ஞாயிறு, ஜனவரி 09, 2011

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

பொதுவாக குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் இருப்பதாக I feel. So,


பொடுகு ஏன் வருது?
நிறைய காரணங்கள் இருக்கு என்கிறார்கள்.
பாரம்பரியம்வெயில், உடல் சூடு, தூசி, ஹார்மோன் பிரச்சனை, உட்கொள்ளும் நீரின் அளவு குறைதல், பராமரிப்பு இல்லாதது, உடல் நலமின்மை-இப்படி பல.


பொடுகு என்பது என்ன?
இது ஒரு வகையான தோல் நோய் அல்லது தோல் உரிதல்என்றும் சொல்வார்கள். இது எல்லா வயதினற்கும் வரும்.

பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1.Dry Dandruff --------- வறண்ட பொடுகு
தலையில் எண்ணைப் பசை சரியான அளவில் உற்பத்தி ஆகாத காரணத்தால் வருவது. சொரிந்தால் பவ்டர் போல் உதிருவது நிறைய T.வ. விளம்பரங்களில் காட்டப் படுவது.
விரைவில் பரவும்.
அரிப்பு இருக்கும்.
வியர்வையால் தலை நாற்றம் இருக்கும்.
முகத்தில் சிறிய பருக்கள் , தோள்ப்பட்டை,கழுத்தில் சின்ன கட்டிகள் வரலாம்.
ஆனால் குணப்படுத்துவதும் , சுத்தம் செய்வதும் எளிது.

2. Oily Dandruff ---------- எண்ணை பொடுகு
தலையில் அதிகமாக எண்ணைப் பசை உற்பத்தி ஆகும் காரணத்தால்வருவது.
சொரிந்தால் உதிராது. தலையில் பிசுபிசுப்பாய் உணர்வது.
மற்றவர்களுக்குப் பரவாது.
அரிப்பு அதிகம் இருக்காது.
வியர்த்து தலையில் சீக்கிரம் அழுக்கு சேர்ந்து விடும்.
முகத்தில் பருக்கள், கழுத்து, தோள்ப்பட்டையில் நீரிருக்கும் கட்டிகள் கொப்பளங்கள் வரலாம்.
ஆனால் குணப்படுத்துவதும், சுத்தம் செய்வதும் கொஞ்சம் சிரமம்.

பொதுவான பராமரிப்பு-----
அதிகம் தண்ணீர், பழச்சாறு குடிக்க வேண்டும்.
நகங்களை வெட்டவும். தலையை சொரிந்து விட்டு , அதே நகங்கள் முகத்தில் பட்டால் பருக்கள் வரும்.
வெய்யிலில் அதிகம் அலையக் கூடாது. போனாலும் குடை பயன் படுத்தவும். தலைக்கு மெல்லிய scarf [ஸ்கார்ப் ] கட்டிக் கொள்ளவும்.
தலையணை, போர்வை , துண்டு --------- சுத்தமாக இருக்க வேண்டும்.
சீப்பை வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் விட்டு கழுவிப் பயன்படுத்தவும்.
முடியை சுத்தமாக வைத்து இருப்பதும்,,டென்சன் இல்லாமலும் இருப்பது மிகவும் நல்லது.

தீர்வு-
துளசி எண்ணை, வேப்பிலை எண்ணை இரெண்டையும் சம அளவில் கலந்து மயிர்க்கால்களில் படும்படியாகத் தேய்த்து மசாஜ் செய்து குளிப்பதால், பொடுகு மட்டும் அல்ல பேன் தொல்லையும் தீரும்.

கொஞ்சம் தயிர் , ஒரு எலுமிச்சையின் சாறு, ஒரு வெள்ளைக் கரு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் 4-5 வாரங்களில் குணம் ஆகும்.
வாரம் இரு முறையாவது கட்டாயம் செய்ய வேண்டும்.
தேய்த்து அரைமணி நேரம் கழித்து தரமான ஷாம்பூ கொண்டு அலசவும்.

வசம்பு பவுடர், தேங்காய் அரைத்த நைஸ் விழுது அல்லது தயிருடன் கலந்து தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம்.

குப்பைமேனி இலையின் சாறு, தேங்காய் எண்ணை, உப்பு அல்லது சர்க்கரை கலக்கவும். முடியைப் பிரித்து பிரித்து காட்டன் கொண்டு தலையில் தடவவும்.கிழே ஒரு துணியை விரித்துக் கொள்ளவும். பொடுகு உதிரும். கால் மணி நேரத்தில் சுத்தம் செய்யலாம். ஆண்களுக்கும் செய்யலாம்.

கறிவேப்பிலை, துளசி, எலுமிச்சை சாறு, எலுமிச்சை விதை ஆகியவற்றை அரைத்து, பேஸ்ட் போல் செய்து தலைக்கு தேய்த்து ஊறி குளிக்கவும்.
குருணை போல் இருக்கும் பொடுகு நீங்கும்.

செம்பருத்திப் பூவை அரைத்து தேய்த்துக் குளித்தாலும் பொடுகு போகும்.

பொடுகு ஷாம்பூ பயன்படித்திய பின் அதன் கெமிக்கல் தன்மை நீங்க, செம்பருத்தி இலையை வெந்நீரில் வேக வைத்து , தேய்த்துக் குளிக்கவும்.

எலுமிச்சை சாற்றைத் தலையில் தடவி கால் மணி நேரம் ஊறி குளிக்கவும்.

வால் மிளகை அரைத்துத் தடவிக் குளிக்கலாம்.

பொடுகு நீக்கும் ஸ்பெசல் பேக்-
துளசிப் பவுடர் ---------- 5 ஸ்பூன்
வேப்பிலை தூள் ----------- 5 ஸ்பூன்
எலுமிச்சை சாறு ------------ 2 ஸ்பூன்
புளித்த தயிர் ----------------- 3 ஸ்பூன்
எல்லாவற்றையும் கலந்து 15 நிமி ஊற வைக்கவும்.
பின் மயிர்க்கால்களில் படும்படிப் பூசி அரை மணி நேரம் கழித்து, மைல்ட் ஹெர்பல் ஷாம்பூ கொண்டு அலசவும்.
வாரம் இரு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை: