வருமான வரி-
அடித்தட்டு மக்களுக்கு இதைப் பற்றி கவலை இல்லை;
மேல்த்தட்டு மக்களுக்கு ஒரு விதமான கவலை;
பக்காவாக பொய் கணக்கு தயார் பண்ண வேண்டும்??????
இதில் மாட்டிக்கொண்டு, பைசா குறையாமல் வரிகட்டும் அரசாங்க
பணிஆட்கள்;
இந்த பிரிவில் இரண்டு category -
டேபிளுக்கு மேல் சம்பளம் வாங்கி ஒழுக்கமாய் வரி கட்டுபவர்கள்
டேபிளுக்கு கீழ் சம்பளம் வாங்கி வரி ஏய்ப்பு செய்பவர்கள்
whatever it is , மார்ச் மாதம் வரி கட்டும் மாதம்
இந்த மாதத்தில் வரி செலுத்துபவரின் கவலையே வங்கியில் காத்திருக்க
வேண்டும் என்பதுதான்;
வங்கிக்குப் போய் காத்திருந்து படிவம் வாங்க வேண்டும்
அதை பூர்த்தி செய்து [பொய்கணக்கும், மெய் கணக்கும் CONFUSE
ஆகக் கூடாது]
கொடுத்து வரி செலுத்த வேண்டும்.
அதற்குரிய ரசீதை பெற வேண்டும்;
பின் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்
இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி இருக்குது.
65,00,000 டெபிட் கார்ட் வசதி கொண்டுள்ள இந்த வங்கியின்
அதுவும் வரி கட்டறவங்க கடைசி நேரத்தில் தான் பறப்பாங்க;
கடைசி நேரத்தில் வங்கிகளில் போய் மணிகணக்காய் காத்திருக்க
வேண்டியது இல்லை.
A .T .M களிலேயே வருமான வரி செலுத்தும் வசதியை மத்திய அரசு
முதன் முதலாக அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக மார்ச் கடைசியில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகம்.
அதற்காக கூடுதல் மையங்கள் அமைக்கப் பட்டும் முடியலை.
அதனால், கடந்த டிசம்பர் மாதம் 'இனி அனைத்து தேசிய வங்கிகளிலும்
வரி செலுத்தலாம்' என ரிசர்வு வங்கி அறிவித்தது.
BUT NO USE;
ஆக்சிஸ் வங்கி [ AXIS BANK ] மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் ஏ. டி . எம்
மூலம் வரி செலுத்தும் முறையை அறிவித்தது.
இதனால் காத்திருந்து வரி செலுத்த வேண்டிய நிலை பெரும் அளவு
குறைந்தது.
அதனால் தற்போது முதல் கட்டமாய் யூனியன் பேங்க் ஆப் இந்தியா
[Union Bank Of India] இந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.
2600 ஏ.டி.எம். களில் இந்த நவீன வசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
இனி படிப்படியாக மற்ற வங்கிகளிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப் படும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இதன் சேவையை பயன்படுத்த
வங்கி இணய தளத்தில் தங்கள் TAN, மற்றும் PAN எண்கள் மூலம் பதிவு
செய்து கொள்ள வேண்டும்.
அப்போது ஒரு எண் தரப்படும்.
அந்த எண் உதவியுடன் ஏ. டி.எம் மில் வரி செலுத்தும் தேர்வை அழுத்த வேண்டும்.
அதை அழுத்தியதும் PAN எண்ணை குறிப்பிட வேண்டும்.
பின் செலுத்த வேண்டிய வரித் தொகையைக் குறிப்பிட்டு ஒப்புதல்
கொடுத்தால், கணக்கில் இருந்து நிமிடத்தில் பணம் பிடிக்கப் பட்டு
வருமான வரித் துறைக்குச் செல்லும்.
செலுத்தியதற்கான ரசீது எண் தரப்படும்.
இந்த முறையில் கடைசி நேர டென்ஷன் குறையும்.
காத்திருக்கும் நேரமும் மிச்சமாகும்.
வரி செலுத்துவோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
அரசின் இந்த வசதியை நல்ல முறையில் பயன்படுத்தி பயன் பெறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக