திங்கள், நவம்பர் 22, 2010

சுலபமானவை

ஒரு கப் பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

நீரை வடித்து விட்டு நான்கு அல்லது ஐந்து பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைக்கும் போது கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம்.

இந்த மாவை , மோரில் நீர்க்க கரைக்கவும்.

ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து கரைத்த மாவை ஊற்றி கைவிடாமல் கிளறவும்.

சப்பாத்தி மாவு பதத்தில் வந்ததும் இறக்கவும்.

ஆறியதும் கையால் நன்கு பிசைந்து சீடைகளாக உருட்டவும்.

எண்ணையில் பொரிக்கவும்.

புளிப்பும், காரமுமான சுவையான சீடை ரெடி.





தயிரை துணியில் கட்டி தொங்க விட்டு நீரை நீக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்துமல்லி அரைத்து ,உப்பிட்டு தயிருடன்கலக்கவும்.

டோஸ்ட் செய்த பிரெட் மீது தடவி சாப்பிடலாம்.

இதனுடன் cheese துருவியது அல்லது cheese slice வைத்தும் சாப்பிடலாம்.





ஒரு கப் ரவையை [வெள்ளை or கோதுமை] வறுக்கவும்.

ரைஸ் குக்கரில் 3ts எண்ணை ஊற்றி கொஞ்சம் சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி , நான்கு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொஞ்சம் நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் காரட் துண்டுகள், கொஞ்சம் பச்சைப் பட்டாணி, கொஞ்சம் பீன்ஸ் துண்டுகள், கொஞ்சம் குடைமிளகாய் துண்டுகள், போட்டு வதக்கி ரவையைப் போட்டு இரண்டரை கப் நீர் விட்டு உப்பிட்டு வேக விடவும்.

வெந்ததும் 1ts நெய் or எண்ணையில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ,முந்திரி, வேர்க்கடலை தாளித்து போடவும்.

எண்ணை குறைவான சத்தான கிச்சடி ரெடி.

அடிக்கடி கிளற வேண்டாம்.

நேரம் மிச்சம்.

கருத்துகள் இல்லை: