செவ்வாய், ஏப்ரல் 19, 2011

கர்ப்பிணிப் பெண்களுக்கு

குழல் இனிது; யாழ் இனிது என்பர்

மக்கள் சொல் கேளாதவர்.

குழந்தைச் செல்வம் மிகப் பெரிய செல்வம்.

கரு உண்டாகி இருப்பதை அறிந்த கணமே

பெண்ணானவள்; தாயாக மாறுவதே

பெண்மையின் மகத்துவம்;

  அதுவே அவளின் தனித்துவம்.

பிரசவம் ஒவ்வொரு பெண்ணிற்கும் மறு பிறப்பு.

இன்றைய கால கட்டத்தில் சுகப் பிரசவம்

அரிதாகிக் கொண்டு இருப்பதாக சொல்லப் படுகிறது.


பெரியவர்களின் அனுபவ ஆலோசனைகள்,

மருத்துவரின் வழி நடத்தல்

சரியாக பின்பற்றப்பட்டால்

normal delivery எனும் சுகப் பிரசவம் சாத்தியப்படும்.

ஆரோக்கியமான உணவு,

மகிழ்ச்சியான மனது,

சந்தோசமான சுற்றுப்புறம்

இவையுடன் இறைவனின் கருணை

இவை இருந்தால் எல்லாம் நலமே.திருச்சி மலை கோட்டையில் இருக்கும்

ஸ்ரீ மட்டுவார் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவர் 


கிருபையால் சுகப் பிரசவம் ஆக

கிழேயுள்ள சுலோகத்தை நம்பிக்கை உடன்   தினம்

மூன்று முறை சொல்லி நமஸ்காரம் செய்யவேண்டும்.


ஹே சங்கர ஸ்மரஹர பிரமாதி நாத


மன்னாத ஸாம்ப சசிசூட ஹர திரிசூலின் 


சம்போ சுகப்ரஸவக்ருத் பவமே தயாளோ


ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலயமாம் நமஸ்தே. 


தெய்வ அருளால் ஷேமங்களும் உண்டாகும்.

கருத்துகள் இல்லை: