வியாழன், மே 05, 2011

அக்னி நட்சத்திரம்

 
கோடை காலத்தில் உச்சக்கட்ட வெயில் தாக்கும் அக்னி நட்சத்திரம்
  04  -05-2011   தொடங்குகிறது

மே 4ல் ஆரம்பமாகி மே 28ம்தேதி வரை தொடர்கிறது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4 மாலை 6.36 மணிக்கு

துவங்குகிறது.

இந்த நாட்களில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும்.

அக்னி நட்சத்திர ஆரம்பநாளும் முடிவு நாளும் எல்லா ஆண்டுகளிலும்

ஒன்றுபோலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.



24 நாட்கள் கத்திரி வெயில் சுட்டெரிக்கும்
 பொதுவாக கத்திரி வெயில் 3 வாரம் நீடிக்கும்.
 எனினும், அக்னி தொடங்குவதற்கு முன்பும், வெயில் வாட்டும்.
இதை முன் கத்திரி என்கின்றனர்.
அக்னி வெயில் முடிந்த பிறகும் 2 வாரத்துக்கு வெயில் வாட்டி எடுக்கும்.
 இதை பின் கத்திரி என்கின்றனர்

சித்திரை மாதம் முதல் மேஷராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார்.

எனவே மேஷ ராசியில் உள்ள அசுவினி, பரணி, கார்த்திகை போன்ற

நட்சத்திரங்கள் அதற்குண்டான பலனை அனுபவிக்க வேண்டும் என்பது

விதிக்கப்பட்டது.

 சித்திரை முதல்நாளில் அசுவினியில் நுழையும் சூரியன் பரணி நட்சத்திரத்தில்

சஞ்சார காலம் முடிந்து கார்த்திகையில் தொடங்கும் காலமே அக்னி

நட்சத்திரம் எனப்படுகிறது.

சந்திரனும், பூமியும் சூரியனுக்கு அருகில் இருப்பதனால் அக்னி நட்சத்திரத்தில்
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காரணம் என்கிறது விஞ்ஞானம்

வெயிலின் அளவு அதிகரிக்கும் போது வெப்ப சலனம் ஏற்பட்டு இடியுடன்
மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
 சித்திரை 21ல் துவங்கி வைகாசி 14 வரை 25 நாட்கள் இது நீடிக்கும்
.இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என பஞ்சாங்கங்களில்
சொல்லப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திர காலத்தில் கிணறு வெட்டுதல், தோட்டம் வைத்தல், மரம்
நடுதல், விதை விதைத்தல் போன்ற சுபகாரியங்களைத் தவிர எல்லாவிதமான
நல்ல செயல்களையும் செய்யலாம். அதில் தவறில்லை.
அக்னி வெயிலில் அலைபவர்களுக்கு தோல் வியாதி ஏற்பட வாய்ப்புண்டு.
இந்நோயைத் தவிர்க்க வெயிலில் அலைவதைத் தவிர்ப்பதுடன், '
ஓம் பராசக்தியே நமஹ'
அல்லது
'ஸ்ரீமதே ராமானுஜாய நம'
என்ற மந்திரங்களைச் சொல்வது நன்மை தரும்.
சிவாலயங்களில் துர்க்கையையும்
பெருமாள் கோயில்களில் ராமானுஜரையும்
அக்னி நட்சத்திர காலத்தில் தரிசிப்பது விசேஷம்.
 இதனால், அக்னி காலத்தில் ஏற்படும் தோல் வியாதிகள் ஏற்படாது என்பது
நம்பிக்கை.
அக்னி நட்சத்திரன் போது முன் ஏழு, பின் ஏழு நாட்கள் மிக உக்கிரமாக
இருக்கும் என்பது கிராமத்து வழக்கு.
சித்திரையில் பின் ஏழு நாட்களையும், வைகாசியில் முன் ஏழு

நாட்களையுமே இவ்வாறு குறிப்பிடுவர்.

இதன்படி மே 8 (சித்திரை 25) முதல் 21ம் தேதி (வைகாசி 7) வரை

வெயிலின் கடுமை அதிகமாகும்.

சில நேரங்களில் மழை பெய்து கழிவதும் உண்டு.

அவ்வாறு கோடை மழை பெய்து மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க

இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்திக்க வேண்டும்.

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை
கார்த்திகை நட்சத்திரத்திற்குரியவர் அக்னிபகவான்.

இவர் நெருப்பு ரூபமாய் காணப்படுவதால், இதனையே அக்னி நட்சத்திரம்

என்கின்றனர்.

முன்னொரு காலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் இடைவிடாது நடைபெற்ற

சுவேதகி யாகத்தில் ஊற்றிய நெய்யினை உண்ட அக்னி தேவனுக்கு உடல்

நலிவு ஏற்பட்டது.

அதற்கு மருந்தாக காண்டவ காட்டை அழித்து உண்பதற்கு அக்னி தேவன்

புறப்பாட்டார்.

இதனை அறிந்து காண்டவ காட்டில் வசித்து வந்த உயிரினங்களும்,

தாவரங்களும், தங்களை காக்க வேண்டும் என்று வருணபகவானிடம் வேண்டிக்

கொண்டனர்.

வருணபகவானும், விடாது மழை பொழியவே

அக்னியால் காட்டை எரிக்க முடியாமல் போனது.

காட்டை எரிக்க தனக்கு உதவுமாறு மகாவிஷ்ணுவிடம் அக்னிதேவன்

முறையிட்டதால் அவர், அர்ஜுனனை துணைக்கு அனுப்பி வைத்தார்.

அர்ஜுனனும், தனது அம்புகளினால் காட்டை சுற்றி அரண் எழுப்பி தீ

அணையாமல் எரியுமாறு பார்த்துக்கொண்டார்.

அப்போது அக்னிதேவனுக்கு திருமால் ஒரு நிபந்தனை விதித்தார்.

21 நாட்கள் மட்டுமே காண்டவ காட்டை எரிக்க வேண்டும் என்பதே அது.

இதனை ஏற்று அக்னி தேவனும் 21 நாட்கள் மட்டுமே காட்டை எரித்துவிட்டு

கிளம்பினார்.

இந்த நாளே அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது என்கின்றன

புராணங்கள்..

 

கருத்துகள் இல்லை: