வெள்ளி, மே 20, 2011

பூண்டு -- சமையல்

பூண்டு குழம்பு

தேவையான பொருள்கள்:

பூண்டு - மூன்று முழுதாக
கடுகு - கொஞ்சம்
சிறிய வெங்காயம் - இரண்டு கப்
தக்காளி - நான்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன
தனியா தூள் - இரண்டு டீஸ்பூன
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெந்தயம் - சிறிதளவு
புளி - எலுமிச்சை அளவு

செய்முறை:

எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் வெந்தயம்,
வெங்காயம்,பூண்டு முழுதாக சேர்த்து  வதக்கி
 பின் பொடியாக நறுக்கிய   தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து உப்பு, கொத்தமல்லி,
கறிவேப்பிலை அனைத்தும் போட்டு நன்கு வதக்கவும்

பிறகு   கெட்டியான   புளி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பாக அரை டீஸ்பூன் மிளகு தூள் போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.


பூண்டுகுழம்பு -மற்றொரு முறை


தேவையான பொருட்கள் :
புளி- ஒரு எலுமிச்சை அளவு
பூண்டு -இரண்டு
சின்ன வெங்காயம்- 6
தக்காளி- ஒன்று
தனியா- இரண்டு மேசைக்கரண்டி
மிளகாய்- பத்து
மிளகு-அரைத்தேக்கரண்டி
சீரகம்-அரைத்தேக்கரண்டி
சோம்பு-அரைத்தேக்கரண்டி
வெந்தயம்- அரைத்தேக்கரண்டி
மஞ்சத்துள் -ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஒரு கொத்து
பெருங்காயம்-அரைத்தேக்கரண்டி
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி


தனியா,மிளகாய்,மிளகு சீரகம், உரித்த பூண்டு ஆறு பற்கள் ஆகியவற் றை சிவக்க வறுத்து அரைத்து வைக்கவும்
புளியையும் தக்காளியையும் கரைத்து வைக்கவும்.
பூண்டு வெங்காயத்தை உரித்து
வெங்காயத்தை மட்டும் பொடியாக நறுக்கி வைக்கவும்.  
கடாயில் எண் ணெயை காயவைத்து அதில் கடுகு, சோம்பு கறீவேப்பிலையைப் போட்டு பொரியவிடவும்.
பின்பு வெங்காயத்தைப் போடவும்.
வெங்காயம் சிவந்ததும் அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும்.
பின்பு உரித்த பூண்டை போடவும்.
அதன் பிறகு புளிக்கரைசலை ஊற்றீ உப்பைப் போட்டு கொதிக்கவிடவும்
குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் மிதந்தவுடன் இறக்கி விடவும்.


பூண்டுகுழம்பு -மற்றொரு முறை


தேவையான பொருட்கள்

பூண்டு - 2 முழு பூண்டு
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - 2 அரை நெல்லிக்காய் அளவு
உப்பு - 11/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்சாம்பார்  மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு,
சீரகம்,
வெந்தயம்,
பெருங்காய பொடி,
கறிவேப்பிலை.

செய்முறை
பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 spoon எண்ணெய் ஊற்றி தாளிப்பு பொருட்களை போட்டு தாளிக்கவும்.
அதன் பிறகு பூண்டு,வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி,அதில் பாதியை எடுத்து அரைத்து கொள்ளவும்.
அதன் பிறகு புளி தண்ணிரை ஊற்றி கொதிக்க விடவும்.
 உப்பு ,மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் அனைத்தும் போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
10 நிமிடம் கழித்து தீயை குறைத்து வைத்து 3 spoon நல்லெண்ணெய் விட்டு நிறுத்தவும்.


பூண்டுகுழம்பு -மற்றொரு முறைதேவையானப் பொருட்கள்:


தக்காளி – 3

புளி – நெல்லிக்காய் அளவு

பூண்டு பல் – 20 அல்லது 25

சாம்பார் வெங்காயம் – 10 அல்லது 15

சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

நல்லெண்ணை – 2 டேபிள்ஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


செய்முறை:

புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி, புளித்தண்ணீரை தனியாக வைத்துக் கொள்ளவும்.

நான்கு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் தக்காளியைப் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு, இறக்கி வைக்கவும்.
ஆறியபின், வெந்த தக்காளியை எடுத்து தோலை உரித்து கரண்டியால் நன்றாக மசித்துக் கொள்ளவும். அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு கடுகு சேர்க்கவும்.
கடுகு வெடித்தவுடன், சீரகம், வெந்தயம், பெருங்காயம் சேர்க்கவும்.
 வெந்தயம் லேசாக சிவந்தவுடன், பூண்டை சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் சாம்பார் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு, கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும்.
அதில் புளித்தண்ணீர், தக்காளி விழுது, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளறி விடவும். குழம்பை மூடி கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும், அடுப்பை தணித்து, சிறு தீயில் வைத்து, குழம்பு சற்று கெட்டியானதும், இறக்கி வைக்கவும்.


செட்டிநாட்டு பூண்டு குழம்பு


தேவையானவை : 1

பூண்டு - 12 பல்

சின்னவெங்காயம் - 20

தக்காளி - 1 பெரியது

கரிவேப்பிலை - கொஞ்சம்

புளி - 1 எலுமிச்சியளவு

மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூண்

பெருங்காயம் - 1/4 டீஸ்பூண்

மிளகாய்பொடி - 1 டீஸ்பூண்

உழுந்து - 1 டீஸ்பூண்

கடுகு - 1 டீஸ்பூண்

தேங்காய்பால் - 2 டேபில் ஸ்பூண்

எண்ணெய் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு


தேவையானவை 2

மல்லி - 2 டேபிள்ஸ்பூண்

ஜீரகம் - 1 டீஸ்பூண்

கசகசா(வெள்ளை) - 1 டீஸ்பூண்

மிளகு - 1/4 டீஸ்பூண்

காய்ந்தமிளகாய் - 3

இஞ்சி - 1 துண்டு

எண்ணெய் - 1 டீஸ்பூண்

அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூண் எண்ணெய் ஊற்றி
தேவையானவை 2 ல் உள்ளவற்றை தனி தனியாக வறுத்து
 அதை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்து வைக்கவும்.

சின்ன வெங்காயம், பூண்டு(நீளவாக்கில்), தக்காளி நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூண் எண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்து, கரிவேப்பிலை போட்டு தாளிக்கவும் .

பின்னர் பூண்டு போட்டு சிறிது வதக்கி வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,காயம் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்னர் பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் புளி, உப்பு சேர்த்து வதக்கவும்
.தேங்காய் பால் சேர்த்து 1 கப் தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்து வற்றி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.


பூண்டுகுழம்பு -மற்றொரு முறை


 பூண்டு - 15 பல்


 வெங்காயம் - 1 (அ) சின்ன வெங்காயம் - 10

 தக்காளி - 2

 புளி தண்ணீர்

தேங்காய் பால் - 1 கப்

 கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க

 எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

 கறிவேப்பிலை, கொத்தமல்லி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

 மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

 மல்லி தூள் - 1 தேக்கரண்டி

 உப்பு

வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் நறுக்கவும்.
 எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

பூண்டு சிவக்க வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் தூள்கள், உப்பு சேர்த்து பிரட்டி தண்ணீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
பின் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
இதில் புளி தண்ணீர் விட்டு கெட்டியாக கொதித்ததும் எடுக்கவும்.

தேங்காய் பாலுக்கு பதிலாக தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம்.


பூண்டுகுழம்பு -மற்றொரு முறை

வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 25 பல் (தோல் நீக்கி நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
புளித்தண்ணீர் - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 அல்லது 1 1/2டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - சிறிது
தேங்காய் - 1 டீஸ்பூன்
(நன்கு வறுத்து அரைக்கவும்)

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருள்களை போட்டு, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி,
 தக்காளியும் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும், புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
அரைத்த விழுதை சேர்த்து, சிறிது நீர் சேர்த்து ,
 நன்கு கொதிக்க விட்டு எடுக்கவும்.

சாதம், உப்பு பருப்பு, பூண்டு குழம்போட நல்லா இருக்கும்.
செஞ்சு 2 நாள் கழிச்சு சாப்பிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
கத்தரிக்காய் அல்லது கோவைக்காய் சேர்த்தும் செய்யலாம்.


கருத்துகள் இல்லை: