விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர்
கோவிலில், சித்திரை திருவிழா 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை,
சாகைவார்த்தலுடன் துவங்கியது.
6-ந் தேதி பந்தலடி தோப்பில் தாலிகட்டும் நிகழ்ச்சியும்,
அன்று முதல்மகாபாரத சொற்பொழிவும் நடந்து வருகிறது.
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில்
மடப்புரம் சந்திப்பிலிருந்து
30.கி.மீதூரத்தில் உள்ளது கூவாகம் கிராமம்.
இங்குள்ள அரவாணிகளின் தெய்வமாகிய
கூத்தாண்டவர் ஆலயத்தில்
இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை
முன்னிட்டு நடக்கும்திருவிழாவில்,
பல மாநிலங்களிலிருந்தும் அரவாணிகள் மற்றும்
பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்வர்.
இந்தாண்டு, சித்திரை திருவிழாவின் துவக்க நாளான
புதன் கிழமைமாலை 4.30 மணிக்கு
கூவாகம், நத்தம், சிவலிங்ககுளம், கொரட்டூர்,
வாணியங்குப்பம், தொட்டி ஆகிய கிராம மக்கள்
மேள, தாளங்கள் முழங்ககூழ் கலயங்களுடன்,
ஊர்வலமாக வந்து கூத்தாண்டவர்கோவில்
பின்புறமுள்ள மாரியம்மன் கோவில் முன் கூடினர்.
கூழ்கலயங்கள் வைக்கப்பட்டு
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,
ஆராதனைசெய்யப்பட்டது.
பின் பக்தர்கள் எடுத்து வந்த கூழ் ஒன்றாக கலந்து
பக்தர்களுக்குவழங்கப்பட்டது.
6ம் தேதி) முக்கிய பிரமுகர்களுக்கு தாலிகட்டுதல்
நிகழ்ச்சிநடை பெற்றது.
மகாபாரதப் பெருங்காதையில் அர்ஜானனால் கவரப்பட்டு
கர்ப்பமாக்கப்பட்டவேடுவப் பெண்ணான
நாகக்கன்னியின் மகன் அரவான்.
குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க
‘எந்தகுற்றமும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய
ஒரு மனிதப்பலிதங்கள் தரப்பில்
முதல் பலியாக வேண்டும்’ என ஆருடம் கூறுகிறது.
பாண்டவர் தரப்பில் இவ்வாறு சாமுத்திரிகா லட்சணம்
பொருந்தியவர்களாகக் காட்டப்படுபவர்கள் மூவர்.
அர்ஜானன், அவன் மகன் அரவான், ஸ்ரீகிருஷ்ணர்.
அர்ஜானனும், கிருஷ்ணரும் தான்
இந்த போருக்கான முகாந்திரம்
உடையவர்கள் என்பதால்
அரவானைப் பலியாக்க முடிவு செய்து
அவனைஅணுகுகின்றனர்.
அரவானும் பலிக்கு சம்மதித்தாலும்,
தனக்கான இறுதி ஆசையாக ஒரு
பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை துய்த்த
பின்பே தான்பலிக்களம் புகுவேன் என உரைக்கிறான்.
வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம் வரை
எந்தப் பெண்ணும் அதனைஏற்கவில்லை.
இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரமெடுத்து
அரவானைமணக்கிறார்.
ஒரு நாள் இல்லற வாழ்விற்குப்பின்
பலிக்களம் புகுகிறான் அரவான்.
விதவைக் கோலம் பூணுகிறாள் மோகினி.
இந்த சாராம்சத்தின் அடிப்படையில் மோகினியாய்
தம்மை உணரும்அரவாணிகள் கூடி வரும் இடமே
கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா.
சித்திரா பௌர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே
அரவாணிகள்விழுப்புரத்திற்கு வந்துவிடுகின்றனர்.
அனைத்து விடுதிகளும் அரவாணிகளால் நிரம்பிவிடுகின்றன.
எங்கு நோக்கிலும் அரவாணிகள்.
இந்த நிகழ்வு ஓர் சமயம் சார்ந்த நிகழ்வாக இருப்பினும்
இந்தியாவின் பலபாகங்களில் இருந்துவரும் அரவாணிகளை
ஒன்றினைக்கும் விழாவாகவேஅமைகிறது.
அரவாணிகள் தங்கள் தோழிகளை சந்திக்கவும்,
உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவும்,
நலம் விசாரிக்கவும்,
தங்கள் கலைகளை வெளிப்படுத்தும்இடமாகவும்
இது அமைவதால், சமுதாயத்தின் கேலிப் பார்வைகள்,
ஒதுக்குதல் கூவாகத்தில் இல்லை.
சித்திரா பௌர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானைக்
கணவனாகதம்முள் வரித்துக் கொண்டு
கோயில் அர்ச்சகர் கையால் தாலி கட்டிக்
கொள்கின்றனர் அரவாணிகள்.
விடியவிடியத் தங்களது கணவனான
அரவானை வாழ்த்தி பொங்கல்வைத்து
கும்மியடிச்சு பாட்டமும், ஆட்டமுமாக இரவு கழிகிறது.
பொழுது மெல்ல புலரத் துவங்க,
அதுவரை ஆனந்தமாய் இருந்தஅரவாணிகள்
முகத்தில் மெல்ல சோக ரேகைகள் படரத் துவங்குகின்றன.
அரவானின் இரவு களியாட்டம் முற்றுப் பெற்று
களப்பலிக்குப்புறப்படுகிறான்.
நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில்
மரத்தால் ஆன அரவான் சிற்பம்
வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோயிலிலிருந்து
நான்கு கி.மீ தூரத்தில்
உள்ள கொலைக் களமான
அமுதகளம் கொண்டுசெல்லப்படுகிறான்.
வழியெங்கும், சோகத்துடனும்,
அழுத கண்ணீருடனும் அரவாணிகள்.
'மதுர கோட்ட வீதியிலே
மன்னர் தானும் போகயில-
அட வளரும் நானும் போகயில
கோயில் வாசல் தாண்டிப் போகயில -
கரும் கூந்தல் அவுந்திட பாத்திங்களா
கரும் கூந்தல் அவுந்திட பாத்திங்களா
அம்பது லட்சமும் தாலி கட்டி -
நல்ல ஒம்பது லட்சமும் தாலி கட்டி
வச்சி படைக்காத நம்ப கூத்தாண்டவர்
வடக்க போறார் பாருங்கடி'
என வடக்கே உயிர் விடப்போகும்
அரவானைப் பார்த்து ஒப்பாரிவைக்கின்றனர்.
அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப் படுகின்றது.
தன் தாலி அறுத்து, பூ எடுத்து,
வளையல் உடைத்து பின்
வெள்ளைப்புடவை உடுத்தி
விதவை கோலம் பூணுகின்றனர்.
18- ந் தேதி திங்கட்கிழமை மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும்,
19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு
சாமி கண் திறத்தலும்.நடந்தது.
செவ்வாய்க்கிழமை மாலை கூத்தாண்டவர் கோயிலில்
ஏப். 20: உ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஏழு தலைமுறை பூசாரிகள் அரவானிகளுக்கு தாலி கட்டினர்.
அப்போது அரவானிகள் தங்களை மணப்பெண்களைப் போல்
அலங்கரித்து கொண்டிருந்தனர்.
இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
அரவானிகள் மட்டுமல்லாமல்
நேர்த்திக் கடனுக்காகவும் ஆண், பெண்கள்
பேதமின்றி தாலி கட்டிக் கொண்டனர்.
குழந்தை வரம் வேண்டிவேண்டிக்கொண்டவர்களும்,
குழந்தை பிறந்தவுடன்
அதற்கு ஆண்டுதோறும்
தாலி கட்டும் வழக்கத்தையும் கொண்டுள்ளனர்.
20ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு,
அரவாண் சிரசுக்கு கண் திறந்து,
மாலை அணிவிக்கப்பட்டது.
கோயில் அருகில் வடப்புறம் சகடையில்
30 அடி உயர கம்பம் நட்டு
வைக்கோல்பிரி சுற்றப்படும்.
இதுவே அரவான் திரு உருவம் அமைக்கும்
அடிப்படை பணியாகும்.
பின் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு,
30 அடி உயரமுள்ள தேரில்,
வைக்கோல் பிரியால் சுற்றி,
உடற்பாகங்கள் பொருத்தி,
திருவுருவம்அமைக்கப்பட்டது.
கீரிமேடு கிராமத்திலிருந்து புஜம், மார்பகம்,
நத்தம் கிராமத்திலிருந்து கை, கால்கள்,
சிவலிங்ககுளம் கிராமத்திலிருந்து வெண்குடை,
தொட்டி கிராமத்திலிருந்து கடையாணி கொண்டு வரப்பட்டு
காலை 7.40மணிக்கு தேரோட்டம் நடந்தது.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
"கோவிந்தா' கோஷம் முழங்கதேர் இழுத்தனர்.
.
திருநங்கைகளும் தேர் செல்லும் பாதையில்
சூடம் மற்றும் 108 தேங்காய்வைத்து
குழுவாக சுற்றி வந்து கும்மியடித்து
தேங்காய் உடைத்தும்
நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேரோட்டத்தின் போது திரண்டிருந்த
அரவாணிகள் உள்ளிட்ட
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
பூமாலைகள், பழங்கள், தானியங்களை
அரவாண் மீது வாரியிறைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
இவ்விழாவுக்காக வந்த அரவானிகள்
விழுப்புரம் நகரில் தங்கி
பல்வேறுநிகழ்ச்சிகளை நடத்தினர்.
இதில் மிஸ் கூவாகம் உள்பட கலை நிகழ்ச்சிகள்,
மருத்துவ முகாம்
உள்ளிட்டவை நடைபெற்றன.
விழுப்புரம் வட்டம், மரகதபுரம் கிராமத்திலிருந்து வந்த
ஐயப்பன் (41),தன்னுடைய 32 வயதில்
புதுவை அரசு மருத்துவமனையில் குடல் அறுவை
சிகிச்சை செய்து அதில் பிளாஸ்டிக் குடல் பொருத்தப்பட்டது.
பின்னர் செப்டிக் ஆனதால்
உயிர் வாழ்வது கடினம் என்று கூறியதால்
கூத்தாண்டவர் கோயிலில்
வேண்டிக் கொண்டதால் குணமாகியுள்ளார்.
எனவே அன்று முதல் பிரார்த்தனை செய்து கொண்டு
9 ஆண்டுகளாகதொடர்ந்து கோயிலுக்கு வரும்
டெய்லர் ஐயப்பன், தனக்கு 2 பெண்ணும்,
ஒரு மகனும் உடல் ஊனமுற்ற மனைவியும்
உண்டு என்று தெரிவித்தார்.
இப்படி அரவானிகள் மட்டுமல்லாமல்,
அனைத்துத் தரப்பு மக்களும்
கோயிலுக்கு வந்தனர்.
இருப்பினும் அரவானிகளின் எண்ணிக்கையே அதிகம்.
தேரோட்டத்தின் போது
விவசாயிகள் வேண்டுதலின் பேரில்
விளைபொருட்களை கூத்தாண்டவர் மீது வீசி
சூடம் ஏற்றி வழிபட்டனர்
அப்போது சுற்றி நின்று கும்மி அடித்து
அரவாணிகள் ஆடிப்பாடிமகிழ்ந்தார்கள்
அப்போது புது மணப்பெண்கள் போல் தங்களை
ஆடை, அணிகலன்களால்அலங்கரித்துக்கொண்டு
கூத்தும், கும்மாளமாக இருந்த திருநங்கைகள்,
தேர் அழிகளம் புறப்பட்டவுடன்
சோகமாய் உணர்ச்சி வசப்பட்டு
ஒப்பாரிவைத்து அழுதனர்
வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு
தேரை பின்தொடந்தார்கள்.
நடுப்பகல் 1.30 மணிக்கு
அழிகளம் எனப்படும் நத்தம் கிராம பந்தலுக்கு
சென்று அடைந்தது
அங்கு அரவான் களப்பலி கொடுக்கும்
நிகழ்ச்சி நடை பெற்றது.
அரவான் களப்பலி கொடுத்த பின்
அரவாணிகள் தங்கள் தலையில்
சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்தனர்.,
நெற்றியில் உள்ள பொட்டை அழித்தனர்.
பூசாரிகள், திருநங்கைகள் கையிலிருக்கும்
வளையல்களை உடைத்து,.
தாலிகளை அறுத்தெறிந்தனர்.
பின்னர் கிணறுகளுக்கு சென்று
தலையில் வைத்துள்ள பூக்களை
பிய்த்தெறிந்து கிணற்றில் தலைமூழ்கி
வெள்ளாடை அணிந்து விதவை
கோலம் பூண்டு
சோகத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு
புறப்பட்டுசென்றனர்.
மாலை 4 மணியளவில்,
பந்தலடி தெய்வநாயகம் செட்டியார் தோப்பில்,
"உறுமைசோறு' படையல் நடந்தது.
இதை வாங்கி சாப்பிட்டால்,
குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பிக்கை
உள்ளதால் ஏராளமான பக்தர்கள்
முண்டியடித்து வாங்கினர்.
இரவு 7 மணிக்கு ஏரிக்கரை காளி கோவிலில்,
அரவாண் உயிர்ப்பித்தல்நடந்து,
மீண்டும் பந்தலடிக்கு அரவாண் சிரசு எடுத்து வரப்பட்டு,
பூக்களால்அலங்காரம் செய்யப்பட்டு,
நத்தம், தொட்டி வழியாக,
கோவிலுக்குசென்றடைந்தது
17-ம் நாள் 21-ந் தேதி விடையாத்தியும்,
22-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடை பெற்றது
இத்துடன் இவ்விழா முடிவடைந்தது.
பொன். வாசுதேவனின் அகநாழிகையில்
'அரவாணிகளின் வாழ்வும், தாழ்வும்' என
தலைப்பில் மிக அருமையாக
அவர்களது இன்றைய நிலைமையை
உள்ளது உள்ளபடி கூறியுள்ளார்.
படிக்க வேண்டிய ஒரு விசியம்
திருநங்கை தினம்
திருநங்கைகளின் சமூக பாதுகாப்பை கருதி
அவர்களின் சிறப்பைவலியுறுத்தும் வகையில்
ஏப்ரல்15-ம் நாளை ஒவ்வொரு வருடமும்
கொண்டாட தமிழக அரசு
மார்ச் 1, 2011 அன்று
அரசாணை பிறப்பித்துள்ளார்.
ஏப்ரல் 15, 2008ம் ஆண்டு தமிழக அரசால்
திருநங்கைகளுக்கு
நலவாரியம்
அமைக்கப்பட்டது.
திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில்
நலவாரியம் அமைத்த நாளை
திருநங்கைகள் தினமாக அறிவிக்க வேண்டும்
என்ற திருநங்கைகளின்
கோரிக்கையை ஏற்று
தமிழக அரசு இந்த நாளை அறிவித்துள்ளது.