புதன், ஜனவரி 05, 2011

வண்டலூர் மிருககாட்சி சாலை

இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் ஒரு செய்தி படித்தேன். வண்டலூர் மிருககாட்சி சாலையில் night-safari [ இரவில் மிருகங்களைப் பார்ப்பது ] அமைப் பதாக அரசு முடிவு செய்து இருப்பதாக. எனக்கு இதைப் படித்ததும் கோவமா, வருத்தமா, எரிச்சலா என்று புரியாத ஒரு உணர்ச்சி வந்தது. ஏனென்றால் அதற்கு இரண்டு நாட்கள் முன்தான் அங்கு போய் வந்தேன்.

வழக்கம் போல் கூட்டம்; அன்று பள்ளி விடுமுறை நாள் ; சரியான கூட்ட்டம்.
செல்பவர்க்கு, காமிராவிற்கு --- நுழைவு சீட்டு வரிசையில் நின்று வாங்கியாகி விட்டது. அங்கும் நாம் வரிசையில் போய்க்கொண்டு இருக்கிறோம்; போவதும் சினிமாவிற்கு அல்ல; ஒரு காட்சி போய் விடும் என்ற நிலையும் அல்ல; பின் ஏன் இந்த தள்ளு முள்ளு? முதலில் செல்ல முந்துகிறார்கள்; வேடிக்கை.

உள்ளே செல்கையில் ஒரு சோதனை; பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் கொண்டு செல்லாமல் இருக்க; அறிவிப்புகளை பார்த்தும், நாமே உணர்ந்தும் செய்ய வேண்டிய செயல்; ஆனாலும் சோதனை செய்தால்தான் செய்வோம் என அடம் பிடிக்கும் மக்கள். சோதிப்பவர்களும்நம்மை சோதித்துவிட்டார்கள். இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள், ஒரு காவல் துறை அதிகாரி, அவர் உதவியாளர் என ஒரு கூட்டம் இருந்தது. நுழைவு வாயிலுக்கு 10 அடி தள்ளி மேசை முன் அமர்ந்து இருக்கிறார்கள். கண்ணால் பார்ப்பதை மட்டுமே வாங்கி வைக்கிறார்கள்.
மக்களும் தாங்களாகப் போய் கொடுப்பதும் இல்லை. பணியாளர்களும் தங்கள் கடைமையை செவ்வனே செய்கிறார்கள்.

உள்ளே போய் விட்டோம். .எங்குபார்த்தாலும் ......................பச்சை பசேல் என்று சொல்லுவேன் என்று எதிர் பார்த்தீர்களா? no chance ; பாதி பச்சைகூட இல்லை. பாதி பச்சை கூட சமீபத்தில் பெய்த மழையால் என்று நினைக்கிறேன். பூ என்பது எங்குமே இல்லை. ஒருவேளை மிருகங்களுக்குப் பிடிக்காதோ என்னவோ????????? அது மிருகங்களின் வீடு; அவைகளுக்குப் பிடித்ததைத்தான் வைக்க வேண்டும். அரசு எப்போதுமே பிறருக்குப் பிடித்ததை தான் செய்யும்???????

மிருகங்களின் வசிப்பிடமோ .................. !!!!!!!!!!!! அவை குடிக்க வைத்திருக்கும் தண்ணீரும், அகழிகளில் இருக்கும் தண்ணீரும் இதற்கு மேல்அசுத்தமாகவே முடியாது என்ற நிலையில் இருக்கிறது. தண்ணீர் மாற்றி பல மாதங்கள் நிச்சியம் ஆகியிருக்கும். அதை குடித்தால் பிராணிகள் infection ஆகி வாந்தி, பேதி வந்து இறந்து விடும். முதலைகள் மூழ்கும் அளவு கூட தண்ணீர் இல்லை.
ஒருவர் மனசு பொறுக்காமல் ' தண்ணீர் கூட மாற்றாமல் என்னடா செய்கிறீர்கள்? கொடுமைடா; பாவிகளா என்று என்னென்னவோ கேட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டும், புலம்பிக் கொண்டும் இருந்தார்.

நம்ம மக்களும் சும்மா இருக்கிறார்களா? மனித குரங்கு... அதுபாட்டுக்கு சிறுநீர் கழித்துக்கொண்டு இருக்கிறது[ அதுவும், நமக்கு பின் பக்கத்தைக் காட்டிக்கொண்டு ரொம்ப decentயாக இருக்குது ] கல்லால் அடிக்கிறார்கள். எனக்கு வந்த ஆத்திரத்திற்கு அவர்களை தூக்கி கூண்டுக்குள் போட்டு விட்டு ,குரங்கை வெளியில் விடலாம் போல் இருந்தது. இங்குமட்டும் அல்ல; பல கூண்டுகளில் இருந்த பிராணிகள் மேல் கல் எறிகிறார்கள். இதில் என்ன அற்ப சந்தோசம் என்று புரிய வில்லை. அவை சுதந்திரமாக வெளியில் இருக்கும் போது அதை பார்த்தாலே ஒன்ஸ் + டூஸ் போய் விடுவோம். கூண்டுக்குள் இருக்கும் தைரியம். முதலிலேயே அவை பாதி பட்டினியுடன் இருக்குதுகள். இதில் கல்லடி வேறு. என்ன பிறவிகளோ?

இன்னொரு type மக்கள்; பிளாஸ்டிக் கவர்களை [ திருட்டுத்தனமாய் உள்ளே கொண்டு வந்தவை ] கூண்டுக்குள் போடுகிறார்கள். அதை சாப்பிட்டு பிராணிகள் இறந்து இருக்கிறதாம். ஒரு சிலர்விலங்குகளைப் பார்த்து பேய் கூச்சல் கத்துகிறார்கள். இது எதற்கு என்று எனக்கு புரியவே இல்லை. சிலர் தாங்கள் சாப்பிடுவதை போடுகிறார்கள். மிருககாட்சி சாலை இருக்கும் நிலைமையில், பசித்தால் புலி கூட புல்லைத் தின்னும். அதனால் மக்கள் போடுவதை அவைகளும் சாப்பிடுது. காலத்தின் கோலம்.

இடம் மட்டும் மிகப் பெரியது. கூண்டுகள் தள்ளித் தள்ளி இருக்குது.
தனியே போக பயமாக இருக்குது.
மீன் காட்சியகம் அழுக்குத் தண்ணீருடன், மிக குறைவானஎண்ணிக்கையில், , சாதாரண வகை மீன்களுடன் இருக்கிறது.
இரவுநேர விலங்குகள் என்ற பெயரில் ஒரு இடம்.
உண்மையிலே மிக இருட்டுடன் போகவே பயமாக இருக்கும் படியாக ஒரே ஒரு மின்விளக்குடன் இருக்கிறது.
அங்கு ஏதாவுது இருக்குதா??????????, இருந்தாலும் கண்ணுக்கே தெரியாதபடி இருக்குது.

சுற்றிப் பார்க்க சைக்கிள், பஸ் மற்றும் திறந்த சிறிய வண்டிகள் இருக்குது.
அங்கங்கே இளைப்பார சிறு மண்டபங்கள் , உட்கார அமர்விடங்கள் இருக்கிறது.
இரண்டு தமிழ் நாடு உணவகம் இருக்கிறது.
ஆவின் நிலையங்கள் இரேண்டோ, மூன்றோ இருக்கிறது.
தண்ணீர் குழாய்கள் இருக்கிறது.

விலங்குகளும் அதிகம் இல்லை. புதிய வகைகளும் இல்லை.
விலங்குகளுக்கு போதிய பராமரிப்பு, சுத்தம் இல்லை.
அங்கு வரும் மக்கள் கூட்டத்திற்கு போதுமான குப்பை தொட்டிகள் இல்லை.
கழிப்பிடங்களும் குறைவு.சுத்தம், பராமரிப்பும்குறைவு.
உணவகத்தில் உணவுவகைகள் திறந்த நிலையிலேயே உள்ளது.
அங்கு வாங்கி கொண்டு வருபவைகளை மூடி தருவது இல்லை. பணியாளர்கள் கையுறை அணிவதில்லை.
வருபவர்கள் picnic வருபவது போல் வருகிறார்கள்.
ஆங்காங்கே சாப்பிட்டுவிட்டு அமர்விடங்களை அசுத்தமாக்கி விடுகிறார்கள். ஓய்வெடுக்க முடிவதில்லை.
சாப்பிட்டு விட்டு அங்கேயே தட்டுகள், காகிதங்கள் போன்ற பொருட்களை வீசி விட்டுப் போய் விடுவதால் குப்பை கூளமாக இருக்கிறது.
சிந்தி இருக்கும் உணவுகளைச் சாப்பிட வரும்காக்கை கூட்டம்; எலிகள், பெருச்சாளிகள் ...........??
தாங்கள் சாப்பிடுவது அல்லாமல் விலங்குகளுடன் பகிர்ந்து கொள்வதால் பாதிப்பு அடைவது வாயில்லா ஜீவன்கள் தான்.
நம்ம வாலிப ஹீரோக்கள் ஒரு சுவர் விடாமல் [ வேலிகளையும் தாண்டி ] தங்கள் பெயரையும்+ ஹீரோயின்கள் பெயரையும் கஷ்டப்பட்டு பொறித்து வைத்து இருக்கிறார்கள். என்னவென்று சொல்வது இதை??????????
அறிவிப்பு பலகைகள் [ information board ] சரியாக இல்லாததால் வழி தெரியாமல் சிரமப்பட வேண்டி இருக்கு.


இவ்வளவு பெரிய பரப்பை கண்காணிப்பது மிகவும் சிரமமான செயல்தான். ஆனாலும் இதற்கு ஒரு தீர்வை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்.
உணவுவகைகளை உள்ளே அனுமதிக்க கூடாது.
ஆங்காங்கே கண்காணிப்பு காமராக்களை பொருத்தலாம்.
விலங்குகளைப் பற்றி அறிந்த அதிக பணியாளர்களை பணியில் அமர்த்தலாம்.
எல்லாவற்றுக்கும் மேல் மக்கள் தாங்களாகவே உணர்ந்து, பொறுப்புள்ள குடிமகன்களாக நடந்து கொள்வது மட்டுமே இதற்கு சரியான தீர்வு ஆகும்.

நாங்கள் சென்றிருந்த பொழுது work in progress என்னும் அறிவிப்பு பலகையைப் பார்த்தேன். ஒரு புறம் வேலைகளும் நடந்து கொண்டு இருந்தது.
அதை தொடர்ந்து நாளிதழில் night safari அறிவிப்பையும் படித்தேன்.
மிக அருமையான திட்டம்.
ஆனால் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாகக் கூடாது.
நன்கு திட்டம் இட்டு, சிறப்பாக வடிவமைத்து, திறம்பட செயல் படுத்தினால் நமது சென்னைக்கு கூடுதல் சிறப்பாகும். A FEATHER ON CAP.

1 கருத்து:

praveen சொன்னது…

you have to understand we are dealing with a particular segment of people, who virtually do pooja's to the cinema heros's and shameless scribble their names on the temple prakaram's ( remember tanjavur big temple !!!)
As long as these silly people repent and change their ways ,ntg can be done .