ஞாயிறு, ஜனவரி 09, 2011

மஞ்சள் மகிமை

அம்மைக் கொப்புளங்கள், புண்கள் குணமாக...
மஞ்சள், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துப் பற்றுப்போட்டு வர, மூன்று தினங்களில் அம்மைக் கொப்புளங்கள், புண்கள், சேற்றுப்புண்கள் போன்றவை மறையும்.

கட்டிகள், சிறங்குகள் மறைய...
மஞ்சளுடன் துத்தி இலையைச் சேர்த்த ரைத்து கட்டிகள்மீது பூசி வர, அவை பழுத்து உடையும்.

கால் ஆணி குணமாக...
மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள்மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

கண் பார்வை தெளிவடைய...
ஒரு ஸ்பூன் மஞ்சள்தூளை நன்கு கொதிக்க வைத்து, அதைப் பஞ்சில் நனைத்துக் கண்களில் ஒற்றியெடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஆறு முறை வீதம் குறைந்தது பத்து நிமிட அளவில் செய்துவர, கண்களில் நீர்வடிதல், கண்களில் சதை வளருதல், கண்பார்வைக் குறைபாடுகள் போன்றவை நீங்கும்.

சளி, மூக்கடைப்பு நீங்க...
மூன்று சிட்டிகை மஞ்சள்தூளை சூடான பாலில் கலந்து தினசரி இரவில் சாப்பிட்டு வர, நெஞ்சில் கட்டியிருக்கும் கோழைக்கட்டு விலகும். முனை முறியாத மஞ்சளைத் தீயில் கொளுத்த ஆவியுண்டாகும். அதில் உண்டாகும் ஆவியை மூக்கால் நுகர, தலைவலியும் மூக்கடைப்பும் தானே விலகும்.

காசநோய் மறைய..
.முதலில் வெற்றிலையை நீர் விட்டு இடித்து, இரண்டு லிட்டர் அளவில் சாறு எடுத்துக் கொள்ளவும். இதில் மஞ்சள், அதிமதுரம் வகைக்கு கால் கிலோ அளவில் எடுத்து, வெற்றிலைச் சாற்றில் ஊற வைக்கவும். சாறு முற்றிலும் சுண்டி உலர்ந்த பின், மேற்கண்ட இரண்டையும் ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்தத் தூளில் கால் ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர, எவ்வளவு பாதிப்புக்கு உள்ளான காசநோயும் மறையும்.

புற்றுநோய் கட்டுப்பட...
வெற்றிலையை இடித்து ஒரு லிட்டர் அளவுக்குச் சாறெடுத்து, அதில் கால் கிலோ மஞ்சளை ஊற வைத்து உலர்த்தவும். பின்னர் கீழாநெல்லியை இடித்து ஒரு லிட்டர் அளவில் சாறெடுத்து, அதில் ஏற்கெனவே உலர்த்திய மஞ்சளை மீண்டும் இந்தச் சாற்றில் ஊறவைத்து, பின் வெயிலில் காயவைத்து உலர்த்திக் கொள்ள வும். இத்துடன் கடுக்காய்த் தோல், நெல்லிவற்றல், தான்றிக்காய் தோல் ஆகியவற்றை வகைக்கு கால் கிலோ அளவில் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூள் செய்து பத்திரப்படுத்தவும்.
சித்தர்கள் அருளிய அற்புத மருந்து இது. இதனை உதாசீனப்படுத் தாமல் புற்றுநோய்க்கு உட்பட்டோரும், புற்று நோயைத் தடுக்க நினைப்போரும் காப்பு மருந்தாய்க் கொள்ளலாம்.

சிறுநீரக நோய்கள் விலக...
சிறு நெருஞ்சில் இலைகளைப் பறித்து வந்து, அதில் அரை லிட்டர் அளவு சாறெடுக்கவும். கீழாநெல்லி இலைகளைப் பறித்து அதிலும் அரை லிட்டர் சாறெடுக்கவும். இரண்டையும் ஒன்றாய்க் கலந்து, இதில் கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல், சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கி, சிறுநீரகம் செழுமையாய் செயற்படும். . சித்தர்களின் சுவடிகளில் சொல்லப்பட்ட அரிய மருந்து இதுவாகும்.

முடிவளம் குறைக்க...
சில பெண்களுக்குத் தேவையில்லாமல் கால்கள், கைகள் மற்றும் உதட்டின் மேற்பகுதி களில் பூனை முடிகள் போன்று முளைப்ப துண்டு.
. .மஞ்சள், துத்தி, குப்பைமேனி, செம்பருத்தி, கடுக்காய்த்தோல், நெல்லிவற்றல், மகிழம்பூ, கிச்சலிக் கிழங்கு, வெட்டிவேர், கடலைப்பருப்பு, சந்தனசீவல் ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் வாங்கி, இத்துடன் உலர்ந்த வெற்றிலை நூறு கிராம், வெள்ளை மிளகு 25 கிராம் சேர்த்து ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.அதிகாலைக் குளியலின்போது, சூடான பசும்பாலில் தேவையான அளவு பரிமள சுகந்த ஸ்நானப் பொடியைக் கலந்து, தேவையற்ற முடி உள்ள பகுதியில் தேய்த்து அன்றாடம் குளித்துவர, தேவையற்ற முடிகள் நீங்கும்.
நன்றி-சித்த மருத்துவர்-அருண் சின்னையா

கருத்துகள் இல்லை: