திங்கள், அக்டோபர் 25, 2010

கோளறு பதிகம்

கோள்களால் வரும் துன்பங்களை போக்க ஏதுவான திருப்பதிகம் ஆதலால்
"கோளறு பதிகம் " எனப்பட்டது. ஆகவே இப்பதிகத்தைப் பாராயணம் செய்தால் எல்லா இடர்களும் நீங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
முதல் பாடல்
வேயுறு தோளி பங்கன்
விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை
முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய்
புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

அர்த்தம்-
மூங்கில் போன்ற தோள்களையுடைய உமாதேவியை இடது பக்கத்தில்
வைத்தவனும் ,விசத்தை உண்டு, அதனால் இருண்ட நீலகண்டனும் ஆகிய
சிவபிரான் மிகச் சிறந்த வீணையைத் தடவி களங்கமில்லாத பிறையையும்
கங்கையையும் முடியின் மீது தரித்து அடியேனது உள்ளத்தில் எழுந்து
அருளிய காரணத்தால் சூரியனும், சந்திரனும், அங்காரகனும், புதனும்,
குருவும், சுக்கிரனும் , சனியும், இராகுவும், கேதுவுமாகிய இரு பாம்புகளும்
தொண்டர்கட்கு மிகுதியாகவே நல்லனவே செய்யும்.


கருத்துகள் இல்லை: