வெள்ளி, நவம்பர் 12, 2010

குரு பெயர்ச்சி

நவகிரகங்களில் ஒன்றான குருபகவான் வரும் 21ம் தேதி [ஞாயிற்றுக் கிழமை] கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குரு தசை காலம் 16 ஆண்டுகள்.
நவகிரக மண்டபத்தில் குரு பகவான் மஞ்சள் வஸ்திரம் கட்டி,
வடக்கு நோக்கி இருப்பார்.
இவருக்கு நைவேத்யம் எலுமிச்சை அல்லது தயிர் சாதம்.
இவரது நிலை ஜாதகத்தில் சரியில்லாவிட்டால் வாத நோய் வரும் என்பர்.
இவ்வாண்டு குரு பெயர்ச்சியால் பலனடையும் ராசிகள்:
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், கும்பம்.
இவ்வாண்டு குரு பெயர்ச்சியால் பரிகார ராசிகள் :
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம்.


மேஷம்_[அசுவினி, பரணி, கார்த்திகை]
குரு பெயர்ச்சிப் பலன்_ 50/100
பரிகாரப் பாடல்:
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஊதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே!
சிவ பெருமானை வழிபடுதல் நல்லது.

ரிஷபம்- [கார்த்திகை2,3,4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம்]
குரு பெயர்ச்சி பலன் -50/100
பரிகாரப் பாடல்:
மாலே!நெடியோனே! கண்ணனே!விண்ணவர்க்கு
மேலா!வியன்துழாய்க் கண்ணியனே-மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே!என்றன்
அளவன்றால் யானுடைய அன்பு.
கிருஷ்ணரை வழிபடுதல் நன்று.

மிதுனம்-[மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்]
குருபெயர்ச்சிப் பலன் -40/100
பரிகாரப் பாடல்:
ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
சீறுதல் கொள்ளாத் திருவே போற்றி
ஊக்கமது அளிக்கும் உயிரே போற்றி
ஆக்கம் ஈயும் அன்னாய் போற்றி
திருமாமகளே செல்வீ போற்றி.
லட்சுமி தாயாரை வழிபடுதல் நன்று.

கடகம்- [புனர்பூசம் 4 பாதம், பூசம், ஆயில்யம்]
குருபெயர்ச்சிப் பலன்- 80/100
பரிகாரப் பாடல்:
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே.
திருக்கடையூர் அபிராமியை வழிபடுதல் நன்று.

சிம்மம் -[மகரம், பூரம், உத்திரம்1 பாதம்]
குருபெயர்ச்சிப் பலன்- 45/100
பரிகாரப் பாடல்:
வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே
செந்தில்நகர் சேவகா என்று திருநீறு
அணிவார்க்கு மேவ வராதே வினை.
முருகப் பெருமானை வழிபடுதல் நன்று.

கன்னி- [உத்திரம் 2,3,4 பாதங்கள், அஸ்தம், சித்திரை]
குருபெயர்ச்சிப் பலன்- 70/100
பரிகாரப் பாடல்:
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம்
தன்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து.
விநாயகரை வழிபடுதல் நன்று.

துலாம்-[ சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 பாதங்கள்]
குருபெயர்ச்சிப் பலன்- 45/100
பரிகாரப் பாடல்:
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அழகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
நடராஜரை வழிபடுதல் நன்று.

விருச்சிகம்-[ விசாகம் 4, அனுஷம், கேட்டை]
குருபெயர்ச்சி பலன்-70/100
பரிகாரப் பாடல்-
கார கார கார கார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த ஸ்ரீ
ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே.
ராமபிரானை வழிபடுதல் நன்று.

தனுசு- [மூலம், பூராடம், உத்திராடம்]
குருபெயர்ச்சிப் பலன்- 45/100
பரிகாரப் பாடல்:
புத்தியும் பலமும் தூய புகழோடு துணிவும் நெஞ்சில்
பக்தியும் அச்சமிலாப் பணிவும் நோய் இல்லா வாழ்வும்
உத்தம ஞானச் சொல்லின் ஆற்றலும் இம்மை வாழ்வில்
அத்தனை பொருளும் சேரும் அனுமனை நினைப்பவர்க்கே.
ஆஞ்சநேயரை வழிபடுதல் நன்று.

மகரம்- [உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2]
குருபெயர்ச்சிப் பலன்-40/100
பரிகாரப் பாடல்:
அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே
ஆலவாய் ஷேத்திர ஒளியே உமையே
வருவினை தீர்க்கும் ஜெகத் ஜனனி நீயே
வைகைத் தலைவியே சரணம் தாயே.
மீனாட்சி அம்மனை வழிபடுதல் நன்று.

கும்பம்- [அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3]
குருபெயர்ச்சிப் பலன்- 85/100
பரிகாரப் பாடல்:
குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம்அளந்த பிரான்பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஓன்றுமே தொழ நம்வினை ஓயுமே.
ஏழுமலையானை வழிபடுதல் நன்று.

மீனம்-[பூரட்டாதி 4பாதம் , உத்திரட்டாதி, ரேவதி]
குருபெயர்ச்சிப் பலன்-40/100
பரிகாரப் பாடல்:
அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
தங்குரு மரபிற்கெல்லாம் முதற்குரு நாதனாகிப்
பங்கயத் துளவம் நாறும் வேத்திரப்படை பொறுத்த
செங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி.
நந்தீஸ்வரரை வழிபடுதல் நன்று.

வாக்கிய பஞ்சாங்கப்படி, நவம்பர் 21, இரவு 10.54 மணிக்கு குருபகவான்
கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.
நன்றி _____தினமலர்

கருத்துகள் இல்லை: