வியாழன், நவம்பர் 25, 2010

கோளறு பதிகம்

பத்தாவது பாடல்

கொத்தலர் குதலியோடு
விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம்
முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்து அதனால்
புத்தரொ டமனை வாதில்
அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்-
பூங்கொத்துக்கள் பரந்த கூந்தலை உடைய உமாதேவியாரோடு, அருச்சுனனுக்கு அருள் செய்த இறைவர், ஊமத்தை மலரையும் சந்திரனையும் பாம்பையும் திருமுடியில் தரித்து அடியேன் உள்ளத்தில் எழந்தருளிய காரணத்தால் இறைவனது திருவெண்ணீறு, புத்தர்களையும், சமணர்களையும் வாதத்தில் தோல்வி அடைந்து கெடும்படி செய்யும். இது உண்மையும், உறுதியும் ஆகும். இதனால் தொண்டர்களுக்கு அவர்களால் வரும் தீயன யாவும் நல்லனவே செய்யும்.

கருத்துகள் இல்லை: