![]() |
இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில்
மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால்,
இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள்.
சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை
நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று
திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
இந்த தீபம், ஐந்தரை அடி உயரமும், ஐந்தடி நீளமும் உள்ள
ஒரு இரும்பு கொப்பரையில், 2000 கிலோ நெய்யை விட்டு,
முப்பது மீட்டர் காடாத் துணியைச் சுருட்டி
அதைத் திரியாகப் போட்டு
அதன் மேல் இரண்டு கிலோ கற்பூரத்தை வைத்து ஏற்றப்படும்.
இந்த மகாதீபம் மலையைச்சுற்றி
35 கிலோமீட்டர் தூரம்வரை தெரியும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்
கார்த்திகை தீபதிருவிழா 29-12-2011கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு
அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு
சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான
விநாயகர், முருகர், அண்ணாமலையார்,
உண்ணாமலையம்மன், சண்டிகேஸ்வரரை அலங்கரித்து
மேளதாளம் முழங்க தங்கக் கொடிமரம் அருகே கொண்டு வந்தனர்.
இங்கு மகாதீபாராதனைக்கு பிறகு
அதிகாலை 6.25 மணிக்கு வேதமந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க,
கோயில் பெரிய பட்டம் வெங்கட்ராஜன் குருக்கள் தலைமையில்
ஹாலாசியநாதன், தியாகராஜன், கிருஷ்ணகுமார், கீர்த்திவாசன்,
சங்கர், சுவாமிநாதன் சிவாச்சாரியார்கள்
61 அடி உயரமுள்ள தங்கக்கொடிமரத்தில் கொடியேற்றினர்.
முதல் நாளான பகல் பஞ்சமூர்த்திகள்
கண்ணாடி விமானங்களிலும்,
இரவில் பஞ்ச மூர்த்திகள் மூஷீகம், மயில், வெள்ளி அதிகாரநந்தி,
ஹம்சம், சிம்ம வாகனத்தில் மாடவீதியில்
பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வரும் 4ம் தேதி பகலில் 63 நாயன்மார்கள் ஊர்வலமும்,
இரவில் வெள்ளிரத ஊர்வலமும் நடக்கிறது.
5ம் தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
அன்று காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடக்கிறது.
விநாயகர், முருகர், அண்ணாமலையார்,
அம்மன், சண்டிகேஸ்வரர் தேர்கள் மாடவீதியில்
பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
இதில் அம்மன் தேரை பெண்களே விரதமிருந்து இழுத்து வருவார்கள்.
உச்சக்கட்ட விழாவான கார்த்திகை தீபதிருவிழா
வரும் 8ம் தேதி நடக்கிறது.
அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணிதீபமும்,
மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள
2668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்படும்.
பெரும்பாலோனோர் காலை முதல் விரதமிருந்து,
மாலை பூஜை முடிந்தபின்னர்,
அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி
வீடு முழுவதும் வைப்பார்கள்.
நகர்புறங்களில் இட நெருக்கடி இருந்தாலும்,
எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ
அங்கெல்லாம் விளக்கேற்றி வைப்பார்கள்.
கார்த்திகை தீபம் 24ம் நாள் (10.12.2011) சனிக்கிழமை
திருக்கார்த்திகைத்தீபமாகும்
அன்றைய தினம் சந்திர கிரகணமாகும்
கிரகண நேரம்: -மாலை06.14முதல் 09.45வரையாகும்
எனவே இந்நேரத்துக்கு முன்பாக
தங்களின் இல்லங்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்
கிரகண காலங்களில் வழி பாடு செய்வதை தவித்துக்கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக