மே மாத 'புதிய தலைமுறை' இதழில் ஒரு அற்புதமான மனிதரைப் பற்றிப்
படித்தேன். நாடு எனக்கு என்ன செய்தது? வீடு என்ன செய்தது?
என்றுபுராணம் பாடியே வாழ்நாளைகழிப்பதுதான் நம்மில்
பெரும்பான்மையோரின் பழக்கம். ஆனால் 'ஒவ்வொரு மனுஷனுக்கும்
அவனோட உழைப்பு மட்டும்தான் பூர்வீக சொத்து' என்று தாய் சொல்லிய
சொல்லை வேதவாக்காகக் கொண்டு ஆதரிக்க யாருமின்றி
தன்னந்தனியாக போராடி, இன்று தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தின்
கல்வியியல் துறையில் இணைப் பேராசிரியர் ஆக உயர்ந்துள்ள
திரு. சின்னப்பன் அவர்களைப் பற்றிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து
கொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
முடிந்தவரை அவர் வார்த்தைகளிலேயே சொல்லுகிறேன்.
பட்டினியால் பரிதவித்தாலும், படிக்க வேண்டும் என்பதுதான் சின்னப்பனின்
லட்சியம். கல்விக்காக இவர் கடந்து வந்த பாதை மிகவும் கரடுமுரடானது.
'' நான் மனித முகங்களை அடையாளம் காணும் முன்பே என் தந்தை
இறந்து போனார். பூர்வீகச் சொத்து ஏதும் கிடையாது. எங்க அம்மா அடிக்கடி
சொல்லுவாங்கள்;' 'ஒவ்வொரு மனுஷனுக்கும்
அவனோட உழைப்பு மட்டும்தான் பூர்வீக சொத்து' ன்னு. என்னுடைய
வாழ்க்கை சராசரியான வாழ்க்கை இல்லை. நான் நல்லா படிக்கணும்
என்று என் அம்மா ஒரு விவசாயக் கூலியாக வேர்வை சிந்தாத
நிலங்களே எங்க சுத்து வட்டாரத்தில் கிடையாது. அப்படி ஒரு உழைப்பு.
எங்கம்மா இருந்த வரைக்கும் எனக்கு சாப்பாட்டுக்கு பஞ்சம் வந்தது
இல்லை. ஆனா, போடற துணியில் இருந்து, பள்ளிக்கூடத்து பையில்
நோட்டு, புத்தகம் இல்லாத வரைக்கும் பஞ்சம் வாட்டியது. வறுமையால்
அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்தேன். ஹாஸ்டலில் இருந்து
வீட்டிற்கு போகும்போது 60 பைசா பஸ் கட்டணம் இல்லாமல் 15கி மீட்டர்
நடந்தே போயிருக்கிறேன். என் பள்ளியில் கொடுத்த புது சீருடை
ஒன்றையே தினமும் துவைத்து உடுத்திக் கொள்வேன்.
எனக்காகவே வாழ்ந்த அம்மா நான் 12ம் வகுப்பு படிக்கும்
போது இறந்துட்டாங்க. அப்பா எனக்கு அம்மாவை விட்டுப் போனார்; எங்க
அம்மா எனக்கு வைராக்கியத்தை விட்டுப் போனாங்க.''
வறுமையிலும் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு விழுப்புரம் மாவட்டத்தில்
வறுமைக்கு உட்பட்ட மாணவர்கள் இன்றும் படிக்கச் செல்லும் திருச்சிக்கு
கல்லூரிப் படிப்பை படிக்க பயணப்பட்டிருக்கிறார்.
எந்த சொந்த பந்தமும் இல்லாத நிலையில் தன்னந்தனியே கல்லூரியை
நோக்கிப் புறப்பட்ட அவர் பெயிண்டிங் வேலை, வெல்டிங் கடை,
மெக்கானிக் கடை, கட்டிட வேலை, ஹோட்டல் வேலை, ப்ளம்பர் என தன்
கல்விக் கட்டணத்தை கட்டுவதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம்
பாடுபட்டு உழைத்து சம்பாதித்திருக்கிறார்.
''பலவேளை பட்டினிக்கு, ஒருவேளை உணவிட்டு என் உயிரின்
தொடர்ச்சிக்கு உதவிய தூயவளனார் கல்லூரியின் மதிய உணவு
திட்டத்திற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
திருச்சி வந்த பின்பு ஆறு மாதத்திற்கு தொடர்ந்து எங்கள் கல்லூரியில்
தரப்படும் மதிய உணவு மட்டுமே எனக்கு ஒரு நாள் உணவாக இருந்தது.
என் படிப்பிற்காக புதுசு புதுசாக வேலை தேட வேண்டிய கட்டாயம்
இருந்தது. வறுமை என்னைத் தின்னத் தொடங்கியபோது அதை என்
உழைப்பால் விரட்டத் தொடங்கினேன்.
நம் வாழ்க்கையை படிப்பு என்ற ஆயுதத்தால் மட்டும்தான் வளமாக்கிக்
கொள்ள முடியும் என்ற நம்பிக்கை என்னை தொடர்ச்சியாக பல பட்டங்கள்
பெற வைத்தது. வேலைக்குச் சென்று கொண்டே படித்ததால் ஒரு
நாளைக்கு அதிகபட்சமாக நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவேன்''
என்று தான் கடந்து வந்த பாதையை நினைவு கூர்கிறார் சின்னப்பன்.
வேலை செய்து கொண்டே படித்து
8 பட்டப் படிப்புகள்
எம். எட்
2 எம். பில்
2 பி. ஹெச். டி முடித்துள்ளார்.
பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராக வந்துள்ளார்.
இன்று தஞ்சாவூர் பல்கலை கழகத்தில் கல்வியியல் துறையில் இணைப்
பேராசிரியராக தான் கற்ற கல்வியை பிறர்க்குப் போதித்து வருகிறார்.
விழுப்புரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, கடலூர்,
காஞ்சிபுரம், திருவள்ளூர்., விருதுநகர் மாவட்டங்களை ஒன்றிணைத்து
கிராமப்புற ஏழை மாணவர்களுக்காக தன சொந்த செலவில் ''வளர்கல்வி
மையம்''ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
இதன்மூலம்,
ஏழைமாணவர்களை பள்ளி முதல் பல்கலைகழக அளவில் படிக்க
வைத்தல்,
நுழைவுத் தேர்வுப் பயிற்சி,
முன் ஆயுத்தப் பயிற்சி முகாம்,
வழிகாட்டுதல் முகாம்,
ஏழை மாணவர்களுக்கு 3000----- 5000 ரூபாய் வரை கல்வி உதவித் தொகை
தருதல்
என பல உதவிகளை செய்கிறார்.
இந்த மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பவர்களில் 80% பேர் ஆசிரியர்கள்.
பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த
அமைப்பின் மூலம் பயன் பெறுகிறார்கள்.
சின்னப்பனின் அடுத்த இலக்கு ''கிராமங்கள் நோக்கி கல்வி''
எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு கிராமம் கிராமமாக சென்று, ஏழை
மாணவர்களை கண்டறிந்து படிக்க வைத்து, அவர்களுக்குரிய வேலை
வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுதான் இதன் நோக்கம்.
யார் தயவும் இல்லாமல், யார் வழிகாட்டுதலும் இல்லாமல், தனக்கான
வாழ்க்கையை தானே அமைத்து, அதில் தன்னம்பிக்கையோடு நடமாடும்
சின்னப்பன் இன்றைய மாணவர்களுக்கு ஒரு முன்னோடி என்பதில்
ஐயமில்லை.
பேராசிரியர் சின்னப்பனின் தொடர்பு எண்- 94431 81034
திரு. சின்னப்பனைப் போல் உதவும் உள்ளம் இருந்தாலும் [பண உதவியோ,
அல்லது வேறு விதமான உதவியோ] வாய்ப்புகள் இல்லாத நம்மை
போன்றவர்கள், செய்யக்கூடிய ஒரே உதவி அவருக்காக பிரார்த்தனை
செய்வது மட்டுமே,
அவர் எண்ணங்கள் நல்ல முறையில் செயல்படுத்த அவருக்கு எல்லாம்
வல்ல இறைவன் அருள் செய்வாராக!
நல்ல உள்ளங்கள் என்றுமே தோத்ததாக சரித்திரம் இல்லை.
வாழ்க அவரது பணி;
வளர்க அவரது சேவைகள்.
நன்றி- புதிய தலைமுறை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக