செவ்வாய், ஏப்ரல் 19, 2011

“ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்யலாம் என்று பெரியவங்களே சொல்லி இருக்காங்க?நாம ஒரே ஒரு பொய்தான் சொல்லறோம் என்று தவறான ஒரு செயலைச் செய்ய ஒரு சப்பக்கட்டு கட்டி விடுகிறோம்; அதுவும் இந்த பிரச்சனை அதிகம் செயல் படுத்துப்படுவது திருமண பேசி முடிக்கப் படும் போது தான்.
ஒரு பொய்யினால் பாதிக்கப் படுபவர்கள் வாழ் நாள் முழுவதும் சேர்ந்து வாழ வேண்டிய கணவனும், மனைவியும் தான்.
சொத்து, நிறம், தொழில்- இதில் கூட பொய் சொல்வது பின்னாளில் பெரும் பிரச்சனை ஆகி விவாகரத்துக் கூட நடக்கிறது.
ஜாதகத்தையே மாற்றுவது [தோஷம் இல்லை என்பது, கட்டங்களை மாற்றி எழுதுவது] என்று பெரிய அளவில் இந்த பொய் பயன்படுத்தப் படுவதுதான் வேதனைக்குரிய விசியம்.
இதனால் இருவரில் ஒருவர் இறக்க நேரிட்டால் வாழ்கையே போச்சே?  இது போன்ற நிகழ்வுகளை நான் கேட்க நேரிடும் போது எப்படி நம் முன்னோர்கள் ஒரு தவறுதலான வழிகாட்டியாக இருந்தார்கள்? என மனம் நொந்து இருக்கிறேன்;
  உண்மையில் இந்த கூற்றுக்கு வேறு அர்த்தம் இருப்பதை நான் இணைய தளத்தில் படித்தேன்;
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம் என்ன?

நம் முன்னோர்கள் கூறிய பழமொழிகளில் சில காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளதற்கு இதுவும் நல்ல உதாரணம்.
ஏனென்றால், “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழியாகும்.
காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது.
பழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர்.
அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள், பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று, “நல்ல வரன்தான், நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம்” என வலியுறுத்துவர்.
இதைத்தான் “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்று குறிப்பிட்டனர்.
ஆனால் தற்போது இந்தப் பழமொழி மருவி, “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” எனக் கூறப்படுவதால், பலர் மாப்பிள்ளை, பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
 இதனால் தம்பதிகளின் வாழ்க்கைதான் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டால் நல்லது.


நன்றி- ஆன்மிகம்

கருத்துகள் இல்லை: