திங்கள், ஆகஸ்ட் 16, 2010

சைவ புரோட்டின் காளான்

நாம் கிழங்கு வகைகளைப் பயன்படுத்தும் அளவுக்கு மற்ற காய்களை குறிப்பாக காளானை அதிகம் பயன்படுத்துவதில்லை. பலர் காளானை சைவ உணவாகக்ஏற்றுக் கொள்ளுவதிலை. இது அசைவ உணவாக கருதப் படுகிறது. ஆனால் நாம் அதிகம் பயன்படுத்தும் காய்கறிகளை விட காளானில் நிறைய சத்துக்கள் உள்ளது. மிகுந்த அளவு புரதம் தரும் ஒரு சுவையான உணவு. சைவ உணவு உண்போருக்கு முழுமையான புரத உணவாக காளானை கூறலாம். புரத நோய்க் கோளாறுகளினால்உண்டாகும் பல பாதிப்புகளுக்கு காளான்கள் நல்ல மருந்தாகவும் பயன் படுகிறது.
காளானில் பல வகைகள் உள்ளது.ஆயிஸ்டர் மஸ்ரூம் எனப்படும் நத்தைக் காளானில், புரதமும் , 19 வகையான அமினோ அமிலங்களும் பலவிதமான
வைட்டமின்களும் உள்ளது. முட்டையில் உள்ள அதே அளவு சத்துக்கள் இதில் உள்ளது. மேலும் பட்டாணியில் உள்ள அளவு உயிர்ச் சத்துக்கள் நத்தைக் காளானில் உள்ளது.
சிப்பிக் காளானில் புரதம் 2.9% , மாவுச் சத்து 5.3 %, கொழுப்புச் சத்து 0.36% மற்றும் தாது உப்புக்கள்உள்ளது. இதில் கால்சியம் 71.௨%,பாஸ்பரஸ் 91.௨%, இரும்பு 8.8%,சோடியம் 10.௬%, பொட்டாசியம் 28.50% உள்ளது. பொதுவாக காளானில் போலிக் அமிலம் [folicacid] மற்றும் "பி"வைட்டமின் அதிக அளவிலும், வைட்டமின் "சி ",வைட்டமின் "டி" போன்றவையும் உள்ளது.
எல்லா வயதினரும், எல்லாப் பருவத்திலும் காளானை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மாவுச் சத்து குறைவாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், இதயக் கோளாறு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்றவர்களும் காளான் சாப்பிடலாம். தெளிவான ,கூர்மையான கண் பார்வை, உறுதியான பலம் பொருந்திய எலும்புகள் மற்றும் பற்களையும் பெற காளான்கள் உதவி செய்கின்றன. அதிக உடல் எடை கொண்டவர்கள் , கொழுப்புச் சத்து மிகுந்த உணவு வகைகளை முழுமையாகத் தவிர்த்து விட்டுத் தொடர்ந்து ஒரு மாதம் காளான் வகைகளை உணவில் சேர்த்து உண்டு வந்தால், பக்க விளைவுகள் இல்லாமல் , உடல் எடை நன்கு குறையும். முழுமையான சைவ உணவு இது என்றாலும் அசைவம் உண்போர் அந்த முறைப்படி சமைத்து உண்டால், அசைவ உணவின் சுவை இதிலேயே கிடைத்து விடும்.

கருத்துகள் இல்லை: