வித விதமான ரசங்கள் இருக்குது.
ஒவ்வொன்றும் ஒரு சுவை.
அந்த வரிசையில் இன்று ஒரு புது வகை ரசம்-
தேங்காய்ப் பால் ரசம்-
தேவையான பொருட்கள்-
தேங்காய் ------------ 1
சிறிய பழுத்த தக்காளி ---- 4
சின்ன வெங்காயம் ------ 5 --6
பூண்டு ------------- 4 --5
மிளகு ----------- 1 ts
சீரகம் ----------- 1 ts
எண்ணை அல் நெய் ----3 ts
உப்பு ---------- தேவையான அளவு
மல்லித் தழை ----கொஞ்சம்
செய்முறை-
தேங்காய்த் துருவி சிறிது அரைத்து , பிழிந்து முதல் பால் எடுத்து தனியே வைக்கவும்.
இரெண்டாவது , மூன்றாவது பால் எடுத்து கலந்து வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தட்டி வைக்கவும்.
மிளகு, சீரகம், பூண்டு -பொடிக்கவும். [ பிரெஷ் ஆக பொடித்து செய்தால் மணமாக இருக்கும்]
தக்காளியை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணை அல் நெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கவும்.
பின் பொடித்து வைத்ததை போட்டு வதக்கவும்.
இதனுடன் இரெண்டாவது, மூன்றாவது பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
உப்பு சேர்க்கவும்.
கொதித்ததும் இறக்கி வைத்து முதல் பாலை கலக்கவும்.
மேலே கொத்துமல்லி தலை தூவவும்.
கவனிக்க வேண்டியது -
தேங்காய் பால் கொதிக்கும் போது தீ தணிவாக இருக்க வேண்டும்.
அதிக நேரம் கொதிக்க கூடாது.
கொதி வந்து அடுப்பில் 2 -3 நி இருந்தால் போதும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக