திங்கள், அக்டோபர் 25, 2010

கோளறு பதிகம்

இரண்டாவது பாடல்

என்பொடு கொம்போ டாமை
இவைமார் பிலங்க
எருதேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்தமாலை
புனல்சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றோ டேழு
பதினெட்டொ டாறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.


பொருள்-
எலும்பும் பன்றிக்கோடும் ஆமைஓடும் ஆகிய இவைகள் திருமார்பில்
விளங்கவும், ஊமத்தமலர் மாலையையும், கங்கையையும் முடியில் சூடியும் உமாதேவியோடு ஏருதேறி எழுந்தருளி வந்து அடியேனது
உள்ளத்தில் புகுந்த காரணத்தால் ஒன்பதாவது நாளாகிய ஆயில்யம்,
பத்தாம் நாளாகிய மகம், பதினாறாம் நாளாகிய விசாகம், பதினெட்டாம்
நாளாகிய கேட்டையம், ஆறாம் நாளாகிய திருவாதிரை ஆகிய இவைகளோடு வைத்து எண்ணப்படும் பரணி, கார்த்திகை, பூரம், சித்திரை,
சுவாதி, பூராடம், பூரட்டாதி எனப்படும் இந்நாட்கள் அனைத்தும் அடியவர்க்கு மிகவும் அன்புடன் நல்லவனவே செய்யும்.

கருத்துகள் இல்லை: