சனி, ஆகஸ்ட் 27, 2011

ர‌க்‍ஷா ப‌ந்த‌ன்

சனிக்கிழமை, ஆகஸ்ட் 13, 2011,

பெ‌ண்க‌ள் த‌ங்களது சகோதர‌ர் ம‌ற்று‌ம்

சகோதர‌ர்களாக பா‌வி‌ப‌வ‌ர்களு‌க்கு

ரா‌க்‌கி அ‌ணி‌வி‌க்கு‌ம் தினமே ர‌க்‍ஷா ப‌ந்த‌ன் ‌விழாவாகு‌ம்.

ர‌க்‍ஷாப‌ந்த‌ன், ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம்

ஆவணி மாத பௌர்ணமி தினத்தன்று

கொண்டாடபடும் பண்டிகையாகும்

பெண்கள் பூஜை‌யி‌ல் ம‌ஞ்ச‌ள்_நூலை வை‌த்து பூஜை‌செய்து,

த‌ங்ககள் சகோதர‌ர்க‌ள் பல்லாண்டுகால‌ம்

நலமாக வாழவே‌ண்டி

அ‌ந்தம‌ஞ்ச‌ள் க‌யிறை தமது சகோதரர்கள், (அல்லது)

சகோதரர்களாக பா‌வி‌பவ‌ர்க‌ளி‌ன் கை மணிக்கட்டில்

கட்டுவதுதா‌ன் இந்தபண்டிகையின் முக்கிய அம்சம்

.ஒரு ஆ‌ண் இ‌ந்த ம‌ஞ்ச‌ள்க‌யிறை க‌‌ட்டி‌க்கொ‌ள்வத‌ன் மூல‌ம் ,

அந்த சகோதரியின் வாழ்க்கை பாதுகா‌ப்‌பி‌ற்கு‌ம், நலத்திற்கும்

உறுதுணையாக இருப்பேன் என உறுதி கூறுவதாக கருதபடுகிறது.

சகோதரனின் கையில் அன்பு சகோதரி ராக்கிகட்டி

அவனுடைய சுபீட்சத்திற்கு பிராத்தனையும் செய்கிறாள்,

பதிலுக்கு அவளுக்கு நிறையபரிசுகள் கிடைக்கின்றன.

அண்னண்

தங்கை மட்டுமின்றி,

ஆண், பெண் இடையேயான சகோதர பாசத்தை

வெளிக்கொணரும் பண்டிகை இது.

இந்நாளில், அக்கா, தங்கை மற்றும் பெண்கள்,

தங்கள் உடன் பிறந்த மற்றும் வயதில் மூத்த ஆண்களை,

தனது உடன் பிறந்தவர்களாக நினைத்து,

ரக்ஷா பந்தன் நாளில்,

அவர்களது கையில் ராக்கி கயிறு கட்டி,

நெற்றியில் திலகமிட்டு, இனிப்பு வழங்கி,

அவர்கள் நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும் என,

கடவுளை வணங்குவர்.

ஆண்களும், தங்கள் சகோதரியின் துன்பங்களை,

தான் ஏற்றுக்கொண்டு,

அவரை மகிழ்ச்சியாக வாழ வைப்பேன் என,

கடவுளிடம் உறுதியளித்து,

இனிப்பு, புத்தாடை, நகை மற்றும் பணம் வழங்குவர்.

துவக்கத்தில் மஞ்சள் நூலாக மட்டுமே இருந்த ராக்கி,

பின்னாளில், பல வண்ண கயிறுகளால் தயாரிக்கப்பட்டது.

தற்போது, கடவுள் உருவம் பதித்த,

வண்ணமிகு கலைநயமிக்க வேலைப்பாடுகள்

நிறைந்த ராக்கி கயிறுகள் கட்டப்படுகின்றன.

இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டுமே

முன்பு கொண்டாடப்பட்டு வந்த ரக்ஷா பந்தன்,

தற்போது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும்

சிறப்பாக கொண்டாப்படுகிறது.


மகாபலியின் தீவிர பக்தியில் அகம் குளிர்ந்த விஷ்ணு,

என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார்.

அதற்கு மகாபலி, தனது நாட்டை

விஷ்ணு தான் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தான்.

அதையேற்றுக் கொண்ட விஷ்ணு,

வைகுண்டத்தில் இருந்து இறங்கி வந்துவிட்டார்.

கணவனை காணாத லட்சுமி,

மகாபலியின் நாட்டிற்கு வந்தார்.

அங்கு காவலனாக இருந்த கணவனை காப்பாற்ற

லட்சுமி ஏழை பெண்ணாக உருமாறினார்.

பின்னர் மகாபலியிடம் சென்று ஒரு கயிறை கட்டிவிட்டு,

தனது நிலையை கூறியுள்ளார்.

உங்கள் சகோதரியை துன்பம் தீண்டாதவாறு


காப்பது உங்கள் கடமை அண்ணா" என அன்புடன் கூறினார்.


இதைக் கேட்டு உள்ளம் பூரித்த பலி,

" உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்.

ஒரு சகோதரனாக நான் செய்து தருகிறேன்" என வாக்குறுதி அளித்தார்.

உடனே "உங்கள் தங்கையான என் கணவரை

என்னுடன் அனுப்புங்கள்" எனக் கேட்டுள்ளார்.

தன் தவறை உணர்ந்த பலி, விஷ்ணுவை அனுப்பி வைத்தார்.


ஜாதி,மாத, இன, மொழி என எல்லாவற்றை கடந்து,

சகோதர அன்பை தெரிவிப்பதன்

ஒரு முக்கிய வெளிப்பாடாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை: