ஞாயிறு, மே 29, 2011

விடுமுறை சுற்றுலா- வெள்ளோடு



ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

200 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து13 கி தொலைவிலும், ஈரோடு

ரெயில் நிலையதிலிருந்து10கி தொலைவில், சென்னிமலை செல்லும்

பாதையில் அமைந்துள்ளது.

நீர் வறச்சி காலங்களில் விவசாயம் செய்வதற்காக

ஒரு நீர் சேகரிப்புக் குளம்.

அதைச் சுற்றி நிறைய மரங்கள்.

பறவைகளின் சத்தம் தவிற வேறு வித சத்தமும் இல்லாத இடம்.

இவை அனைத்தும், ஈரோட்டிலிருந்து சென்னிமலை செல்லும் பாதையில்

வெள்ளோடு சரணாலயத்தில் உள்ளது.

வெள்ளோடு சரணாலயம் செல்வதற்கு,

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து மூலம் பயணம்

செய்யலாம்,

ஈரோட்டில் இருந்து வெள்ளோடு சரணாலயத்துக்கு பஸ் டிக்கெட் ரூ.4.

அல்லது வாகனங்கள் மூலம் செல்ல விரும்புபவர்கள். ஈரோடு ரயில்

நிலையத்தில் இருந்து சென்னிமலை பாதையில் 15 கி.மி

பயணம் செய்ய வேண்டும்.


வெளிநாட்டு பறவைகள் அக்டோபரில் வந்து முட்டையிட்டு குஞ்சு

பொறித்து மார்ச்சில் சொந்த நாடுகளுக்குச் சென்று விடும்.


கொசு உள்ளான், கூழக் கடா, நெடுங்கால் உள்ளான், வண்ண நாரை,

வெள்ளை அரிவாள்மூக்கன் போன்ற வெளிநாட்டு பறவைகள் வந்து,

மீண்டும் திரும்பிச் சென்று விடுகின்றன.


கடந்த 10 ஆண்டுகளில் 93 வகைகளை சேர்ந்த 31 ஆயிரம் வெளிநாட்டு

பறவைகள் மீண்டும் திரும்பிச் செல்லாமல் இங்கேயே தங்கி விட்டன.

பாம்புதாரா, நீர் காகம், பெரிய நீர்காகம், உண்ணி கொக்கு,

நீளவால் இலைக் கோழி, நாமக்கோழி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி

 மற்றும் பல்வேறு வகை சிட்டுக்குருவி ரக பறவைகள்தான்

இங்கேயே நிரந்தரமாக தங்கி இருக்கின்றன.

அனுமதி இலவசம்

சரணாலயம் பற்றிச் சொல்லுங்கள் என்று பணியாளரிடம் கேட்ட போது, 

" நீர் சேகரிப்பு குளத்திற்கு  வாய்காலில் வரும் நீரினாலும்,

மழையினாலும் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும்.

இங்கு 77.185 ஹெக்டர் பரப்பளவு உள்ளது.

110க்கு மேல் வகையான பறவைகள் வந்து செல்கின்றன.

வெளிநாட்டுப் பறவைகளில் ஆண்டிவாத்து,  வண்ண நாரை

பெலிக்கான் போன்ற பறவைகள் புதிதாக வந்திருக்கிறது.

சீசன் காலங்களில் பறவைகள் நிறைய வருகின்றது.

பறவைகளின் சீசன் காலம் ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை.

மற்ற காலங்களில் பறவைகள் குறைவாக இருக்கும்.

மாலை 5 மணி முதல் பறவைகள் தங்குவதற்கு வரும்போது

அனைத்து வகைகளையும் பார்க்கலாம்.

காலை 8 மணிக்கு மேல் பறவைகளில் சில வகைகள் மட்டுமே

பார்க்க முடியும்" என்றார்.


பார்வையாளர்களுக்கு பறவைகளைப் பார்த்து ரசிப்பதற்காக

ஆங்காங்கே   நிழற்குடை கள்  அமைக்கப்பட்டுள்ளது.

கழிப்பிட வசதிகள் உள்ளது.


அங்கு உள்ள பணியாளர்கள் பறவைகளைக் காப்பதற்காக

விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றார்களாம்.


நீர் காகம்,கொக்கு வகைகள் காலையில் கிளம்பிச் சென்று

மாலையில் மீண்டும் அங்கு வந்து விடுகின்றன.

ராக்கொக்கு பறவைகள் மாலையில் வெளியேறி

அதிகாலை சரணாலயம் திரும்புகிறது.

பறவைகளை காண விரும்பும் சுற்றுலா பயணிகள் காலை 6மணிக்கு

அல்லது மாலை 5 மணியில் இருந்து 6.30க்குள் வந்தால்

அனைத்து வகை பறவைகளையும் பார்க்க முடியும்

பறவைகளை காண வனத்துறை சார்பில்

தொலைநோக்கிகருவிஉடன் பார்வையாளர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு உணவகமும் உள்ளது.


ஈரோட்டை சுற்றி, பார்க்க பல இடங்களும் உள்ளது.

சென்னிமலை கோவில், ஈரோட்டிலுள்ள திண்டல் முருகன் கோவில்,

மிக பழமையான கோட்டைஈஸ்வரன் கோவில், பார்க், பவானி  கூடுதறை

சங்கமேஸ்வரர் கோவில், பவானிசாகர் அணை , கோபிசெட்டிபாளையம்

என பல இடங்கள் உள்ளது.

அதனால் சரியானபடி திட்டம் இட்டு சென்றால் விடுமுறை இனிமையாக

கழிக்கலாம்.

கருத்துகள் இல்லை: