செவ்வாய், ஏப்ரல் 12, 2011

தமிழ் வருட பிறப்பு

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் உளம கனிந்த புத்தாண்டு
                                                             
நல் வாழ்த்துக்கள்


14-04-2011 வியாழன் அன்று சித்திரை மாத பிறப்பு வருகிறது.

என் நினைவில் சித்திரை கனி-

சித்திரை முக்கனிகளும் வரும் காலம்.  
அதனால் கண்ணாடி முன் வைக்கும் கனி வகைகளில் மா, பலா, வாழை
முதன்மை வகிக்கும்.
 சாமி அறையில் அல்லது நடுகூடத்தில் ஓர் இடத்தில் முதல் நாள் இரவே
சுத்தம் செய்து கோலம் போட்டு, அதன் நடுவில் ஒரு முகம் பார்க்கும்
கண்ணாடி வைக்க வேண்டும்.
அதன் சட்டத்தில் சந்தானம், குங்கும போட்டு வைக்க வேண்டும். 
 அதன் முன் ஒரு தாம்பாளத்தில் முக்கனிகள் , வேறு பழங்கள்.
வெற்றிலை, பாக்கு, [வெட்டு பாக்கு]
 மஞ்சள் கொம்பு வைக்க வேண்டும்.
அதன் மேல் பூ,  எலுமிச்சை பழம் வைக்க வேண்டும்.
இனித்தான் முக்கிய பொருட்களே வருகிறது.
பணம், தங்க நகை, தங்க காசு, நாணயங்கள் என
அவரவர் சக்திக்கு ஏற்றார் போல் வைக்கலாம்.
 ஒரு படி நிறைய அரிசி வைக்க வேண்டும்.
அந்த வருடத்திற்கு உரிய புது பஞ்சாங்கம் வாங்கி அதற்கும் மஞ்சள், குங்கும
போட்டு வைத்து வைக்க வேண்டும்
ஒரு விளக்கைமஞ்சள், குங்கும பொட்டு இட்டு எண்ணை ஊற்றி,
திரி போட்டு தயார் நிலையில் வைக்க வேண்டும்.
அதிகாலையில் பாட்டியோ, அம்மாவோ எழுந்து விளக்கு ஏற்றி

‘நாடும், வீடும் எல்லா நலன்களையும் பெற்று, அந்த வருடம் நல்ல வருடமாய்

அமைய வேண்டும்என  முதலில் சாமி கும்பிடுவார்கள்.
 பின் வீட்டில் உள்ளவர்களை எழுப்புவார்கள்.
கண்ணை மூடிக் கொண்டே சென்று கண்ணாடியில் தான் விழிக்க வேண்டும்.
காலை குளித்து வந்த பின் தீபாராதனை காட்டி சித்திரை தாயை வணங்க
வேண்டும்.

அந்த காலத்தை நினைத்தாலே நான் சிறு குழந்தை ஆகி விடுகிறேன். 
 பழங்கள் வாங்க கடைவீதிக்கு ஓடுவதும்,
அம்மாவிற்கு உதவி செய்வதும் ஒரே ஆர்வ கோளாறுதான் 
வீட்டு நிலையில் மாவிலை தோரணம் கட்டு வார்கள்.
 வாசலில் பெரிய கோலங்கள் போடப்படும்.
இனிப்பு,  நிறைய பதார்த்தங்களுடன் சாப்பாடு. 
முக்கியமாக பள்ளி விடுமுறை நிச்சியம்.
கொண்டாட்டத்துக்கு கேட்கவா வேண்டும்?


ஒரு காலகட்டத்தில் நானே அலங்காரங்கள் செய்வேன்.
வாசலில் பெரிய கோலமாக போட சில நாட்களாகவே யோசித்து, அதை
போட்டுப் போட்டுப் பழகி இருந்தாலும், போடும் போதும் டெண்சனாக இருக்கும்.
முதலில் கோலத்திற்கு புள்ளி வைப்பதில்  ஆரம்பிக்கும்-
புள்ளிகள் ஒழுங்காய், சம இடைவெளிகளில் வைக்க வேண்டும்.
ஒரே சீராய்  கோடுகள் . போட வேண்டும்.
புள்ளிக் கோலங்கள் என்றுமே சிக்கல் கோலங்கள். தான்.
கொஞ்சம் பிசகினாலும் முடிந்தது. முடிக்கவே முடியாது.
எல்ல சாமிகளையும் கும்பிட்டுக் கொண்டு நல்லபடியாய் போட்டு முடிப்பது
அந்த வயதில் ஒரு பெரிய விசியமாய் இருந்தது
.அக்கம் பக்கம் இருப்பவர்கள் பாராட்ட வேண்டும் என்பதுதான் இந்த
மெனக்கெடலின் basic. 



கோலத்திற்கு செம்மண் கரை கட்ட வேண்டும்
காவிப் பொடியை அளவான நீரில் கரைத்து வைக்க வேண்டும்.
தண்ணீ அதிகமானால் வழிந்து ஓடும
கெட்டியாக இருந்தால் கோடு இழுக்கவே முடியாது.
ஒரு சிறு துணியை இக்கரைசலில் நனைத்து கரை கட்ட வேண்டும்.
 தேங்காய் குடுமியில் அளவாக எடுத்து அதிலும் இடலாம்.
இப்போது பெயிண்ட் பிரஷ் கொண்டு சுலபமாக போடலாம்.
 சரியான பக்குவத்தில் கரைப்பது,
துணியில் அல்லது குடுமியில் ஒழுகாமல் எடுப்பது,
ஒரே அளவாக கோடு இழுப்பது என்று காவி இடுவதும் ஒரு கலைதான்.
தேவை பொறுமை + கவனம் [concentration]
தற்போது புள்ளி கோலங்கள் சிறு புள்ளிகளாகி மறைந்து விடுமோ
எனும் நிலையில் உள்ளது.
சில காலமாகவே போட சுலபமாகவும், வண்ண பொடிகள் கொண்டு

கண்ணைக் கவரும் விதமாய் போடும் ரங்கோலி வகை கோலங்கள் அதிக

அளவில் போடப் படுகின்றன.


இரண்டுமே அழகுதான்



ஆனால் இன்றைய கால கட்டத்தில் கோலம்போடும் அளவிற்கு வாசலும்

இல்லை;

நேரமும் இல்லை; ஓட்டும் ஸ்டிக்கர் கோலங்கள் வந்து விட்டன.

தொல்லைக் காட்சியின் பயன்பாட்டால் பண்டிகை தினங்களே அரிதாகி

விட்டது.

. அன்றைய பண்டிகை கொண்டாட்டங்கள் இன்றைய நினைவுகள்.


நம் பிள்ளைகளுக்கு நம்மால் சொல்லத்தான் முடியும்.

அதைச் செய்வோம்.

அவற்றை தொடர்வதும், விடுவதும் அவர்கள் விருப்பம்.



திங்கள், ஏப்ரல் 04, 2011

ஆரஞ்சு திருவிழா

இந்தியாவின் 'ஆரஞ்சு நகரம்' என சொல்லப்படுவது நாக்பூர் நகரம். இது மகாராஷ்ட்ராவில் இருக்கிறது. நம் நாடு சுதந்திரம் பெற்றபோது நாக்பூர் , மகாராஷ்டிராவின் தலை நகரமாக இருந்தது.
நாக் நதி ஓடுவதால், இதற்கு நாக்பூர் என பெயர் என்று கூறுவார்கள். இங்கு பசுமையான காடுகள் அதிகம் என்பதால், இந்நகரம் இந்தியாவின் இரெண்டாவது பசுமை நகரம் எனப்படுகிறது.

இங்கு விளையும் மாண்டரின் வகை ஆரஞ்சு உலக தரம் பெற்றவை.

அதனால்ஏற்றுமதி வர்த்தகம், நம்நாட்டிற்கு பெருமளவில் பொருள் ஈட்டித் தருகிறது. இங்கு குறைந்த விலையில், தரமான ஆரஞ்சு ஜாம், ஜெல்லி, மர்மலேட் மற்றும் ஸ்குவாஷ் வாங்கலாம். நாக்பூர் வழியாகச் செல்லும் ரெயில் தடங்களில் வரும் ரயில் நிலையங்களில் ஆரஞ்சு விற்கப்படுவதும், அவற்றைவாங்க பயணிகள் .கூட்டம் ஓடுவதும் வாடிக்கையான செயல்பாடாகும்.

நாக்பூரில் உள்ள, விதர்பா பகுதியில் 80000 ஹெக் பரப்பில் பயிரிடப்படுகிறது. மொத்த மகசூல் 5 லட்சம் டன்.மகாராஷ்டிரா மாநிலத்தின்மொத்த விளைச்சலில் 65 % விதர்பா பகுதியில் விளைகிறது.

வருடம்தோறும் மார்ச் மாதம் புனாவில் ஐந்து நாட்கள் நடைபெறும் 'மகா ஆரஞ்சு திருவிழா' விவசாயிகளின் உழைப்பை உலகுக்கு காட்டும் ஒரு தளமாகவே செயல்படுகிறது. இந்த மாபெரும் விழாவில்ஆரஞ்சு கொண்டு செய்யப்படும் பிரமாண்டமான அலங்காரங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.

அவற்றில் சில உங்களின் பார்வைக்கு-----


























வியாழன், ஜனவரி 13, 2011

தைத் திங்களே வருக

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
சூரியன் மகர ராசியில், அதாவது பூமத்திய ரேகையிலிருந்து வடக்குப் பக்கம் போக ஆரம்பிக்கும் முதல் நாள் நமது பொங்கல் திருநாள். சூரியன் இத்தகைய நிலையிலுள்ள காலத்தை சமஸ்கிருதத்தில் உத்தராயணம் என்பார்கள்.
பொங்கலுடன் புத்தாண்டும் பிறக்கிறது .இரெட்டை கொண்டாட்டம்.
உலகுக்கு உணவளித்த உழவர்
வாழ்வுக்கு வளம் அளித்த
ஆதவன் தாள் பணிவோம்;
கொடையாய்ப் பேயட்டும் மழை
நிரம்பி வழியட்டும் நீர்நிலை
பொன்னாய் விளையட்டும் பூமி
பாலாய் பொங்கட்டும் வாழ்வு
கரும்பாய் இனிக்கட்டும் மனது.
பசிக்கு உணவளிக்கும் உத்தமர்
உயர்வாய் வாழ தோள் கொடுப்போம்.
இந்த புத்தாண்டு எல்லோருக்கும், அமைதியையும், நல்ல நினைவுகளையும், செல்வத்தையும் தரும் குறைவில்லா ஆண்டாக அமைய எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்.

vanga pesalam


நான் browsing பண்ணிட்டு இருக்கும் போது 'வாங்க பேசலாம் 'என்ற இந்த பகுதியை பார்க்க நேரிட்டது. இதில் பேசப்படுவது இன்றைய கால கட்டத்தில் பரவலாக காணப்படும் ஒரு முக்கியமான விசியம்; இன்று பலராலும் அனுபவிக்கப் படுவது. இதோ உங்கள் பார்வைக்கு----

புதன், ஜனவரி 12, 2011

சுவையான குழம்பு

தேவையான பொருட்கள்:
சாம்பார் வெங்காயம் - கால் கிலோ,
புளி - எலுமிச்சை அளவு,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள், -2 டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்.
இஞ்சி பூண்டு விழுது-- 2 டீஸ்பூன்
வறுத்து அரைக்க:
கசகசா, --ஒரு டேபிள்ஸ்பூன்,
சோம்பு ----ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய் - ஒரு கப்,
மிளகாய் வற்றல் - 2.
இவை அனைத்தையும் எண்ணெயில் வறுத்து விழுதாக அரைக்கவும்..
அல்லது பொடிக்கவும்.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, சாம்பார் வெங்காயத்தை வதக்கவும்.
வதக்கிய பின் பொடி அல்லது அரைத்த மசாலா போட்டு வதக்கவும்.
பிறகு, இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும்.
இப்போது புளியைக் கரைத்து விடவும்.
ஒரு கொதி வந்ததும்,மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்க்கவும்.
உப்புப் போடவும்.
நன்றாகக் கொதி வரட்டும்.
எண்ணை மேலே வருமளவு அடுப்பில் இருக்கட்டும்.
குழம்பு சிறிது கெட்டியானவுடன் அடுப்பை அணைக்கவும்.
சிறிதளவு சாம்பார் வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி,
எண்ணெயில் சிவக்க வறுத்து அதில் தூவவும்.

ஞாயிறு, ஜனவரி 09, 2011

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

பொதுவாக குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் இருப்பதாக I feel. So,


பொடுகு ஏன் வருது?
நிறைய காரணங்கள் இருக்கு என்கிறார்கள்.
பாரம்பரியம்வெயில், உடல் சூடு, தூசி, ஹார்மோன் பிரச்சனை, உட்கொள்ளும் நீரின் அளவு குறைதல், பராமரிப்பு இல்லாதது, உடல் நலமின்மை-இப்படி பல.


பொடுகு என்பது என்ன?
இது ஒரு வகையான தோல் நோய் அல்லது தோல் உரிதல்என்றும் சொல்வார்கள். இது எல்லா வயதினற்கும் வரும்.

பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1.Dry Dandruff --------- வறண்ட பொடுகு
தலையில் எண்ணைப் பசை சரியான அளவில் உற்பத்தி ஆகாத காரணத்தால் வருவது. சொரிந்தால் பவ்டர் போல் உதிருவது நிறைய T.வ. விளம்பரங்களில் காட்டப் படுவது.
விரைவில் பரவும்.
அரிப்பு இருக்கும்.
வியர்வையால் தலை நாற்றம் இருக்கும்.
முகத்தில் சிறிய பருக்கள் , தோள்ப்பட்டை,கழுத்தில் சின்ன கட்டிகள் வரலாம்.
ஆனால் குணப்படுத்துவதும் , சுத்தம் செய்வதும் எளிது.

2. Oily Dandruff ---------- எண்ணை பொடுகு
தலையில் அதிகமாக எண்ணைப் பசை உற்பத்தி ஆகும் காரணத்தால்வருவது.
சொரிந்தால் உதிராது. தலையில் பிசுபிசுப்பாய் உணர்வது.
மற்றவர்களுக்குப் பரவாது.
அரிப்பு அதிகம் இருக்காது.
வியர்த்து தலையில் சீக்கிரம் அழுக்கு சேர்ந்து விடும்.
முகத்தில் பருக்கள், கழுத்து, தோள்ப்பட்டையில் நீரிருக்கும் கட்டிகள் கொப்பளங்கள் வரலாம்.
ஆனால் குணப்படுத்துவதும், சுத்தம் செய்வதும் கொஞ்சம் சிரமம்.

பொதுவான பராமரிப்பு-----
அதிகம் தண்ணீர், பழச்சாறு குடிக்க வேண்டும்.
நகங்களை வெட்டவும். தலையை சொரிந்து விட்டு , அதே நகங்கள் முகத்தில் பட்டால் பருக்கள் வரும்.
வெய்யிலில் அதிகம் அலையக் கூடாது. போனாலும் குடை பயன் படுத்தவும். தலைக்கு மெல்லிய scarf [ஸ்கார்ப் ] கட்டிக் கொள்ளவும்.
தலையணை, போர்வை , துண்டு --------- சுத்தமாக இருக்க வேண்டும்.
சீப்பை வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் விட்டு கழுவிப் பயன்படுத்தவும்.
முடியை சுத்தமாக வைத்து இருப்பதும்,,டென்சன் இல்லாமலும் இருப்பது மிகவும் நல்லது.

தீர்வு-
துளசி எண்ணை, வேப்பிலை எண்ணை இரெண்டையும் சம அளவில் கலந்து மயிர்க்கால்களில் படும்படியாகத் தேய்த்து மசாஜ் செய்து குளிப்பதால், பொடுகு மட்டும் அல்ல பேன் தொல்லையும் தீரும்.

கொஞ்சம் தயிர் , ஒரு எலுமிச்சையின் சாறு, ஒரு வெள்ளைக் கரு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் 4-5 வாரங்களில் குணம் ஆகும்.
வாரம் இரு முறையாவது கட்டாயம் செய்ய வேண்டும்.
தேய்த்து அரைமணி நேரம் கழித்து தரமான ஷாம்பூ கொண்டு அலசவும்.

வசம்பு பவுடர், தேங்காய் அரைத்த நைஸ் விழுது அல்லது தயிருடன் கலந்து தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம்.

குப்பைமேனி இலையின் சாறு, தேங்காய் எண்ணை, உப்பு அல்லது சர்க்கரை கலக்கவும். முடியைப் பிரித்து பிரித்து காட்டன் கொண்டு தலையில் தடவவும்.கிழே ஒரு துணியை விரித்துக் கொள்ளவும். பொடுகு உதிரும். கால் மணி நேரத்தில் சுத்தம் செய்யலாம். ஆண்களுக்கும் செய்யலாம்.

கறிவேப்பிலை, துளசி, எலுமிச்சை சாறு, எலுமிச்சை விதை ஆகியவற்றை அரைத்து, பேஸ்ட் போல் செய்து தலைக்கு தேய்த்து ஊறி குளிக்கவும்.
குருணை போல் இருக்கும் பொடுகு நீங்கும்.

செம்பருத்திப் பூவை அரைத்து தேய்த்துக் குளித்தாலும் பொடுகு போகும்.

பொடுகு ஷாம்பூ பயன்படித்திய பின் அதன் கெமிக்கல் தன்மை நீங்க, செம்பருத்தி இலையை வெந்நீரில் வேக வைத்து , தேய்த்துக் குளிக்கவும்.

எலுமிச்சை சாற்றைத் தலையில் தடவி கால் மணி நேரம் ஊறி குளிக்கவும்.

வால் மிளகை அரைத்துத் தடவிக் குளிக்கலாம்.

பொடுகு நீக்கும் ஸ்பெசல் பேக்-
துளசிப் பவுடர் ---------- 5 ஸ்பூன்
வேப்பிலை தூள் ----------- 5 ஸ்பூன்
எலுமிச்சை சாறு ------------ 2 ஸ்பூன்
புளித்த தயிர் ----------------- 3 ஸ்பூன்
எல்லாவற்றையும் கலந்து 15 நிமி ஊற வைக்கவும்.
பின் மயிர்க்கால்களில் படும்படிப் பூசி அரை மணி நேரம் கழித்து, மைல்ட் ஹெர்பல் ஷாம்பூ கொண்டு அலசவும்.
வாரம் இரு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் மகிமை

அம்மைக் கொப்புளங்கள், புண்கள் குணமாக...
மஞ்சள், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துப் பற்றுப்போட்டு வர, மூன்று தினங்களில் அம்மைக் கொப்புளங்கள், புண்கள், சேற்றுப்புண்கள் போன்றவை மறையும்.

கட்டிகள், சிறங்குகள் மறைய...
மஞ்சளுடன் துத்தி இலையைச் சேர்த்த ரைத்து கட்டிகள்மீது பூசி வர, அவை பழுத்து உடையும்.

கால் ஆணி குணமாக...
மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள்மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

கண் பார்வை தெளிவடைய...
ஒரு ஸ்பூன் மஞ்சள்தூளை நன்கு கொதிக்க வைத்து, அதைப் பஞ்சில் நனைத்துக் கண்களில் ஒற்றியெடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஆறு முறை வீதம் குறைந்தது பத்து நிமிட அளவில் செய்துவர, கண்களில் நீர்வடிதல், கண்களில் சதை வளருதல், கண்பார்வைக் குறைபாடுகள் போன்றவை நீங்கும்.

சளி, மூக்கடைப்பு நீங்க...
மூன்று சிட்டிகை மஞ்சள்தூளை சூடான பாலில் கலந்து தினசரி இரவில் சாப்பிட்டு வர, நெஞ்சில் கட்டியிருக்கும் கோழைக்கட்டு விலகும். முனை முறியாத மஞ்சளைத் தீயில் கொளுத்த ஆவியுண்டாகும். அதில் உண்டாகும் ஆவியை மூக்கால் நுகர, தலைவலியும் மூக்கடைப்பும் தானே விலகும்.

காசநோய் மறைய..
.முதலில் வெற்றிலையை நீர் விட்டு இடித்து, இரண்டு லிட்டர் அளவில் சாறு எடுத்துக் கொள்ளவும். இதில் மஞ்சள், அதிமதுரம் வகைக்கு கால் கிலோ அளவில் எடுத்து, வெற்றிலைச் சாற்றில் ஊற வைக்கவும். சாறு முற்றிலும் சுண்டி உலர்ந்த பின், மேற்கண்ட இரண்டையும் ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்தத் தூளில் கால் ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர, எவ்வளவு பாதிப்புக்கு உள்ளான காசநோயும் மறையும்.

புற்றுநோய் கட்டுப்பட...
வெற்றிலையை இடித்து ஒரு லிட்டர் அளவுக்குச் சாறெடுத்து, அதில் கால் கிலோ மஞ்சளை ஊற வைத்து உலர்த்தவும். பின்னர் கீழாநெல்லியை இடித்து ஒரு லிட்டர் அளவில் சாறெடுத்து, அதில் ஏற்கெனவே உலர்த்திய மஞ்சளை மீண்டும் இந்தச் சாற்றில் ஊறவைத்து, பின் வெயிலில் காயவைத்து உலர்த்திக் கொள்ள வும். இத்துடன் கடுக்காய்த் தோல், நெல்லிவற்றல், தான்றிக்காய் தோல் ஆகியவற்றை வகைக்கு கால் கிலோ அளவில் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூள் செய்து பத்திரப்படுத்தவும்.
சித்தர்கள் அருளிய அற்புத மருந்து இது. இதனை உதாசீனப்படுத் தாமல் புற்றுநோய்க்கு உட்பட்டோரும், புற்று நோயைத் தடுக்க நினைப்போரும் காப்பு மருந்தாய்க் கொள்ளலாம்.

சிறுநீரக நோய்கள் விலக...
சிறு நெருஞ்சில் இலைகளைப் பறித்து வந்து, அதில் அரை லிட்டர் அளவு சாறெடுக்கவும். கீழாநெல்லி இலைகளைப் பறித்து அதிலும் அரை லிட்டர் சாறெடுக்கவும். இரண்டையும் ஒன்றாய்க் கலந்து, இதில் கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல், சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கி, சிறுநீரகம் செழுமையாய் செயற்படும். . சித்தர்களின் சுவடிகளில் சொல்லப்பட்ட அரிய மருந்து இதுவாகும்.

முடிவளம் குறைக்க...
சில பெண்களுக்குத் தேவையில்லாமல் கால்கள், கைகள் மற்றும் உதட்டின் மேற்பகுதி களில் பூனை முடிகள் போன்று முளைப்ப துண்டு.
. .மஞ்சள், துத்தி, குப்பைமேனி, செம்பருத்தி, கடுக்காய்த்தோல், நெல்லிவற்றல், மகிழம்பூ, கிச்சலிக் கிழங்கு, வெட்டிவேர், கடலைப்பருப்பு, சந்தனசீவல் ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் வாங்கி, இத்துடன் உலர்ந்த வெற்றிலை நூறு கிராம், வெள்ளை மிளகு 25 கிராம் சேர்த்து ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.அதிகாலைக் குளியலின்போது, சூடான பசும்பாலில் தேவையான அளவு பரிமள சுகந்த ஸ்நானப் பொடியைக் கலந்து, தேவையற்ற முடி உள்ள பகுதியில் தேய்த்து அன்றாடம் குளித்துவர, தேவையற்ற முடிகள் நீங்கும்.
நன்றி-சித்த மருத்துவர்-அருண் சின்னையா