செவ்வாய், டிசம்பர் 02, 2008

மாதங்களுக்கு பெயர் வந்தது இப்படி?

ஜனவரி-ஜனூயேரிஸ் என்ற இலத்தீன் வார்த்தையில்லிருந்து வந்தது. இதற்கு "ஜனுஸ் என்ற ரோமானியக் கடவுளின் மாதம்" என்று பொருள்.
பிப்ரவரி -பெப்ருயேரிஸ் என்ற இலத்தின் வார்த்தையிலிருந்து வந்தது. "பெப்ருயா" என்றால் தூய்மையாக்கல் என்று பொருள். முன்பு இம்மாதத்தின் 15- இம் தேதி தங்களை தூய்மையாக்கிக் கொள்வதற்காக விழாக் கொண்டாடினார்கள்.
மார்ச்-மார்ஸ் என்பது ஒரு ரோமானிய போர் கடவுளின் பெயர். இக்கடவுளின் மாதம் என்னும் பொருளில் மார்ச் என பெயர் பெற்றது.
ஏப்ரல் -ஏப்ரிலிஸ் என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.இச் சொல்லும்
ஏப்பரைர் என்ற மற்றொரு இலத்திதீன் சொல்லில் இருந்து பெறப்பட்டது. "ஏப்பெரைர்" என்றால் துவக்கம் என்று பொருள். பண்டைய ரோமானியர்கள், ஏப்ரல் மாதத்தில்லிருந்து ஆண்டை துவக்கினார்கள். ரோமானிய காலண்டர் கணிக்கப்பட்டவுடன்,மார்ச் மாதத்தை ஆண்டின் துவக்க மாதம்
ஆக்கினார்கள்.
மே-ரோமானிய கடவுள் மெர்குரியின் தாய் மேய்யா என்ற தேவதையின் பெயரிலிருந்து வந்ததுதான் மே மாதம். வளர்ச்சிப் பெருக்கின்
தேவதை இவள்.
ஜூன்- ஜுனோ என்ற இளமையை குறிக்கும் தேவதையின் பெயரிலிருந்து வந்ததுதான் ஜூன் மாதம்.
ஜூலை- மாமன்னர் ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தில் பிறந்ததால், அவர் நினைவாக, சீசரே இம்மாதத்திற்கு தன் பெயரை வைத்தார்.
ஆகஸ்ட்- ரோமானிய சக்ரவர்த்தி ஆகஸ்ட்டஸ் சீசரை கௌரவிக்கும்வகையில் இம்மாதத்திற்கு ஆகஸ்ட் என்று பெயரிடப்பட்டது.
செப்டம்பர்- ரோமானிய காலண்டர்படி மார்ச் மாதத்திலிருந்து ஆண்டு துவங்கியது. செப்டம்பர் என்றால் ரோமானிய மொழியில் எழு என்று பொருள்.
அதனால், ஏழாவதாக வந்த மாதத்திற்கு செப்டம்பர் என்று பெயரிடப்பட்டது.
அக்டோபர்- ரோமானிய மொழியில் ஆக்டோ என்றால் எட்டு என்று பொருள். அதனால், ரோமானிய காலண்டர்படி இம்மாதம் அக்டோபர் என பெயரிடப்பட்டது.
நவம்பர்- ரோமானிய மொழியில் நவம் என்றால் ஒன்பது என்று பொருள். ரோமானிய காலண்டர்படி ஒன்பதாவது மாதமான இதற்கு நவம்பர் என பெயரிடப்பட்டது.
டிசம்பர்- ரோமானிய மொழியில் டிஸெம் என்றால் பத்து என்று பொருள். ரோமானிய காலண்டர்படி பத்தாவது மாதமான இதற்கு நவம்பர் என பெயர் வந்தது.

கருத்துகள் இல்லை: