வியாழன், அக்டோபர் 11, 2012

துளசி

வறண்ட கூந்தலுக்கு-

கால் கிலோ நல்லெண்ணையில்

துளசி இலை இரண்டு கைப்பிடி,

மிளகு 50 கி போட்டுக் காய்ச்சவும்.

வாரம் இரண்டு முறை தலைக்குத் தேய்த்து

சீயக்காய் அல் பயத்தம் மாவு போட்டு அலசவும்.

பொடுகு போகும்; கூந்தல் மிருதுவாகும்.

பனிகால முடி கொட்டுதல்-

சம அளவு தாமரை இலைச் சாறு,

துளசி சாறு கலந்து, மிதமான தீயில்

காய்ச்சி வடிகட்டவும்.

தினமும் இந்த எண்ணையை  லேசாக சூடு செய்து

தலையில் தடவி வந்தால்

முடி கொட்டுதல், இளவயது  வழுக்கை மறையும்.

பேன் தொல்லை நீங்க-

துளசியை மைய அரைத்து தலையில் தேய்த்து,

அரை மணி நேரம் ஊறவும்.

வெது வெதுப்பான நீரில் அலசவும்.

முடிக்கு கண்டிஷனர் -

சம அளவு துளசி, செம்பருத்தி இலை,

சுத்தம் செய்த  4 புங்கங்காய் தோல்

மிக்ஸியில்  அரைக்கவும்.

எண்ணை  தேய்த்து குளிக்கும் போது

இந்த விழுதை தேய்த்து அலசவும்.

சருமம் மிருதுவாக-

பால் பவுடர்-- 1/2 டீஸ்பூன்

துளசி பவுடர் --1/2 டீஸ்பூன்

சந்தனப் பவுடர் -1/4 டீஸ்பூன்

கஸ்துரி மஞ்சள் தூள்--1/4 டீஸ்பூன் 

இவையுடன் பால் கொஞ்சம்

சேர்த்து நன்கு குழைத்து

தினமும் முகம், கை, காலில்

தேய்த்துக்   குளிக்க நல்ல நிறமும் கிடைக்கும்.

கண்ணிற்கு கீழ் கருவளையம் நீங்க-

துளசி இலை 5

வெள்ளரி விதை 2 டீஸ்பூன்

சிறிது கஸ்துரி மஞ்சள் தூள்

அரைத்து கண்ணிற்கு கீழ்

நன்கு தடவி 2 நிமி கழித்து கழுவவும்.


சுடு நீரில் துளசியை போட்டு ஆவி பிடித்தால்

சளி, மண்டை குத்தல் நீங்கும்.

5 துளசி இலையை தண்ணீரில்

போட்டு குடித்து வந்தால்

தொடர் இருமல் நீங்கும்.

கட்டிகள், வெட்டுக்காயம், வண்டுகடி

அந்த இடத்தில் துளசியை அரைத்து பூசினால்

உடனடி குணம் தெரியும்.

ஒரு வயதான குழந்தைகளுக்கு

ஒரு டீஸ்பூன்  துளசி சாறு கொடுத்தால்

மாந்தம், வயறு சம்மந்தமான

பிரச்சனைகள் தீரும்.

பரு தொல்லைகளுக்கு-

சந்தன தூள், வேட்டிவேர் பவுடர்,

துளசி சாறு, எலுமிச்சை  சாறு

தலா ஒரு டீஸ்பூன் கலந்து பூசி,

ஐந்து நிமிடம் கழித்து கழுவவும்.

துளசியை ரசமாக செய்து சாப்பிட்டால்

வாய் கசப்பு, ஜுரம் நீங்கும்.

சிறுநீரகக் கல் நீங்க

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு

இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் வெறும் வயிற்றில்

 அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து

அருந்தி வந்தால் சிறுநீரகக் கல்

படிப்படியாக கரையும்.

இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது.

 இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள்,

விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி

ரத்தத்தை சுத்தமாக்கும்.

10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி

2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி

கஷாயம் செய்து சூடாக அருந்தி,

பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு ந

ல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால்

மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.


துளசி (Ocimum sanctum) மூலிகைகளின் அரசியாக போற்றப் படுகிறது.

இதற்கு அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய்,
 
துளவு,குல்லை, வனம், விருத்தம், துழாய், மாலலங்கர்
 
என பல பெயர்கள் உண்டு.
 
துளசி இந்தியா முழுவதும் காணப்படும் செடி வகையாகும்.
 
இதில் நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி,
 
கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகள் உள்ளன.
 
துளசியை பொதுவாக தெய்வீக மூலிகை என்றே அழைப்பார்கள்.
 
கற்ப மூலிகைகளில் இதற்கு தனிச்சிறப்பு உண்டு.
 
இந்து மதத்தினர், இலட்சுமி தேவியின் அம்சமாகவே
 
எண்ணி இதனை வழிபடுகின்றனர்.

துளசியானது இடியைத் தாங்கும் சக்தி கொண்டது

என அறிவியல் அறிஞர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இதனால் தானோ என்னவோ வீடுகளில் துளசி வளர்த்திருப்பார்களோ ? 
 

கருத்துகள் இல்லை: