செவ்வாய், ஏப்ரல் 19, 2011

சித்திரா பௌர்ணமி

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்கூடி வரும்

பௌர்ணமி நாள்சித்திரா பௌர்ணமி நாளாகும்.

இது வசந்தகாலம்.

"காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கின்றேன்..." என்று

கண்ணன்பகவத்கீதையில் கூறுகிறார்

ராசிச் சக்கரத்திலுள்ள 12 ராசிகளில்


6 ஆவதான கன்னிராசியிலும்,
7ஆவதான துலாராசியிலும் உள்ள


 நட்சத்திர மண்டலத்துக்கு


சித்திரைஎனப் பெயர். 


அசுபதி முதலான 27 நட்சத்திரங்களில்


14 ஆவது நட்சத்திரம்.
சித்திரை பௌர்ணமியெனப் புகழ் பெற்ற தினத்தன்று


சந்திரன் சித்திரைநட்சத்திரத்திலோ 


அதற்கு அடுத்தோ இருக்கும்எனக் 


கலைக் களஞ்சியம்கூறும்வானமண்டலத்தில் சூரியனுக்கும்,

சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை

'திதி' என்கின்றோம்.

அமாவாசையன்று சூரியனும் சந்திரனும்

இணையும் நாளில்

மூதாதையர்களுக்கு 'திதி' கொடுப்பதும்,

 (அன்று சூரிய, சந்திரர்கள்

ஒரே டிகிரியில் இணைந்திருப்பார்கள்)

பௌர்ணமியன்று சிறப்பான பூஜைகள்,

வழிபாடுகள் செய்வதும் சிறந்தது.

(அன்று சூரிய, சந்திரர்கள் சம சப்தமமாக இருப்பார்கள்.)

அமாவாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் இணைந்த சந்திரன்,

தினமும் 12 டிகிரி நகர்ந்து

15ம் நாளான பௌர்ணமி அன்று

180ம் டிகிரியை அடைகிறது;

சூரியனுக்கு சம சப்தமமாகி

முழுமையான ஆகர்ஷண சக்தியை

(புவியீர்ப்பு) வெளிப்படுத்துகிறது.

அதனால் அன்று செய்யும் பூஜைகள்,

வழிபாடுகள் சிறப்பைப் பெறுகின்றன.

சிவசக்தி ஐக்கியம்

சூரியனைப் பித்ருகாரகன் (தந்தையை நிர்ணயிப்பவர்) என்றும்,


சந்திரனை மாத்ருகாரகன் (தாயை நிர்ணயிப்பவர்) என்றும் கூறுவர்.

அதாவது அமாவாசையன்று

 சூரியனும், சந்திரனும் இணையும் நாளில்

மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்கிறோம்.

சூரியனுக்கு அதிதேவதையாகபரமசிவனையும்,

 சந்திரனுக்குஅதிதேவதையாக பார்வதியையும்

வைத்திருப்பது ஆராய்ச்சிக்கு உகந்தது.

அமாவாசை, பௌர்ணமி அன்று முறையே

சூரிய சந்திர சங்கமத்தையும்,

சமசப்தமமாக இருப்பதையும்

 சிவசக்தியின் ஐக்கியம் என்று கூறுவது

மிகையாகாது.

மனித மனதில் திதிகளின் தாக்கம்]

 அமாவாசை, பௌர்ணமி அன்று நிகழும்

ஆகர்ஷண சக்தியின்வேறுபாடுகள்

மனித மன இயல்புகளில் பெரும் மாறுதல்களை

உண்டாக்குகின்றன என்பதை மருத்துவம் ஏற்றுக் கொள்கிறது.

இந்தக் காலங்களில் மன நோயாளிகளின்

நடத்தையில் மாற்றங்கள்உண்டாகின்றன.

மேலும் ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள்

 பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு


சித்தப்பிரமை, மனஅழுத்தம், ஹிஸ்டீரியா போன்றவைகள்

உண்டாவதையும் அனுபவ ரீதியாகக் காண்கிறோம்.

இதற்கு ஜோதிடத்தின் மூலமாக காரணங்களைத் தேடுங்கால்,

சூரியனை ஆத்மகாரகன் என்றும்,

சந்திரனை மனோகாரகன் என்றும்

நமது புராதன நூல்கள் குறிப்பிடுவதன் மகத்துவம் புரிகிறது.

நமது ஆத்ம பலம் பெருகினால்தான்

 நம்மால் இந்த உலகில் சிறப்புடன்

வாழ முடியும்.

கடவுளைத் தேடும் ஆற்றலும் உண்டாகும்.

அதாவது ஆன்மீகத்தின் மூலமாக ஆத்மபலத்தைப் பெற,

இத்தகைய ஜாதகஅமைப்பு உதவுகிறது.

ப்ராணாயாமம், யோகா போன்றவற்றிற்கு

சூரிய பகவானின் அனுக்கிரகம்அவசியம் தேவை.

ஆத்மபலம் மேம்பட, மனதின் சக்தி அவசியம்.

'மனம் வசப்பட உன்னை உணர்வாய்'

என்பது பெரியோர் வாக்கு.

அப்படிப்பட்டமனதை நிர்ணயிப்பவர் சந்திர பகவான்.

அதனால்தான் சூரிய சந்திரர்களின்

பலத்தைப் பெருக்கிக் கொள்வதால்,

வசிய சக்திகளைப் பெறும் ஆற்றல் உண்டாகிறது.

சித்திரா பௌர்ணமியை ஒட்டி அம்மன் கோவில்களில்

 பால்குடங்கள்எடுப்பது,

திருவிளக்கு பூஜை என்றும்,

சிவாலயங்களிலும் பெருமாள்

கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள்,

 இறைவன் வழிபாடு,

வீதிஊர்வலம் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.

தாயாரை இழந்தவர்கள்


 இத்தினத்தில் விரதமிருப்பதால் இந்நாள்

பிதிர்களுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது.

தந்தையை இழந்தவர்கள் 


ஆடி அமாவாசையன்று விரதமிருப்பது

போன்று தாயாரை இழந்தவர்கள்


 சித்திரா பெளர்ணமி விரதத்தை

மேற்கொள்வது விதியாயமைந்துள்ளது.

அம்மன் ஆலயங்களிலே


 சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறுகின்றது.

தாயார் பசிபோக்கி வாழ்வளிப்பவர் 


அதை நினைவு கூர்ந்து

பசிப்பிணியகல அம்மன் 


அருள் நாடி இச்சித்திரைக் கஞ்சிவார்ப்பு

இடம்பெறுகின்றது

சித்திரையில் ஆரம்பிக்கும் காண்டாவனம் பறவைகளின்

முட்டைகளுக்கு வெப்பத்தைக் கொடுக்கும் காலமாகும்.

மரங்களை வாளால் அரிந்து  பார்த்தால் 


அங்கு அவற்றின் வயதைக்

குறிக்கும் ஆண்டு வளையங்கள் இருக்கும்.

 இந்த ஆண்டு வளையங்கள் விழ ஆரம்பிக்கும் 


காலமும் சித்திரைதான்
.
அன்றைய தினம் சந்திர அண்மித்த நிலையாகும்.

 சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும் நாளாகும். 


இதனால் புவியீர்ப்புவிசை 


முன்னைய காலத்தை விட அதிகமாகத் தொழிற்படுகிறது.

இது கடலில் புதிய அலைகளை புரட்டி விடும் காலமாகும்.


 தரையில்மட்டுமல்ல 


கடலிலும் இது புத்தாண்டுதான்.

மாதவிடாய் என்று ஏன் சொல்கிறார்கள்.

சந்திரன் பூமியைச் சுற்றிவரும் 29 நாட்களுக்கும்


 பெண்ணின் உடலுக்கும்உள்ள உறவு அது

சித்ரா பௌர்ணமி அன்று ஊரில் தெருக்கள்தோறும் 


ஆங்காங்கே பந்தல்அமைப்பார்கள்.

 பந்தலில் இரவு நேரம் பெரியோர்கள் சிலர் அமர்ந்து


 சித்ரகுப்த நயினார்கதை படிப்பார்கள்.

மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து 


விடிய விடிய இந்தக் கதையைக் கேட்டுக்

கொண்டிருப்பார்கள். 


கதை படித்து முடிக்க கிட்டத்தட்ட


 நாலு மணிநேரம்ஆகிவிடும். 


ஆனால் இது புண்ணியக்கதை


கேட்பது நல்லது என்று கூறுவார்கள்
சித்ரா நதி

நெல்லை மாவட்டம் திருக்குற்றால மலையிலுள்ள


 சித்ரா நதி சித்திரைபௌர்ணமி அன்றுதான் 


உற்பத்தியானதாகக் கருதப்படுகிறது.

