வெள்ளி, அக்டோபர் 08, 2010

ரவை இனிப்பு

சுலபமாக செய்யும் இனிப்பு.
தேவையான பொருட்கள்-
ரவை .................................................200 கி
சர்க்கரை ..........................................200கி
தேங்காய்த் துருவல் ................ 50 கி
நெய் ...................................................50 கி
முந்திரி...............................................கொஞ்சம்
செய்முறை
கொஞ்சம் நெய்யில் துண்டாக்கிய முந்திரியை வறுத்து வைக்கவும்.
ரவையை சிவக்க வறுத்து வைக்கவும்.
தேங்காய்த் துருவலையும் சிவக்க வறுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி , கொதித்து ,பொங்கி வரும் போது துருவலை போட்டு கிளறவும்.
பிறகு கொஞ்சம், கொஞ்சமாக ரவையைப் போட்டு கிளறவும்.
அடுப்பை சிம்மில் வைக்கவும்.
கை விடாமல் கிளறவும்.
மீதி நெய்யையும் ஊற்றவும்.
பக்கங்களில் ஒட்டாமல் வரும் போது முந்திரியைப் போட்டுக் கிளறி ,ஒரு நெய் தடவிய தட்டில் ஊற்றி 5 நிமி ஆற விட்டு,வில்லைகளாகப் போடவும் .கருத்துகள் இல்லை: