சனி, நவம்பர் 13, 2010

குரு பெயர்ச்சி

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் குருப் பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா வியாழக்கிழமை தொடங்கியது.
தேவாரப் பாடல் பெற்ற தலமான இது, நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடையும் நாளில், குருப் பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
வாக்கிய பஞ்சாங்கப்படி நவம்பர் 21, ஞாயிறு இரவு 10. 54 மணிக்கு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.
குரு பகவானுக்குரிய மந்திரங்கள்-


குரு காயத்ரி
ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.

குரு ஸ்லோகம்-1
தேவனாம்ச ரிஷிணாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமாமி ப்ருஹஷ்பதிம்.

குரு ஸ்லோகம்-2
குரு பிரஹ்மா குரு விஸ்ணு
குரு தேவோ மகேச்வர:
குரு சாஷாத் பரப்ரஹ்மை
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ.

குரு துதி- 1
வானவர்க்கரசே! வளம் தரும் குருவே!
காணா இன்பம் காண வைப்பவனே!
பொன்னிற முல்லையும் புஷ்பராகமும்
உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!
சுண்டல் தானியமும் சுவர்ண அபிஷேகமும்
கொண்டுனை வழிப்படக் குறைகளைத் தீர்ப்பாய்!
தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்
நிலையாய்த் தந்திட நேரினில் வருக!

குரு துதி- 2
குணமிகு வியாழன் குரு பகவானே!
மனமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்!
ப்ருகஸ்பதி வியாழன் பரகுரு நேசா
கிரகதோஷம் இன்றி கடாட்சித்து அருள்வாய்!

நாள் தோறும் மூன்று முறை சொல்லி வழிபட்டால் குருவருளால் குறைகள் நீங்கி நன்மை பெறலாம்.

கருத்துகள் இல்லை: