உலகமெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த
ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்
முஸ்லிம்களுக்கு ரம்ஜான் பண்டிகை.
ஈத் உல் ஃபிதர் என்று அழைக்கப்படும் இப்பண்டிகை,
பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளையும், பெருமைகளையும் கொண்டது.
ஃபிதர் என்றால் தானம் அளிப்பது என்று பொருள்.
இருப்போர், இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதும்,
இறைவன் முன் அனைவரும் சமம் என்பதும் தான் இப்பண்டிகையின் உட்கரு.
ஈத் என்பது ரமலான் மாதத்தின் இறுதியில் வரும் பண்டிகை.
இந்த மாதம் முழுவதும் பகல் வேளைகளில்
முஸ்லிம்கள் உண்ணா நோன்பு கடைபிடிக்கின்றனர்.
சூரியன் உதிப்பதற்கு முன் உணவு உட்கொண்டு,
சூரியன் மறைந்தபின் தான் தமது நோன்பை முடிக்கிறார்கள்.
நோன்பு இருப்பவர்கள் பகலில் நீர் அருந்துவது இல்லை,
எச்சில் கூட விழுங்குவதில்லை.
ஈத் பண்டிகை அன்று காலை உறவினர்களும், நண்பர்களும்
ஈத்-முபாரக் என்ற வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.
எல்லோரும் கூடி தொழுகை நடத்துகிறார்கள்.
இது பெரிய மைதானத்தில் நடக்கும்.
அங்கு முஸ்லிம் மதத்தலைவர் காஜி ஊர்வலமாக அழைத்துவரப்படுவார்.
தொழுகைக்குப் பின் அவர் அறிவுரை வழங்குவார்.
இதற்குப் பிறகு தங்கள் உறவினர்களையும்
நண்பர்களையும் சந்தித்து விட்டு,
படைத்து வைத்துள்ள விருந்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து,
தாமும் உண்டு மகிழ்வர்.
முஸ்லிம்களில் ஷியா பிரிவினர்
ரமலான் மாதத்து இருபத்தி ஒன்றாவது நாளையும்,
இருபத்திரண்டாவது நாளையும் துக்க நாட்களாகக் கருதுகிறார்கள்.
இந்த துக்கம் முகம்மது நபி நாயகத்தின் மாப்பிள்ளை அலியின்
வீரமரணத்திற்காக அனுசரிக்கப்படுகிறது.
இந்த மாதத்தில் தான் புனித குர் ஆன்
மேலுலகிலிருந்து இவ்வுலகிற்கு வந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த மாதத்தின் கடைசி பத்து இரவுகளில்
குர்ஆன் முதலில் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக