கர வருடம் சித்திரை மாதம் 25ஆம் தேதி
ஞாயிற்றுக் கிழமை
(8/9.5.2011) சுக்ல பட்சத்து
சஷ்டி திதியில் புனர்பூசம் நட்சத்திரம்
சூலம் நாமயோகம் தைத்துலம்
நாமகரணம் நேத்திரம் ஜீவனுள்ள
சித்தயோகத்தில் குரு ஹோரையில்
சூரியம் உதயம் புக பெயர்ச்சி
நாழிகை 48க்கு சரியான நேரம்
பின்னிரவு மணி 1.09க்கு
உபயவீடான மீனத்திலிருந்து
சர வீடான மேஷத்திற்குள்
குருபகவான் நுழைகிறார்.
குரு பகவான் மே 9 -2011 திங்கள் கிழமை அதிகாலை
[அதாவது மே 8நள்ளிரவு]
1.09 மணிக்கு மீன ராசியில் இருந்து
மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
மே 17 -2012 வரை இந்த ராசியில் சஞ்சாரிப்பார்.
குரு பெயர்ச்சி என்பது ஓராண்டு காலம் ஆகும்.
09-05-2011 முதல் 17-05-2012 ௦ வரைநவகிரகங்கள் மிகவும் சுபராகப் கருதப்படுபவர் குருவாவார்.
இவர் ஒவ்வொரு வருஷமும்
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப்
பெயர்ச்சியாவதையே
நாம் "குருப் பெயர்ச்சி" என்கிறோம்.
இவர் பெயர்ச்சி ஆகும் பொழுது
ஒவ்வொருவரின் தனிப்பட்ட
வாழ்க்கையாகட்டும் அல்லது
நாடாகட்டும் அல்லது உலகமாகட்டும்
எல்லாவற்றிலும் ஒரு மாற்றத்தை ஏற்படச் செய்வார்
குரு பகவானை மனதால் நினைத்து
குருவுடைய காயத்திரி மந்திரமான
விருஷ த் வஜாய வித்மறே
!க்ருணி ஹஸ்தாய திமஹி !
தந்தோ குரு ப்ரசோயாத்.
என்பதை வியாழக்கிழமை தோறும் சொல்லி
அவரை வணங்கிவர
வரக்கூடிய கெடுபலன்களைக் கலைந்து
நற்பலன்களை நமக்கு நல்குவார்
என்பதில் ஐயமில்லை
குரு பெயர்ச்சி பலன்கள்-
மேஷம-50%
சொல்லவேண்டிய பாடல்-
காசினி இருளை நீக்கும்
கதிர் ஒளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்ற
பொசிப்புடன் சுகத்தை நல்கும்
வாசியேழுடைய தேர்மேல்
மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய்
செங்கதிரவனே போற்றி! போற்றி!
பரிகாரம்-
தினமும் சூரியனை,
சூரியோதய வேளையில் வழிபடுவதும்,
சூரியனார் கோவிலுக்கு சென்று வருவதும்
நற்பலன் தரும்.
ரிஷபம் -55%
சொல்ல வேண்டிய பாடல்-
கருவுடை மேகங்கள் கண்டால்
உன்னைக் கண்டாலொக்கும் கண்கள்
உருவுடையாய்! உலகேழும்
உண்டாக வந்து பிறந்தாய்
திருவுடையாள் மணவாளா!
திருவரங்கத்தே கிடந்தாய்!
மருவி மணம் கமழ்கின்ற
மல்லிகைப்பூ சூட்ட வாராய்!
பரிகாரம்-
ரங்கநாதரை வழிபடுவதும்,
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்று வருவதும்
நற்பலன் தரும்.
மிதுனம்-75%
சொல்ல வேண்டிய பாடல்-
வந்த வினையும் வருகின்ற
வல்வினையும் கந்தனென்று
சொல்லக் கலங்கிடுமே!
செந்தில்நகர் சேவகா என்று
திருநீறு அணிவார்க்கு
மேவ வராதே வினை!
பரிகாரம்-
முருகப் பெருமானை வணங்குவது
நற்பலன் தரும்.
கடகம்-60%
சொல்லவேண்டிய பாடல்-
வாள்நுதற் கண்ணியை
விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சி
பேணுதற்கு எண்ணிய
எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்
காணுதற்கு அன்னியன் அல்லாத
கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ
முன்செய் புண்ணியமே!
பரிகாரம்-
அபிராமி அன்னையை வழி படுவதும்,
திருக்கடையூர் சென்று வழிபடுவதும்
நற்பலன் தரும்.
சிம்மம்-90%
சொல்லவேண்டிய பாடல்-
யாவையும் படைப்பாய் போற்றி
யாவையும் துடைப்பாய் போற்றி
யாவையும் ஆனாய் போற்றி
யாவையும் அல்லாய் போற்றி
யாவையும் அறிந்தாய் போற்றி
யாவையும் மறந்தாய் போற்றி
யாவையும் புணர்ந்தாய் போற்றி
யாவையும் பிரிந்தாய் போற்றி.
பரிகாரம்-
சிவபெருமானை வழிபடுவதும்,
மதுரை சுந்தரேஸ்வரரை வழிபடுவதும்
நற்பலன் தரும்.
கன்னி-50%
சொல்லவேண்டிய பாடல்-
மாசுமெய்யர் மண்டைத்தேரர்
குண்டர் குணமிலிகள்
பேசும் பேச்சை மெய்யென்று
நம்பி அன்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றை சூடி
மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான்
மேயது நள்ளாறே!
பரிகாரம்-
ஏழரைச்சனி தொடர்வதால் சனிக்கிழமைகளில்
சனீஸ்வரருக்கு எள் எண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும்,
திருநள்ளாருக்கும் ,
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்குச்
சென்று வழிபடுவதும்
நற்பலன் தரும்.
துலாம்-80%
சொல்லவேண்டிய பாடல்-
காற்றின் மைந்தனை
கதிரோன் சீடனை
கார்வண்ண ராமன் தூதனை
பார்கண்ட பரமன் போல்வனை
தார்சூடும் தூயோனை
துதி செய்குவோம்!
பரிகாரம்-
ஆஞ்சநேயரை வழிபடுவது நற்பலன் தரும்.
விருச்சிகம்-60%
சொல்லவேண்டிய பாடல்-
வாழ்வு ஆனவள்
துர்க்கா வாக்குமானவள்
வானில் நின்றவள்
இந்தமண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள்
துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே!
பரிகாரம்-
துர்க்கை வழிபாடு நற்பலன் தரும்.
தனுசு- 55%
சொல்லவேண்டிய பாடல்-
இடர்கள் யாவும் எவனருளால்
எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
கரர் வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி
கருமம் எவனால் முடிவுறும்
அத்தடவ மருப்பு கணபதி
பொன் சரணம் சரணம் அடைகின்றோம்!
பரிகாரம்-
விநாயகர் வழிபாடு நற்பலன் தரும்.
மகரம் - 55%
சொல்லவேண்டிய பாடல்-
மென்னடையன்னம் பரந்து விளையாடும்
வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால்
என் பொருகயற்கண்ணினை துஞ்சா
இன் அடிசிலொடு பாலமுதூட்டி
எடுத்த என் கோலக்கிளியை
உன்னொடு தோழமை கொள்ளுவன்
குயிலே!உலகளந்தான் வரக்கூவாய்
பரிகாரம்-
ஆண்டாளை வழிபடுவதும்
ஸ்ரீ வில்லிப்புத்தூர்ஆண்டாள் கோவில் சென்று வழிபடுவதும்
நற்பலன் தரும்.
கும்பம்- 50%
சொல்லவேண்டிய பாடல்-
பாடிக்கொண்டு ஆடிடப் பணிந்து
இடும் அன்பர் தம் பாதமலர்
சூடிக் கொண்டு ஆடித் திரிந்திடவே
என்னைத் தொண்டு கொள்வாய்
தேடிக் கொண்டு ஆடி வருவோர்கள்
வல்வினைச் சிக்கை எல்லாம்
சாடிக் கொண்டு ஆடிய
வாகாழி யாபதுத் தாரணனே
பரிகாரம்-
பைரவரை வழிபடுவது நற்பலன் தரும்.
மீனம்-75%
சொல்லவேண்டிய பாடல்-
செடியாய வல்வினைகள்
தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா
நின் கோவில் வாசலில்
அடியாரும் வானவரும்
அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன்
பவளவாய் காண்பேனே!
பரிகாரம்-
வெங்கடாஜலபதியை வழிபடுவது
நற்பலன் தரும்.
1 கருத்து:
good
கருத்துரையிடுக