அன்றைய தினம் அந்நதியில் நீராடுவது


 மிகச் சிறந்த பலன்களைஅளிக்கும்கல்வெட்டில் சித்திரை

திருச்சி மலைக்கோயிலின் தூணில் உள்ள 


கி.பி. 1011 ஆம் ஆண்டுக்

கல்வெட்டு ஒன்று சித்திரைத் திருவிழாவின்


9 ஆவது நாளன்று

பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய


 நிலம் தானம் அளிக்கப் பட்டதைக் குறிக்கின்றது

திருச்சி நெடுங்கள நாதர் திருக்கோயிலில் உள்ள 


அதே ஆண்டுக் கல்வெட்டு,

சித்திரைத் திருவிழாவின் போது 


550 சிவயோகிகளுக்கு அன்னதானம் செய்ய

நிலம் தானம் தரப்பட்டதைச் சொல்கிறதுஇந்திர விழா

பூம்புகாரில் நடந்த இந்திர விழா 


சித்திரை பௌர்ணமியில் தான்தொடங்கப்பட்டது.

இவ்விழாவை   சோழன் தூங்கெயில் எறிந்த 


தொடித்தோள் செம்பியன்


துவக்கிவைத்தான் என மணிமேகலை கூறுகிறது `

சித்திரை மூலிகை


சித்திரை பௌர்ணமி அன்று


 நிலவின் ஒளியில் பூமியில் 


ஒருவகை உப்புபூரித்து வெளிக்கிளம்பும்.

இதை பூமி நாதம் என்பர்.

இந்த உப்புத் தூள் மருந்துக்கு வீரியமளிக்கும்.

இளமையையும் மரணமில்லாத வாழ்வையும் கொடுக்கும்.


அந்த உப்பு, மருந்துகளுக்கு 


அதிகமான சக்தியை அளிக்கவல்லது என்பதால், ம


ருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுகிறது.


 இதைக் கண்டுபிடித்தவர்கள் சித்தர்கள். 


ஆதலால் முன்காலத்தில் சித்ரா பௌர்ணமி,


 சித்தர் பௌர்ணமி என்றே வழங்கப்பட்டது.
கன்னியாகுமரியில்...


கன்னியாகுமரியில் சந்திரோதயமும்,
 சூரிய அஸ்தமனமும் 


சித்திரை பௌர்ணமி அன்று ஒரே நேரத்தில் நடக்கும்
மகாபாரதத்தில்..
பாரதப் போர் முடிந்து 


தர்மர் ஆட்சி பொறுப்பு ஏற்றதும்
அசுவமேத யாகம் செய்ததும் 


இந்த நாளில் தான்
சித்திரகுப்தரும் சித்திரை பௌர்ணமியும்

சித்திரை பௌர்ணமியன்று 


தமிழகம் முழுவதும் சித்திரகுப்தர் வழிபடப்படுகிறார்.

யமதர்மராஜாவின். கணக்கரான இவர் 


சித்திரை பௌர்ணமியன்றுதான்
அவதரித்தார் என புராணங்கள் கூறும்
சென்னைக்கு வடக்கே


33 கி.மீ. தொலைவில் ஆரணியாற்றின் 


கரைப்பகுதியில் உள்ள தலம் சின்ன காவனம்.
இங்கு 8.42 ஏக்கர் பரப்பளவில் இரண்டு சிவன் கோவிலாக
நூற்றெட்டீஸ்வரர், சதுர்வேதபுரீஸ்வரர் ஆலயம் 


500 வருடத்துக்குமுற்பட்ட கோவில்.
மேலும் இவ்வூரில், மதகவிநாயகர்


கரி கிருஷ்ண பெருமாள் கோவிலும்உள்ளது
கும்மங்கலம் என்னும் இடத்தில்


2.21 ஏக்கர் பரப்பளவில் 


இராஜராஜ சோழமன்ன னால் கட்டப்பட்ட 


ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்உள்ளது.
சித்திரை மாதம் பௌர்ணமி அன்று 


ஐந்து கோவில்கள் ஒன்று கூடி
சந்திப்பு உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.சித்திரா பௌர்ணமி ஜோதி: 


திருவண்ணாமலையில் கார்த்திகை ஜோதி விசேஷம்.
சபரிமலையில் மகர ஜோதி பிரசித்தம்.
அதுபோல திருவக்கரை என்ற இடத்தில் 


சித்ரா பௌர்ணமி ஜோதிவிசேஷம்.
அங்கே வக்ர மகாகாளி கோவில் கொண்டிருக்கிறாள்.
இந்த தலத்தில் எல்லாமே வக்கிரம் தான்.
சித்திரா பௌர்ணமி அன்று 


ஜோதி யைத் தரிசித்து காளியையும் தரிசிப்பது
எல்லா வகை தோஷங்களையும் நீக்கக்கூடியது.
தேவர்களின் தலைவனான இந்திரன்

ஒரு முறை விருத்ராசுரன் முதலான 

அசுரர்களைக் கொன்றான். 

அவர்கள் வேதம் பயின்றவர்கள். 

அவர்களைக் கொன்றதால் பற்றிக் கொண்ட 

பிரம்மஹத்தி தோஷத் திலிருந்து நீங்க 

தேவ குருவான பிரகஸ்பதி யிடம் 

ழி கேட்டான்.

பூலோகத்திற்குச் சென்று

அங்குள்ள சிவாலயங்களை வழிபட

சிவனருள் கிடைக்குமென்றும்

அப்போது தோஷம் நீங்குமென தேவகுரு கூறினார்.

 குருநாதர் கூறியபடி பூலோகத்துக்கு வந்த இந்திரன் 

கேதாரம் முதலான பல தலங்களை வணங்கி

தெற்கு நோக்கி வந்தான். 

ஒரு கடம்ப மரத்தினடியில் 

லிங்கம் இருந்த பகுதியை தூய்மை செய்து 

முறைப்படி வழி பட்டான். 

அவரே சொக்கலிங்கம். 

அவருக்கு தேவேந்திரன் கோவில் கட்டினான்.

 ஆகாய உலகத்திலிருந்து வந்த 

மயன் உருவாக்கிய

ஸ்ரீ விமானத்தை எட்டு திசையிலும் 

எட்டு யானைகள் தாங்கின. 

32 சிகரங்கள் அந்த விமானத்தில் இருந்தன. 

64 சிவகணங்களும் விமானத்தை அலங்கரித்தார்கள். 

இந்திரன் அமைத்த விமானமாகையால்

மதுரை சொக்கநாதர் விமானத்திற்கு "இந்திரவிமானம்' என்று பெயர்.

சொக்கநாதரைப் பிரிய முடியாமல் 

இந்திரன் தவித்தான். 

அந்த நிலையில், ""இந்திரனே! ஒவ்வொரு வருடமும் 

சித்ரா பௌர்ணமி அன்று என்னை

இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். 
அதன்படி ஒவ்வொரு வருடமும் 

சித்ரா பௌர்ணமி நாளில்

 இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று 

திருவிளையாடல் புராணம் கூறுகிறது. 

அதனால் தான் சித்ராபௌர்ணமி 

மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது
சிவபெருமானை வழிபடுவதற்குரிய 


நாட்களுள் பௌர்ணமியும் ஒன்று. 


பௌர்ணமி விரதம் இருப்பவர்கள், 


சித்ரா பௌர்ணமி நாளில் 


மருக்கொழுந்து இலையால் 


சிவனை அர்ச்சிப்பது மிகவும் புண்ணியத்தைத் தரும். 


சுவாமிக்கு அன்று வெண்பட்டாடை சமர்ப்பிக்க வேண்டும்


. பலாசு என்னும் ஒருவகை மரத்தில்


 மலரும் மலர்களால் ஆன மாலையை அணிவிப்பது 


அந்த மலர்களால் அர்ச்சனை செய்வது 


மிகவும் விசேஷம். 


சுத்த அன்னத்தைப் (வெறும் சாதத்தை) படைக்க வேண்டும். 


இந்த முறையில் சித்ரா பௌர்ணமி பூஜை செய்தால், 


லட்சுமிகடாட்சமும் சகல சௌபாக்கியங்களும்


 கிடைக்கும் என்று ஆகமங்கள் சொல்கின்றன.

ஸ்ரீ வில்லிபுத்தூர் -
சித்திரா பௌர்ணமி அன்று 
ஸ்ரீ ஆண்டாளும் 
கூடவே ஸ்ரீ ரெங்க மன்னாரும் ஆற்றில் இறங்குவார்கள்
மதுரையில் சித்திரா பௌர்ணமியன்று 


கள்ளழகன் ஆற்றில் இறங்கி 


பக்தர்களுக்குத் தரிசனம் கொடுப்பது 


ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா. 


சித்ரா பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரமும், 


பௌர்ணமி திதியும் அற்புதமாகக் கூடுவதால், 


அன்று ‘கடல் ஸ்நானம்’ செய்வது சிறப்புகளை வழங்கும். 


அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் 


கர்மவினைகளைக் கழித்தும், 


சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும், 


அங்கே பிரசன்னமாகியுள்ள பித்ருக்கள், 


மகரிஷிகள், சித்த புருஷர்கள், யோகியர் தயாராக இருப்பார்களாம்.கருத்துகள் இல்லை: