சனி, செப்டம்பர் 03, 2011

விநாயக சதுர்த்தி






வாழக்கையில் அவரை துதித்தே

அனத்தையும் ஆரம்பிக்கின்றோம்;

செய்து முடிக்கின்றோம்.

குழந்தைகள் முதல் முதியவர் வரை

அனைவருக்கும் பிடித்தமானவர் விநாயகர்

இவரைப் பார்த்த மாத்திரத்திலேயே நம் மனதில் பக்தி தோன்றுகிறது.

எல்லோரும் இவரைத் தொழுகின்றோம்.

அனைவர்க்கும் பிடித்தமான தெய்வமாகவும் திகழ்கின்றார்.


‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று

நம் கையாலேயே பிடித்து வைத்து

நாம் பூஜை செய்வதால்

நமக்குப் பிடித்தமான தெய்வமாக இருக்கிறார்.

நம் வினைகளைத் தீர்த்து வைப்பதால்

விநாயகர் என்று போற்றுகிறோம்.

சிவ கணங்களுக்குத் தலைவராதலால்

கணபதி என்றும் கணேசர் என்றும் வணங்குகிறோம்.


ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள்.

அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால்,

தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து

ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து

காவலுக்கு நிக்கச்சொன்னார்.

யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார்.

அப்போது அங்கே வந்த சிவபெருமானை

தடுத்தான் அந்தச் சிறுவன்.

கோபமுற்ற சிவபெருமான்

அவன் தலையை துண்டித்தார்.

பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை

அறிந்த சிவபெருமான்

அச்சமுற்று, தன் பூதகணங்களை அழைத்து

அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின்

தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார்.

அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை.

சிவபெருமானின் கட்டளைப்படி

அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர்.

அதனை சிவபெருமான்

அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து

மீண்டும் உயிர் கொடுத்தார்.

அப்போது வெளியே வந்த பார்வதி

பிள்ளை யாரு? எனக் கேட்டார்.

அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது.

அச்சிறுவன் தான் பிள்ளையார்.


பொதுவாய் சுக்கில பட்சத்தில் சந்திரன் வளர ஆரம்பிப்பான்.

அமாவாசை கழிந்த நான்காம் நாள் வரும் அந்த சதுர்த்தியில்

சந்திரனைப் பார்த்தால், சந்திரன் வளருவது போல்

துன்பமும் வளரும் என்பதாலேயே

அன்று சந்திரனைப் பார்ப்பதைத் தவிர்க்கும்படி சொல்லப் படுகின்றது.

அதே பெளர்ணமி கழிந்த நான்காம் நாள் விரதம் இருப்பவர்கள்

அன்றைய சந்திரனைப் பார்த்துவிட்டே

அன்று விரதம் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதும் எழுதப் படாத விதி.

ஏனெனில் சந்திரன் தேய ஆரம்பிப்பான்.

துன்பமும் அது போல் தேய்ந்து போகும் என்ற நம்பிக்கையும்,

விரதம் இருக்க வேண்டிய விதியும் அப்படி இருப்பதே காரணம்.

சதுர்த்தி விரதம் இருப்பவர்கள்

சங்கட ஹர சதுர்த்தியிலே தான் ஆரம்பிப்பார்கள்.

சந்திரன் எப்படித் தேய்ந்து போவானோ

அதே போல் துன்பமும் தேய வேண்டும் என்பதாலேயே

இந்த விரதத்துக்கே சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லுவதுண்டு.

ஆவணிமாதச் சதுர்த்தி விநாயகரின்

பிறந்த தினமாய்க் கொண்டாடப் படுகின்றது.

இதன் பின்னர் வரும் சங்கட சதுர்த்தியில் இருந்தோ, அல்லது

இந்த ஆவணிமாத விநாயக சதுர்த்தி அன்றிலிருந்தோ

விரதம் இருக்க ஆரம்பித்து,

மறு வருஷம் ஆடி மாதம் வரும் மகா சங்கடசதுர்த்தியில்

இருந்து பதினைந்தாம் நாள் வரும்

ஆவணிமாத சுக்லபட்ச சதுர்த்தியில் (விநாயக சதுர்த்தி அன்று)

விரதம் பூர்த்தி ஆகும்.

இது மாதிரியும் இருக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் சங்கட சதுர்த்தி அன்று இரவு

மிக மிக தாமதமாய் வரும் சந்திரனைப்

பார்த்துவிட்டே உணவு உட்கொள்ள வேண்டும்.

இது கஷ்டம் என்று நினைப்பவர்கள்

மகாசங்கட சதுர்த்தியில் விரதம் ஆரம்பித்து

பதினைந்து நாட்கள் கழித்து வரும்

விநாயக சதுர்த்தியிலும் முடித்துக் கொள்ளலாம்.

விரதம் இருப்பது என்பது மனத்தூய்மைக்காகவே.

உடல்நலக் கேடு உள்ளவர்களால்


தொடர்ந்து விரதம்இருக்க முடியாது

என்பதால் இப்படி வைத்துக் கொள்ளலாம்.

விரதம் இருக்க முடியாதவர்களையும்

விநாயகரோ அல்லது வேறு கடவுளர்களோ

ஒன்றும் சொல்லப் போவதில்லை.

உடல் பலமும், மன பலமும் உள்ளவர்கள்

மேற்கண்ட முறைகளில் விரதம் இருக்கலாம்.

பிள்ளையாரின் தலை பற்றிய இன்னொரு கதை 


பார்வதி விநாயகரைப் பெற்றதும், 

தன் குழந்தையை ஆசீர்வதிக்கும்படி 

அனைத்து தேவ, தேவதைகளுக்கும் 

அழைப்பை அனுப்பினாராம். 

தேவர்கள் வந்து பிள்ளையாரை ஆசீர்வதித்தார்கள். 

ஆனால் சனீஸ்வரன் மட்டும் வரவில்லை. 

பார்வதி அவரை வரவழைத்து 

தன் மகனைக் கண்டு ஆசீர்வதிக்கும்படிக் கூறவே 

அவரோ “நான் யாரைப் பார்த்தாலும் 

அவரது தலை வெடித்துவிடும். 

அப்படி ஒரு சாபம் எனக்குக் கிடைத்திருக்கிறது. 

அதனால் உங்கள் மகனைக் கண்டு ஆசி கூற முடியாது” என்றார்.

பார்வதியோ “அதெல்லாம் இல்லை.


 நீங்கள் என் மகனைப் பார்த்து ஆசீர்வதியுங்கள்” என்றாள். 


அவரும் வேறு வழியின்றி பிள்ளையாரைப் பார்த்தார். 


மறு விநாடியே பிள்ளையாரின் தலை வெடித்து சுக்கு நூறாகியது. 


அதனால் பிள்ளையாருக்கு யானையின் தலை பொருத்தப்படவே 


பார்வதிதேவி ஆறுதல் அடைந்ததாகக் கூறப்படுகிறது.



ஒரு முறை சிவபெருமானும் பார்வதியும்


கைலாயத்தில் தாயம் ஆடிக்கொண்டிருந்தார்கள்
.
 இதில் யார் வென்றது என தீர்ப்புக் கூறும் பொறுப்பு


நந்தியுடையதாக ஓப்படைக்கப்பட்டிருந்தது.


நந்திக்கு ஈஸ்வரன் மீது அபிமானம் அதிகம்


அதனால் தோற்ற போது கூட 


ஈஸ்வரனை வென்றதாக அறிவித்தார்.


பார்வதி கோபத்தால் நந்தியை சபித்தார்


நந்தி பார்வதியின் பாதம் பணிந்து 


பாவ விமேசனம் கோர


பார்வதி மனமிரங்கி


ஆவணிசட சதுர்த்தியில்


என் மகன் கணபதியின் பிறந்த தினத்தில்


உனக்குப் பிரியமான அறுகம் புல்லினால் அர்ச்சனை செய்தால்


உன் சாபம் நீங்கும் என அருளினார்.


இதிலிருந்து யாருக்கு என்ன பிடிக்குமோ


அதை இறைவனுக்குப் படைத்தால்


பாவம் விலகும் என்பது தெளிவாகச் சொல்லப்படுகிறது.


இந்தச் சத்தியத்தை ஸ்தாபிப்பது தான் விநாயக தத்தவம்.


உயிர் வாழ்க்கைக்கே தலைவர் விநாயகர்.


சுயநலம் சுயலாப நோக்கம் அவற்றை வைத்துக்கொண்டு


வாழக்கூடாது என்று உணர்த்துபவர்.


சுயநலத்தை தியாகம் செய்ய வேண்டும்.


பிறர் நலம் நாடி ஆன்மீக வாழ்க்கை நடாத்த வேண்டும்


அதன் மூலம் தெய்வீகத்தை உணர்ந்துகொள்ளவேண்டும்.


இதுவே நிஐமான விநாயக தத்துவம்.

விநாயகரின் உருவத்தை மரம், செம்பு முதலியவற்றாலும், 


மண், பசுஞ்சாணி, மஞ்சள், மாக்கல், கருங்கல், 


வெள்ளை சலவைக்கல், முத்து, பவழம், யானை தந்தம், 


வெள்ளெருக்கின் வேர், அத்திமரம், அரைத்த சந்தனம், 


சர்க்கரை போன்ற ஏதேனும் ஒன்றால் செய்து வழிபடலாம். 


அந்த பிம்பத்தை 21 அருகம்புற்களால் 


விநாயக பெருமானின் பலவித பெயர்களை சொல்லியும், 


விநாயகரின் அஷ்டோத்திரத்தை சொல்லியும் 


அர்ச்சனை செய்ய வேண்டும். 


விநாயகர் சதுர்த்தியன்று கொழுக்கட்டை பிடித்து 


நிவேதனம் செய்வது முக்கியமானது. 


எள் கொழுக்கட்டை சனி பீடையையும்,


 உளுந்தம் கொழுக்கட்டை ராகு தோஷத்தையும், 


வெளியே உள்ள அரிசி மாவு குரு சுக்கிர ப்ரீதியை பெற்றுத் தரும். 


எக்காலத்திலும் விநாயகரை வணங்குபவர்கள் 


தம் கஷ்டங்கள்யாவும் நீங்கப் பெறுவார்கள். 


வினைப் பயன்களால் உண்டாகும் நோய்கள் அவர்களை தீண்டாது. 


விநாயகரின் அருளால் விக்னங்கள் யாவும் அகலும். 


சந்தான சவுபாக்கியத்துடன் அனைத்து கலைஞானமும் பெற்று 


ஆரோக்கியமாய் அரும்பெரும் வாழ்வு வாழ 


கணபதியின் திருவருள் துணை நிற்கும்.


எளிமையின் நாயகன்

விநாயகர் குழந்தைகளின் கடவுள் 



அதனால்தான் யானை முகமும், 


மனித உடலும், நான்கு கரங்களும், 


பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு 


அருளே வடிவாக காட்சி தருகிறார். 


வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடிய


 மிகவும் எளிமையான கடவுள் கணபதி. 


வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். 


அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். 


இவரை எளிமையாக வழிபட்டாலே 


நமக்கு அருளை வாரி வணங்குவார். 


அதனால்தான் அருகம்புல்லையும், மூஞ்சூரையும்


 தனக்கு பிடித்தமானவையாக வைத்திருக்கிறார்.

முழுமுதற் கடவுள்

ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள்.



 எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் 


விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால்


 சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.பாரத 


தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை


 தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக 


விநாயகப்பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.


ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன்


 பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் - 


O (ஆதியும் அந்தமும் அவரே), 


தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் -


 இணைந்து "உ" எனும் பிள்ளையார் சுழி உருவானது. 


பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் 


பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடித்துவிடும் 


என்பது ஆன்றோர் வாக்கு.





இருபத்தியோருபேறுகள்

விநாயகர் சதுர்த்தி விரதம் கடைபிடிப்பதால்



 21 பேறுகள் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. 


அவை. தர்மம், பொருள், இன்பம், செளபாக்கியம், 


கல்வி, பெருந்தன்மை, நல்வாழ்வுடன் கூடிய மோட்சம், 


முக லக்ஷணம், வீரம், வெற்றி,.எல்லோரிடமும் அன்பு பெறுதல், 


நல்லசந்ததி, நல்ல குடும்பம், நுண்ணறிவு, நற்புகழ், 


சோகம்இல்லாமை, அசுபங்கள் அகலும், 


வாக்குசித்தி, சாந்தம், பில்லிசூனியம் நீக்குதல், 


அடக்கம் ஆகியவை கிடைக்கும் என்கின்றன புராணங்கள். 


எனவே நன்மைகள் அனைத்தும் கிடைக்க விநாயகப் பெருமானைப் 


போற்றி நலம் பெறுவோம்.

யானைத் தலையின் தத்துவம்-

யானை சிறந்தறிவு பெற்றது.

அதற்கு மேதா சக்தி அதிகம். 

அதன் காதுகள் பெரியதாக இருப்பதால் 


நுண்ணிய சப்தத்தைக் கூட அதனால் கிரகிக்க முடிகின்றது.

இறைவன் புகழைக் கேட்பது என்ற

ஆன்மீக சாதனையின் முதற்படிக்கு

காதுகள் கூர்மையாக இருப்பது அவசியம்

யானை புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும்

ஓரே மாதிரி எடுத்துக் கொள்கின்றது.

தேவையற்றவையை உதறி விடுகின்றது.

நல்ல விஷயங்களை மௌனமாக ஏற்றுக்கொள்கின்றது.

இவ்வாறு மனித குலத்திற்கு அத்தியாவசியமான பாடங்களை

விநாயகர் நமக்கு கற்றுத் தருகிறார்.

வாகனம் மூஞ்சுறு தத்துவம்

அவரது வாகனம் மூஞ்சுறு.

மூஞ்சுறு இருளில் தான் சஞ்சரிக்கும்

அத்துடன் மூஷிகத்திற்கு வாசனை பிடிக்கும்.

வாசனை பிடித்துக்கொண்டே

எந்தெந்த உணவுப்பொருள் எங்கிருக்கிறது எனக் கண்டு கொள்ளும்

ஆன்மீகத்தில் இருள் என்பது அஞ்ஞானத்தையும்

வாசனை என்பது ஆசைகனையும் குறிக்கிறது.

எனவே தான் அஞ்ஞானத்தையும் ஆசைகளையும்

கட்டுப்பாட்டில் வைப்பவரஎன்பதை விளக்கவே 


அவற்றின்உருவமாக விளங்கும்


மூஷிகத்தை வாகனமாகக் கொண்டு உள்ளார்.

விநாயகர் சதுர்த்தியில் விசேடமான உணவுப் பண்டங்கள்

கடவுளுக்கு நிவேதனமாக அளிக்கப்படுகின்றன.

அப்பண்டங்கள் நீராவியில் தயாரித்தவை 

எள்ளானது சுவாச சம்பந்தமான நோய்களையும்

கண்நோய்களையும் தீர்க்க வல்லது

நீராவியில் வெந்த பண்டங்கள் சீரணிக்க கூடியவை ஆகும்.

இவ்வாறு முன்னோர்கள் 

ஆரோக்கியமும் ஆனந்தமும்

கூடிய வகையில்

இறைவனை வழிபட்டார்கள்.

பிள்ளையார் பிரணவ வடிவினர் ஆதலால்


 ‘பிரணவன்’ என்றும் ‘மூத்த பிள்ளையார்’ 


என்றும் அறியப்படுகின்றது. ‘


ஓங்கார நாத தத்துவம்’ சிவனையும் சுட்டிநிற்பதால் 


சிவனும்,பிள்ளையாரும்.


ஒன்றேயென்றும் கொள்ளமுடிகின்றது. 


பிரணவத்தை முற்றறிந்தவர் என்பதால் 


பிரணவன், பிரணவநாதன் என்றெல்லாம அழைக்கப்படுகின்றார். 


‘ஓம்’ என்ற பிரணவ மந்திர ரூபியான


அவர் ஞானமே வடிவானவர். 


அவரது திருமேனி ஒரு தத்துவ வித்தென ஆன்றோர் விஸ்தரித்துள்ளனர். 


அவருடைய இரு திருவடிகளிலே 


வலது திருவடியை “முற்றறிவு” 


அதாவது ‘ஞானசக்தி’ என்றும்“ 


இடது திருவடியை “முற்றுத்தொழில்” 


அதாவது ‘கிரியாசக்தி’ என்றும் உணர்த்தப்படுகின்றது. 


அவ்விரு திருவடிகளின் துணையின்றி 


உயிர்கள் ஒன்றினை அறிந்து கொள்ளவோ, 


செயலாற்றவோ முடியாது. 


எல்லாப் பொருட்களையும் ஆகாயம் தன்னுள் அடக்கவும், 


உண்டாக்கவும், விரிக்கவும், ஒடுக்கவும் கூடிய


 தன்மையைக்கொண்ட பரந்து விரிந்ததொரு பூதம். 


ஆகாயம் போலவே சகலவற்றையும் உள்ளடக்கியதாகவே 


அவரது பேருந்தி காட்சி கொடுக் கின்றது. 


படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் 


ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் 


தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. 


ஐந்து கருமங்கட்கும் அவரே அதிபதி என்பதனால் 


அவருக்கு ‘ஐங்கரன்’ என்ற நாமம் விளங்குகின்றது


அவரை ‘பஞ்சகிருத்திகள்’ என்றும் கூறுவர்.


அவரது முற்றறிந்த ஞானத்தை 


முறம் போன்று பரந்து விரிந்த இருசெவிகளும் விளக்குகின்றன.


வலது பக்கமுள்ள ஒடிந்த கொம்பு “பாசஞானத்தையும்’ 

இடது பக்கமுள்ள கொம்பு “பதிஞானத்தையும்’ 

உணர்த்துவதாக உள்ளன. 

விநாயகரின் அடிக்கீழ் மூஷிகம் அழுந்தி 

அமைதியாகக் காணப்படுவதை, 

பிரணவ மூர்த்தியின் அடிக்கீழ் ஆணவ மலம் 

வலிகெட்டு அமைதி காக்கும் என்பதை விளக்குகின்றது.







விநாயகருக்கு ‘சித்தி’, ‘புத்தி’ என இரு சக்திகள் உள்ளதாகவும் 


புராணங்களில் பேசப்படுகின்றது. 


விநாயகரின் வலது முன்கை அபய முத்திரையக் காட்டும், 


வலது பின்கையில் மழுவாயுதமும், 


இடது முன்கையில் மோதகம் அல்லது 


மாதுளம்பழம் வைத்திருப்பது போலவும், 


இடது பின்கையில் பாசக் கயிறோ அல்லது 


செந்தாமரை மலரோ கொண்டிருப்பது போலவும் சித்தரிக்கப்படுகின்றது. 


துதிக்கையில் நீர்க் கலசம் ஜகமண்டலம் ஒன்றை ஏந்தியிருப்பார். 


செம்பட்டு வஸ்திரத்தையே அணிந்திருப்பார். 


விநாயகருக்கு உகந்த முக்கிய நிவேதனப் பொருட்கள் 


மோதகம், கொழுக்கட்டை பஞ்சாமிர்தம், தேங்காய், 


அப்பம், அவல், பொரி, கரும்பு, சர்க்கரை முதலியனவாகும். 


செம்மலர்கள், அறுகம் புல் ஆகியவற்றைக் கொண்டு விநாயகரை 


அர்ச்சிப்பது மிகச் சிறந்தது. 



1 கருத்து:

calenmacchia சொன்னது…

888casino Resort Hotel NJ Jobs | December 2021
888casino Resort Hotel offers the latest 제주 출장안마 slot 전라북도 출장안마 machines, table 군포 출장마사지 games and casino games. 서귀포 출장샵 Find out what are the most popular slots machines in New 충청북도 출장샵 Jersey today.