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி, வடக்கு  இளையாற்றங்குடியை

சேர்ந்த விஜய் என்பவரின் கனவு நனவானதின் விளைவே இந்த நூலகம்.

காரைக்குடி பொது நூலகத்திற்குச் சென்றார்.

அங்கு அழகழகாய் அடுக்கி வைக்கப் பட்டுள்ள நூல்கள்,

அவற்றை ஆர்வமாய்ப் படித்துக்கொண்டு இருக்கும் வாசகர்கள்

இதை பார்த்ததும் ஏற்பட்ட பரவசம், ஏக்கமாய் மாறி

பின் அதுவே அவரின் கனவாய் ஆனது.

 ஒரு தலித் காலனியில் நூலகம் இருக்கக் கூடாதா?  என்கின்ற

இவரதின் கனவின் விஸ்வரூபமே இது.

இவர் வசதியனவரோ, அரசியல் செல்வாக்கோ உடையவரல்ல.  

தற்பொழுது திருப்பத்தூரில் உள்ள தனியார் கலைகல்லூரியில்

இளங்கலை வரலாறு பயின்றுவரும் ஒரு மாணவர்

இன்றைய காலகட்டத்தில் மாணவர் சமுதாயம் பல திசைகளில்

கவன சிதறலொடு இருக்கும் போது, இவர் மட்டும் ஆக்கப் பூர்வமாக

செயல்படுவதே மிகவும் பாராட்டுக்குறிய செயலாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இவர் நூலகம் அமைக்க நினைத்த

இடமோ  ஒரு    தலித் காலனி.

இதில் எவ்வளவு நடைமுறை சிக்கல்கள் இருக்கும்?????????

 அவர் சொல்லில்,

"எங்கள் ஊருக்கென கட்டப்பட்ட பொது பயன்பாட்டுக்கான கட்டிடம்

பன்னிரெண்டு வருடங்களாக எந்தப் பயனும் இன்றி கேட்பாரற்று

இருந்தது நினைவுக்கு வந்தது.

அதை சீர்படுத்தி நாம் ஒரு நூலகமாக பராமரித்தால் என்ன என்று

தோன்றியது.

என் ஆசையை அப்பொழுது என் ஆசிரியராக இருந்த முருகேசன்

அவர்களிடம் கூற, அவர் எனக்கு ஊக்கம் அளித்தார்.

ஊர்ப்பெரியவர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என்று அனைவரிடமும்

அந்த நூலக கட்டிடத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வாங்கி,

2008 ல் இருந்து இதை நல்ல முறையில் பராமரித்து வருகிறேன்."

இவரது அயராத முயற்சியாலும், முருகேசன் ஆசிரியர் கொடுத்த

ஊக்கத்தாலும் 'தமிழ்க் கோவில்' என்ற பெயரால் செயல்படுகிறது

விளையாடும் பிள்ளைகள் போகிற போக்கில் உள்ளே வந்து புத்தகங்கள்,

நாளிதழ்களில் படம் பார்த்துச் செல்கிறார்களாம்.

அதுவே அங்கு பெரிய விசியம்தானாம்.

இங்குள்ளவர்கள் படிப்பறிவு இல்லாத கூலி வேலை செய்பவர்கள்;

அவர்கள் பெயரை எழுதி பழக இப்போது இங்கு வருகிறார்களாம்.

அந்த ஊரில்,  படித்த அரசு உழியர்கள் விஜயனின் தந்தை வீரன் அய்யாவும்,

 அவரது சித்தப்பா நகராஜனும்தானாம்.

காலேஜ் போகிற முதல் ஆள் விஜயனாம்.

இந்தியாவின் ஆன்மா ??????????

அந்த காலனியில்  300 இருக்கிறார்கள்.

மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் வந்து படிக்கிறார்கள்.

[ போற்றத்தகுந்த மாற்றம்]

புத்தகங்கள்   தந்து உதவிய

இளையாற்றங்குடி ஜமீந்தார் திரு. ஆர்.சி. ராஜா,

டி. அழகாபுரி ,

ஆர்.எம். முத்தைய செட்டியார்

உட்பட உதவிய அனைவரையும் நன்றியுடன் கூறுகிறார்கள்.

ஆசிரியர் முருகேசன், 'இப்போதுள்ள சுமார் 2000 புத்தகங்கள் போதாது ;

இன்னும் வேண்டும்' என்கிறார்.

வேலை கிடைத்து வெளியூர் சென்று விட்டால் இந்த நூலகத்தை

பராமரிக்க முடியாது என்பதால், வெளியில் வேலைக்கு செல்ல மாட்டேன்

என்பதில் உறுதியாய் இருக்கிறார் விஜய்.

வாழ்க; வளர்க

அவரது லட்சியம் --------அந்த கிராமத்தை பெரியஅளவில்

வளரச்சி அடையச் செய்ய வேண்டும்;

அதற்கு கற்றறிந்த பெரியவர்களின் ஆலோசனைகள் வேண்டும் என்கிறார்.

கழிவறைகளே இல்லாத, அரசு கட்டி கொடுத்ததைக் கூட பயன்படுத்தாத

மக்களை முன்னேற்ற வேண்டும் என பாடுபடுகிறார்.

"இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும்;

சில நேரம் போட்டிகளுக்கு தயார் செய்யக்கூட புத்தகங்கள்

இல்லாமல் கஷ்டப்பட வேண்டிருக்கிறது;

என் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கு; பிள்ளைகளுக்கு சொல்லித்தரணும்;

வாசகர் வட்டம், பெரியவர்களின் சொற்பொழிவு என்று மாதம்

ஒரு முறை நடத்துவேன்;

அதைத் தொடரணும்;

முதலில் இந்த ஊரில் எல்லோரும் படிக்கணும்"

ஏக்கத்துடன் கூறுகிறார் விஜய்.

"கனவு காணுங்கள் " என்றார் திரு. அப்துல் கலாம் அவர்கள்.

விஜய் கனவு காண ஆரம்பித்து விட்டார்.

ஜெயிப்பது நிச்சியம்.

 இந்த நல்ல உள்ளத்திற்கு உதவ விரும்பும் உயர்ந்த உள்ளங்கள்

தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்;

முருகேசன்-  ----94886 22826

விஜய்------- 97871 44366

புத்தகங்கள் கொடுத்துக்கூட உதவலாம்.








பூரிகள்

பூரி, மிகவும் சுவையான, அடிக்கடி செய்யப்படாத ஒரு பதார்த்தம்.

பொதுவாக பூரி + உருளைக் கிழங்கு மசால்தான் மெனு.

பூரியும் கோதுமை மாவில் மட்டுமே செய்யப் படுகிறது.

ஒரு மாறுதலுக்காக, மாவுடன் வேறு சில பொருட்களைக் கலந்து

செய்யும் பூரி வகைகள் சிலவற்றை பார்க்கலாமா!!!!!!!


ஜீரக பூரி -

மைதா ----------------- 2 கப்

கெட்டித் தயிர் ----------- 1/2 கப்

ஜீரகம்-  --------------------- 1/2 tbs

எண்ணை அல் நெய் -- 1 tbs

உப்பு -- தேவைக்கு ஏற்ப

எண்ணை  ----- பொரிப்பதற்கு ஏற்ப

எல்லாவற்றையும் நன்கு கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து

கெட்டியாகப் பிசைந்து , ஒரு ஈரமான துணியில் சுற்றி வைக்கவும்.

15  நி பிறகு பூரியாகத் தேய்க்கவும்.

சூடான எண்ணையில்  பொரிக்கவும்.


கேரட் பூரி-

கோதுமை மாவு-------- 2கப்

துருவிய கேரட்-------   1/2கப்

இஞ்சி- பச்சை மிளகாய் விழுது ----1 ts

சீரகம்- -------------------1 ts

நெய் அல்   எண்ணை ----- 1 tbs

உப்பு------- தேவைக்கு ஏற்ப 

மல்லித் தழை-------  2 tbs

பொரிக்கத் தேவையான எண்ணை  ---

எல்லாவற்றையும் ஒன்றாகப் பிசைந்து பூரியாகப் பொரிக்கவும்.    


அப்பள பூரி- 

கோதுமை மாவு---- 2கப்

பொறித்தஅல்சுட்ட மசாலா அப்பளம் சிறுதுண்டுகளாக நொறுக்கியது-1 கப் 

உப்பு------- தேவைக்கு ஏற்ப 

எண்ணை --------- பொரிப்பதற்கு ஏற்ப

மாவை, உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன்   எண்ணை  சேர்த்து பிசைந்து வைக்கவும்.

சிறிய வட்டங்களாகத்  தேய்த்து, அதன் நடுவில் அப்பள துண்டுகளை

வைத்து மூடி, பூரிகளாகத் தேய்த்துப் பொரிக்கவும்.


ரவை பூரி-

கோதுமை மாவு------ 1 1/2 கப்

பாம்பே ரவை--------- 1/2 கப்

இஞ்சி- பச்சை மிளகாய் விழுது---1/2 ts

சீரகம் ----------1/2 ts

மல்லித் தழை ---1 ts

உப்பு ------ தேவைக்கு ஏற்ப

எண்ணை--------- பொரிப்பதற்கு ஏற்ப

எல்லாவற்றையும் நன்கு கலந்து பிசைந்து பூரிகளாகப் பொரிக்கவும்.


மசாலா பூரி-

 கோதுமை மாவு--------- 1கப்

கடலை மாவு-------------1 கப்

தயிர்-------------------------1/2 கப்

மிளகாய்த்தூள்-------------1 ts

மஞ்சள் தூள்----------------1 ts

சீரகம்--------------------------1 ts

சோம்பு-------------------------1/4 ts

ஓமம்----------------------------1/4 ts

கரம்மசாலாத்தூள்---------------1/4 ts

நெய் அல்  எண்ணை----------1 tbs

உப்பு------------------------     தேவைக்கேற்ப

பொரிக்க எண்ணை------ தேவையான அளவு

எல்லாப் பொருட்களையும் நன்கு கலந்து பிசைந்து ,

ஒரு ஈரத்துணியில் கால் மணி நேரம் வைக்கவும்.

பின் பூரிகளாகப் பொரிக்கவும்.


நன்றி- லேடீஸ் ஸ்பெசல்