வெள்ளி, டிசம்பர் 09, 2011

மாவிளக்கு செய்முறை


மாவிளக்கு 


தேவையான பொருட்கள்- 
பச்சரிசி கால் கிலோ,
பாகு வெல்லம் கால்கிலோ[ தூள் செய்யவும்.]
ஏலக்காய் நாலு, ஐந்து,
50கிராம், நல்ல பருத்திப் பஞ்சினால் ஆகிய திரி
(நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்,)

பச்சரியை நன்கு களைந்து
குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும்,
ஊறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு நன்கு மாவாக்கவும்.
சில வீடுகளில் சலிக்கும் வழக்கம் கிடையாது.
மாரியம்மனுக்குப் போடும் மாவிளக்குப் 
பொதுவாய்ச் சலிப்பதில்லை
என்றாலும் அவங்க அவங்க வீட்டு 
வழக்கத்திற்கு ஏற்ப மாறும்.  
ன்கு அரைத்து. மாவாகிவிடும்.
வெல்லத்தைப் போட்டுக் கலந்தால்
நன்கு கெட்டியாக உருட்டும் பதத்தில் வரவேண்டும்.
பந்து போல் உருட்டவேண்டும்,
அவரவர் வீட்டு வழக்கப் படி ஒரு உருண்டை அல்லது
இரண்டு உருண்டை பிடிக்கவேண்டும்.
உருண்டையில் நடுவில் குழி செய்து கொள்ள வேண்டும்
அம்மன் சந்நிதியில் அம்மனுக்கு நேரே 
அம்மன் சாப்பிட்டால்
இலையை எப்படிப் போடுவோமோ அப்படி
நுனி அம்மனின் இடப்பக்கம் வருமாறு போட்டு
மாவு உருண்டைகளை வைக்கவேண்டும்.
குழி செய்த இடத்தில் ததும்ப நெய்யை ஊற்ற வேண்டும்.
திரியை அந்தக் குழியில் விட்ட நெய்யில் 
வைத்துத் திரியை ஏற்றவும்.
இப்போது பூவை மாலை போல்
இரண்டு மாவிளக்குகளையும் சேர்த்துப்போடவும்.
நாலுபக்கமும் மஞ்சள், சந்தனம், 
குங்குமத்தால் அலங்கரிக்கவும்.
பூவைத்திருக்கும் இடத்திலேயே 
வெற்றிலை, பாக்கு,வாழைப்பழம் வைத்துத்
தேங்காயையும் உடைத்து வைக்கவேண்டும்.
திரி நன்கு எரியும்.
நீளமான திரி எரிந்து முடியும் நேரத்தில்,
(இதை அம்மன் மலை ஏறிவிட்டாள
என்று கூறுவார்கள்)
அந்தத் திரியை ஒரு கரண்டியில்
அல்லது ஸ்பூனால்எடுத்துக் 
கோயிலில் இருக்கும் விளக்குகள்
ஏதாவதொன்றில் அணையாமல் வைக்கவேண்டும்.
பின்னர் தண்ணீர் சுற்றி நிவேதனம் செய்துவிட்டுக்
கற்பூர ஆராத்தி எடுக்க வேண்டும்.
[பஞ்சுத்திரியைக் கொஞ்சம் நெய்யில் 
முன்னாலேயே ஊற வைக்கவும்}.
பாகு செய்தல்-
தூள் செய்த வெல்லத்தை 
ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு
 மூழ்கும் வரை நீர் ஊற்றி 
அடுப்பில் வைக்கவும்.
நன்கு கொதிக்க விடவும்.
நுரைத்து வரும் போது,  
மிதமான தீயில் வைத்து கிளறவும்.
ஒரு கம்பி பதம் போதும்.
துள்ளு மாவு:
முன் மாவிளக்குக்குச் சொன்ன 
அதே அளவு பச்சரிசி வெல்லம்
மற்றப் பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டும்.
மாவை மிக்சியில் அரைத்துக்கொண்டு
நன்கு காய வைத்து 
வெல்லத் தூளைச் சேர்த்துத்
தேங்காய்துருவல், ஏலக்காய் சேர்க்கவேண்டும்.
இது உதிராகப் பொடியாகவே இருக்கும்.


காப்பரிசி:
வெறும் பச்சரியை ஊற வைத்து
நீரை வடிகட்டிவிட்டுத்,
தேங்காயைப் பல்லுப் பல்லாகக் கீறிப்போட்டு,
வெல்லம், ஏலக்காய் சேர்க்கவேண்டும்.
இது பிரார்த்தனைகளில் மட்டுமே செய்யப் படும்.


பானகம்:
வெல்லத்தைப் பொடித்துக்கொண்டு
வேண்டிய அளவு நீர் விட்டு
சுக்கும் ஏலக்காயிப் பொடி 
கலந்து கொள்ளவேண்டும்.
எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். 
ஆடியில் ஐந்து வெள்ளி கிழமைகள் 
வருவது சிறப்பு. 
ஆடி வெள்ளியில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதும், 
ஆடியில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்வதும், 
வீட்டில் சுமங்கலி பூஜை செய்வதும் சிறப்பு. 
ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு 
மாவிளக்கு போடுவதும் 
விசேச பலன்களை தரும்.

அம்மனுக்கு கூழ் 

ராகி தானியம் வாங்கி வெயிலில் காய வைத்து 
மிஷினில் கொடுத்து அரைத்து பயன்படுத்தலாம் 
அல்லது சுத்தமான ராகி மாவு பாக்கெட்டாக 
கடைகளில் கிடைக்கிறது 
அதனையும் பயன்படுத்தலாம். 
ஒரு பங்கு மாவிற்கு 
மூன்று பங்கு நீர் விட்டு 
கரைத்துக் கொள்ளவும். 
இதனை அடுப்பில் வைத்து கிண்டவும். 
மாவின் நிறம் மாறி இறுகி வரும். 
தண்ணீரில் கை வைத்து 
மாவில் தொட்டால் ஒட்டக் கூடாது. 
இறக்கி வைத்து விடவும்.
ஆறிய பின்
பொடியாக நறுக்கிய வெங்காயம், 
மோர் சேர்த்து கரைக்கவும்.
கூழ் தயாரானதும் 
அம்மனுக்கு படைக்கும்முன் 
ஐந்தாறு வேப்பிலை சேர்த்து படைக்கவும். 
உப்பு சேர்ப்பது இல்லை.
பக்தர்களுக்கு தரும் போது வேண்டுமானால்
உப்பு சேர்த்து தரலாம்.

குல தெய்வத்திற்கு மாவிளக்கு

பச்சரிசியை ஈரமாவு திரிக்கும் மெஷினில் 
தந்து அரைத்துக் கொள்ளவும்.
கால் கிலோ அரிசி எனில் 
கால் கிலோ நாட்டுச்சர்க்கரை 
ஒரு அகண்ட பாத்திரத்தில் மாவையும் 
சர்க்கரையையும் கொட்டி
ஏலக்காய், பச்சை கற்பூரம்  பொடி 
சேர்த்துக் கொள்ளவும். 
லேசாக தண்ணீர் தெளித்து 
இறுக்கமாக பிசைந்து 
குவித்து பிடித்து வைக்கவும். 
நடுவில் குழி செய்து திரி போட்டு, 
நெய் ஊற்றி விளக்கை தயார் செய்யவும். 
விளக்கில் குங்குமப்பொட்டு வைத்து , 
பூ வைத்து சாமி முன் 
குல தெய்வத்தை நினைத்து விளக்கேற்றவும். 
இதனை ஆடி வெள்ளியில் 
வீட்டிலேயே செய்யலாம்.
குலதெயவம் குலம் காக்கும்.

திருவிளக்கு பூஜை

ஆடி வெள்ளியில் சுமங்கலிகள் 
திருவிளக்கு பூஜை செய்வதும் 
குடும்பத்திற்கு நல்லது. 
இதனையும் வீட்டிலேயே செய்லாம். 
குத்துவிளக்கு குறைந்த பட்சம்
 இரண்டு முகமாவது தீபமேற்றி ,
குங்கும அர்ச்சனை செய்து 
தேவியின் அருளைப்பெறலாம்.

மாவிளக்கு- சுலப முறை 


2௦௦கி  பச்சரிசியை 
1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
தண்ணீரை வடித்து விட்டு 
ஒரு துணியில்போட்டு 
வீட்டுக்குள்ளேயே 2 மணி நேரம் காயவிடவும்.
பிறகுமிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக 
போட்டு மாவாக்கி 
சல்லடையில் சலித்து 
அதையும் சலித்து கொள்ளவும்
200 கி வெல்லத்தை பொடியாக தட்டி 
மாவில் போட்டு பிசையவும். 
உருட்டும் அளவிற்கு பிசைய தண்ணீர் 
சிறிது தேவையென்றால் தெளித்து பிசைந்து உருட்டவும்.

கருத்துகள் இல்லை: