ஞாயிறு, ஜனவரி 09, 2011

வத்தக் குழம்பு

தினமும் பருப்பு போட்டே செய்வது சலிப்பு என்றால், சாப்பிடுவது மகாபோர்.
கொஞ்சம் காரசாரமாய் ,செய்வதற்கு சுலபமாய், சாப்பிட ருசியாக இருப்பதில் best choice வத்தக்குழம்பு alais வற்றல் குழம்பு.

பாரம்பரிய குழம்பு-------
தேவையான பொருட்கள்-
சுண்ட வற்றல் or மணத்தக்காளி வற்றல் --------- 2ts
கடுகு-------------------------- கொஞ்சம்
பெருங்காயப் பவுடர் -------- 1/4 ts
கடலைப் பருப்பு -------------- 1/2 ts
உளுத்தம் பருப்பு -------------- 1/2 ts
வெந்தயம் --------------------- 1/4 ts
மிளகாய் வத்தல் ------------- 4
சாம்பார் மிளகாய்ப் பொடி -- - 3 ts
புளி ------------------------------ ஒரு எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை ----------------- கொஞ்சம்
நல்லெண்ணெய் -------------- 5 ts
செய்முறை ----------
புளியை கரைத்து வடிகட்டி ஒரு சிறிய கப் அளவு எடுக்கவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணையை ஊற்றி , காய்ந்ததும் பெருங்காயப் பொடி போடவும். அது பொரிந்ததும்
கடுகு, அது வெடித்ததும்,
கடலைப் பருப்பு, உளுந்த பருப்பு போட்டு, சிவந்ததும்,
கறிவேப்பிலை , மிளகாய் வத்தல் போடவும்.
வெந்தயம் சேர்க்கவும். அளவு கொஞ்சமாக இருக்க வேண்டும். அதிகம் சிவக்கக் கூடாது. குழம்பு கசந்து விடும்.
வத்தல் சேர்த்து நன்கு வறுக்கவும்.
அதில் புளித் தண்ணீர் சேர்க்கவும்.
சாம்பார் மிளகாய்த் தூள் சேர்க்கவும்.
உப்பு போடவும்.
நன்கு கொதி வந்ததும் இறக்கவும்.
பொதுவாக வத்தல் குழம்பு அதிக அளவில் செய்ய முடியாது.
வேண்டும் என்றால், புளித் தண்ணீர் அதிகம் ஊற்றி , கொதித்ததும் 2 ts அரிசி மாவை கொஞ்சம் நீரில் கரைத்து ஊற்றி கெட்டி யானதும் இறக்கவும்.
இதற்கு சுட்ட அல்லது பொறித்த அப்பளம் அல்லது வடாம் நல்ல combination.
சுடு சாதத்தில் வத்தக் குழம்பு ஊற்றி, நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட வேண்டும்.

மாடர்ன் வத்தல் குழம்பு--
தேவையான பொருட்கள் --

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள் ----
தனியா ----------------------------- 4 ts
மிளகாய் வத்தல் ---------------- ௪

துருவிய தேங்காய் ------------ 8 ts
கசகசா --------------------------- 1 ts

நறுக்கிய பெரிய or சிறிய வெங்காயம் ------------ ஒன்று or 10
மேலே கொடுத்துள்ளவைகளை [ இடம் விட்டு இருப்பதை ]தனித் தனியே வறுக்கவும். ஒன்றாகவே அரைக்கலாம்.

தாளிக்கத் தேவையான பொருட்கள்-
பெருங்காயத் தூள் ---------- 1/2 ts
கடுகு ------------------------ 1/2 ts
கடலை பருப்பு -------------- 2 ts
உளுந்துப் பருப்பு ------------- 2 ts
கறிவேப்பிலை -------------- கொஞ்சம்
மிளகாய் வத்தல்---------- 6
சாம்பார் வெங்காயம் -------- கொஞ்சம் [ சிறியது என்றால் இரண்டாக நறுக்கவும்,சிறியதாக இருந்தால் முழுதாகப் போடவும் ]
சுண்ட or மணத்தக்காளி வத்தல்---------- 2 ts
நறுக்கிய தக்காளி -------------------------- 3
நல்லெண்ணெய் -------------------------- 8ts
பொதுவாகவே வத்தல் குழம்பிற்கு எண்ணை அதிகம் வேண்டும்.
எண்ணையில் மேலே சொன்ன வரிசைப்படி வதக்கவும்.
இதில் வதக்குவதுதான் main. நன்கு வதங்க வேண்டும். தக்காளி நன்கு மசிந்து விட வேண்டும்.
இந்த நிலையில் அரைத்ததை சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
ஒரு எலுமிச்சை அளவு புளியில் எடுத்த ஒரு கப் புளித் தண்ணீரை ஊற்றவும்.
இதனுடன்,
மஞ்சள் தூள் --------- 1/2 ts
வெறும் மிளகாய்த் தூள் ---- 1 or 2 ts
உப்பு ------------------------ தேவையான அளவு
இவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து எண்ணை பிரியும் வரை வைக்கவும்.
வற்றலுக்குப் பதில் முருங்கைக் காய் சேர்க்கலாம்.
குழம்பு திக்காக இருக்க வேண்டும்.
அருமையான வத்தல் குழம்பு தயார்.


கருத்துகள் இல்லை: