திங்கள், நவம்பர் 15, 2010

சிறு குறிப்புகள்

உருண்டை மஞ்சள் மொத்தமாக வாங்கி வைத்தால்
கொஞ்ச நாளில் ஓட்டை விழுந்து மாவாக கொட்ட ஆரம்பிக்கும்.
இதை தவிர்க்க மஞ்சள் வாங்கியதும் வெயிலில் உலர்த்தி ஈரமில்லாத ஒரு
டப்பாவில் போட்டு ஒரு கற்பூர கட்டியையும் போட்டு வைத்தால்
உளுத்துப் போகாமல் அப்படியே இருக்கும்.
அப்பளம் நமத்துப் போகாமல் இருக்க அப்பளங்களை உளுத்தம் பருப்பு
டப்பாவின் மேலாக வைத்து இறுக மூடி வைக்கவும்.

மூன்று துளை, ஐந்து துளை உள்ள மின்சார பிளக்குகளை உபயோகிக்காமல்
இருக்கும் போது அந்த துளைகள் மீது
பெரிய ஸ்டிக்கர்ப் பொட்டை ஒட்டி வைக்கவும்.

துளைகளை மூட எலெக்ட்ரிக் கடைகளில் குறைந்த விலையில் அடைப்பான்கள் கிடைக்கிறது. அதையும் உபயோகிக்கலாம்.

வாஷ்பேசின் சில சமயம் அடைத்துக்கொள்ளும். 2ts ப்ளீச்சிங் பவுடரை போட்டு15-20 நிமிடம் விடவும். பின் குழாயைத் திறந்து தாராளமாக தண்ணீர் விடவும். அழுக்குகள் நீங்கி அடைப்பு சரியாகிவிடும்.

பித்தளைப் பாத்திரங்களை தேய்க்க புளியைப் பயன்படுத்துவோம்.
அதற்கு பதில் பிழிந்த எலுமிச்சை தோலால் தேய்த்து கழுவினால்
பளிச் சென்று இருக்கும்.

கருத்துகள் இல்லை: